17/06/2024
கரூர் வழியாக வந்தே பாரத் விரைவு ரயில்.
மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை வரும் ஜூன் 20ம் தேதி காணொலி வாயிலாக பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ள நிலையில், அதற்கான சோதனை ஓட்டம் இன்று(ஜூன் 17) நடைபெற்றது.
மதுரை - பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஒசூர், வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த புதிய வந்தே பாரத் மூலம் கரூர் பயணிகளும் விரைவாக பெங்களூரு செல்ல இயலும்.
கரூர் - பெங்களூருவுக்கு இடையே வர்த்தக, தொழில் தொடர்பு அதிகரிக்கும்.
இந்த ரயில் சேவையை வரும் ஜூன் 20ம் தேதி காணொலி வாயிலாக பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ள நிலையில்,
அதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. மதுரையில் இருந்து காலை 5.15 மணிக்கு கிளம்பிய ரயில், கரூருக்கு காலை 8.10 மணிக்கு வந்தது.
மதியம் 2 மணிக்கு பெங்களூரு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.