Koperasi Yatra Hindu Malaysia Berhad or Koperasi Yatra is a cooperative society for the Malaysian Hindus.It encourages the Hindu followers to save and go on pilgrimages to holly hindu places. Preamble: The 'KOPERASI YATRA HINDU MALAYSIA BERHAD' is a unique co-operative society registered under the Malaysia Co-operative Ordinance 1948 ( Revised - 1993) on the 18th of May 1989 and bear the registra
tion number of KOOP NEGARA 95. Objectives: Koperasi Yatra Hindu or Yatra Hindu was formed for the primary purpose of providing facilities and services to members who choose as the focal point of their veneration and worship shrines/temples within Malaysia and overseas. Besides providing pilgrimage facilities and services, Yatra Hindu also provides conducted tours to any part of the globe. In order to achieve this, Yatra Hindu encourages its members to save a portion of their monthly income in the SPECIAL SAVING SCHEME specifically created for this purpose. Membership: Membership is open to any citizen of Malaysia who professes the Hind faith and has attained the of 18. Ever since its inception Yatra Hindu has recruited more than 2000 members. SEED: SPIRITUAL, EDUCATIONAL & ECONOMIC DEVELOPMENT
" IN SERVICE DWELLS DIVINITY "
மலேசிய இந்து யாத்திரை கூட்டுறவு சங்க வரலாறு
மலேசிய கூட்டுறவு இயக்க வரலாற்றில், இந்துக்களுக்கென சமய அடிப்படையைக் கொண்டு, தேசிய நிலையில் உருவானதே ‘ மலேசிய இந்து யாத்திரை கூட்டுறவு சங்கம்.’ அன்றும் இன்றும் தொய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருப்பதும் அது ஒன்றுதான். மலேசிய தேர்வு வாரியத்தில் துணை இயக்குநராக அந்நாளில் பணிபுரிந்த திரு.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் சமய, சமுதாய உந்துதலின் உயிர்ப்பாக உருவானதுதான் இந்த இயக்கம்.
இப்புனிதப் பணியில் அவரோடு தோள்கொடுத்து துணை நின்றவர்கள் சிலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: திரு.கே.இராகவன் (மலாக்கா), திரு.எம்.சுப்பிரமணியம் (கோலாலம்பூர்), திரு.வி.பாலன் (சிகாமட்), திரு.மாரப்பன் (தெலுக் இந்தான்), திரு.பி.முனியாண்டி (த»சோங் மாலிம்), தம்பாய் முனியாண்டி (மலாக்கா), திரு.வி.பொன்னழகு (கோலாலம்பூர்) ஆகியோர்.
திரு.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் தலைவராகவும், திரு.கே.இராகவன் செயலாளராகவும், திரு.எம்.சுப்பிரமணியம் பொருளாளராகவும் பொறுப்பேற்று 18.5.1989ல் அதிகாரப்பூர்வமாகப் பதிவு பெற்றது மலேசிய இந்து யாத்திரை கூட்டுறவு சங்கம். பதிவு பெற்ற காலக்கட்டத்தில் 55 உறுப்பினர்களுடன் இயங்கத் தொடங்கியது சங்கம்.
துவக்கக் காலக் கட்டத்தில் உறுப்பினர்களுக்கு யாத்திரைகள் ஏற்பாடு செய்வது, அதற்கான செலவுத் தொகையைத் தவணை முறையில் வசூல் செய்வது, உறுப்பினர் சேர்க்கை போன்ற நடவடிக்கைகளுக்கு மட்டுமே முன்னுரிமை தந்து சங்கம் செயற்பட்டுக் கொண்டிருந்தது.
தமிழகம், ஆந்திரா, கர்னாடகா, மைசூர், வடநாடு ஆகிய பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான இந்துத் தலங்களுக்கு வருடந்தோறும் யாத்திரைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்தேறின. மிகக் குறைந்த ரி.ம.55.00யைச் செலுத்தி உறுப்பியம் பெற்ற இந்துக்கள் பேரளவில் தவணை முறையில் பணம் செலுத்தி யாத்திரைகளில் கலந்து பயனடைந்தனர்.
அக்காலக் கட்டத்தில் இந்தியாவில், மலேசிய இந்து யாத்திரை எனும் பதாகையோடு பேருந்து காணப்படுமானால், அதில் பயணிப்பவர்கள் இந்துக் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள்தான் என்பதனை அவ்வட்டார யாத்திரை ஏற்பாட்டாளர்கள் ஊகிக்கும் அளவிற்குப் பிரபலமடைந்திருந்தது. பணிச்சுமை, இடமாற்றம் இன்னபல காரணங்களினால் செயலவையில் பழையன கழிதலும், புதிய புகுதலும் அவ்வப்போது நிகழ்ந்தது. திரு.டி.கே.எஸ்.நாகேந்திரராவ் செயலாளராகவும், திரு.வி.பொன்னழகு பொருளாளராகவும் சிலகாலம் சேவையாற்றினர். செயலவை உறுப்பினர்களாகப் பலர் வந்து போயினர்.
கால ஓட்டத்தில், யாத்திரையில் கலந்து கொண்டவர்கள் சிலர் பயண ஏற்பாடு செய்வதை நமது சங்கத்தின் வழி புரிந்துகொண்டு தாங்களே யாத்திரைகள் ஏற்பாடு செய்யத் துவங்கி விட்டனர். பல நூறுகளில் இருந்த பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வந்தது. எனவே, சங்கம் தனது நடவடிக்கைகளைப் பலநோக்கு அடிப்படைக்கு மாற வேண்டிய சூழ்நிலை உருவானது.
அன்று ஏற்பட்ட உந்துதல்தான் இன்றைய வளர்ச்சிக்கு வித்தாக அமைந்தது. யாத்திரைகள் மட்டுமின்றி சேமிப்பு, கடன், சிக்கன நடவடிக்கைகள் அமலுக்கு வந்தன. அங்காசா வழி சந்தாவும். கடன் தொகையும் மாதாந்திர அடிப்படையில் பிடித்தம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நாளடைவில் புதிய உறுப்பினர் சேர்ப்பு முடுக்கி விடப்பட்டது. இப்பணியில் திரு.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் சேவை அளப்பரியது. கெடா துவங்கி ஜோகூர் வரை நாடு முழுவதும் பயணம் செய்து, அங்காசா வழி பிடித்தம் செய்யும் முறையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் சங்கத்தில் உறுப்பியம் பெற்றனர். உறுப்பினர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
இச்சோர்விலாச் சேவையில் நாடெங்கும் பலர் துணைக்கரம் நீட்டினர். அவர்களில் நினைவுக்கூறத்தக்கவர்கள் : கெடாவில் திரு.மா.இராஜு, திரு.கோ.சுப்பிரமணியம், திரு.கு.தணிகாசலம், பேராக்கில் திரு.பி.முனியாண்டி, திரு.க.அரசு, சிலாங்கூர் / விலாயாவில் திரு.கு.பாலசுந்தரம், திரு.கி.அருணாசலம், நெகிரி செம்பிலான் / மலாக்காவில் திரு.பெ.கந்தசாமி, ஜோகூரில் திரு.வெ.பாலன், திரு.இரா.அண்ணாமலை ஆகியோர்.
நாடளாவிய நிலையில் உறுப்பினர் எண்ணிக்கை பெருகியதால் சங்க நடைமுறை இயக்கப் பணிகளும் கணிசமாக உயர்ந்தன. அனைத்தையும் தலைவர் பொறுப்புடன் சேர்த்து கணக்கு வழக்குப் பணியினையும் செய்து; நாடளாவிய நிலையில் உறுப்பினர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்து வந்தவர் திரு.எஸ்.பாலச்சந்திரன்தான் என்றால் நினைத்துப் பார்ப்பதற்கு வியப்பாகத்தான் உள்ளது.
நாடளாவிய நிலையில் பல மாநிலங்களைப் பிரதிநிதித்து செயலவை உறுப்பினர்கள் நிர்வாகத்தில் இடம் பெற்றனர். தலைவராகத் திரு.எஸ்.பாலச்சந்திரன் தொடர்கிறார். பொதுச்செயலாளராகத் திரு.பெ.கந்தசாமி, பொருளாளராகத் திரு.கி.அருணாசலம் அவர்களும் தொடர்கின்றனர்.
மாதாந்திரச் சந்தா பிடித்தம் வழி, சங்கத்தின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. எனவே, சங்கம் அசையாச் சொத்துகள் வாங்குவதில் கவனம் செலுத்தியது. முதன்முதலில் பத்துகேவ்சில் ஒரு கடைவீட்டின் நடுப்பகுதி மட்டும் வாங்கப்பட்டது. இதுகாறும் திரு.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் இல்லமே சங்கத்தின் அலுவலகமாக இயங்கி வந்தது. அது இப்போது சங்கக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.
சிலவாக இருந்த கடன்மனுக்கள் பலவாக உயர்ந்தன. கடன் வகைகளும் உறுப்பினர்களின் தேவைகளுக்கு ஈடுகட்டும் வண்ணம் பலவாக மாற்றம் கண்டன. யாத்திரைக்கடன், உத்தரவாதக் கடன், அவசரக் கடன், சாலைவரி/காப்புறுதி கடன் என்று பலவகைக் கடன்கள் உருவாக்கப்பட்டன. கடன் காப்புறுதித்திட்டம் அமலுக்கு வந்தது. குழுக் காப்புறுதித் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. இப்படிப் பல பரிமாணங்களில் சங்கம் வளர்ச்சி கண்டது.
ஆன்மீகம், அறிவு, பொருளாதாரம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் கீழ்க்காணுமாறு சங்கத்தின் நடவடிக்கை குறியிலக்குகள் வகுக்கப்பட்டன. அவை பின்வருமாறு அமைந்தன.
ஆன்மீகம் :
1) புனித யாத்திரைகள் / பிரயாணங்கள்
2) சமய நடவடிக்கைகளில் ஈடுபட சேமித்தல்.
3) உலகம் முழுவதும் பிரயாணம் செய்ய ஊக்குவித்தல்.
அறிவு:
1) தமிழ்மொழி ஆய்வு வாரியம் அமைத்தல்.
2) தனியார் சிறப்புத் தமிழ்ப்பள்ளிகள் அமைத்தல்.
3) கல்விநிதி உதவி செய்தல்.
பொருளாதாரம்:
1) தகுதியுள்ள உறுப்பினர்களுக்குக் கடன் வழங்குதல்.
2) வாணிப நிறுவனங்கள் அமைத்தல்.
3) வணிக மற்றும் நிதி ஆலோசனைகள் வழங்குதல்.
இந்நடவடிக்கைகளின் வழி சங்கம் நம் சமுகத்தினரிடம், குறிப்பாக ஆசிரியர் களிடையே நிலையான கவனத்தைப் பெற்றது. உறுப்பினர் எண்ணிக்கை மேலும் பெருகியது. சங்கத்தின் சொத்தும் சந்தா சேமிப்பின் வழி கணிசமாக உயர்ந்தது. 2001ல் ஒன்றாக இருந்த சங்கத்திற்குச் சொந்தமான கட்டிடம் 2012ல் ஐந்தாக உயர்ந்தது. சொத்து மதிப்பு 3 மில்லியனை எட்டியுள்ளது.
நிர்வாக அமைப்பு விவரம்
மலேசிய அரசு கூட்டுறவு சட்ட விதிகளுக்கு உட்பட்டு, அமைக்கப்பட்ட சங்கத்தின் துணைவிதிகள் மற்றும் செயல்நடைமுறை விதிகளுக்கு ஏற்ப, இயக்குநர் வாரியம் சங்கத்தின் செயற்பாட்டினை மேற்கொண்டு வருகிறது.
சங்க உறுப்பினர்கள் இரு வகைப்படுவர். 1. அங்காசா வழி சந்தா செலுத்தும் உறுப்பினர்கள் 2. நேரடி உறுப்பினர்கள்.
உறுப்பியத் தகுதிகள்:
1. திவாலாகாத 18 வயதைத் தாண்டியவராக இருக்க வேண்டும்.
2. நன்னடத்தையுள்ள, குற்றவியல் சட்டத்தின் கீழ்க் குற்றப்பதிவு ஏதும் இல்லாதவராக இருக்க வேண்டும்.
3. சங்க உறுப்பிய மனு பாரத்தின் வழி, சங்க விதிகளுக்குக் கட்டுப்பட்டு உறுப்பினராக மனுச் செய்ய வேண்டும்.
4. ஒவ்வோர் உறுப்பினரும் கட்டாயம் நூறு (100) ரிங்கிட்டைப் பங்கு பணமாகவும், பத்து (10) ரிங்கிட்டை நுழைவுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
5. மாதச் சந்தாவாக்க் குறைந்தது முப்பது (30) ரிங்கிட்டை மாதந்தோறும் செலுத்த வேண்டும்.
பெறப்படும் மனுக்கள் நிர்வாக வாரியக் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டு முடிவு செய்யப்படும். எக்காரணமும் கூறாமல் எந்த மனுவையும் நிராகரிக்கும் முழுச் சுதந்திரம் நிர்வாக வாரியத்திற்கு உண்டு.
பேராளர்களால் ஆண்டுப் பேராளர் மாநாட்டின்போது தேர்ந்தெடுக்கப்படும் பேராளார்கள் இயக்குநர் வாரியத்தில் இடம் பெறுவர்.
துவக்கக் காலத்தில் ஒவ்வோராண்டும் இயக்குநர் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. பின்னர் சட்ட விதிகளின் மாற்றத்திற்கேற்ப இயக்குநர்கள் ஒரு முறை தேர்வு செய்யப்பட்டால் தொடர்ந்து 3 ஆண்டுகள் சேவையாற்றும் மாற்றம் கொண்டுவரப் பட்டது. ஒவ்வோராண்டும் வாரியத்தின் 1/3 பகுதியினர் 3 ஆண்டுகால சேவை முடிந்து பதவி விலகுவர். ஏனைய 9 பேரோடு ஒவ்வோராண்டும் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கு போட்டியிடும் பேராளர்களில் மூவர் வாரியத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நடப்பில் 12 இயக்குநர்களைக் கொண்ட வாரியம் செயற்பட்டு வருகின்றது. அவர்கள் கீழ்க்காணுமாறு பொறுப்பு வகிக்கின்றனர்.
தலைவர் : திரு.எஸ்.பாலச்சந்திரன் சிலாங்கூர்
துணைத்தலைவர் : திரு.கு.பாலசுந்தரம் சிலாங்கூர்
பொதுச்செயலாளர் : திரு.பெ.கந்தசாமி நெகிரி செம்பிலான்
பொருளாளர் : திரு.கி.அருணாசலம் சிலாங்கூர்
வாரிய உறுப்பினர் : திரு.வி.பொன்னழகு சிலாங்கூர்
வாரிய உறுப்பினர் : திரு.வி.பாலன் ஜோகூர்
வாரிய உறுப்பினர் : திரு.பி.முனியாண்டி(30.4.2013வரை)பேராக்
திரு.எஸ்.பரதன் (1.5.2013 முதல்) பேராக்
வாரிய உறுப்பினர் : திரு.எம்.வீராசாமி சிலாங்கூர்
வாரிய உறுப்பினர் : திரு.கு.தணிகாசலம் கெடா
வாரிய உறுப்பினர் : திரு.எஸ்.மோகனசந்திரன் சிலாங்கூர்
வாரிய உறுப்பினர் : திரு.க.அரசு பேராக்
வாரிய உறுப்பினர் : திரு.கே.குணசேகரன் ஜோகூர்
உட்கணக்காய்வாளர்கள்:
1. திரு.பெ.வசந்தகுமார் சிலாங்கூர்
2. திருமதி வி.சுசீலா ஜோகூர்
3. திருமதி வி.மாரியாயி சிலாங்கூர்