18/04/2024
2022 பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி மோடி கூட்டத்தை பார்த்து கூறியது
"BJP could never rule over Tamil Nadu" அதாவது பாஜக ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியாது என்று அங்கு இருந்து தொடங்கியது தான் எல்லாமே...
அதுவரை வடக்கே இருப்பவர்கள் சங்கிகள் மற்றும் மோடியாக்கள் செய்யும் அரசியலுக்குள்ளே சுத்தி சுத்தி தங்களைத் தாமே அழித்துக் கொண்டிருந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்த வார்த்தை அவர்களை சிந்திக்க வைத்தது ஏன் மோடியால் தமிழ்நாட்டை ஆள முடியாது என்று. அந்த தேடலில் அவர்களுக்கு கிடைத்த பதில் தான் தமிழ்நாட்டில் மக்களின் வளமான வாழ்க்கையும் கல்வி வாய்ப்புகளும் வேலை வாய்ப்புகளும் சுகாதார வசதிகளும் என்று...
ஆம் இவைகளில் தமிழ்நாடு மட்டுமல்ல தெற்கே உள்ள மாநிலங்கள் சிறப்பாக இருந்து வருகிறது அரசே கல்வி சுகாதாரம் மக்களுக்கு இலவசமாக கிடைக்க நடத்தி வருவது தான் மற்றும் ஊக்கத்தொகை உதவித் தொகை என்று வறுமை இல்லா நிலைமையை உருவாக்கி வைத்திருப்பதுவுமே இதுபோல் உள்கட்டமைப்பு வசதிகள் வாய்ப்புகள் என்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்வி சார்ந்த உதவிகளும் இலவசங்களும் மாணவர்களுக்கு வழங்கி வருவது போன்று எல்லாமே சிறப்பாக இருப்பது அவர்களை சிந்திக்க வைத்துள்ளது....
இதற்கு எல்லாம் காரணம் மக்களும் மக்களின் பகுத்தறிவும் தான் என்றும் தமிழ்நாட்டிலும் பெரும்பான்மையான இந்துக்கள் இருந்த போதிலும் பாஜகவை ஒருபோதும் அவர்கள் ஆதரித்தது இல்லையே என்பதும் அவர்களுக்கு என்ன ஓட்டமாக இருந்து வருகிறது...
அதன் விளைவாக தான் இன்று வடக்கே வெறுப்பையும் பிரிவினை வாதத்தையும் வளர்த்து வரும் அரசியல்வாதிகளையும் கட்சியையும் சங்கிகளையும் எதிர்த்து மக்கள் ஒற்றுமையும் நீதியையும் செயல்படுத்தும் கட்சியை ஆதரிக்கும் முடிவிற்கு மாறி இருக்கிறார்கள் என்பது தான் உண்மை...
இதனால் வடக்கே மோடிக்கு ஆதரவு மோசம் அடைந்த நிலையில் தனக்கு ஆதரவை பெருக்குவதற்காகவே தமிழ்நாட்டில் அடிக்கடி வந்து இங்கே மக்கள் அவரை வரவேற்பது போலவும் அவருக்கு இங்க நிறைய ஆதரவு இருப்பது போலவும் தனது மோடியாக்களை வைத்து வடக்கே பரப்பி ஆதரவை பெருக்கிக் கொள்ளலாம் என்று முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறார்...
ஆனால் இது தமிழ்நாடு ஆச்சே இந்தியாவிற்கே முன்னோடியாக இருக்கிறோம் அல்லவா... மோடி வடக்கே நாடகம் கட்டுவதற்கு கூட வாய்ப்பு வழங்க மாட்டோம் என்று உறுதியாக இருக்கிறார்கள்...
வெல்க இந்தியா, வாழ்க இந்தியா...
Anto Raja Prakash