15/06/2021
வால்பாறை களில் காணப்படும் அரிதான Lion tailed macaque எனப்படும் சோலைமந்தி.!
சோலைமந்தி இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் மந்தி இனத்தைச் சேர்ந்த முதனிகளாகும். இம்மந்தியின் வெளிப்புற தோல் மயிர்கள் மின்னும் கரு நிறத்தைக் கொண்டவை. இதன் வால் சிங்கத்தின் வால் போன்று இருப்பதால் ஆங்கிலத்தில் இது Lion Tailed Macaque என்று அழைக்கப்படுகிறது. இம்மந்தியின் தமிழ்ப் பெயரான "சோலைமந்தி" என்பதை அறியாதவர்கள், இதன் ஆங்கிலப் பெயரின் நேரடி மொழிபெயர்ப்பான "சிங்கவால் குரங்கு" என்று தவறாக அழைக்கிறார்கள். இவ்விலங்கிற்கு "கருங்குரங்கு" என்றொரு பெயருமுண்டு. சங்க இலக்கியங்களில் இது நரைமுக ஊகம் என அறியப்படுகிறது
Credits: Vikesh Ravichandran