ஊர்க்குருவிகள்

  • Home
  • ஊர்க்குருவிகள்

ஊர்க்குருவிகள் நம் மண்ணையும் மக்களையும் நோக்கிய பயணத்தை தொடங்குகின்றோம்
(1)

நம் சென்னையில் உலகையே சுருக்கிய தகவல் தொழிநுட்பத்துடன் நாம் வாழ்ந்தாலும், உண்மையில் நாம் தனித்தனித் தீவுகளாகவே இருக்கின்றோம். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கூட கவனிக்க முடியாத வேகத்தில் நாம் நம் வாழ்க்கையைக் கழிக்கின்றோம்.

தமிழகம் இன்று உள்ள நிலை குறித்தும், எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் நாம் அதிகம் கவனிப்பதில்லை. நமது அலுவலகமும், நாம் வாழும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் மட்டுமே

நமது உலகமல்ல!
நம் தாய் தந்தையரும், மனைவி குழந்தைகளும் மட்டுமே
நமது உறவுகளுமல்ல. நமக்கு சோறூட்டும் தஞ்சைக் கிழவனும், நம் ஆடையை உருவாக்கும் திருப்பூர் பெண் தொழிலாளியும், மீன்பிடிக்கும் மீனவனும் நமது உறவினரே.

பிறந்து வளர்ந்த ஊர் மட்டும் நமது சொந்த ஊரல்ல. ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் தான்.

தமிழகத்தின் சமுக அரசியல் சூழலில் இருந்து ஒதுங்கி வாழும் நாம் மீண்டும் இச்சமூகத்தோடு இணைய வேண்டும். உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் ஆடைவரை, நவீன வசதிகளுடன் நகரங்களில் வாழும் நமக்கும், தமிழகத்தின் கடைக்கோடி சிற்றூரில் உள்ள உழவனுக்கும் நிலவும் சமூக உறவை நாம் உணர வேண்டும். பெருகிவரும் நகரமயமாதலால் தொலைந்துபோன நம் வரலாற்றையும் வாழ்வியலையும் மீட்டெடுக்க வேண்டும். அதற்கு முதலில் நம் மண்ணையும், மக்களையும் பற்றி, அதைச் சூழ்ந்துள்ள சிக்கல்களைப் பற்றி, அதற்கான தீர்வுகள் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஆனால் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்..

இவற்றை நோக்கிய முயற்சியாகஇளந்தமிழகம் இயக்கம்
“ஊர்க் குருவிகள்” எனும் இந்த பயணத்திட்டத்தை உருவாக்கியுள்ளது. இப்பயணத்தின் மூலமாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நகரத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு குழுவாக பயணம் செய்து அங்கு தங்கியிருந்து அங்குள்ள மக்களிடம் உரையாடுதல், அவர்களின் வராலாற்றையும் பண்பாட்டையும் அறிந்து கொள்ளுதல், சூழல் மற்றும் சமூகப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளுதல், விவாதித்தல் உள்ளிட்டவைகளைத் தொடங்க உள்ளோம்.

வாருங்கள் நண்பர்களே, கை கோர்ப்போம்!
ஊர்க்குருவிகளின் வாயிலாக, சிட்டுக் குருவிகளாக மாறிடுவோம்!
மண்ணையும் மக்களையும் நோக்கிய நமது பயணத்தைத் தொடங்குவோம்!

14/12/2023
04/08/2022

நம் மண்ணையும் மக்களையும் நோக்கிய பயண

31/07/2022

Address

42/21, மேட்டுத் தெரு, வேளச்சேரி
சென்னை
600042

Alerts

Be the first to know and let us send you an email when ஊர்க்குருவிகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ஊர்க்குருவிகள்:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share