07/12/2020
கோவாவிற்கு வாருங்கள்...
தவணை முறையில் பணம் செலுத்தி..
இந்தியாவின் மேற்கு பகுதியான கொங்கனில் அமைந்துள்ளது கோவா மாநிலம்.
இது இந்தியாவின் மிகச் சிறிய மாநிலமாகவும், குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் நான்காவது இடத்தில் உள்ளது.
சுற்றுலாவையோ அல்லது விடுமுறையையோ இனிதாகக் கழிக்க விரும்புவோரும், கடற்கரை விரும்பிகளும், நீர் விளையாட்டு பிரியர்களும் கோவாவை நோக்கி படையெடுக்கலாம்.
கோவாவில் எப்போதும் ஈரப்பதம் நிறைந்த தட்பவெப்ப நிலை இருக்கும். மே மாதத்தில்தான் அதிகப்படியாக 95 டிகிரி வெயில் இருக்கும். இங்குள்ள தட்பவெப்ப நிலையை அறிந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.
இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களில் கோவா கடற்கரை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிகம் வரவேற்பை பெற்றுள்ளது. அங்குள்ள அழகான கடற்கரையும், தட்ப வெப்பமும் வெளிநாட்டவர்களை மிகவும் கவர்ந்திழுக்கிறது.
பார்க்க வேண்டிய இடங்கள்:
கேண்டலிம்
கோவாவில் மொத்தம் 21 கடற்கரைகள் அமைந்துள்ளன. அவற்றில் தென் கோவாவில் உள்ள கேண்டலிம் பகுதியில் மட்டும் கலங்கூட், பாகா, கேண்டலிம் என்று மொத்தம் 3 கடற்கரைகள் இருக்கின்றன.
இந்த கடற்கரைகள் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் கவரப்படுகின்றன.
இங்கு ஏராளமான நீர் விளையாட்டுக்களும் நடத்தப்படுகின்றன. அதில் விருப்பம் உள்ளவர்கள் நீர் விளையாட்டுக்களில் பொழுதை கழிக்கலாம்.
பாகா கடற்கரையில் பிரிட்டோஸ் என்ற அழகான குடில்கள் அமைந்துள்ளன. இவை மிகவும் புகழ்பெற்றவை.
இந்த மூன்று கடற்கரைகளிலிருந்தும் முற்றிலும் வேறு ஒரு உலகத்துக்கே உங்களை அழைத்துச் செல்வது அஞ்சுனா கடற்கரையாகத்தான் இருக்க முடியும்.
இங்கு உலகப் புகழ்பெற்ற ஜாயின்ட் கர்லிஸ் உணவகங்களுக்கு சென்று வித்யாசமான உணவு வகைகளை ருசி பார்க்கலாம்.
அதுமட்டுமில்லாமல் அமைதியின் இருப்பிடமான அஞ்சுனா பீச்சில் நீங்கள் புத்தகம் படிப்பது, வாக்மேனில் பாடல்கள் கேட்பது, மடிக்கணினியில் ஃபேஸ்புக் பார்ப்பது போன்று உங்களுக்கு பிடித்தமான வேலைகளில் ஈடுபடலாம்.
Basilica of Bom Jesus
கோவாவில் ஏராளமான கிறிஸ்துவ தளங்கள் உள்ளன, அவற்றில் ஒன்றுதான் குழந்தை இயேசு பசிலிக்கா (Basilica of Bom Jesus) அல்லது Borea Jezuchi Bajilika என்னும் கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டு இடம்.
இந்தியாவின் பழைய கோவா நகரில் அமைந்துள்ள இந்த தேவாலயம், உலகப் பாரம்பரியங்களுள் ஒன்றாக புகழ்பெற்று விளங்கும் புனித இடம் ஆகும்.
இப்பெருங்கோவிலில் இந்தியாவின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகின்ற புனித பிரான்சிசு சவேரியாரின் உடல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இக்கோவிலில்தான் புனித பிரான்சிஸ் சவேரியாரின் உடல் அழியாநிலையில் உள்ளது.
Bats Island
கோவாவில் உள்ள தீவுகளில் Bats தீவு மிகச்சிறப்பான தீவாகும், ஏனெனில் சாதனை செய்ய விரும்புவர்கள் கண்டிப்பாக இந்த தீவிற்கு செல்லலாம்.
இது Baina Beach-லிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது, ஒரு நாளை மிகவும் அமைதியாக கழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தீவிற்கு செல்லலாம்.
பவளப்பாறைகள், கடல்பாசிகள், கிளி மீன், தேவதை மீன், அணில் மீன், பட்டாம்பூச்சி மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்களை கண்டுகளித்து நீங்களும் அவர்களோடு வாழலாம்.
கேளிக்கை கொண்டாட்டங்கள்
கேளிக்கை விரும்பிகளுக்கு இன்ப பூமியாக கோவா விளங்குகிறது, கோவாவில் உள்ள இரவு விடுதிகளிலும், பப்புகளிலும்(Pubs) ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டங்கள் களைகட்டும்.
கோவாவின் Tito’s Street தெருவில் அமைந்துள்ள பப்புகள் மிகப்பிரபலமானவை, இந்த தெருக்களில் கால்நடையாக சென்றால் ஏராளமான பப்புகளை பார்க்கலாம், அதில் ஏதேனும் ஒரு பப்பில் கலந்து கொண்டு உங்கள் இரவு நேரத்தை நன்றாக கழிக்கலாம்.
ஏராளமான கடற்கரைகள், தீவுகள், இரவு விடுதிகள், தேவாலயங்கள் என பல்வேறு சிறப்புகளோடு விளங்கும் கோவாவிற்கு ஒருமுறை வாருங்கள்.