Courtrallam tamilnadu India

Courtrallam tamilnadu India Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Courtrallam tamilnadu India, Tourist Information Center, Near Old false, Tenkasi.

18/12/2023

தொடர்ந்து இரண்டு நாட்களாக இடைவிடாத பெய்த கன மழையினால் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான குளங்கள் அனைகள் நிரம்பின..

18/12/2023

ஐந்தருவி

18/12/2023

New falls current situation

05/07/2023
தற்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக வருகிறது.. #குற்றாலம்_பேரருவி
05/07/2023

தற்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக வருகிறது..
#குற்றாலம்_பேரருவி

கண்ணாமூச்சி காட்டுகிறதா தென்மேற்கு பருவமழை ? தென்காசி மாவட்ட சிறப்பு வானிலை அறிக்கை தென்மேற்கு பருவமழை துவங்க சாதகமான சூ...
10/06/2023

கண்ணாமூச்சி காட்டுகிறதா தென்மேற்கு பருவமழை ? தென்காசி மாவட்ட சிறப்பு வானிலை அறிக்கை

தென்மேற்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் இல்லாததால் குற்றாலத்தில் சீசன் துவங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.தென்காசியை பொறுத்தவரை மூன்று பருவமழை காலங்களிலும் மழை பெறும் பகுதியாகும். குறிப்பாக ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தை குற்றால சீசன் என்று அழைப்போம்.

இயற்கை அன்னையின் மடியில் தவழும் தென்காசி சாரல் மழைக்கு புகழ் பெற்றது.
இதமான தென்றல் காற்று குளு குளு வானிலை, மனதை மயக்கும் சாரல் மழை என ரம்மியமான காட்சியளிக்கும் இதனால் தான் தென்காசியில் சாரல் திருவிழா நடத்தப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தின் உச்சபட்ச சிறப்பாக தென்றல் தவழும் குற்றாலம் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி, பாலருவி என அருவிகளின் நகரமாக சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் குற்றாலத்தை வரமாக பெற்றிருக்கிறது தென்காசி .அருவிகளில் குளிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்ல இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இந்த நிலையில் பருவமழை துவங்காததால் குற்றாலத்தில் சீசன் துவங்குவதில் கேள்விகுறியாகியுள்ளது. தற்போது ஜூன் மாதம் 10 ம்தேதி வரை மழை இல்லாத நிலையே நீடிக்கிறது.

வரலாறு சொல்வது என்ன?

கேரளாவில் ஜுன் 1 ம்தேதி சராசரியாக பருவமழை துவங்கும்.அதே நாளில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழை தீவிரமடையும். ஆனால் கடந்த 20 ஆண்டுகளை ஆய்வு செய்த போது தென்மேற்கு பருவமழை சில ஆண்டுகளில் மே மாதத்திலும் சில ஆண்டுகளில் மிக தாமதமாகவும் துவங்கியுள்ளது. 2007 ம் ஆண்டு ஜுன் மாதம் 21 ம்தேதி தென்காசியில் மிக தாமதமாக பருவமழை துவங்கியிருக்கிறது. கடந்த 23 ஆண்டுகளில் மிக மிக தாமதமாக துவங்கிய பருவமழை இதுவே ஆகும்.

பருவமழை எப்போது துவங்கும் ?

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தற்போது வரை தீவிரமடையவில்லை. இதே நிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும். தற்போதைய நிலவரப்படி பருவமழை துவங்க சாதகமான சூழல் இல்லாத காரணத்தால் குற்றால சீசனும் துவங்க வாய்ப்பில்லை. அடுத்த ஒரு வாரத்திற்கு தென்காசியில் மழை தீவிரமடைய வாய்ப்பில்லை. ஜூன் மாதம்18 ம்தேதிக்கு பிறகு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது அதன் பின்னர் குற்றால அருவிகள் களைக்கட்டும் என எதிர்பார்க்கப்படும்

இதை கண்டிப்பாக படித்தவுடன் பகிரவும்,குற்றால அருமைவெளியூர் நண்பர்களுக்கு தகவல் ..........குற்றாலம், இந்தியாவின் தமிழ்நாடு...
28/05/2023

இதை கண்டிப்பாக படித்தவுடன் பகிரவும்,
குற்றால அருமை
வெளியூர் நண்பர்களுக்கு தகவல் ..........

குற்றாலம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மாரிக்காலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயில் பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது. குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது. சங்ககாலத்தில் இது தேனூர் என்னும் பெயருடன் திகழ்ந்தது. இவ்வூர் சங்கப் பாடல்களில் பெண்ணின் அழகுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

குற்றாலம் தென்காசியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே 100 கிலோமீட்டர்) அமைந்துள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையமாகும். தென்காசி தொடர்வண்டி நிலையம் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையமாகும்.

குற்றால அருவிகள் தென் தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.

தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழுத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழும். இவ்வாறு சுற்றுலா மக்களைக் கவரும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது. சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும். குற்றாலத்தில் பேரூராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான விடுதிகள் உள்ளன.

குற்றால அருவிகள் மொத்தம்

குற்றாலம் பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது
15/04/2023

குற்றாலம் பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது

 #வானம்_கருமேகத்துடன்  #குற்றாலம்_ரோடு
10/04/2023

#வானம்_கருமேகத்துடன்
#குற்றாலம்_ரோடு

பனங்கிழங்கு
08/03/2023

பனங்கிழங்கு

Address

Near Old False
Tenkasi
627814

Website

Alerts

Be the first to know and let us send you an email when Courtrallam tamilnadu India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share