DSB Travelan- DSB டிராவலன்

  • Home
  • DSB Travelan- DSB டிராவலன்

DSB Travelan- DSB டிராவலன் A Indian Traveller share their Experiences and Narration

திருவாரூர் மாவட்டத்தில் பயணமா? அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்   #திருவாரூர்  #தேர்  #ஆழித்தேர்
20/03/2024

திருவாரூர் மாவட்டத்தில் பயணமா? அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்

#திருவாரூர் #தேர் #ஆழித்தேர்

20/03/2024
டோல்கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க பாஸ்? தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்!சுங்கக் கட்டணம் வசூலிக்கும் சாலைகளில் பயணம் ...
16/03/2024

டோல்கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க பாஸ்? தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்!

சுங்கக் கட்டணம் வசூலிக்கும் சாலைகளில் பயணம் மேற்கொள்ளும் மக்களின் கவனத்திற்கு..

நீங்கள் வெளியூர் செல்லும் பொழுது தேசிய நெடுஞ்சாலையில் அதாவது நேஷனல் ஹைவேஸ் ரோட்டில் (NHAI) செல்லும் போது கொடுக்கும் பணம். டோல்கேட் கிராஸ் செய்வதற்கு மட்டும் அல்ல.

பிறகு வேறெதற்கு? என்கிறீர்களா?

சுங்கச் சாவடியைக் கடக்கும் போது, வாகனத்துக்கு ஏற்ப பணத்தைக் கட்டி ரசீது பெற்றுக் கொள்வோம். அதை பத்திரமாக வைத்து கொள்ளவும், எதற்கு என்றால்..

உங்க பயணம் எந்த சிரமும் இல்லாமல் இருக்கவும் அப்படி இடர் நேர்ந்தால் சரி செய்யவும் சேர்த்து தான் அந்த பணம் செலுத்துகிறோம்..

காரில் செல்பவர்கள் யாருக்காவது

1. மருத்துவ உதவி தேவைப்பட்டால் ரசீதின் பின்புறம் செல்போன் எண் பதிவாகியிருக்கும். அதற்கு போன் செய்யவும். உடனடியாக ஆம்புலன்ஸ் பத்து நிமிடத்தில் வரும்.

2. வண்டி பழுதாகி நின்றாலோ அல்லது பஞ்சர் ஆகி விட்டாலும் அதுக்கு இன்னொரு நம்பர் இருக்கும். அதற்கு போன் செய்தால் பத்து நிமிடத்தில் உங்களுக்காக வந்துருவாங்க, வந்து பஞ்சர் போட்டு கொடுத்துடுவாங்க, ரிப்பேர் எனில் அதையும் சரி செய்து கொடுத்துடு வாங்க. இது அவங்க கடமையாகும்.

3. பெட்ரோல், டீசல் இல்லாமல் வண்டி நின்று விட்டால்.. தகவல் சொன்னா உங்களுக்கு அஞ்சு லிட்டர் அல்லது 10 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை கொண்டு வந்துவிடுவார்கள். அதுக்குண்டான பணத்தை கொடுக்க வேண்டும்.

இதற்கெல்லாம் சேர்த்துத் தான் நம்ம கிட்ட சுங்கக் கட்டணம் வசூல் பண்றாங்க. இந்த விஷயம் நிறைய பேருக்குத் தெரியாமல் ஏதாவது பிரச்னை ஆச்சுன்னா தவிச்சு போறாங்க, மன உளைச்சலாகுறாங்க இதை தவிர்க்க இந்த செய்தியை அனைவரிடமும் கொண்டு செல்லவும்...

ஓசூர் வழியாக மைசூரில் இருந்து மயிலாடுதுறை வரை இயங்கிய ரயில், இனிமேல் சீர்காழி, சிதம்பரம் வழியாக கடலூர் துறைமுகம் வரை இயக...
11/03/2024

ஓசூர் வழியாக மைசூரில் இருந்து மயிலாடுதுறை வரை இயங்கிய ரயில், இனிமேல் சீர்காழி, சிதம்பரம் வழியாக கடலூர் துறைமுகம் வரை இயக்க முடிவு.
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் முயற்சியால் இது நடந்ததாக சிதம்பரம் மக்களால் கூறப்படுகிறது

போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம்மார்ச் மாதம் 3 ஆம் தேதி ஞாயிறு
03/03/2024

போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம்
மார்ச் மாதம் 3 ஆம் தேதி ஞாயிறு

மயிலாடுதுறை-திருவாரூர்- காரைக்குடி தினசரி ரயில் நேர அட்டவணை.திருவாரூர் - காரைக்குடி ரயில் 06197/98 ஞாயிறு மட்டும் இயங்கா...
02/03/2024

மயிலாடுதுறை-திருவாரூர்- காரைக்குடி தினசரி ரயில் நேர அட்டவணை.

திருவாரூர் - காரைக்குடி ரயில் 06197/98 ஞாயிறு மட்டும் இயங்காது.

நன்றி:நம்ம பட்டுக்கோட்டை

தஞ்சாவூரில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல பாசஞ்சர் ரயில் கட்டண விபரம்
02/03/2024

தஞ்சாவூரில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல பாசஞ்சர் ரயில் கட்டண விபரம்

 #ஜன்சதாப்தி|அதிவிரைவு|வண்டிவண்டி எண் - 12083/ 12084கோவை - மயிலாடுதுறை - கோவை ஜன் சதாப்தி அதிவிரைவு வண்டிகோவை - 07:15 (க...
27/02/2024

#ஜன்சதாப்தி|அதிவிரைவு|வண்டி
வண்டி எண் - 12083/ 12084
கோவை - மயிலாடுதுறை - கோவை ஜன் சதாப்தி அதிவிரைவு வண்டி
கோவை - 07:15 (காலை) 21:15
இருகூர் - 07:29. 20:29
திருப்பூர் - 07:53. 20:03
ஈரோடு - 08:38. 17:18
கரூர் - 09:28. 18:23
திருச்சி - 10:50. 16:45
தஞ்சாவூர் - 11:48. 15:53
பாபநாசம் - 12:11. 15:29
கும்பகோணம் - 12:23. 15:16
மயிலாடுதுறை - 13:50. 14:50
தமிழ்நாட்டில் ஒடும் ஒரே ஏழைகளின் சொகுசு ரயில். ஆனால் பொதுமக்கள் இன்னும் இந்த ரயிலைப் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். கோவையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு திருப்பூர் ஈரோடு கரூர் திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரை செல்கிறது.
பொதுவாக கோவையில் இருந்து சிதம்பரம் சீர்காழி தஞ்சாவூர் மயிலாடுதுறை காரைக்கால் போன்ற பகுதிகளுக்கு செல்ல மிகக் குறைந்த அளவில் பேருந்துகள் உள்ளது. அதிலும் மிக நீண்ட தூரம் செல்வதால் கடுமையான உடல் சோர்வு ஏற்படும். கட்டணமும் 400 ரூபாயில் இருந்து 500க்கும் மேல் வரை உள்ளது. வழியில் அடிக்கடி சாலையோர கொள்ளை கூடாரங்கள் என்ற வடிவில் உணவகங்களில் நின்று நின்று செல்லும். சிங்காநல்லூர் பல்லடம் காங்கயம் வெள்ளகோவில் குளித்தலை திருச்சி பாபநாசம் தஞ்சாவூர் கும்பகோணம் என்று பல இடங்களில் நின்று நின்று செல்லும். ஆனால் சாமானிய மக்கள் இந்த ரயிலைப் பற்றி அறியாத காரணத்தால் இன்னும் பேருந்தில் தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.
நமக்காக பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஏழைகளின் ரதம், மொத்தம் 16 பெட்டிகளை கொண்ட ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 100 பேர் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது வெறும் ஆறு மணி நேரத்தில் மயிலாடுதுறை சென்று அடைந்து விடும். கோவையில் இருந்து புறப்படும் அதிவேக ரயில் களில் இது தான் முதன்மையானது.
திருச்சிக்கு பணி நிமித்தமாக செல்பவர்கள் இந்த ரயிலை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள் காரணம் வெறும் நான்கு மணி நேரத்தில் திருச்சியை அடைந்துவிடும். சொகுசான இருக்கைகள். கழிப்பறை வசதி நேரமும் மின் விசிறிகள் மற்றும் தென்றல் காற்று மூலம் குளு குளு பயணத்தை அனுபவிக்கலாம்.

மேலும் நியாயமான விலையில் தண்ணீர் பாட்டில் இருந்து உணவு பொருட்கள் வரை அனைத்தும் ரயில்வே மூலம் உள்ளேயே கிடைக்கிறது.

இவ்வளவு வசதிகளும் வெறும் 170 ரூபாய் மட்டுமே. அட ஆமாங்க இந்த ரயிலில் கட்டணம் வெறும் 170 ரூபாய் மட்டும்தான்.

முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்டதால் மிகவும் தூய்மையாக இருக்கும். இந்த ரயிலில் பயணிக்க முன்கூட்டியே நாம் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். DSB

கடைசி நேரத்தில் பயணிக்கக்கூடியவர்களுக்கும் ரயில் புறப்படும் 30 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. கோவை, இருகூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்கிறது ஆனாலும் பேருந்தை விட இரண்டு மடங்கு முன்கூட்டியே சென்று சேர்கிறது. DSB

மதியம் மயிலாடுதுறை சென்று அடைந்த பிறகு மீண்டும் ஒரு மணி நேர இடைவெளியில் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணி அளவில் கோவைக்கு வந்து சேர்கிறது. மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மதியம் 2 மணி வரை இந்த ரயிலுக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும்

நவக்கிரகங்கள் 9 கோயிலையும் ஒரே நாளில் அரசு பேருந்தில் சுற்றி தரிசனம் செய்யலாம் # Travelan  Devotional
23/02/2024

நவக்கிரகங்கள் 9 கோயிலையும் ஒரே நாளில் அரசு பேருந்தில் சுற்றி தரிசனம் செய்யலாம்
# Travelan
Devotional

பயணங்கள் முடிவதில்லைஉங்கள் பயணங்கள் வெற்றியடைய இந்த பொங்கல் திருநாளில் வாழ்த்துகிறோம் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள...
15/01/2024

பயணங்கள் முடிவதில்லை
உங்கள் பயணங்கள் வெற்றியடைய இந்த பொங்கல் திருநாளில் வாழ்த்துகிறோம்

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

#பொங்கல்

வயலும் வயல் சார்ந்த இடமும் #ஶ்ரீநெடுஞ்சேரி
16/12/2023

வயலும் வயல் சார்ந்த இடமும்
#ஶ்ரீநெடுஞ்சேரி

அன்பர்களே!!01.10.2023 முதல் மதுரையில் இருந்து மற்றும் மதுரை ரயில் நிலையம் வழியாக திண்டுக்கல் மார்க்கத்தில் இயங்கும் பல ர...
05/10/2023

அன்பர்களே!!
01.10.2023 முதல் மதுரையில் இருந்து மற்றும் மதுரை ரயில் நிலையம் வழியாக திண்டுக்கல் மார்க்கத்தில் இயங்கும் பல ரயில்களின் கால அட்டவணை மாறி உள்ளது.

பல ஆண்டுகளாக பழகிப்போன ரயில்களின் புறப்படும் நேரம் மாறிய விபரங்கள் எல்லாத் தரப்பினரையும் இன்னும் சென்று சேரவில்லை என்பதை இன்றைய செய்தித் தாள்களில் வந்த செய்திகள் மூலம் அறிய முடிகிறது. மக்கள் வைகையின் பழைய நேரத்திலேயே வந்து, வண்டி முன்னதாகவே கிளம்பிச் சென்ற விபரம் அறிந்து வருந்திய செய்திகள் செய்தித் தாள்களில் வந்துள்ளது.

மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்கத்தில் செல்லும் பல்வேறு ரயில்களின் புதிய கால அட்டவணையை இணைத்துள்ளேன்.

அதில் மதுரை, கூடல் நகர், சோழவந்தான் ஆகிய நிலையங்களில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாகச் செல்லும் ரயில்களின் புதிய கால அட்டவணை உள்ளது.

பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்‌.

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி    (வண்டி எண் 16361 & 16362) வாரமிருமுறை விரைவு ரயில் கால அட்டவணைசெப்டம்பர் 25 முதல் இந்த ரயில்...
03/09/2023

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி (வண்டி எண் 16361 & 16362) வாரமிருமுறை விரைவு ரயில் கால அட்டவணை

செப்டம்பர் 25 முதல் இந்த ரயில் நடைமுறைக்கு வருகிறது.

முன்பதிவு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சிறப்பம்சங்கள் :

தமிழக பயணிகள் சபரிமலை செல்ல இந்த ரயில் ஒரு நல்ல வாய்ப்பு.
இந்த இரயிலில் பயணித்து புனலூரில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் சபரிமலை செல்லலாம்.

கேரளாவில் உள்ள பல சுற்றுலா தலங்களுக்கு செல்ல வாய்ப்பு .

தென்மாவட்டம்,டெல்டா மாவட்டம் மற்றும் கேரளா பக்தர்கள் வேளாங்கண்ணி, நாகூர் , திருநள்ளாறு மற்றும் திருவாரூர் , தென்காசி புனித தலங்களுக்கு செல்ல இந்த இரயிலை பயன் படுத்தலாம்.

இந்த இரயில் நிரந்தர இரயிலாக மாறுவதால் இனி இது சாதாரண விரைவு இரயில் கட்டணத்தில் இயங்கும்.

இந்த இரயில் அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் இருமார்கத்திலும் புனலூர் - செங்கோட்டை மலை மற்றும் வனப்பகுதியில் செல்வதால்.சுற்றுலா பயணிகளுக்கு இந்த இரயில் சிறந்த அனுபவத்தை தரும்.

நன்றி...பயணிகளுக்கு வாழ்த்துக்கள்..💐💐

22/07/2023

மழையில் பயணம்

08/07/2023

பயணங்கள் முடிவதில்லை
DSB Travelan- DSB டிராவலன்
பக்கத்தை Follow பண்ணுங்க
Video's க்கு Like போடுங்க, Share பண்ணுங்க

27/06/2023

பேருந்து வழிகாட்டி
-------------------------------------

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோயம்புத்தூர் கோட்டம் வரை, திருப்பூர் மண்டலம், தாராபுரம், காங்கேயம் 1, பழனி 1,2, திருப்பூர் 2.

#தாராபுரம்|தேர்வுநிலை|நகராட்சி|மத்திய|பேருந்து நிலையம்.

#புறநகர் பேருந்து இயக்கம்

1. ஈரோடு வழித்தடம்
காங்கேயம், சேலம், ஈரோடு, பெங்களூரு, சென்னை, சென்னிமலை, பெருந்துறை, மரண்டஅள்ளி, தம்மம்பட்டி, ஆத்தூர், பொம்மிடி, ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி,மேட்டூர், அந்தியூர், பவானி, குமாரபாளையம், திருச்செங்கோடு, சங்ககிரி, தாரமங்கலம், ஓமலூர், ஜலகண்டபுரம், எடப்பாடி, வெள்ளகோவில், கொடுமுடி.

2. பழனி வழித்தடம்
பழனி, கொடைக்கானல்

3. உடுமலைப்பேட்டை , பொள்ளாச்சி வழித்தடம்
மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி

4. கரூர் வழித்தடம்
மூலனூர், சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, திருச்சி, வேளாங்கண்ணி, பள்ளப்பட்டி.

5.பல்லடம் வழித்தடம்
காந்திபுரம், சிங்காநல்லூர், மருதமலை, மேட்டுப்பாளையம், குன்னூர், உதகை, கூடலூர், கோத்தகிரி

6. திருப்பூர் வழித்தடம்
திருப்பூர், கோபி, சத்தி, மேட்டுப்பாளையம், உதகை, மைசூரு
DSB Travelan
7. ஒட்டன்சத்திரம் வழித்தடம்
திண்டுக்கல், மதுரை, செங்கோட்டை,உசிலம்பட்டி, தேனி, கம்பம், குமுளி, தேவாரம், போடி, சங்கரன்கோவில், செங்கோட்டை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருவைகுண்டம், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், கோவில்பட்டி, ராமேஸ்வரம், இராமநாதபுரம், பரமக்குடி, காரைக்குடி, பிள்ளையார்பட்டி, பொன்னமராவதி, தேவகோட்டை, திருச்செந்தூர், ஏர்வாடி, தூத்துக்குடி, வத்தலக்குண்டு, பெரியகுளம், விருதுநகர், கடலாடி,சிவகங்கை, சிவகாசி, தென்காசி, சாயல்குடி, நத்தம், அருப்புக்கோட்டை, சிங்கம்புணரி, ஆர்.எஸ். மங்கலம், முதுகுளத்தூர், மார்த்தாண்டம், நாகர்கோவில், கன்னியாகுமரி.
DSB Travelan- DSB டிராவலன்

மழை நாட்களில் ஒரு அழகிய கிராமம்
27/06/2023

மழை நாட்களில் ஒரு அழகிய கிராமம்

கருவேல மரம் மாலை பொழுதில் இடம்:நல்லூர் கடலூர் மாவட்டம்
21/06/2023

கருவேல மரம் மாலை பொழுதில் இடம்:நல்லூர் கடலூர் மாவட்டம்

விவசாயத்தில் சிறந்த மயிலாடுதுறை மாவட்டம்
09/06/2023

விவசாயத்தில் சிறந்த மயிலாடுதுறை மாவட்டம்

Ilanththai Maram
14/05/2023

Ilanththai Maram

இந்தியா நமது நாடு 1947 ஆகஸ்டு 15 நமக்கு சுதந்திரம், 2022 ஆகஸ்டு 15 சுதந்திர தின அமுதப் பெருவிழா
15/08/2022

இந்தியா நமது நாடு 1947 ஆகஸ்டு 15 நமக்கு சுதந்திரம், 2022 ஆகஸ்டு 15 சுதந்திர தின அமுதப் பெருவிழா

31/07/2022

சிக்கிம் வழங்கும் சிலிர்ப்பு ஒப்பிட முடியாதது; 28 மலைச் சிகரங்கள், 80+ பனிப்பாறைகள், 227 உயரமான ஏரிகள், ஐந்து பெரிய வெந்நீர் ஊற்றுகள், 100+ ஆறுகள் மற்றும் ஓடைகள் ஆகியவற்றால் குறிக்கப்பட்ட இந்த வடகிழக்கு மாநிலம் சாகச தாகத்தைத் தணிக்க போதுமான சவால்களைக் கொண்டுள்ளது. 8568 மீ உயரம் கொண்ட காஞ்சன்ஜங்கா என்றும் அழைக்கப்படும் கஞ்சன்ஜங்கா என்ற மூன்றாவது உயரமான மலை உச்சியையும் சிக்கிம் கொண்டுள்ளது. உண்மையில், இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமான ஃப்ரே பீக் (5830 மீட்டர்), மவுண்ட் ஜோபுனோ (5603 மீட்டர்), லாமா வாங்டன் (5868 மீட்டர்) மற்றும் ப்ரூம்காங்சே (5635 மீட்டர்) போன்ற பல 5 ஆயிரம் மக்களைக் கொண்டுள்ளது. ஒரு கூடுதல் சுகத்தை அனுபவிப்பவர்களுக்கு மலையேறுதல்.
ஹிந்து மதத் திருவிழாவான துர்கா பூஜைக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்கும் குளிர்காலத்தில் சிக்கிம் ஒரு புதிய சாகசத்தை உருவாக்குகிறது. மெதுவாக பனிப்பொழிவு தொடங்கும் போது, ​​சிக்கிமில் உள்ள மலைகளின் கூர்மையான சாய்வுகள் பனிச்சறுக்குக்கான நிறுத்த இடங்களாக மாறுகின்றன. நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட குளிர்கால மாதங்கள் அனைத்து பனிச்சறுக்கு பிரியர்களுக்கும் சிக்கிமின் யும்தாங் பள்ளத்தாக்குக்கு செல்ல ஏற்ற காலமாகும். இந்த பள்ளத்தாக்கு வடக்கு சிக்கிமில் உள்ள லாச்சுங்கிலிருந்து 25 கி.மீ. லாச்சுங்கில் இருந்து சுமார் 18 கிமீ தொலைவில் அமைந்துள்ள பூனி பள்ளத்தாக்கு, சில மயக்கும் அனுபவத்திற்காக

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when DSB Travelan- DSB டிராவலன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Opening Hours
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share