04/03/2024
'எனக்கு ஒண்ணுமே தெரியாது'னு சொல்ற அமீருக்கு வயசு 56. பேரன் பேத்தி எடுத்துட்டாரா தெரியாது. அது சொந்த விஷயம் , ஆகவே வேண்டாம்.
2000ல சினிமாக்கு வர்றாரு.
2020 வரைக்கும் 20 வருசத்துல,
4 படம் தான் இயக்கி இருக்காரு. மெளனம் பேசியதே 2002, ராம் 2005, பருத்திவீரன் 2007, ஆதிபகவன் 2013.
20 வருசத்துல 3 படம் தயாரிச்சிருக்கிறாரு.
ராம் 2005, யோகி 2009,
அச்சமில்லை அச்சமில்லை (2018).
ராம் ல தயாரிப்பாளர் வேறு ஒருவர், பெயரளவில் இவர் தயாரிப்பாளர்.
யோகியும் அப்படியே , பெரும் நஷ்டம்.
அச்சமில்லை அச்சமில்லை வெளிவரவே இல்லை.
நடிப்புனு பார்த்தா சிறு சிறு வேடங்கள தவிர்த்து 2 படம்.
அவரோட மொத்த வருமானம் 20 வருசத்துல மெளனம் பேசியதே , ராம் இரண்டு படங்களோட டைரக்டர் சம்பளம் தான்.
மொத்தமா 5 லட்சம் இருக்கலாம். அதை எல்லாத்சையுமே 2007 லயே பருத்திவீரன்ல தொலைச்சிட்டு ரோட்டுக்கு வந்துட்டதா அவரே சொல்லிருக்காரு.
அவருக்கு வேறு சொத்தும் இல்லை. அரிசி கடையில் சாக்கு மூட்டை தைக்கும் தொழிலில் இருந்து, சினிமாவுக்கு வந்தவர்.
பருத்தி வீரன் படத்துக்கு பிறகு தொடர் தோல்வியே. வருமானம் சுத்தமாக இல்லை.
நம்ம கேள்வி:
20 வருசமா பங்களா வாசம், புது புது கார்கள், தினம் ஒரு புது துணி ஆடம்பர சினிமா வாழ்க்கை!!
இது எப்படி சாத்தியம்?
அப்படியே 2021 க்கு வந்தா, இதுவரை வந்த தகவல் படி ஒரு இறக்குமதி ஏற்றுமதி நிறுவனம்,
இரண்டு பெரிய ஸ்டார் ரக காபி கிளப்புகள்,
இரண்டு புதிய படங்கள் தயாரிக்கிறார்.
பல பல கோடிகள் முதலீடு. இந்த பணம் எப்படி வந்தது?
பிற கேள்விகளும் அவருக்கு இருக்கின்றன.
ஒரு கூட்டத்தில் ஜாபர் சாதிக், என் உறவினர்னு நீங்களே சொல்லி இருக்கீங்க, உண்மையா?
ஜாபரும் நீங்களும் பத்து வருடங்களுக்கு மேலான நட்பு,
4 வருடங்களாக பல வியாபார நிறுவனங்களில் பார்ட்னர்கள்.
எப்பொழுதும் எங்கும் ஒன்றாக போக வர இருப்பவர்கள்.
அவரைத் தெரியவே தெரியாது என்பது போல மறுப்பது ஏன்?
நீங்களும் ஜாபரும் சேர்ந்து நடத்தும் உணவு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில்
மூன்று வருடங்களாக என்ன இறக்குமதி ஏற்றுமதி செய்தீர்கள்?
எல்லா உணவகங்களும் காலை 10 மணிக்கு துவங்கி இரவுக்குள் மூடி விடும் நிலையில்,
உங்கள் காபி கிளப்புகள் நள்ளிரவில் நடக்கும் மர்மம் என்ன?
ஜாபர் கைதானது முதல் உங்கள் நிறுவனங்கள் சார்ந்த இணைய தளங்களை நீங்களே அவசரமாக முடக்கியது ஏன்?
காவல்துறை வந்தால் கேள்விகளுக்கு பதில் சொல்ல நான் தயார் என்பதெல்லாம் இல்லை. சொல்லித்தான் ஆகணும்.
அதற்கு முன்பாக,
மக்களை காக்கும் போராளியாக காட்டிக் கொண்ட நீங்கள்,
அந்த மக்களுக்கு முதலில் பதில் சொல்லுங்கள்.
வரி ஏய்ப்போ நிதி மோசடியோ குற்ற அளவு வேறு, குறைவு.
ஆனால் நீங்கள் தொடர்பு பட்டிருப்பது முழு இளைஞர்களையும் பல குடும்பங்களையும்,
மொத்த இனத்தையுமே மண்ணோடு மண்ணாக்கும் நாசகார போதை மருந்து.