30/10/2016
தேவர் எனும் தெய்வம்!
☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆
பிறப்பு: 1908 அக்டோபர் 30
இறப்பு: 1963 அக்டோபர் 29 அதிகாலை 4.50 மணிக்கு (பிறந்த நாளுக்கு ஒரு நாளுக்கு முன்) காலமானார்.
பிறந்த இடம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னை அடுத்த புளிச்சுகுளம் என்ற கிராமம்
தாய்: இந்திராணி அம்மாள்
தந்தை: உக்கிரபாண்டியத் தேவர்
வாழ்ந்த நாட்கள்: 20,075.
அதில் சிறையில் கழித்த நாட்கள்: 4,000
ஆண்மீகவாதியாக வாழ்ந்தவர்.
காமராசரை முதன்முதலில் தேர்தலில் அறிமுகப்படுத்தியவர் தேவர்.. தேவரை சாதிய தலைவராக சித்தரிக்க நினைத்த காங்கிரசின் சூழ்ச்சி முறிந்தது. தேவரின் தொகுதியில் வெறும் 18ஆயிரம் வாக்குகள் மட்டுமே அவரின் சமூகத்தை சார்ந்தவர்கள், ஆனால் 2இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் எப்போதும் வெற்றி பெறுவார்.. அரசு அலுவலகங்களில் தலைவர்கள் புகைப்படத்தோடு தேவர்திருமகனாரின் புகைப்படத்தையும் வைக்க எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கும்போது உத்தரவிட்டார். ஆனால், இதுவரை செயல்படுத்தப்படவில்லை…
ஓரு பிரபலம் தேவரை பற்றி இப்படி சொல்கிறார்!
தேசியபக்தி,தெய்வ பக்தி இரண்டிலும் ஓப்பில்லாதவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ,”தேவர்” என்றாலே அவரைத்தான் குறிக்கும். எழுந்தால், நடந்தால்,பேசினால் அவர் சண்டமருதம்.
என் இளம் வயதில் அவரை ஒரு சிலமுறை பார்த்திருக்கிறேன்.பலமுறை அவரைப்பற்றி பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டின் அரசியல்-ஆன்மீக வரலாற்றில் அவர் ஒரு தனி சகாப்தம்.
ஓரு முறை சீனிவாச அய்யங்கர்(அந்த காலத்து பிரபல வக்கீல் பெரும் தலைவர்) மகன் வழி பேரனோடு பேச நேர்ந்தது.
சீனிவாச அய்யங்கர் மகன் வழி பேரன் அந்த பிரபலத்திடம் சொன்னார் “தேவர் அவர்களின் தகப்பனார் பெரும் ஜமீன் தார், நிறைய நிலபுலன்கள் உண்டு, சொத்து வில்லங்கம் தொடர்பாக தேவரது வழக்குகளை என் பாட்டனார் எடுத்து நடத்தினார்.அதாவது 1927 காங்கிரஸ் மகாநாடு சென்ன்னையில் நடக்கிறது, பெரிய தலைவர்கள் எல்லாம் சென்னைக்கு வந்தனர், மாநாட்டின் பொறுப்பாளர் என் பாட்டனார் வக்கீல் சீனிவாச அய்யங்கர். அந்த சமயத்தில் சொத்து வழக்கு சம்பந்தமாக தேவர் அவரை சந்தித்தார், அவரோ மாநாடு இருக்கிறது நான்கு வழக்கை பார்க்க நாட்கள் ஆகும் என்கிறார் சீனிவாச அய்யங்கர்
தேவரை பார்த்து உரிமையுடன் அதே சீனிவாச அய்யங்கர் கேட்கிறார் ” தேவர்! ஆமாம்… நான்கு நாட்கள் சென்னையில் தானே இருக்கபோகிறீகள்?”
“ஆமாம்” என்கிறார் தேவர்,
“அப்படி என்றால் என் விருந்தினர் ஒருவருக்கு உதவியாய் இருக்கவேண்டும் என வேண்டுக்கொள் இடுகிறார் சீனிவாச அய்யங்கர்.
தேவரும் ஏற்றுக்கொள்கிறார்.
சீனிவாச அய்யங்கர் சொன்னதுப்போல அவர் அந்த விருந்தினருக்கு உதவியாய் இருந்தார் மற்றும் அந்த விருந்தினருக்கும் அவருக்கும் பெரும் நட்பு ஏற்ப்பட்டது, அவர் தனது மாநிலத்துக்கு தேவரை அழைத்து சென்றார்..
தனது அன்னையிடம் உனது கடைசி மகன் வந்திருக்கிறான் என்று தேவரை காட்டினார்… அவர் வேறு யாருமில்லை நம் நேதாஜிதான் ….”நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்” தான்…
இந்த சம்பவத்தை சீனிவாச அய்யங்கர் பேரனிடம் அறிந்தவர் வேறு யாருமில்லை – “நல்லி குப்புச்சாமி செட்டியார்”தான்… (நல்லி சில்க்ஸ்- சென்னை)
ஆதாரம்:-
“பசும்பொன் தேவர் கட்டுரைகள்” புத்தகம்(குமரன் பதிப்பகம்)
– அணிந்துரையில் திரு.நல்லி குப்புசாமி செட்டி (நல்லி சில்க்ஸ்)
இவ்வாறு விளக்குகிறார்.
தேவர் ஜாதீயவாதி அல்ல தேசியத் தலைவர்:
1937 ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் இராமநாதபுரம் ராஜா சேதுபதி ஜஸ்டிஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார் .அவரைத் தோற்கடிக்க தேவர் ஒருவரால் தான் முடியும் என்று கருதிய காங்கிரஸ் ,வல்லபாய் பட்டேல் மூலம் தேவரை வேட்பாளராக களமிறக்கியது .
மதுரையிலிருந்து ராமநாதபுரம் சென்று நாமினேசன் செய்யும் கடைசி நாளன்று 30 நிமிடம் இருக்கும் போது கலெக்டரிடம் தேவர் நாமினேசன் தாக்கல் செய்தார் .அந்நாளில் சேதுபதியை எதிர்ப்பது சாதாரணமானது அல்ல.
இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி என்பது இராமநாதபுரம் ,பரமக்குடி , முதுகுளத்தூர் தாலுகாக்கள் அடங்கியது .அன்று பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே ஒட்டுபோடமுடியும் ,அந்த பட்டாவை வழங்கியது சேதுபதியின் சமஸ்தானம் .
வடக்கே கோடிக்கும் லட்சத்திற்கும் அதிபதியாக உள்ள சேட்டுகள் எல்லாம் இராமேஸ்வரம் வந்து ஆலயவழிபாடு நடத்திவிட்டு ,சேதுபதி அரண்மனையாகிய இராமலிங்க விலாசத்திற்குப் போய் சேதுபதியின் பாதம் தொட்டு ,’ சேது மகாராஜிக்கு நமஸ்காரம் ‘என்று வணங்கினால் தான் இராமேஸ்வரம் யாத்திரை பூரணம் பெற்றதாக ஐதீகம் .
இப்படிப்பட்ட பாக்கியத்தை ,அனுக்கிரகத்தை பரம்பரை பரம்பரையாகப் பெற்றவர் இராமநாதபுரம் ராஜா .அவரை எதிர்த்து தேர்தலில் நிற்பது என்பது நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்கும் ஒன்றாகும் .
சமஸ்தானத்திற்கு கட்டுப்பட்டு வரிசெலுத்தும் பட்டாதார்கள் சேதுபதியை எதிர்த்து எப்படி ஒட்டுபோடுவார்கள் ? எனவே தேவரின் தோல்வி உறுதி ,சேதுபதியின் வெற்றி நிச்சயம் என்று ஜஸ்டிஸ் கட்சி நம்பியது .
ராஜாவை எதிர்த்து தேர்தலில் நிற்கும் தேவருக்கு வாய்ப் பூட்டு சட்டம் ,அரசியல் பற்றி பேசக்கூடாது என்று ஆங்கிலேய அரசு தடை செய்திருந்தது .
தேவருடைய தந்தையார் உக்கிரபாண்டியத் தேவர் ,சேதுபதிக்கு ஆதரவாக ஊர் ஊராகப் போய் ,” என் மகன் நமது ஜாதித் தலைவரை எதிர்க்கிறான் .அவனுக்கு ஓட்டுப் போடாதீர்கள் .சேதுபதி மகாராஜாவுக்கு வாக்களித்து ஜாதிப் பெருமையை காப்பாற்றுங்கள் .ராஜபக்தியை ,ராஜவிசுவாசத்தைக் காட்டி என் மகனைத் தோற்கடியுங்கள் ” என்று தீவிர பிரச்சாரம் செய்தார் .
இவ்வளவுக்கும் பிறகு அணைத்து சமுதாய மக்களின் ஆதரவினால் ராமநாதபுரம் ராஜா சேதுபதியை தோற்கடித்து பசும்பொன் தேவர் வெற்றி வாகை சூடினார் .
இந்த வெற்றியின் மூலம் தேவர் ஜாதீயவாதி அல்ல அனைத்து சமுதாய மக்களின் தேசியத் தலைவர் என்று நிருபனமாகிறார் ,
தமிழ் வைத்தியம் பற்றி தேவர்!
“அக்காலத்தில் வைத்தியர் ஓருவர் தெருவில் கீரை விற்கும் ஒருவனைப்பார்த்து, அவன் “கீரையோ கீரை” என்று கூறும் குரலைக் கேட்டு, பக்கத்து மனிதரிடம் “இவன் இன்னும் மூன்றே முக்கால் நாழிகைக்குள் இறந்து போவான். இவனைச் சீக்கிரம் வீட்டிற்குப் போகச் சொல்லுங்கள்” என்று சொன்ன படியே அவன் வீட்டிற்கு அனுப்பப்பட்டான்.
அவனும் அப்படியே இறந்தான் என்று தமிழ் வைத்தியத்தில் ஆதாரத்துடன் கூறப்படுகிறது.(ஒருவனின் குரலின் ஒலி வைத்தே அவனது உடல் நிலை சொல்லும் உயர்ந்த முறை பெற்றது தமிழ்)
இன்றைக்கு உயர்ந்த வைத்தியர்கள் என்று சொல்லுகிற டாக்டர்களெல்லாம் போதிக்கின்ற சுகாதாரத்தை ‘ஆசாரக் கோவை” என்ற சிறுநூல் அன்றே போதித்திருக்கின்றது.
பஸ்பம்,சுண்ணம்,திராவகம்,கஷாயம், செந்தூரம் என்ற முறைகள் அனைத்தும் தெளிந்து தேர்ந்து அதுமட்டுமல்லாமல் உலோகங்களை மாற்றும் திறமையும் பெற்றிருந்தது தமிழ்.
– திரு.பசும்பொன்.உ.முத்துராமலிங்கத்தேவர் (13.2.1949-ல் “கண்ணகி” எனும் இதழிலில் எழுதிய கட்டுரை)
ஆதாரம்:
“பசும்பொன் தேவர் கட்டுரைகள் (குமரன் பதிப்பகம்),
கட்டுரை தலைப்பு “இல்லாதது இல்லாத முதுமொழி – தமிழ்”
பசும்பொன் தேவர் திருமகனாரின் கருத்து
நம் ஒவ்வொருவர் வாழ்விலும் வந்துபோகும் இராமாயணமும் மகாபாரதமும்! –
எப்படி என குழப்பமாக இருக்கிறதா? – பசும்பொன் தேவர் சொல்லும் விளக்கத்தை படியுங்கள் புரியும் !
மனித வாழ்க்கை தெய்வீகத்தைப் பெறுவதற்காகவே என்பதுதான் நாம் கையாண்ட நடைமுறை .அப்படி வருகின்ற போது தெய்வீகத்தைப் பெறுவதற்க்கு இடையூறாக இருப்பவை மூன்று ஆசைகள் .
அந்த மூவாசையைத்தான் ஞானிகள் இரண்டசாசை என்று சுருக்கினார்கள் .
மண் – பொன் -பெண் என்ற மூன்று ஆசையாக இருந்ததை மண்ணாசையும் பொன்னாசையும் பொருள்தான் .
மண் இருந்தாலும் பொன் கிடைக்கும் .பொன் இருந்தாலும் மண் கிடைக்கும் .ஆகையால் இரண்டையும் சேர்த்து இதைக் காஞ்சனம் என்று ஒரே வார்த்தையில் முடிக்கலாம் .
பெண் என்ற ஒன்றைக் காமம் என்று வைத்தார்கள் .ஆக மூவாசை என்று வைத்த மண் -பொன் -பெண் என்ற மூன்றை காம -காஞ்சனம் என்று இரண்டாகக் குறைத்தார்கள் .
இந்த இரண்டின் மூலமும் வருகின்ற அழிவு என்ன ? என்பதைக் காட்டுவதற்காக ,அகில இந்தியாவிற்கும் தெரிவிப்பதற்காக தமிழ்நாட்டில் சிறப்பாக இலக்கியங்களின் ரூபம் காட்டுவதற்காகத் தான் இரண்டு நூல்கள் வந்தன .
காஞ்சனத்தின் மூலம் அழிந்தவன் துரியோதனன் .
காமத்தின் மூலம் அழிந்தவன் ராவணன் .
காமத்தின் மூலமாக உலகம் என்னிலை பெரும் ? என்னிலையை உடையவனும் எப்படிக் கெடுவான் ?என்பதைக் காட்டுவதற்க்காகவே இராமாயணம் ஒரு நூலாக வந்தது .
காஞ்சனம் என்ற மண்ணாசையும் ,பொன்னாசையும் வைத்து பங்காளிக்கு உரியதைக் கொடுக்க மறுக்கும் காஞ்சனம் எப்படி சாம்ராஜ்யங்களை அழிக்கும் என்பதைக் காட்டுவதற்க்காகவே பாரதம் ஒரு நூலாக வந்தது .
அந்த இரண்டு முறையில் சாதாரணமான முறையில் வருகின்றவர்கள் நூலை ஆராய்ச்சி செய்வார்கள் ஆனால் பொறுப்பு வாய்ந்த மேதைகள் அந்த நூலுக்கு ஆதாரமான குறிகோளைக் கவனிப்பார்கள் .
புதையுண்ட ஒன்றைப் பார்ப்பது புத்திசாலியின் கடமை .புறத் தோற்றத்தை பார்ப்பது வீண் வாழ்க்கை வாழ்கின்றவனின் பழக்கம் .
அப்படியுள்ள நிலையில் இந்த இரண்டு நூலும் இரண்டு புதைபட்ட பொருள்களை வைத்திருக்கின்றன .
இராமாயணம் வைத்திருக்கின்ற புதைப்பட்ட பொருள் தான் வாதிஷ்டம் என்கிற ஞான நூலாகும் அதேபோல பாரதம் வைத்திருக்கின்ற புதைப்பட்ட பொருள் தான் பகவத் கீதை என்கின்ற அதிஞான நூலாகும் .
இந்த தேசத்தில் போராடுகிற கூட்டத்திற்குள் ஏற்படுகிற பிளவுதான் ஆங்கிலேயனுக்கு பலமே தவிர ஆங்கிலேயனுடைய இராணுவ பலமோ, வீரமோ நம்மை அடக்கி ஆளவில்லை
– பசும்பொன் தேவர் திருமகனார்.
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
தேவர் பற்றி எது உண்மை?
தேவர் புரட்சியாளரா? முற்போக்குவாதியா? பொதுயுடமைவாதியா? தேசியதலைவரா? சாதியவாதியா?
இதில் எது உண்மை?
தேவர் ஒரு புரட்சியாளர்:
*************************
1937-ல் 1938-ல் 1939-ல் என தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்.செளராசிடரத் தொழிலாளர்கள் தலைவராய் ஏற்றுக்கொண்டதும் இவரைத்தான்.
ஜமீன் ஒழிப்பு போராட்டம். பெரும் தரகர்களை ஒழித்து விவசாய சந்தை தொடங்கியவரும் தேவர் .
முதன்முதலில் பெண் தொழிளாலர்களுக்கு கர்ப்பகால விடுமுறை மற்றும் கூலி வாங்கித் தந்தவரும் தேவரே.
தேவர் ஒரு முற்போக்குவாதி:
******************************
மீனாட்சி அம்மன் ஆலய பிரவேசத்துக்கு,சனாதனிகளை எதிர்த்து அரிசனங்களுக்கு (தாழ்த்தப்பட்டோர்கள்) துனை நின்றார்.இன்று தாழ்த்தப்பட்டோர் தாராளமாக கோவிலுக்கு சென்று வர தேவரே காரணம்!
தேவர் ஒரு பொதுவுடமைவாதி :
*********************************
உழுதவனுக்கே நிலம் என தனது சொத்துக்கள் பெரும்பகுதியை விவசாயிகளைக்கே விட்டுக்கொடுத்தார் (உலகில் எந்த தலைவரும் தன் சொத்துக்களை
விட்டுக்கொடுக்கவில்லை, முதன்முதலில் பொதுவுடமையை செயலில் காட்டியத்தலைவர்)
தேவர் ஒரு தேசியத் தலைவர் :
********************************
இவர் எங்களுக்கு மட்டும் தலைவர் அல்ல..எங்களுக்கும் மட்டும் தெய்வம் அல்ல..
– -முதன்முதலில் தேவருக்கு சிலை வைத்தது ஒரு பிள்ளைமார் கிராமம்.
– -பழனி கவுண்டர்கள் தேவரோடு நெருங்கிய தொடர்ப்பு வைத்திருந்ததால் காமராஜர் “MLA சீட்” வேண்டுமா இல்லை தேவர் நட்பு வேண்டுமா என கேட்டபோது..எங்களுக்கு “தேவர்” நட்புதான் இந்த “MLA சீட்” டோடு பெரியது என சொன்னார்கள்.
– -தேவர் எழுதிவைத்த 110 ஏக்கர் நிலத்தை ஒரு மண்கூட எடுக்காமல் அப்படியே தேவர் கல்லூரிக்கு கொடுத்தார் திரிச்சூழி குருசாமி பிள்ளை
-தேவர் வாழ்ந்த காலத்தில் நாடார்கள் பார்வர்ட் பிளாக் செயலர்களாக,திருநெல்வேலி,விருதுநகர்,நாகர்கோவில் என பரவி இருந்தார்கள்.பல நாடார்கள் கோவில்களுக்கு தேவரைத்தான் சிறப்பாளராக அழைப்பார்கள்
-முழுக்கமுழுக்க பள்ளர்கள் வசிக்கும் சிட்டவண்ணண்குளம் போன்ற கிராமங்களில் தேவர் படம் இல்லாத வீடே கிடையாது.
இதை படிக்கும் உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும் தேவர் சாதியவாதியா என்பது
முத்துராமலிங்க தேவர் & போஸ் !
************************************
அரசியலையும், ஆன்மீகத்தையும் தனது இரு கண்களாக பாவித்தவர்.
இவருக்கு ஜானகி என்ற சகோதரியும் இருந்தார்.
தேவர் பிறந்த சில காலத்திலேயே அவரது தாயார் மரணமடைந்தார். அவரது சித்தியும் அடுத்த ஆண்டு மரணமடைந்தார்.
1910ம் ஆண்டு முதல் தனது பாட்டி பார்வதியம்மாள் பராமரிப்பில் கள்ளுப்பட்டி கிராமத்தில் வளர்ந்தார் தேவர்.
தேவரின் தந்தைக்கு மிகவும் நெருங்கிய நண்பரான குழந்தைச்சாமி பிள்ளை, முத்துராமலிங்கத் தேவரை வளர்த்ததில் முக்கியப் பங்கு வகித்தார். பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தார். கமுதியில் உள்ள அமெரிக்கன் மிஷனரி பள்ளியில் படித்தார் தேவர். பின்னர் மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை உயர் நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் மதுரை யூனியன் கிறிஸ்டியன் உயர் நிலைப் பள்ளியில் படித்தார்.
இருப்பினும் 1924ம் ஆண்டு பிளேக் நோய் தாக்கியதால் பள்ளி இறுதியாண்டுத் தேர்வை எழுத முடியாமல் போனது. இந்த நிலையில் பசும்பொன் கிராமத்தில் தனது பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதால் அங்கு திரும்பினார் முத்துராமலிங்கத் தேவர். 1927ம் ஆண்டு அந்த வழக்கு தேவருக்கு சாதகமாக முடிந்தது.
அந்த சமயத்தில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் குற்ற பரம்பரைச் சட்டம் அமலில் இருந்து வந்தது. இது தேவரை பெரும் வேதனை அடையச் செய்தது.
இந்த நிலையில் அவர் அரசியலில் குதித்தார். இந்த சட்டத்தை நீக்குவதற்காக அவர் ஆதரவு திரட்டத் தொடங்கினார். கிராமம் கிராமமாக சென்று கூட்டங்களை நடத்தினார்.
இந்த நிலையில் 1929ம் ஆண்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 19 கிராமங்களைச் சேர்ந்த மறவர் சமுதாயத்தினரை இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வந்தனர். இதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினார் தேவர். இந்த சட்டத்திற்கு மறவர் சமுதாயத்தினர் யாரும் அடிபணிய வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவர்களும் போராட்டத்தில் குதிக்க அந்த சட்டத்தை பகுதியாக விலக்கிக் கொண்டது அப்போதைய சென்னை மாகாண அரசு.
தேவரின் தொடர் முயற்சிகளால் 2000 கிராமங்கள் இந்த சட்டத்தின் கீழ் இருந்த நிலை மாறி 341 ஆக குறைந்தது.
1934ம் ஆண்டு அபிராமம் நகரில் மாநாடு ஒன்றைக் கூட்டினார் முத்துராமலிங்கத் தேவர். அதில் முத்துராமலிங்கத் தேவர், வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிரவர்ண தேவர், நவநீத கிருஷ்ண தேவர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்த சட்டத்தையே நீக்குவதற்காக போராடுவது என தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் சட்டத்தை நீக்குவதற்குப் பதில் மிகத் தீவிரமாக இதை பயன்படுத்த ஆரம்பித்தது அப்போதைய அரசு. அப்போது சென்னை மாகாணத்தை ஆண்டு கொண்டிருந்தது நீதிக் கட்சியாகும்.
தனித்துப் போராடினால் வெற்றி பெற முடியாது, காங்கிரஸுடன் இணைந்து போராடுவது என தீர்மானித்தார் தேவர். இதையடுத்து 1936ம் ஆண்டு அவர் பர்மாவிலிருந்து திரும்பியதும், தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார்.
இந்த சமயத்தில் நடந்த மாவட்ட போர்டு தேர்தலில், முதுகுளத்தோர் தொகுதியில் போட்டியிட்டு நீதிக் கட்சி வேட்பாளரை வீழ்த்தினார். இதுதான் அவர் அரசியலில் பெற்ற முதல் வெற்றி.
அதன் பின்னர் மாகாண போர்டு தேர்தலில் நின்றார். இந்த சமயத்தில் ராஜபாளையம் ராஜா பி.எஸ்.குமாரசாமியும் போட்டியில் குதித்தார். இதனால் யாரை ஆதரிப்பது என்பதில் காங்கிரஸாரிடேயே மோதல் வெடித்தது.
இதையடுத்து குறுக்கிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி இரு தரப்பையும் சமாதானப்படுத்தி ஒற்றுமையை ஏற்படுத்தினார். தேவர் தேர்தலிலிருந்து விலகி குமாரசாமிக்கு ஆதரவு தெரிவித்தார்.
அதன் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு முக்குலத்தோர் சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த ஆதரவையும் திரட்டும் முயற்சியில் வேகமாக ஈடுபட்டார் தேவர். இதனால் நீதிக் கட்சி பெரும் பீதியடைந்தது. இதையடுத்து ராமநாதபுரத்தை விட்டு வெளியேறக் கூடாது என முத்துராமலிங்கத் தேவருக்கு தடை விதிக்கப்பட்டது. பொது இடங்களில் பேசவும் தடை விதிக்கப்பட்டது.
1937ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார் தேவர். இதில் பெரும் வெற்றி பெற்றார். ராமநாதபுரம் மன்னரை இந்தத் தேர்தலில் தோற்கடித்தார் தேவர்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் ஆட்சி வந்ததால், குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கும் என நம்பினார் தேவர். ஆனால் முதல்வராகப் பதவியேற்ற ராஜாஜி அதை நிறைவேற்றத் தவறினார்.
1939ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேர்வு செய்யப்படுவதை பட்டாபி சீதாராமையா எதிர்த்தார். ஆனால் போஸுக்கு தேவர் முழு ஆதரவு தெரிவித்தார். மேலும் தென்னிந்தியா முழுவதும் போஸுக்காக ஆதரவு திரட்டினார்.
ஆனால் காந்தியின் ஆதரவுடன் போட்டியிட்ட சீதாராமையாவுக்கு பலம் கூடியது. இதனால் போஸ் தலைவராக தேர்ந்தெடுக்ப்பட்டவுடன் ராஜினாமா செய்ய நேரிட்டது.
இதையடுத்து பார்வர்ட் பிளாக் கட்சியைத் தொடங்கினார் போஸ். குற்றப் பரம்பரைச் சட்டத்தை காங்கிரஸ் அரசு நீக்காததால் அதிருப்தியில் இருந்து வந்த தேவர், போஸுக்கு ஆதரவாக செயல்பட்டார். மதுரைக்கு சுபாஷ் சந்திர போஸ் வந்தபோது மிகப் பிரமாண்டமான கூட்டத்தைக் கூட்டி வரவேற்பு அளித்தார். தேவருக்கு கூடிய கூட்டத்தையும் அவருக்கு இருந்த செல்வாக்கையும் பார்த்து காங்கிரஸ் தலைவர்கள் மிரண்டனர்.
இந்த நிலையில் அப்போது பிரபலமான மதுரா கோட்ஸ் வழக்கை தேவருக்கு எதிராக கையில் எடுத்த காங்கிரஸ் அரசு, தேவரை மதுரையை விட்டு போகக் கூடாது என தடை விதித்தது.
ஆனால் அதை மீறி 1940ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பசும்பொன் கிராமத்துக்குக் கிளம்பினார் தேவர். இதையடுத்து அவரை கைது செய்து திருச்சி சிறையில் 18 மாதங்கள் அடைத்தனர்.
பின்னர் விடுதலையான அவரை மீண்டும் கைது செய்தனர். 1945ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி தான் அவரை விடுவித்தனர்.
இந்த நிலையில், 1946ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு போட்டியின்றி வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலுக்குப் பின்னர் குற்றப் பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் 1948ம் ஆண்டு போஸுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள், பார்வர்ட் பிளாக் பிரிவைச் சேர்ந்தவர்களை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கினர். இதனால் பார்வர்ட் பிளாக் கட்சி தனி எதிர்க்கட்சியாக மாறியது. தமிழக பார்வர்ட் பிளாக் தலைவராக தேவர் நியமிக்கப்பட்டார். தனது வாழ்நாள் முழுவதும் அவரே தமிழக தலைவராக செயல்பட்டார்.
1949ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளின்போது, போஸ் இறக்கவில்லை, உயிருடன் இருக்கிறார். நான் அவரை சந்தித்தேன் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் தேவர். அதன் பிறகு அவர் தலைமறைவாகி விட்டார்.
அதன் பின்னர் 1950ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் மீண்டும் அவர் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். இடைப்பட்ட இந்த காலத்தில் அவரை எங்கும் காண முடியவில்லை. ஆனால் இந்த சமயத்தில் அவர் கொரியா மற்றும் சீனாவுக்குப் போயிருந்ததாக அப்போது கூறப்பட்டது.
1952ல் நடந்த லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தலில் தேவர் போட்டியிட்டார். லோக்சபாவுக்கு அருப்புக்கோட்டையிலும், சட்டசபைக்கு முதுகுளத்தூரிலும் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார். பின்னர் லோக்சபா தொகுதியை ராஜினாமா செய்து விட்டார்.
1955ம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார் பார்வர்ட் பிளாக். தனது மரணம் வரை அவரே இந்தப் பொறுப்பில் இருந்தார்.
1959ம் ஆண்டு வாக்கில், மதுரை நகராட்சித் தேர்தலில் பார்வர்ட் பிளாக், கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக, இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸ் ஆகியவை இணைந்து போட்டியிட்டன. இத்தேர்தலில் முதல் முறையாக காங்கிரஸ் பெரும் தோல்வியைத் தழுவியது.
தேர்தலுக்குப் பின்னர் தேவரின் உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து பொது வாழ்விலிருந்து அவர் விலகினார். இந்த நிலையில் வந்த 1962ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார் தேவர். ஆனால் ஒரு முறை மட்டுமே பிரசாரம் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் உடல் நலம் இடம் கொடுக்காததால், ராஜினாமா செய்து விட்டார்.
1963ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தனது 55வது பிறந்த நாளின்போது மரணமடைந்தார் தேவர்.
அவரது பிறந்த நாளும், இறந்த நாளும் ஒரே நாளில் வருவதால் அதை குருபூஜையாக முக்குலத்தோர் இனத்தவர் அனுசரித்து பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
ஆங்கிலேயர் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்தியபின், அவர்களுடைய ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் பெரும் பகுதிகளில் புரட்சி வெடித்தது. விடுதலை இயக்கங்கள் தோன்றின. இத்தகைய எதிர்ப்பு இயக்கங்களை ஒடுக்குவதில் ஆங்கில அரசு தீவிரம் காட்டியது. 1871 ஆம் ஆண்டு பஞ்சாப், மத்திய இந்தியா, உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளில் வாழ்ந்த நிரந்தர குடியட்ட்ற மக்களை அடக்கும் பொருட்டு 1871 ஆம் ஆண்டு குற்றப்பரம்பரை சட்டம் என்ற ஒரு சட்டத்தை ஆங்கில அரசு பிரகடனம் செய்தது. ஆனால், அச்சட்டத்தின் விதிமுறைகள் சென்னை மாகாணத்தில் அமுல்படுத்தவில்லை.
குற்றபரம்பரைச் சட்டம் Act III of 1971 என்று அழைக்கப்படும் இச்சட்டத்தின் படி அரசாங்கம் எந்த ஒரு ஜாதியையும், எந்த ஒரு கூட்டத்தையும், ஜாமீனில் வர முடியாத பல குற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்று கருதினால், அவர்கள் மீது இச்சட்டத்தை புகுத்தலாம். அப்படி எந்த ஒரு ஜாதியின் மீதும் இச்சட்டம் பயன்படுத்தும் போது, அந்த ஜாதியினர் தங்கள் உரிமையை நிலை நாட்ட நீதி மன்றங்களுக்கு செல்ல முடியாது. 1911 – ஆம் ஆண்டு, பிரிவு 11 மற்றும் 12 இன் படி, எந்த ஒரு உருபினரும் சுதந்திரமாக ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு செல்ல முடியாது. அன்றாடம் இரவு நேரங்களில் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டவர்கள் தினமும் இருமுறை தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிகின்ற போது கல்வியறிவு இல்லாத காரணத்தால், கைரேகை வைப்பது வழக்கம். எனவே, இச்சட்டம் “ரேகைச் சட்டம்” என்று அழைக்கப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் பிரமலைக் கள்ளர்கள் கொண்டுவரப்பட்டார்கள். இவ்வாறாக இக்குற்றபரம்பரை சட்டத்தால் பிரமலை கள்ளர்களின் தனி மனித உரிமை முழுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. W.J. Hatch என்பவர் இச்சட்டத்தை விமர்சிக்கும் போது, ” I was doubtful whether any other act on the statue book so far in givingthe police powers to take away a man’s freedom” என்று கூறுகிறார்.
இத்தகைய கொடுமையான சட்டம் நடைமுறையில் இருந்த போடு, அதை கண்டிக்க வேண்டும் என்று ஆரம்ப காலத்தில், காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட கேரளாவை சேர்ந்த வழக்குரைஞர் ஜார்ஜ் ஜோசப் என்பவர் இச்சட்டத்தின் கொடுமைகள் பற்றயும், இச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட பிரமளைகள்ளர் பகுதிகளில் ப