24/01/2018
"நானும் பாத்துட்டே இருக்கேன் ஆனா ஊனா மரபு நடைன்னு போஸ்ட் போட்டுட்டே இருக்கீங்க, மரபு நடைன்னா என்னய்யா" என்று கேட்கும் Celebrate Kanchiஐ தொடரும் புதிய/ பழைய வாசகர்களுக்கு, ஒரு சிறு விளக்கம்.
நம்மை சுற்றி இருக்கும் - நாம் அன்றாட வாழ்வில் அசாத்தியமாக கடந்து செல்லும் - நாம் நினைத்து பார்க்க முடியாது அளவு சிறப்புகளை தன்னகத்தே கொண்டு - பல வரலாற்று சிறப்பு மிக்க - வேறெங்கும் காணக்கிடைக்கா தொண்மை சின்னங்களை, நேரில் கண்டு - ஒரு வரலாற்று ஆய்வாளர் முன் நின்று விளக்கி, அச் சின்னத்தின் தொன்மை பெருமை என்ன அதை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பது பற்றிய புரிதலை நமக்கு கொண்டுவரும் முயற்சியே எங்களது இந்த #வரலாறு_முக்கியம்_அமைச்சரே 3.0 எனும் #மல்லை_மரபு_நடை.
வாகனம்:
சரி நடைன்னு சொல்றீங்க, நடக்க வச்சே மாமல்லபுரம் வரைக்கும் கூட்டிட்டு போவீங்களா.
அவ்வளவு கொடுமை படுத்த மாட்டோம். காஞ்சிபுரத்தில இருந்து காலை 5:45 மணிக்கு தொடங்கி வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் Bypass வழியாக மாமல்லபுத்திற்கு ஒரு Vanனும்.
தாம்பரத்தில் (காலை 6:15 மணிக்கு) இருந்து ஒரு Vanனும் ஏற்பாடு செய்யப்பட்டது.
எத்தனை இடங்கள்:
மொத்தம் (குறைந்தது) 8 இடங்கள். நேரத்திற்கும் மக்களின் ஒத்துழைப்பிற்கும் ஏற்ப்ப ஏற இறங்க வாய்ப்புள்ளது.
உணவு, தண்ணீர், தேநீர்:
இது போக காலை மதியம் உணவு, தண்ணீர், தேநீர், பிஸ்கெட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எப்பொழுதும் போல ஒரு நாள் பயணமாக நடக்கவிருக்கும் இந்த நிகழ்வு, பிப்ரவரி 18, ஞாயிறு அன்று நடக்கவிருக்கிறது.
விருப்பமுள்ளோர் கீழ் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டோ அல்லது
செந்தில்: 8939461515.
ஜவஹர்: 8760065699
குமரன்: +919751033455.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ தொடர்ந்தோ பதிவு செய்யலாம்.
பதிவு செய்யும் Link 👇👇👇
https://goo.gl/WmQj5L
ஒரு நபருக்கான பயன செலவு: 1000 ரூபாய்.
படத்தில் இருக்கும் Map நாம் செல்லப்போகும் இடங்களை காட்டும்.
நன்றி
#செலிப்ரேட்_காஞ்சி குழுமம்.
3.0 | |
| | | | |
Map courtesy: Chennai Sevas Pandian