18/10/2023
வணக்கம்!
Alleppey Green Tourism ஆலப்புழாவிற்கு தங்களை அன்போடு வரவேற்கிறது.
படகு வீட்டில் குறைந்த விலையில் தங்கி மற்றும் ஆலப்புழாவின் அழகை கண்டுகளிக்கலாம் வாங்க.
ஆலப்புழா படகு வீட்டில் தங்க என்ன என்ன விதிமுறைகள் இருக்கு? என்ன என்ன இடங்கள் சுற்றி பார்க்க முடியும்? என்ன உணவு வகைகள் கிடைக்கும்? இப்படி உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளோம். பொறுமையாக படியுங்கள். 👇
விதிமுறைகள்:
1) நுழையும் நேரம்: 11.30 AM | முடியும் நேரம்: 09:00 AM
2) உங்கள் வரவு நேரம் தாமதம் ஆனால் நாங்கள் பொறுப்பில்லை. முடியும் நேரம் 09:00 AM மாற்றப்படாது.
3) Ac இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை. முழுநேரமும் உங்களுக்கு AC வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
4) உங்களுக்கு எங்கள் படகில் தனியுரிமை (privacy) உண்டு.
5) அரசாங்க விதிப்படி கிராம மக்கள் மீன் பிடிக்க வேண்டும் என்பதால் மாலை 5.30 மணியில் இருந்து 6 மணிக்குள் படகு வீடு ஏரிக்கரை ஓரத்தில் நிறுத்தப்படும்.
6) 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம்.
பயண விவரங்கள்:
ஆலப்புழா சுற்று பயணம் -
நாள் 1: காலை 11:30 மணிக்கு ஆலப்புழாவில் எங்கள் படகு வீட்டில் நுழைந்தவுடன் உங்களுக்கு வரவேற்பு பானம் வழங்கப்பட்டு வரவேற்கப்படுவீர்.
அதன் பிறகு மதிய உணவு, டீ / காபி, தின்பண்டங்கள், இரவு உணவு வழங்கப்படும்.
மாலை 5.30 மணியில் இருந்து 6 மணிக்குள் படகு வீடு அழகான கரையோரம் நிறுத்தப்படும்.
உங்களுக்கு விருப்பம் இருந்தால் படகு வீடு நிறுத்தப்பட்ட இடத்தின் அருகில் இருக்கும் கிராமங்களில் சிறு நடைபோட்டு நீங்கள் உலா வரலாம், மீன் பிடிக்கலாம், சூரிய மறைவையும் மற்றும் இயற்கையின் அழகையும் கண்டு ரசிக்கலாம்.
நாள் 2: காலை சிற்றுண்டிக்கு பிறகு, வேறு சில அழகிய இடங்களுக்கு உங்களை படகு வீடு அழைத்துச் செல்லும். பின்பு காலை 9 மணிக்கு உங்களை ஆலப்புழாவில் இறங்கி விடுவோம்.
படகு வீடு செல்லும் வழிகள்:
ஆலப்புழாவில் இருந்து புறப்பட்ட பிறகு, புன்னமடா ஏரி, வேம்பநாடு ஏரி R block & C block (R & C block என்பது உப்பு நீர் ஏரியில் கடல் நீரால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுகளில் நெற்பயிர்கள் பயிரிடப்படுகிறது மற்றும் தென்னைமரங்கள் வளர்க்கப்படுகிறது. இதன் இடையில் படகு வீடு செல்லும்), ராணி சித்திரா, மார்த்தாண்டம் மற்றும் கைநகரியை கடந்து செல்வோம். பின்பு குப்பபுரமில் மாலை படகு வீடு நிறுத்தப்படும். அடுத்த நாள் காலை குப்பபுரத்தில் இருந்து மீனப்பள்ளி கயல், பள்ளதுருத்தி வழியாக ஆலப்புழா வந்தடையும். இது மிகவும் அழகான மற்றும் இயற்கை சூழ்ந்த பயணம். கண்டிப்பாக ஒரு நாள் வேண்டும் இந்த சுற்றுபயணத்திற்கு.
படகு வீடு விபரங்கள்:
◆ வசதியான படுக்கை அறைகள், சுத்தமான கழிவறை மற்றும் குளியலறை இருக்கும்.
◆ படகு வீட்டின் தலைவர், திறமையான சமையற்காரர், படகு ஓட்டுநர் ஆகிய மூவர் உங்களோடு பயணிப்பார்கள்.
◆ படகு வீட்டில் மீன்பிடி தூண்டில், நீர் பாதுகாப்பு உபகரணங்கள், இசை ஒலிபரப்பு சாதனங்கள் மற்றும் தொலைக்காட்சி பெட்டி (தேவையென்றால் மட்டுமே) இருக்கும்.
Follow us on fb: https://facebook.com/AlleppeyGT
படகு வீட்டின் உணவு பட்டியல்:
◆ வரவேற்கும் போது: வரவேற்பு பானம் மற்றும் பழங்கள்
◆ மதிய உணவு: சாதம், சாம்பார், அவியல், அப்பளம், தயிர், ஊறுகாய், பொரியல், மிளகு பிரட்டி ( fry items ), அசைவம் என்றால் மீன் கிடைக்கும்.
◆ மாலை: டீ / காபி, தின்பண்டங்கள் ( வாழைப்பழ வறுவல், பிஸ்கெட் போன்ற நொறுக்கு தீனிகள் ஏதாவது ஒன்று).
◆ இரவு உணவு: சப்பாத்தி, சாதம், பருப்பு குழம்பு, ரசம், தயிர், ஏதாவது வறுவல் ஒன்று, அப்பளம், ஊறுகாய், பச்சை காய்கறிகள்.
◆ அடுத்த நாள் காலை உணவு: சுட்ட ரொட்டி (toast bread), வெண்ணெய், ஜாம், ஆம்லெட், பழங்கள் *அல்லது* இட்லி, தோசை, சாம்பார், சட்டினி வழங்கப்படும்.
உங்களுக்கு வேறு ஏதாவது உணவு தேவையெனில் அல்லது படகு வீடு செல்லும் வழியில் நீங்கள் வாங்கிய உணவு பொருட்களை வைத்து சமைத்தும் தரப்படும். (கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்)
நாங்கள் சுத்தமான குடிநீர், வெள்ளை அரிசி, சூரியகாந்தி எண்ணெய் தான் எங்கள் படகு வீட்டில் உபயோகிக்கிறோம்.
எங்களிடம் 1 படுக்கையறையில் இருந்து 8 படுக்கையறை வரையான படகு வீடுகள் இருக்கிறது மற்றும் 300 நபர்கள் வரை (பகலில் மட்டும்) பயணிக்கும் படகுகளும் உள்ளது. எங்களிடம் இருப்பது எல்லாமே *Deluxe வகை படகு வீடுகள் தான்*.
உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் நாங்கள் இந்த அட்டவணையில் தந்துள்ளோம் என்று நம்புகிறோம்.
மேலும் பல விபரங்களுக்கு மற்றும் விலை பட்டியலுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.
~~~~~~~~~~~~~~~~~
படகு வீடு பதிவு செய்ய மற்றும் விலைப்பட்டியல் பெற, தங்களுடைய தகவல்களை பின்வரும் வரிசையில் எங்களுக்கு அனுப்பவும்..
1) உங்கள் பெயர், ஊர் மற்றும் உங்களை தொடர்புக் கொள்ளவேண்டிய எண்.
2) எந்த தேதியில் வரவிருக்கிறீர்கள்?
3) எத்தனை பேர் வரவிருக்கிறீர்கள்? அதில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எத்தனை?
4) தங்களுக்கு எந்த சேவை வேண்டும் என்பதை பின்வரும் வரிசைப்படி தேர்வு செய்து சொல்லவும்.
a) *முழு இரவு பயணம்* (22 மணிநேரம் | காலை 11.30 மணியில் இருந்து மறுநாள் காலை 9 மணிவரை)
b) *பகல் பயணம்* (6 மணிநேரம் | காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரை)
இந்த வரிசைப்படி நீங்கள் எங்களுக்கு உங்களுடைய தகவல்களை அனுப்பினால், நாங்கள் உங்களுக்கு ஏற்ற படகு வீட்டின் விலைப்பட்டியல் அனுப்புவோம்.
*முன்பதிவு செய்வதால் கிடைக்கும் பயன்கள்.*
1. சலுகைகளில் மாற்றங்கள் இருக்காது.
2. நேரடியாக வந்து பதிவு செய்வதால் வரும் நேர தாமதத்தை தவிர்க்கலாம்.
3. பாதுகாக்கப்பட்ட வாகன நிறுத்தம்.
4. விழா நாட்களிலும் அதிக முன்னுரிமை கிடைக்கும்.
5. உள்ளூர் முகவர்களிடமிருந்து தவறான விலை மற்றும் வழிகாட்டுதலை தவிர்க்கலாம்.
6. படகு கிடைக்குமா, கிடைக்காதா என்ற மன அழுத்தம் குறையும்.
7. உங்கள் உணவு பட்டியலில் கூடுதல் தேவைகளை சேர்க்கவும் அல்லது மாற்றம் செய்யவும் முடியும்.
8. தேவையான சாதனங்கள் பொருத்தப்பட்ட படகு வீடுகள் வழங்கப்படும்.
9. படகு வீட்டில் நம்பகமான ஊழியர்கள் வேலைக்கு இருப்பார்கள்.
10. அழப்புழாவில் எங்களில் சிறந்த விலை சலுகைகளை பெறலாம்.
*மேலும் எங்களோடு பேச 👇🏽*
தொடர்புக்கு:
கைப்பேசி எண் - 09995772575 அல்லது 9995672575
Whatsapp: https://wa.link/yzokqy
for more links 👇
https://linktr.ee/AlleppeyGT