Tamilislam.fm இஸ்லாமிய இணையதள வானொலி

  • Home
  • Tamilislam.fm இஸ்லாமிய இணையதள வானொலி
25/05/2018

மர்கஸ் தாருல் கைர்

11/01/2018

முஸ்லிம்களைச் சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவின் கொட்டம் அடக்கப்படும்:
- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை!!!

இந்து சகோதரர்கள் புனிதராக நினைக்கும் ஆண்டாள் குறித்து சர்ச்சையான கருத்தைப் பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்துப் பேசியுள்ள பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா என்பவர் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் இழிவுபடுத்தும் விதமாகப் பேசி முஸ்லிம்களை சீண்டியுள்ளார்.

எச்.ராஜாவின் கருத்திற்குத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனத்தைப் பதிவு செய்வதோடு, அவருக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கின்றது.

தங்களால் புனிதமாக மதிக்கப்படுபவரை யாரேனும் விமர்சனம் செய்தால் அதைக் கண்டிக்க அவர்களுக்கு உரிமை உண்டு.

ஆனால் இதைக் கண்டிக்கும் சாக்கில் நபிகள் நாயகத்தை உன்னால் பேச முடியுமா?, நபிகள் நாயகத்தின் மனைவிமார்களை உன்னால் பேச முடியுமா? என்று இஸ்லாம் மார்க்கத்தை வம்புக்கு இழுத்துள்ளார்.

நபிகள் நாயகத்தையும் அவர்களின் குடும்பத்தினரையும் வம்புக்கிழுக்கும் வகையில் பேசிய எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், இனிமேல் எச். ராஜா இது போல் நாக்குத்தடித்து பேசுவாரேயானால் முஸ்லிம் சமுதாயம் கடுமையாக எதிர்வினையாற்ற வேண்டி வரும் என்று எச்சரிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வீரியமிக்க போராட்டங்களை நடத்த உள்ளது.

நபிகள் நாயகம் பற்றித் தவறாகப் பேசியதோடு மட்டுமல்லாமல், இந்துக்களின் தலையை முஸ்லிம்கள் வெட்டியிருப்பார்கள் என இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்களைத் தூண்டும் வகையிலும் நச்சுக் கருத்தை வெளியிட்டு அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மச்சான்களாகவும் பழகும் இந்து முஸ்லிம்கள் மத்தியில் கலவரத்தை உண்டாக்க சதி செய்யும் எச்.ராஜாவின் கொட்டம் அடக்கப்படும் என்று எச்சரிக்கிறோம்

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச்செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்

01/06/2017

Sheikh Nassar Ali Khan

29/05/2017

Sheikh Riyas ibnu thaha topic கல்வியின் அவசியம்

அஸ்ஸலாமு அலைக்கும்கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே நம்முடைய மர்கஸ் தாருல் கைரில் பயானை தொடர்ந்து நோன்பு திறக்கும் நிகழ்...
26/05/2017

அஸ்ஸலாமு அலைக்கும்
கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே நம்முடைய மர்கஸ் தாருல் கைரில் பயானை தொடர்ந்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும் தினந்தோறும் நடக்கும் இன்ஷா அல்லாஹ்.
அனைவரும் தவறாது கலந்துகொண்டு இறையருள் பெறுக.
பெண்களுக்கு தனி இட வசதியுண்டு

18/05/2017

Sheikh Riyas

11/05/2017

Brother Siraj Azahiya mathiri

29/03/2017
08/12/2016

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
கண்ணியமுள்ள கனவான்களே!
இன்ஷா அல்லாஹ்.
நம்முடைய அஜ்மான் தாருல் ஹைர் மர்கசில் நாளை அதாவது 9 டிசம்பர் 2016 ல் மக்ரிப் தொழுகைக்குப்பின் இஷா வரை சகோதரர் நாசர் அலி கான் அவர்களால் பிரபலங்களின் "வாழ்வும் வீழ்வும்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெறவுள்ளது எனவே தாங்கள் தங்களின் குடும்பத்துடன் வந்து இறை உவப்பை பெற நமது மர்கஸ் விளைகிறது.
வஸ்ஸலாம்

09/11/2016
29/06/2016
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)நமது அஜ்மான் தஃவா மையம் சார்பாக ஒவ்வொரு நாளும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்...
29/06/2016

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
நமது அஜ்மான் தஃவா மையம் சார்பாக ஒவ்வொரு நாளும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகின்றது அந்நிகழ்ச்சியில் நடைபெற்ற குளழந்தைகளுக்கான கிராத், ஓவியம், வினாடி வினா போன்ற போட்டிகளில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

அல்ஹம்துலில்லாஹ்! நமது அமீரக அஜ்மான் மர்க்கசில் சிறுவர் சிறுமிகளுக்கு நடந்த மார்க்க அறிவு போட்டி மற்றும் வர்ணம் பூசும் ப...
29/06/2016

அல்ஹம்துலில்லாஹ்!
நமது அமீரக அஜ்மான் மர்க்கசில் சிறுவர் சிறுமிகளுக்கு நடந்த மார்க்க அறிவு போட்டி மற்றும் வர்ணம் பூசும் போட்டியில் வெற்றி பெற்ற விவரம் பின்வருமாறு:

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)உயர்வான உம்மத்தீன்களே! கண்ணியமிக்க ரமலான் மாதத்தில் நடைபெற்ற இசுலாமிய மார்க்கத்தின் திருப்பு...
19/06/2016

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
உயர்வான உம்மத்தீன்களே! கண்ணியமிக்க ரமலான் மாதத்தில் நடைபெற்ற இசுலாமிய மார்க்கத்தின் திருப்புமுனையாக அமைந்த பதுருப்போரை அறிய ஒரு வாய்ப்பு.
நாள் : இன்ஷா அல்லாஹ் 21-06-2016
நேரம்: இரவு 9 மணி இஷா மற்றும் இரவு தொழுகையை தொடர்ந்து.
இடம் : அல் இத்திஹாத் மையம், அஜ்மான், அமீரகம் .
தலைப்பு : பதுருப்போரும், படிப்பினைகளும்
உரை : மௌலவி. M ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தௌசி
இஸ்லாமிய அழைப்பாளர் தமிழ்நாடு.
தொடர்புக்கு: சகோ யாசீர் +971501615961

நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம் !உலகம் பெரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது !சொர்க்கம் நரகம் உண்டா....??? மீண்...
17/02/2016

நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம் !

உலகம் பெரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது !

சொர்க்கம் நரகம் உண்டா....???

மீண்டும் மனிதன் படைக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்படுவானா...???

1400....ஆண்டுகளுக்கு முன்பு... முகம்மது நபிகளுக்கு யார் சொல்லிக் கொடுத்தது

எழுத படிக்கத்தெரியாத முகம்மது நபி இறைவனிடம் இருந்து... தனக்கு செய்திவருவதாக சொன்னார்கள்

அப்படி வந்த செய்திகள் தான் திருக்குர்ஆன்

அதுமட்டுமின்றி மக்களுக்கு அவ்வப்போது சில ரகசியங்களையும் சொல்லியுள்ளார்கள்

அப்படி அவர்கள்சொன்ன....பல உண்மையான ரகசியங்களில் இதுவும் ஒன்று

மனிதன் இறந்த பின் எத்தனை காலமானாலும் அவனது உடம்பிலிருக்கும் இந்த எலும்பு...[உள்வால்எலும்பு ]( )
முதுகுத் தண்டின் வேர் பகுதி] அழியாது....இதை அழிக்கவும் முடியாது என்று முகமது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்

இதை ஆராய்ச்சி செய்ய நினைத்து ஜெர்மனி நாட்டை சேர்ந்த விஞ்ஞானி

“ஹான்ஸ் ஸ்பீமேன்”

இதை தன்னுடைய ஆய்வுக்கூடத்தில் பல ஆயிரம் டிகிரி மூலம் கரிக்கவும் மற்றும் பல அமிலங்களை கொண்டு கரைக்கவும் முயற்சி செய்தார் முடிவில் அவர்க்கு கிடைத்தது தோல்வியே முடிவில் முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாக்கு உண்மையே.
என்பதை இந்த உலகுக்கு தன்னுடைய சோதனையின் மூலம் நிரூபித்தார்.

இதைத்தான்....1400 வருடங்களுக்கு முன்பே...அல்லாஹுவின் தூதர்(ஸல்) அவர்கள் மறுமையில் மனிதனுக்கு அல்லாஹ் எவ்வாறு உயிர்க்கொடுப்பான் என்பதை பின்வரும்நபிமொழி கூறி உள்ளார்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனின் (மனிதனின் உடலிலுள்ள) அனைத்துப்பகுதிகளையும் மண் தின்றுவிடும்; மனிதனின் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின்
( )
நுனியைத்தவிர!.... அதை வைத்தே அவன் (தன் தாயின் கருவறையில் முதன்முதலாக) படைக்கப்பட்டான்

அதிலிருந்தே அவன்...
(மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படுவான். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்
5661
பிறகு அல்லாஹ், வானத்திலிருந்து ஒரு நீரை இறக்குவான்... உடனே இ(றந்துபோன)வர்கள் பச்சைப் புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று எழுவார்கள்

மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப்போய் விடும்; ஒரே ஒரு...
எலும்பைத் தவிர! அது (அவனது முதுகு தண்டின்வேர்ப்பகுதியிலிருக்கும்)
( )
உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும்

அதைவைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும்”என்று சொன்னார்கள்

(ஹதீஸின் சுருக்கம்)அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5660 நன்றி

இது குறித்து இன்னும் மிக விரிவாக மற்றும் இயற்கை பற்றிய விஷயங்களுக்கு குர்ஆன் , நபி மொழிகள் பெரிதும் தூண்டுதலாகவே இருந்து வருகிறது

இதனை ஆராய்ச்சி செய்வதன் மூலம் பல உண்மைகளை துல்லியமாகவே கண்டறிந்து குர்ஆன் இறைவேதம் தான் என்பதையும் ஒப்புக் கொண்டு வருகிறார்கள் ...

(இதை அதிகம் மாற்று கருத்து சகோதரர்களுக்கு கொண்டு செல்லுங்கள் )

அல்லாஹு அக்பர்

20/10/2015

காயல்பட்டணம் தஃவா சென்டர் 18- வது வருடாந்திர விழா " இதயம் அமைதி பெற" இஸ்லாத்தை தழுவிய சகோதர, சகோதரிகளின் ஈமானை வழுப்படுத்தும், உருக வைக்கும் உரைகள் மற்றும் ப...

மணப்பாறை சகோதரர் தாஜூதீன் அவர்கள் மெளத் ஆகிவிட்டார் சகோதரர் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் ஏக இறைவனை மட்டும் அழைத்து பிரார...
12/10/2015

மணப்பாறை சகோதரர் தாஜூதீன் அவர்கள் மெளத் ஆகிவிட்டார் சகோதரர் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் ஏக இறைவனை மட்டும் அழைத்து பிரார்த்தனை செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்

03/07/2015

உலகளவில் மிகபெரிய அளவில் சொத்துக்களை தானமாக அறிவித்த சவுதி இளரவரசர்

சவூதி இளவரசர்களில் ஒருவரான அல் வலீத் பின் தலால் சுமார் ரூ 2 லட்சம் கோடியை தொடும் அளவிற்கான சொத்துக்களை மனித நேய பணிகளுக்கு தானமாக அறிவித்துள்ளார்.இது அவரின் சொத்துகளின் பெரும் பகுதியாகும் இந்த அளவில் ஒருவர் சொத்துக்களை தானமாக அறிவித்ததில் இதுவே உலகில் முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது...

http://goo.gl/RDDNE5

24/05/2015
24/01/2015
20/01/2015

ததை பதிவு செய்க தமிழாக்கம் : குரல் : காண்பி : தமிழ் அரபி


ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்)
மக்கீ, வசனங்கள்: 62
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
53:1 وَالنَّجْمِ إِذَا هَوَىٰ
53:1. விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
53:2 مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ
53:2. உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.
53:3 وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ
53:3. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
53:4 إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ
53:4. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.
53:5 عَلَّمَهُ شَدِيدُ الْقُوَىٰ
53:5. மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
53:6 ذُو مِرَّةٍ فَاسْتَوَىٰ
53:6. (அவர்) மிக்க உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.
53:7 وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَىٰ
53:7. அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-
53:8 ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ
53:8. பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.
53:9 فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ
53:9. (வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.
53:10 فَأَوْحَىٰ إِلَىٰ عَبْدِهِ مَا أَوْحَىٰ
53:10. அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.
53:11 مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَىٰ
53:11. (நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.
53:12 أَفَتُمَارُونَهُ عَلَىٰ مَا يَرَىٰ
53:12. ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?
53:13 وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَىٰ
53:13. அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரீல்) இறங்கக் கண்டார்.
53:14 عِندَ سِدْرَةِ الْمُنتَهَىٰ
53:14. ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.
53:15 عِندَهَا جَنَّةُ الْمَأْوَىٰ
53:15. அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது.
53:16 إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَىٰ
53:16. ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில்,
53:17 مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَىٰ
53:17. (அவருடைய) பார்வை விலகவுமில்லை; அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை.
53:18 لَقَدْ رَأَىٰ مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَىٰ
53:18. திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.
53:19 أَفَرَأَيْتُمُ اللَّاتَ وَالْعُزَّىٰ
53:19. நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?
53:20 وَمَنَاةَ الثَّالِثَةَ الْأُخْرَىٰ
53:20. மற்றும் மூன்றாவதான “மனாத்”தையும் (கண்டீர்களா?)
53:21 أَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْأُنثَىٰ
53:21. உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?
53:22 تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰ
53:22. அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.
53:23 إِنْ هِيَ إِلَّا أَسْمَاءٌ سَمَّيْتُمُوهَا أَنتُمْ وَآبَاؤُكُم مَّا أَنزَلَ اللَّهُ بِهَا مِن سُلْطَانٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْأَنفُسُ ۖ وَلَقَدْ جَاءَهُم مِّن رَّبِّهِمُ الْهُدَىٰ
53:23. இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை; நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை; நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள்; எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.
53:24 أَمْ لِلْإِنسَانِ مَا تَمَنَّىٰ
53:24. அல்லது, மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்து விடுமா?
53:25 فَلِلَّهِ الْآخِرَةُ وَالْأُولَىٰ
53:25. ஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.
53:26 وَكَم مِّن مَّلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِن بَعْدِ أَن يَأْذَنَ اللَّهُ لِمَن يَشَاءُ وَيَرْضَىٰ
53:26. அன்றியும் வானங்களில் எத்தனை மலக்குகள் இருக்கின்றனர்? எனினும், அல்லாஹ் விரும்பி, எவரைப்பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்தப் பயனுமளிக்காது.
53:27 إِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ لَيُسَمُّونَ الْمَلَائِكَةَ تَسْمِيَةَ الْأُنثَىٰ
53:27. நிச்சயமாக, மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் பெண்களுக்குப் பெயரிடுவது போல் மலக்குகளுக்குப் பெயரிடுகின்றனர்.
53:28 وَمَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ ۖ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ ۖ وَإِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا
53:28. எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை; அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை; நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது.
53:29 فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا الْحَيَاةَ الدُّنْيَا
53:29. ஆகவே, எவன் நம்மை தியானிப்பதை விட்டும் பின் வாங்கிக் கொண்டானோ - இவ்வுலக வாழ்வையன்றி வேறெதையும் நாடவில்லையோ அவனை (நபியே!) நீர் புறக்கணித்து விடும்.
53:30 ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ الْعِلْمِ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِمَنِ اهْتَدَىٰ
53:30. ஏனெனில் அவர்களுடைய மொத்தக் கல்வி ஞானம் (செல்வது) அந்த எல்லை வரைதான்; நிச்சயமாக, உம்முடைய இறைவன், தன் வழியிலிருந்து தவறியவன் யார் என்பதை நன்கறிகிறான்; நேரான வழி பெற்றவன் யார் என்பதையும் அவன் நன்கறிகிறான்.
53:31 وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ لِيَجْزِيَ الَّذِينَ أَسَاءُوا بِمَا عَمِلُوا وَيَجْزِيَ الَّذِينَ أَحْسَنُوا بِالْحُسْنَى
53:31. மேலும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; தீமை செய்தவர்களுக்கு அவர்கள் வினைக்குத் தக்கவாறு கூலி கொடுக்கவும், நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கவும் (வழி தவறியவர்களையும், வழி பெற்றவர்களையும் பகுத்து வைத்திருக்கின்றான்).
53:32 الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ الْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ ۖ فَلَا تُزَكُّوا أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَىٰ
53:32. (நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்; நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்; அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் - எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான்.
53:33 أَفَرَأَيْتَ الَّذِي تَوَلَّىٰ
53:33. (நபியே! உறுதியின்றி உம்மை விட்டும் முகம்) திரும்பிக் கொண்டனர் பார்த்தீரா?
53:34 وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰ
53:34. அவன் ஒரு சிறிதே கொடுத்தான்; பின்னர் (கொடுக்க வேண்டியதைக் கொடாது) நிறுத்திக் கொண்டான்.
53:35 أَعِندَهُ عِلْمُ الْغَيْبِ فَهُوَ يَرَىٰ
53:35. அவனிடம் மறைவானவை பற்றிய அறிவு இருந்தது, அவன் பார்க்கிறானா?
53:36 أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ
53:36. அல்லது, மூஸாவின் ஸுஹுஃபில் - வேதத்தில் இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?
53:37 وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّىٰ
53:37. (அல்லாஹ்வின் ஆணையைப் பூரணமாக) நிறைவேற்றிய இப்றாஹீமுடைய (ஆகமங்களிலிருந்து அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)
53:38 أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ
53:38. (அதாவது:) சுமக்கிறவன் பிறிதொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான்;
53:39 وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَىٰ
53:39. இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை.

08/10/2014

கண்டிப்பாக கிறிஸ்துவ சஹோதர சஹோதரிகள்க்கு இந்த கனொலியை பகிருங்கள்

04/10/2014

Tamil Islamic internet radio

14/09/2014
27/07/2014

Eid mubaraq

Address


Telephone

+971565241119

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilislam.fm இஸ்லாமிய இணையதள வானொலி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamilislam.fm இஸ்லாமிய இணையதள வானொலி:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share