
16/12/2024
டிரைவர்"ங்க சொகுசா வந்து போறாங்க அவங்களுக்கு பணம் கொடுக்குறதுக்கு அதிகமா இருக்குனு நினைக்காதிங்க....
ஒரு ட்ரிப் எடுத்து நாங்க போயிட்டு வரதுக்குள்ள எத்தனை இடைஞ்சல் வந்தாலும் நம்மள நம்பி வரவங்கள பத்திரமா கூப்பிட்டு போயிட்டு இறக்கி விடணும் னு மனசார வேண்டிக்கிட்டு போவோம்..
போற இடத்துல எங்களால முடிஞ்ச உதவியும் பன்றோம்...
பகலில் விட நைட்ல வண்டி ஓட்டுறது எவ்ளோ சிரமம் னு ஒரு டிரைவருக்கு தான் தெரியும்
அதும் இந்த LED லைட் வெளிச்சம் கண்ணு வலி தல வலி எல்லாமே வரும் ஆனாலும் பத்திரமா எங்க கஸ்டமர கொண்டு வந்து விடுவோம்..
நேரத்துக்கு சாப்பிட முடியாது நேரத்துக்கு தூங்க முடியாது..
வெளியூர் லாம் போனா பல நாள் குளிக்க பாத்ரூம் போக கூட சிரமமா இருக்கும்..
கார்லயும் படுக்க முடியாது அப்டியே படுத்தாலும் வேர்க்கும்
ஏசியும் ரொம்ப நேரம் போட முடியாது இப்படி ஏகப்பட்ட கஷ்டம் லாம் தாண்டி தான் நாங்களும் ட்ரைவரா வாழ்ந்துட்டு இருக்கோம்..
எங்க போனாலும் எங்க உசுர பணயம் வச்சு தான் போயிட்டு வந்துட்டு இருக்கோம்
உங்க உசுரும் எங்க உசுரும் ஒன்னு தான் ங்க ஐயா...
30 நாள் டூட்டி போனாலும் அதிகபட்சம் 30000 சம்பளம் வரும்
அந்த 30000 சம்பாரிக்க எத்தனை நாள் நாங்க கண்ணு முழிச்சு ஓட்டுறோம் னு எங்க டிரைவர் குடும்பத்துக்கு தான் தெரியும்....
நீங்க பணம் கம்மியா கொடுத்தாலும் பரவால்ல டிரைவருங்க லாம் சொகுசா வந்து போயிட்டு பணம் அதிகமா வாங்குறாங்க னு சொல்லி கஷ்டப்படுத்தாதீங்க..
100 ரூபாய் கொடுத்து சாப்பிட சொன்னா 50 ரூபாய்க்கு சாப்பிட்டு 50 ரூபாய் வீட்ல இருக்குற பசங்களுக்கு எதாவது வாங்கிட்டு போற என்னைப்போல் டிரைவருங்க நெறைய பேர் இருக்காங்க.. என்னைய மாதிரி..
@உங்கள் வழி செலவில் எங்கள் வாழ்க்கை செலவு...