நம்ம மட்டக்களப்பு

  • Home
  • நம்ம மட்டக்களப்பு

நம்ம மட்டக்களப்பு நம்ம மட்டக்களப்பின் பெருமையை உலகறிய செய்வோம். LIKE & SHARE சொர்கமே என்றாலும் அது நம் ஊரை போல வருமா?

❤️😍
24/07/2024

❤️😍

Deii 😂
19/04/2024

Deii 😂

10/04/2024

சித்திரை குதுகலம்
அழகான தருணம்...

06/12/2023
மட்டக்களப்பு நண்டு பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லாததால், சின்ன அனுபவத்தை மட்டும் சொல்கிறேன். யாழ் பல்கலைக்கழகம் போன புதி...
29/11/2023

மட்டக்களப்பு நண்டு பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லாததால், சின்ன அனுபவத்தை மட்டும் சொல்கிறேன். யாழ் பல்கலைக்கழகம் போன புதிதில், சாப்பாட்டு நேரத்தில் வந்த ஒரு சீனியர், ராகிங் என்ற பெயரில் ஒரு கவிதை சொல்லு என்றார். அப்போது நண்டுக்கறி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.
நான் சொன்ன கவிதை.

"நண்டு என்றுதான் சாப்பிடத்தொடங்கினேன்
கடித்ததோ வெறும் வண்டு"

கேட்டவர் மட்டக்களப்புச் சீனியர் என்பதால் தப்பித்தேன்.

நாங்கள் நண்பர்களுடன் சேர்ந்து டோர்ச் லைட்டும் தென்னை மட்டையும் கொண்டுபோய் கடல் ஓரத்தில் ஓடித்திரியும் ஒரு பிராணியைப் பிடிச்சு பொறிச்சுச் சாப்பிடுவோம். அந்தப்பிராணியைத்தான் நண்டு என மற்ற இடங்களில் ஏமாற்றி விற்கிறார்கள் பிளடி ராஸ்கல்ஸ்.

பெரிசா மட்டக்களப்புச் சாப்பாட்டைப்பற்றிச் சொல்றீங்களே மற்ற இடத்தில இல்லாத சிறப்பு அங்க என்ன இருக்கு? இப்படிப் பலர் கேட்கிறார்கள்.

மட்டக்களப்பின் சாப்பாட்டுக்கு பெருமை சேர்ப்பதில் மட்டக்களப்பு வாவிக்கு முக்கியமான இடம் உண்டு. இலங்கையின் எந்தப்பகுதியிலும் காணக்கிடைக்காத ஏராளமான மீன் வகைகள் மட்டக்களப்பு வாவியில் கிடைக்கும்.

அதைவிட முக்கியமானது, ஒவ்வொரு வகை மீனையும் எப்படிச் சமைக்க வேண்டுமென்ற ஸ்பெசல் ரெசிப்பியை மட்டக்களப்புப் பெண்கள் கண்டு பிடித்து வைத்துள்ளார்கள்.

உளுவை மீன் சுண்டல்.
என்ன மீன் சுண்டலா? என்று நினைப்பீர்கள். உளுவை மீன் என்றொரு வாவி மீன். அதைச் சுண்டல் வைத்தால் நாக்கில் சுவை நாளு நாளைக்கு நிற்கும். ஆனால் அதே மீனை வேறு எப்படிச் சமைத்தாலும் நாயும் சாப்பிட ஏலாது.

ஏறுகெழுத்தி மாங்காய் அவியல் என்றொரு ஐட்டம் உள்ளது. இது சாதாரண கெழுத்தி போல அல்ல. மழைகாலத்தில் மட்டும் கிடைக்கும் சினைக்கெழுத்தி. அதை மாங்காய் சேர்த்து கெட்டியான தேங்காய்பாலுடன் சமைப்பார்கள், சும்மா தேவாமிர்தமாய் இருக்கும். அதுவும் அதனுள் இருக்கும் முட்டையைச் சாப்பிடக் கோடிபுண்ணியம் செய்திருக்க வேண்டும்.

அப்படியே விரால் என்றால் கெட்டியான குழம்பு, மணலை என்றால் கெட்டிப்பால் சொதி, செத்தலி என்றால் மிளகு அரைத்த குழம்பு, பனையான் என்றால் குழம்பு வரட்டல் என மீன்களின் வரைட்டி போல கறிகளின் வரைட்டியும் அதிகம்.

திரளி, ஒட்டி, ஓரா போன்ற மீன்களை மற்ற இடங்களில் சாப்பிடக்கிடைத்தாலும் அவற்றின் சுவை ஊரில் சாப்பிட்டது போல இல்லையே என ஆராய்ந்தபோதுதான் மற்ற இடங்களில் அவை கடல் மீன்கள் ஆனால் மட்டக்களப்பில் அவை வாவி மீன்கள் என்ற உண்மை தெரியவந்தது. மட்டக்களப்பு வாவிக்கும் கடலுக்கும் நேரடித்தொடர்பு இருப்பதால் நிறைய கடல் மீன்கள் வாவிக்கு இசைவாக்கமடைந்து வித்தியாசமான சுவையுடன் வளர்வது மட்டக்களப்பின் சாப்பாட்டுக்கு சிறப்பாய்இருக்கிறது. மீன்களின் இந்த சுவைமாற்றம் பற்றி ஆராய்வது விலங்கியல் துறை மாணவர்களுக்கு சிறப்பான ஆராய்ச்சியாக அமையும்.

இந்த புவியியல் அமைப்பின் காரணமாக இறால்களும் நண்டுகளும்கூட வித்தியாசமான சுவையுடையவாக கிடைக்கும். மட்டிறால் என்றொரு இறாலைச் சொதி வைத்தால் பத்து வீடு தாண்டியும் மணக்கும். அந்தச்சொதியை மட்டும் கலந்தே 4 பிளேட் சோறு சாப்பிடலாம்.

மற்ற இடங்களில் கிடைக்கும் கடல் மீன்களான அறுக்குளா, சுறாய், சூரை, விழல் என எல்லாம் மட்டக்களப்பிலும் கிடைக்கும். அவற்றை நாம் பெரிதாய்க் கண்டு கொள்வதில்லை.

என்னடா இவன் மீன் பற்றியே கதைக்கிறானே மரக்கறி சாப்பிடுவதில்லையா என யோசிக்கிறீர்களா?

திராய்ச் சுண்டல் என்று கேள்விப்பட்டு உள்ளீர்களா?

வாய்க்கால் ஓரத்தில் மட்டும் வளரும் திராய் என்ற செடி. தேங்காய்ப்பூ போட்டு சுண்டல் வைத்தால் அதோடு மட்டும் ரெண்டு பிளேட் சோறை காலியாக்கலாம்.
குறிஞ்சா இலையின் கசப்புத் தெரியாமல் சுண்டல் வைப்பது மட்டக்களப்பாருக்கு மட்டுமே கைவந்த கலை.
தூதுவளை சம்பல், முடக்கொத்தான் சுண்டல் எல்லாம் மட்டக்களப்புத்தாண்டி எங்கேயும் நான் அன்றாட உணவில் கண்டதில்லை.

கீரை என்றால், மசித்து கூழ் போல் சாப்பிடுவதுதான் மற்ற இடத்தின் வழக்கம். மன்னிக்கவும், மட்டக்களப்பில் அப்படிச் சமைக்க ஏலாது. மண்டூர் கீரையின் தண்டே பெருவிரல் அளவு இருக்கும்.
அதை தேங்காய்பூ கூட்டு அரைத்து சமைத்தால், கீரையின் தண்டையே ராஜ்கிரண் கோழிக்கால் சாப்பிடுவதுபோல ஸ்டைலாக சாப்பிட்டு முடிக்கலாம்.

தண்டுக்காய் கறி என்றொரு ஐட்டம்.
மற்ற இடங்களில் கஜூ கடையிலே வாங்கிச் சமைப்பார்கள். ஆனால் மட்டக்களப்பிலே கஜூவை கொட்டையிலிருந்து ஈர்கிலால் குத்தி பிரஷாக எடுத்து, அதோடு பிஞ்சு முந்திரியங்காயைப்போட்டு வைப்பார்கள் பாருங்கள் ஒரு கறி.....மன்னிக்க, அதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

சாப்பாடுதான் மட்டக்களப்பாரின் மந்திரம். அதைச்சாப்பிட்டிட்டுத்தான் யாழ்ப்பாணத்தார் பாயோடை ஒட்டுறவை.

படம்: கல்லடிப் பாலம், மட்டக்களப்பு வாவி
#மீன்_பாடும்_தேன்_நாடு
#நம்ம மட்டக்களப்பு

By: jaffnafashion

ஆசிரியர் - "ரணில்! எங்கள் சம்பளத்தை 60,000 ஆக உயர்த்து"ரணில் - "உனக்கு இப்போ மாசம் எவ்வளவு சம்பளம்?"ஆசிரியர் - "50,000"ர...
02/11/2023

ஆசிரியர் - "ரணில்! எங்கள் சம்பளத்தை 60,000 ஆக உயர்த்து"

ரணில் - "உனக்கு இப்போ மாசம் எவ்வளவு சம்பளம்?"

ஆசிரியர் - "50,000"

ரணில் - "ஒரு வருஷத்துல எத்தனை நாட்கள்?"

ஆசிரியர் - "365"

ரணில் - "அதுல உனக்கு சனி, ஞாயிறு லீவு. வருஷத்துல 104 நாளைக் கழி"

ஆசிரியர் - "261"

ரணில் - "அதுல தவணைப் பரீட்சை முடிஞ்சதும் வாற லீவு மொத்தம் 10 வாரம், அதுல ஏற்கனவே சனி ஞாயிறு கணக்குல எடுத்ததால அதைக் கழிச்சா 56 நாட்கள் அதை 261ல கழிச்சா எவ்வளவு நாள் வருது?"

ஆசிரியர் - "205"

ரணில் - "அதுல ஒரு 10 பவுர்ணமி நாட்களும் வரும் அதையும் கழிச்சா எவ்வளவு நாள் வருது?"

ஆசிரியர் - "195"

ரணில் - "எல்லோருக்கும் எட்டு மணித்தியாலம் வேலை, உனக்கு மட்டும் ஆறு மணித்தியாலம். அதுல அசெம்ப்ளி, இன்டெர்வல், ஒரு free பாடம். அதுக்கெல்லாம் ஒரு மணித்தியாலத்தைக் கழிச்சா 5 மணித்தியாலம். இப்ப 195 ஐ 5 ஆல பெருக்கி 8 ஆல பிரிச்சு எத்தனை வருதுன்னு சொல்லு"

ஆசிரியர் - "கிட்டத்தட்ட 122 நாட்கள்"

ரணில் - "அதுல ஒரு 8 ஏனைய விடுமுறை நாட்களும் வரும், அதையும் கழிச்சா எவ்வளவு நாள் வருது?"

ஆசிரியர் - "114"

ரணில் - "அதுல ஒரு 24 விடுமுறை நாட்கள் ஆசிரியர் லீவு எடுக்கலாம் அதையும் கழிச்சா எவ்வளவு நாள் வருது?"

ஆசிரியர் - "90"

ரணில் - "90 ஐ 30 ஆல பிரிச்சு எத்தனை மாசம் வருதுன்னு சொல்லு"

ஆசிரியர் - "கிட்டத்தட்ட 3 மாசம்"

ரணில் - "வருஷத்துக்கு இப்போ உனக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்குது?"

ஆசிரியர் - "6 லட்சம்"

ரணில் - "அதை மூன்று மாசத்தால பிரிச்சா ஒரு மாசத்துக்கு இரண்டு லட்சம். ஆமா நீ எவ்வளவு சம்பளம் கேட்டா?"

ஆசிரியர் - "அறுபதாயிரம்"

ரணில் - "அப்போ இரண்டு லட்சத்துல அறுபதாயிரம் போனா மீதி நீ அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டியது ஒரு லட்சத்து நாற்பது ஆயிரம்.

அதை எப்போ திருப்பித் தரப்போறா?"

படித்ததில் பிடித்தது😂😁🤣

13/09/2023

Gandhi park in 2060.

Lotus tower in 2060
13/09/2023

Lotus tower in 2060

Clock Tower 🗼 in 2060
13/09/2023

Clock Tower 🗼 in 2060

Batticaloa Railway station 🚉 in 2060
13/09/2023

Batticaloa Railway station 🚉 in 2060

Kallady bridge
13/09/2023

Kallady bridge

13/09/2023

Kallady bridge 🌉 in 2060

 #2060 ல் முகத்துவாரம் லைட் ஹவுஸ்
13/09/2023

#2060 ல் முகத்துவாரம் லைட் ஹவுஸ்

Batticaloa - in 2060. After Sometime.......
13/09/2023

Batticaloa - in 2060. After Sometime.......

04/09/2023

கடவுளே காண்ட் ஆகிட்டாரு 😂
30/08/2023

கடவுளே காண்ட் ஆகிட்டாரு 😂

மட்டக்களப்பானும் உலகையே வசியம் செய்யும்  மந்திரவாதிகளும்.மட்டக்களப்புக்கு மட்டும் போயிற வேணான்டா பாயோடயே படுக்க வச்சிருவ...
21/08/2023

மட்டக்களப்பானும் உலகையே வசியம் செய்யும் மந்திரவாதிகளும்.

மட்டக்களப்புக்கு மட்டும் போயிற வேணான்டா பாயோடயே படுக்க வச்சிருவானுங்க.. அங்க பிறக்கிற குழந்தையெல்லாம் வயிற்றுல இருக்கிறப்போவே எப்டி ஒருத்தர பாயிலயே படுக்க வைக்கிலாம் என்ற மந்திரத்த பழகிட்டுத்தான் மண்ணிலேயே பிறக்கும் அப்டி ஒரு ஊரு அது......

ஐயோ...! கேக்கவே பயங்கரமா இருக்கு மட்டக்களப்பான் அவ்வளவு மோசமானவனானு கேக்க தோணுது தானே....

மோசமானவன் மட்டுமில்ல, படு மோசமானவன்...

அவனோட வீட்டுக்கு நீ மட்டுமில்ல உங்குடும்பத்தயே கூட்டிட்டு போய் பாரன்.. நீ யாரு எவரு இப்படி எதுவுமே கேக்க மாட்டான், சாப்பிட்டியானு மட்டும் தான் கேப்பான். கேட்டு அடுத்த வினாடியே உன்னயும் உன்னோட குடும்பத்தையும் அன்பால அங்க காத்திருக்க வைப்பான்.

நீ காத்திருக்கிற நேரத்துக்குள்ள அவன்கிட்ட காசு இருக்கோ இல்லையோ பக்கத்துல கடனாச்சிம் வாங்கி கிழங்கு பொரியல், கீர, தயிர், மீன், கிழங்குச்சொதி, பாயாசம் இப்படி நாளு, அஞ்சி கறியோட சாப்பாடு செஞ்சிட்டு நமக்கு பரிமாற ரெடி ஆகிருவான்.

அதுலயும் அவன் சாப்பாட்ட பரிமாரும் விதம் இருக்கே.... ஐயோ..!எப்டி இருக்கும் தெரியுமா?

முதல்ல கிழங்கு பொறியலும் கீறக்கறியும் வச்சி தருவான், அத சாப்பிட்டு கொஞ்ச நேரத்துல நல்ல தொதல் மாதிரி ரெண்டு மீன் துண்டோட குழம்ப அள்ளி வைப்பான் பாரு..., அப்டியே வாயில எச்சில் வடியும், அத சாப்பிர்ர நேரமே நமக்கு வயிறு நிரம்பிரும், அப்போ போதும் போதும்னு நம்ம சொல்ரப்போ அத கணக்கிலேயே வாங்காம இன்னும் கொஞ்ச சோறு வச்சி கிழங்கு சொதிய எடுத்து அப்டியே சட்டில ஒரு ஆட்டு ஆட்டி ரெண்டு கிழங்கும் சேத்து வச்சி சிரிச்சிட்டே வயிற்றுக்கு அள்ளி சாப்டுங்கனு சொல்வாங்க பாரு அப்போ அந்த வார்த்த வயிற்றுல இடம் இல்லாட்டியும் உன்ன சாப்பிட சொல்லும்....

சரி இதோட முடிஞ்சி தானேனு நினச்சி எழுந்திருக்க ரெடி ஆகுனா அவங்க பொண்டாட்டி ஓடி வந்து, தயிர் இருக்கு கொஞ்சம் அதோடயும் சாப்டுங்கனு சொல்லி திரும்ப அதே இலையில இன்னும் கொஞ்சம் சோத்த போட்டு, சும்மா வெண்ணெயில் செஞ்ச மாதிரி தயிர சட்டில இருந்து கரண்டியால வெட்டி அள்ளி வைப்பாங்க பாரு.. அப்டியே தயிர் சோத்துல நிண்டு ஆடும்.. அந்த ஆட்டத்துக்கு பூ அல்லி போடுற மாதிரி சீனிய அள்ளி அதுக்கு மேல தூவி விட்டு இப்போ நல்லா பெனஞ்சி சாப்டுங்கண்ணானு சொல்வாங்க பாரு.. அந்த வார்த்த நம்ம கண்ணால கண்ணீரே வரவைக்கும், சரினு நம்மலும் அந்த தயிர பாத்தும் சாப்பிடாம இருக்க ஏலாதுனு சொல்லி நல்லா கொளச்சி ஒரு புடி படிச்சிட்டு அசைய ரெடி ஆகுனா அவங்க மூத்த மகள் ரெட்டை பின்னல் கட்டிட்டு சிரிச்சிட்டே ஒரு தட்டுல பாயாச டம்லர அடிக்கிட்டு ஓடி வந்து எடுங்க மாமானு சொல்லும், அந்த அன்பும் அழகும் வர்ணிக்க வார்த்தை இல்லாத ஒன்டு

சரின்னு அதையும் எடுத்து குடிச்சா... அந்த இடத்துல கடவுளே நினச்சாலும் எழுந்திருக்க முடியாது என்றதால, சாப்பாடு பரிமாருன பாயிலயே அப்டியே தலைய சாச்சி நம்மள படுக்க வைக்கும்.... நல்லா வயிறு முட்ட சாப்பிட்ட நமக்கு தூக்கம் சும்மா அள்ளிற்று போகும். கொஞ்ச நேரம் தூங்கி எழும்பி பார்த்தா.. நமக்கே தெரியாம நம்ம தலைக்கு தலையணை வச்சிருப்பாங்க அந்த டைம்ல உடம்பெல்லாம் ஏதோ பண்ணும்... அது வெறும் வார்த்தையால் சொல்ல ஏலாது.

இத தான் புராதன காலத்தில மட்டக்களப்புல விருந்து உண்ட, பண்டய மகான்கள் "மட்டக்களப்புக்கு போயிராத பாயோடயே படுக்க வச்சிருவானுங்கனு" வர்ணித்தான்.

அதுசரி பிள்ளைகள் பிறக்கும் போதே மந்திரம் பழகிட்டு தான் பிறக்கும் என்றது என்னனு கேக்க தோனுது தானே....

அதுவா...! ஒரு புள்ளதாச்சி பொண்ணோட வீட்டுக்கு இதே மாதிரி தெரிஞ்சவங்க, சொந்தகாரங்கனு ஒரு ஆயிரம் பேர் போய் பாருங்க... அந்த பொண்ணு சாப்பிடுதோ இல்லையோ வந்தவங்கல ஓடி ஓடி சாப்பாடு பரிமாறுவாள், அப்போ அவள்ட குழ‌ந்த வயிற்றுல இருந்துட்டே வீட்டுக்கு வாரவங்கள எப்டி வரவேற்று உணவளிக்கனும் என்ற மந்திரத்தை கற்றுக்கொள்ளும்.... பிறகு அந்த குழ‌ந்தை பிறக்கிறப்போ ஒரு மந்திரவாதியா தான் பிறக்கும்......

இப்போ நீங்க நினைக்கிறது சரி...

உலகையே வசியம் செய்யிற மந்திரம் வேற எதுவும் இல்ல, எல்லோராலும் செய்ய முடியாத விருந்தோம்பல் தான்.. இந்த மந்திரத்த எல்லாருக்கும் இலகுவா பழக முடியாது... அது அவன்ட காலச்சாரத்துல இருந்து வார ஒண்டு.. அவன்ட சூழல்ல இருந்து வார ஒண்டு... அவன தாங்குர மண்ணுல இருந்து வார ஒன்னு....

விருந்தோம்பலுக்கு பேரு மந்திரம் எண்டும், அத சரியா செய்யிறவனுக்கு பேரு மந்திரவாதினு நீங்க சொன்னா.....

இந்த பூமி அழியிர வரைக்கும் மட்டு மண்ணுல பிறக்குற ஒவ்வொரு மட்டக்களப்பானும் மந்திரவாதிதான், அதேபோல அவனுக்கு பிறக்கிற ஒவ்வொரு பிள்ளையும் மந்திர வாதியாத்தான் பிறக்கும்.

மட்டக்களப்புக்கு❤️❤️❤️

இவ் உலகில் விருந்தோம்பலை சிறப்பாக செய்யிர ஒவ்வொரு நபருக்கும்💓💓💓

ராஜ்குமார் நடராசா
களுதாவளை.

27/04/2023

நம்ம மட்டக்களப்பு
#கல்முனை பிரதான வீதியில் பனியன் போட்ட ோய் ஒருவர் போட்ட ஒம்லட்

10/07/2022

2022 க்கான WWE Wrestling போட்டி ஜனாதிபதி கட்டிலில் நடைப்பெற்றது… 😂

10/07/2022

IMF 🤣🤣🤣

18/06/2022

எரிபொருள் இல்லாததால் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் இலங்கையர்

10/01/2022

Minnal murali - Original
யார்ரா இவன்?

16/10/2021

01/10/2021

from Majority

23/09/2021

Central camp enga eruku?

21/09/2021

Central Bank of

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம மட்டக்களப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share