Tamilnadu Omni Bus

Tamilnadu Omni Bus A bus is a road vehicle designed to carry many passengers

29/06/2021
29/06/2021
07/06/2021

Scania Luxury Bus Production Factory

ஆம்னி       கொரோனாவால்   ஆம்னி பஸ்களுக்கும் பாதிப்பா?  ஆம்னி பஸ்  என்றால் என்ன? வாங்க பார்க்கலாம் ...............       ...
20/05/2021

ஆம்னி

கொரோனாவால் ஆம்னி பஸ்களுக்கும் பாதிப்பா?

ஆம்னி பஸ் என்றால் என்ன?

வாங்க பார்க்கலாம் ...............

* அந்தக் காலத்தில் குதிரைகளால் இழுக்கப்பட்ட ,மூடப்பட்ட வண்டியைத்தான்
ஆம்னி பஸ் என்பார்கள் .லத்தின் மொழியில் ஆம்னி பஸ் என்றால் அனைவருக்குமானது
என்று பொருள் .ஆம்னி பஸ் எந்த இடத்திர்க்கும் செல்லும் ( அதாவது இந்த இடத்திற்கு மட்டுமே
இது செல்லும் என்பது கிடையாது ..

* ஆம்னி பஸ் என்பது பிரஞ்சு நாட்டில் இருந்து வந்த சொல். எல்லோருக்கும் எல்லா பொருளும் என்பதே
மாற்றிக்கொள்ள வசதியான இடத்தை ஓம்னஸ் ஆம்னிபஸ் என்று அழைத்தார்கள். 1819-ஆம் ஆண்டில்
முதல் பஸ் பாரிஸில் ஓடியது. முதல் பஸ்ஸில் எட்டு போ்கள் மட்டுமே பயணம் செய்தார்கள். பஸ்
பயன்பாட்டிற்கு வந்ததும் பிரஞ்சு நாட்டில் இருந்த பொிய பணக்கார பிரபுக்களெல்லாம் கோச்சு
வண்டியைப் பயன்படுத்தாமல் பஸ்ஸில் பிரயாணம் செய்தார்கள்

முதலில் ஆம்னி பஸ் சேவை யாரால் தொடங்கப்பட்டது ' ??

* டாக்டர் கே. பொன்மலை கவுண்டர் நடராஜன் என்பவரால் 1973 ல் நிறுவப்பட்டு, தமிழ்நாட்டின் சேலத்தை
தலைமை இடமாக கொண்டு கே.பீ.என் டிராவல்ஸ் என்ற முதல் ஆம்னி பஸ் தொடங்கப்பட்டது

* தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட
மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கிடையேயான தொலைத்ததூர பேருந்து சேவையாகும் ...

சிறுவயது காதல் சாம்ராஜ்ஜியமானது எப்படி ?

* சிறு வயதில் நடராஜன் அவர்களுக்கு படிப்பு வரவில்லை 7ம் வகுப்பு மட்டுமே படித்த இவர் .....முதலில்
இவர் கனவாக பஸ் டிரைவர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது .

* அதன் பிறகு பஸ் கிளீனராக பணியாற்றி வந்தார்

* அவர் ஓட்டிய பேருந்து 15 நாட்கள் எந்த சவாரி இன்றி நின்றுகொண்டிருந்தது ....அங்கு வந்த
பயனாளிகள் ஒருவர் கோயம்புத்தூர் போகுமா ? என்று கேட்டதுடன் இவரும் மறுக்காமல்
பேருந்தை செலுத்தினார் .......அப்பொழுதுதான் முதல் முதலில் நைட் ஷிப்ட் இவரால்
தொடங்கப்பட்டது .பேருந்து கட்டணமாக வெறும் 7 ரூபாய் வாங்கினார்

* இப்படி பல இடங்களுக்கு சென்று கடின உழைப்பால் தனக்கென்று பேருந்தை வாங்கி அதில் டிரைவர்
ஆகவும் பணியாற்றி இன்று ஆம்னி பஸ் அரசன் கேபின் என்ற ஆம்னி பஸ் சேவையை முதல் முதலில்
தொடங்கிவைத்தார் .


* இந்நிறுவனம் குளிர்சாதன வசதியுடைய மற்றும் குளிர்சாதன வசதியற்ற சொகுசு பேருந்துகளை
முக்கிய நகரங்களுக்கிடையே இயக்குகிறது. இந்நிறுவனம் வேறு தனியார், அரசுப் போக்குவரத்து
மற்றும் இந்திய இரயில்வே நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டியுள்ளது.இணையதளம் முலம்
பயணச்சிட்டு முன்பதிவு செய்யும் வசதி, பேருந்து பயணம் செய்யும் இடத்தினை அறியும் வசதி போன்ற
வசதிகளையும் இந்நிறுவனம் வழங்கிவருகிறது.........

பண்டிகை நாட்கள் :

* சொந்த ஊரிலிருந்து பல்வேறு ஊர்களுக்குப் பிழைப்புக்காகச் சென்றவர்கள் புத்தாடை, இனிப்புகை
வாங்கிக் கொண்டு பயணம் செய்ய ஆயத்தமாக இருப்பார்கள் .சென்னையிலிருந்து சொந்த
ஊர்களுக்கு செல்வதற்காகக் பலர் ரயில் டிக்கெட் முன்பதிவு' செய்யக் காத்திருந்து'முன்பதிவு
தொடங்கிய சில நிமிடங்களிலே டிக்கெட்டுகள் அனைத்தும் திர்ந்து போனதாக காண்பிக்கும்

* பேருந்து பயணத்தை நம்பி இருக்கும் பலருக்கு உதவியாக இருப்பது ஆம்னி பேருந்துதான் .

* அரசுப் பேருந்துகளையும் சிறப்புப் பேருந்துகளையும் நம்பி பெரும்பாலான மக்கள் பயணம்
செய்வதே இல்லை .

ஆம்னி பஸ்களில் இருக்கும் வசதிகள் :

* 8 மணி நேரத்திற்குள் பயணிகளை அவர்கள் இடத்திற்கு பத்திரமாக கொண்டு சேர்த்தல்

* சொகுசு படுக்கைகள்

* குளிர்சாதன வசதிகள்

* பணியாட்களின் அன்பான கனிவான உபசரிப்பு

* துய்மையான சூழல்

* பயணிகளை கவரும் வகையில், பிரம்மாண்டமான தோற்றம் போன்ற பல்வேறு வசதிகளை உள்ளடிக்கியது

கொரோனாவும் ஆம்னி பஸ் போக்குவரத்து பாதிப்பும் ?

* தமிழகத்தில் சுமார் 3,500 ஆம்னி பேருந்துகள் இயங்குகின்றன. மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையத்திலிருந்து தினமும் 150-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள், சென்னை, பெங்களூரு மற்றும் பிற மாவட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.

* கடந்த ஆண்டு கொரோனாவால் ஆம்னி பஸ்கள் பாதிக்கப்பட தொடங்கியது. ஆம்னி பஸ்களில் பெரும்பாலானவை குளிர்சாதன வசதியுடன் கூடியவை. கொரோனா தொற்று ‘ஏசி’ மூலம் அதிகளவு பரவ வாய்ப்புள்ளதாக கூறப்பட்டதால் ஆம்னி பஸ்களில் செல்வதை மக்கள் தவிர்த்தனர்.

* கொரோனா ஊரடங்குக்குப் பிறகு மற்ற தொழில்கள் ஓரளவு மீண்டாலும் தற்போது வரை ஆம்னி பஸ்கள் முன்புபோல் இயங்கத் தொடங்கவில்லை.

* இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியதால் பயணிகள் ஆம்னி பஸ்களில் செல்ல ஆர்வம் காட்டவில்லை.

* அதனால் ஆம்னி பஸ்களில் கூட்டம் இல்லாமல் ஆம்னி பஸ்நிலையம் வெறிச்சோடியே காணப்பட்டது. பஸ்களில் கிடைக்கும் வருவாய் குறைந்ததால் அதில் பணிபுரிந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த பஸ்களை இயக்கதடை விதிக்கப்பட்டுள்ளது

* இதேநிலை தொடர்ந்தால் ஆம்னி பஸ்கள் இயக்கத்தில் பெரும் நஷ்டம் ஏற்படும்,

29/03/2021
20/10/2020

அன்புடையீர் வணக்கம்.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்வது, நமது சங்கத்தின் மூலம் அரசு போக்குவரத்து துறை அமைச்சகத்தை அணுகி, குளிர் சாதன வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவது சம்பந்தமாகவும், வெளி மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்குவது சம்பந்தமாகவும் கோரிக்கை மனுவை அளித்திருந்தோம். அதற்கு அவர்கள், அரசு மற்றும் ஆம்னி ( குளிர் சாதன மற்றும் வெளி மாநிலங்களுக்கு ) பேருந்துகளை இயக்குவது சம்பந்தமாக நாங்கள் மாண்புமிகு முதலமைச்சருக்கு பரிந்துரை கடித நகலை அனுப்பி உள்ளோம். கூடிய விரைவில் அதற்கு தகுந்த பதில் வரும் என்று போக்குவரத்து துறை அமைச்சகத்திடமிருந்து நமக்கு
தெரிவித்துள்ளார்கள் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.

14/09/2020

2020 Volvo 9900 Coach - Interior, Exterior

14/09/2020

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயங்கவில்லை: காரணம் ?

Address

Chennai
600001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu Omni Bus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Travel Agencies in Chennai

Show All