11/06/2023
பயணத் தொழில்நுட்பம் Apps for Travel
-------------------------------------------------
தெரியாத இடங்களுக்கு பயணம் செல்லும் முன் இந்த ஆப்ஸை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் தெரியாத ஒரு இடத்திற்கு பயணத்தை திட்டமிடும்போது இந்த 7 ஆப்ஸை ஒரே நேரத்தில் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை பெரிய அளவில் எளிதாக்கியுள்ளது. முக்கியமாக பயணம் என்று வரும்போது தொழில்நுட்பம் தரும் உதவிகள் என்பது கொஞ்சம் அதிகம் தான். பயணத் திட்டம் போடுவதில் இருந்து வழி கட்டுவது, பயண செலவு, தெரியாத இடங்களில் இலவச வைஃபையைக் கண்டறிவது வரை அனைத்திலும் உங்களுக்கு உதவக்கூடிய பல மொபைல் பயன்பாடுகள் உள்ளன.
அப்படி நீங்கள் தெரியாத ஒரு இடத்திற்கு பயணத்தை திட்டமிடும்போது இந்த 7 ஆப்ஸை ஒரே நேரத்தில் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இவை உங்கள் பயணத்தை எந்தத் தடங்கலும் இல்லாமல் எளிதாக மாற்ற பெரிய உதவியாக இருக்கும்.
trip organizer app:
எந்தவொரு பயணத்தைத் திட்டமிடும் முன், கண்டிப்பாக உங்கள் மொபைலில் ட்ரிப் ஆர்கனைசர் செயலியைப் பதிவிறக்கவும். இந்தப் பயன்பாடுகளில், நீங்கள் சேருமிடம், விமான டிக்கெட்டுகள், ஹோட்டல் மற்றும் பயணத் தேதிகள் தொடர்பான விவரங்களை நிரப்ப வேண்டும்.
எந்தவொரு வழிகாட்டியின் உதவியும் இல்லாமல், உங்கள் பயணத்தின் முழுமையான திட்டத்தைப் பெறுவீர்கள். இந்தப் பயன்பாடு பயணத்தில் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
Packing App :
அதிகம் தெரியாத ஒரு இடத்திற்கு நீங்கள் செல்லப் போகிறீர்கள் என்றால், அந்த இடத்திற்கு என்னென்ன பொருட்களை எடுத்த செல்ல வேண்டும். எல்லாம் சரியாக எடுத்து வைத்துஇருக்கிறோமா என்று பார்க்க ஒரு உதவியாளர் தேவைப்படுவார். அதற்கு Packing App உதவும். இது எளிதாக பேக்கிங் செய்ய உதவும்.
currency converter app:
வெளிநாட்டிற்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த ஆப் மிகவும் உதவியாக இருக்கும். புதிதாக போனால் சரி, அடிக்கடி புதிய இடங்களுக்குச் செல்லும் மக்களுக்கும் சரி இந்திய ரூபாயை அந்த நாட்டின் உள்ளூர் நாணயமாக மாற்ற , பொருளின் விலையை மதிப்பிட பட்ஜெட்டை மதிப்பிட, இந்த ஆப் உங்களுக்கு நிறைய உதவும்.
wifi finder app:
பதிவிறக்கிய பிறகு ஆஃப்லைனில் வேலை செய்யும் பல பயன்பாடுகள் உள்ளன. ஆனால் சில ஆப்களுக்கு இணைய இணைப்பு கட்டாயம். இது தவிர, இன்றைய காலகட்டத்தில், மிக முக்கியமான UPI பரிவர்த்தனைக்கு இணையம் தேவைப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் உங்கள் மொபைல் இணைய இணைப்பு வெளியே வேலை செய்யாது. அத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், இந்த பயன்பாடு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பயன்பாட்டின் உதவியுடன், அருகிலுள்ள இலவச வைஃபையை நீங்கள் எளிதாகக் கண்டறிய முடியும். ஆனால் இலவச வைஃபை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என்பது எங்கள் ஆலோசனை.
translation app:
மொழிபெயர்ப்பு பயன்பாடு வெளிநாட்டிலா அல்லது மொழி பேசவோ புரிந்துகொள்ளவோ முடியாத மாநிலத்திற்குச் செல்லும் போது பெரிய உதவியாக இருக்கும். மொழிபெயர்ப்பு பயன்பாட்டில், நீங்கள் எழுதுவது அல்லது பேசுவதன் மூலம் அந்த மக்களுடன் உரையாக உதவும். இந்த பயன்பாடுகளில், 90 க்கும் மேற்பட்ட மொழிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம்.
Offline Map:
புதிய இடங்களுக்கு செல்லும் போது வரைபடங்கள் மிகவும் அவசியம். உள்ளூர் உணவகங்கள், பார்வையிட வேண்டிய இடங்கள் பற்றிய தகவல்களை இதன் மூலம் தான் பெறுவோம். ஆனால் இன்டர்நெட் பிரச்சனையால் இந்த ஆப்ஸ் மற்றும் மேப்களை உங்களால் பயன்படுத்த முடியாமல் போய்விடலாம். தகவல் பற்றாக்குறையால் பல முக்கிய இடங்களை தவற விட வாய்ப்புண்டு. எனவே, நீங்கள் எங்காவது செல்ல திட்டமிட்டால், அந்த இடத்தின் ஆஃப்லைன் வரைபடத்தை பதிவிறக்கம் செய்து அதை முன்கூட்டியே தொலைபேசியில் சேமித்து வைக்கவும்.
Live Tracker
லைவ் டிராக்கர் ஆப் பயன்பாடு உங்கள் வழி, நிறுத்த வேண்டிய இடங்கள், நீங்கள் கிளிக் செய்த இடங்களின் புகைப்படங்கள் போன்ற தகவல்களைத் தொடர்ந்து வழங்குகிறது.
முழுப் பயணத்தின்போதும், கவலையின்றி உங்களின் விடுமுறை நாட்களை அனுபவித்து மகிழுங்கள்.
------------------------------------------------------------------------------------------
Shared Post