arumugamarumugam5494

  • Home
  • arumugamarumugam5494

arumugamarumugam5494 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from arumugamarumugam5494, Tourist Information Center, .

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவத்திபாளையத்தில் அமைந்துள்ள  அருள்மிகு ஸ்ரீ எல்லை மாரியம்மன் திருக்கோவில் ஆடி கடைசி வெள்...
12/08/2023

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவத்திபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லை மாரியம்மன் திருக்கோவில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு எலுமிச்சை பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது*.

வாழ்க்கை வாழுகிறோமா? வசிக்கிறோமா?இட்லியை ஆசையுடன் பார்த்தோம் பண்டிகை நாட்களில் மட்டும்கறிக்கடை ஊருக்கு ஒன்று மட்டும் தான...
29/06/2023

வாழ்க்கை வாழுகிறோமா? வசிக்கிறோமா?

இட்லியை ஆசையுடன் பார்த்தோம் பண்டிகை நாட்களில் மட்டும்

கறிக்கடை ஊருக்கு ஒன்று மட்டும் தான் இருந்தது

நண்பர்களோடு எதையும் எதிர்பாராமல் தூய நட்பாய் பழகினோம்

ஒரு சினிமா பார்க்க ஒப்புதலுக்கு
ஒரு வாரம் தவம் கிடந்தோம்
அந்த காலம் தான் நன்றாக இருந்தது..

ஆரத்தி எடுக்க போட்டி போட்ட மதினிமார்கள் இருந்தார்கள்..

தாய்க்கு நிகராய் காவல் காத்த தாய் மாமன்கள் இருந்தார்கள்..

ஜரிகை குறைவான வேட்டி வாங்கி தந்ததற்காக சண்டை போட்ட பங்காளிகள் இருந்தார்கள்..

இழவு விழுந்த வீடுகளில் உறவினர் இடுகாடு வரை போனார்கள்..

அடுத்தடுத்து பெண்களுக்கு திருமணம் செய்தும்

மாறி மாறி பிள்ளைப் பேற்றிற்கு பெண்கள்

வந்தாலும் அம்மாக்கள் ஓய்வின்றி உழைத்தார்கள்

ஐந்தாறு பிள்ளைகள் இருந்தாலும் அப்பாவிற்கு மன அழுத்தங்கள் இல்லை..

ஒரே சோப்பை குடும்பம் முழுதும் உபயோகித்தும் தோல் நோய்கள் வரவில்லை..

கண்டதை உண்டாலும் செரித்தது.

தொலைக்காட்சி செய்திகளில் உண்மை இருந்தது..

பண்டிகை க்கு ஒரு மாதம் முன்பே ஆர்வமுடன் தயாரானோம்

உடுத்த புதுத்துணி கையில் தரும் போது ஆஸ்கார் விருது வாங்கும் கலைஞன் போல் உணர்ந்தோம்

ஃபேன் இல்லாமல் உறக்கம்.வந்தது..

எங்கோ ஏதோ ஒரு மூலையில் மருத்துவமனையும் ஹோட்டலும். இருந்தது..

வெயிலாலும் மழையாலும் பாதிப்பு இல்லை..

பிள்ளைப்பேறு செலவில்லாமல் சுகமாய் இருந்தது..

கல்வி கட்டணம் இல்லாமல் கிடைத்தது..

மாணவர்கள் ஆசிரியரிடம் அன்பாய் பணிவாய் இருந்தார்கள்..

ஆசிரியைகளிடம்.
எளிமை இருந்தது..

படுக்கையை எதிர்பாராமல் பாயில்
உறங்கினோம்

தாத்தா பாட்டி சொல்லும் கதை கேட்டுகொண்டே
அவர்கள் மடி மீது தலை வைத்து
நாம் உறங்கிய தருணம் கண்டோம்

பெரியப்பா சித்தப்பா உரிமையோடு அடித்தார்கள் நம் தப்பை சரி செய்ய

பெரிவர்களின் உடையைப் போட தயங்கியதில்லை..

அப்பா சொன்னால் அந்த வார்த்தை மறுக்காமல் ஏற்கப்பட்டது..

பெண் பார்க்க வந்தவனை பிடித்திருக்கிறது என்று சொல்ல வெட்கப்பட்டோம்...

காவிரிக் கரையில் பயமின்றி குளித்தோம் ஆற்று நீர் சுத்தமாய் இருந்தது..

பையில் இருக்கும் ஐந்து ரூபாய் க்கு அளவில்லா ஆனந்தம் கொண்டோம்

ஹோட்டலில் தாத்தா ஆசையோடு வாங்கி தரும் பூரி மசாலா க்கு எல்லையில்லாத மகிழ்ச்சி கண்டோம்

செல்போன் எதுவும் இல்லை
ஆனாலும் பேசிய நேரத்தில் வந்து சேர்ந்தனர் நண்பர்கள்

ஆசிரியர் மீது அசாத்திய மரியாதை இருந்தது

தாவணியில் தேவதைகளாக இளம் பெண்கள்

காதுகளை ரணமாக்காத இனிய பாடல் இசை கேட்டோம்

ஒரே குச்சி ஐஸ் வாங்கி எந்த சங்கோஜமும் இல்லாமல் நண்பர்கள் ஆளொக்கொரு கடி கடித்து சுவைத்தோம்

ஆண்கள் தான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தார்கள்..

மிகச்சிறிய வயதில் எல்லாம் பால் பேதங்கள் தோன்றவில்லை..

மொத்தத்தில் அப்போது வாழ்ந்தோம் இப்பொழுது வசிக்கிறோம் அவ்வளவே...

நெசவு தொழிலை குலத்தொழிலாக கொண்ட பல்வேறு இந்திய சமூகங்களின் (ஜாதி ) பெயர்கள். :1. *ஜூலஹா* : ( காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா,...
15/02/2023

நெசவு தொழிலை குலத்தொழிலாக கொண்ட பல்வேறு இந்திய சமூகங்களின் (ஜாதி ) பெயர்கள். :

1. *ஜூலஹா* : ( காஷ்மீர்,
பஞ்சாப்,
ஹரியானா, ராஜஸ்தான். உபி உத்தர்காண்ட் / சிலர் மிக சிலர்
சீக்கியர்கள் / பிறர் இந்துக்கள் )

2. *அன்சாரி* : ( வாரணாசியை மையமாக கொண்டு இருந்தவர்கள், இஸ்லாம் காலத்தில் முஸ்லிமாக மாறியவர்கள் தெற்காசியா முழுதும் இருக்கிறார்கள் )

3. *சல்வி* : ஸல் என்ற வகையான தறியை நெய்பவர்கள்.
படிவாலா பட்வ் சமூகம் என்றும் அழைக்கப்படுகின்றனர். குஜராத், ராஜஸ்தானில் உள்ளார்கள். குஜராத் சவுராஷ்டிரா படன் நகரில் மையம். படன்-படோலா சேலை என்ற பட்டு சேலை இந்த சமூகத்தின் புவிசார் குறியீடு பெற்றது.

4. *பனிகா* / *பனிகார்* : சட்டிஸ்கர், ஜார்கண்ட்,
மத்திய பிரதேஷ்,
ஒரிசா,
உத்திர பிரதேசம் இந்த சமூகத்தின் பெயர் பட (துணி)
என்ற சம்ஸ்கிருத பெயரில் இருந்து மறுவியதாக அறியப்படுகிறது.

5. *தேவாங்கா* : கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திராவில் உள்ளனர். தேவல ரிஷி இவர்களுக்கு நெசவுகளை கற்றுத்தந்ததாக கூறுகின்றனர்.

6. *பத்மசாலி* : ஆந்திரப்பிரதேசம். ஸல் / ஸலி என்றால் எட்டுக்கால் பூச்சி கூட்டை குறுக்கும் நெடுக்குமாக பிணைக்கும் செயலை ஒத்த நெசவினை செய்பவர்கள் என்றும் பத்ம சாலி என்பது தாமரை தறி . இவர்கள் சைவர்களான தேவாங்கர்களிடம் இருந்து வேறுபட்டு வைணவர்கள் . மார்க்கண்டேய ரிஷி வம்சம் என்று கூறிக்கொள்கின்றனர்.

7. *கோஷ்டா* / *கோஷ்ட்டி* : மராத்தி மற்றும் தெலுங்கு சமூகம்.
இவர்கள் வட இந்தியா முழுதும் பரவி உள்ளனர். இவர்களின் மொழி சமஸ்கிருதம், மராத்தி, காரிபோலி, பூந்தேலி, போன்ற மொழிகள் கலந்து பேசப்படுவதாக உள்ளது. இவர்கள் தேவாங்க, பத்மசாலி சமூகத்தின் உட்பிரிவு என்று கூறுகின்றனர். பட்டு நெசவில் பெயர் பெற்றவர்கள்.

8. *கனி* :
காஷ்மீர் இல் உள்ளனர். மர-பாபினை குறிக்கும் சொல் "கனி" அல்லது சிறிய நெசவு குச்சியை குறிக்கிறது.

9. *வண்கர்* : குஜராத்தில் உள்ளனர்.

10. *கசவு* :
கேரளா நெசவாளர் சமூகம்

11. *பனெக்* :
மணிப்பூர் மாநில சமூகம்

12. *சாலியர்* : கர்நாடகா, தமிழ்நாடு.

13. *கைக்கோள செங்குந்தர்* :
தமிழ் நாடு இடங்கை நெசவாளர்கள்

14. *சௌராஷ்டிரா பட்டுநூல்காரர்* / *பல்கார்* / விங்கர் / மக்கெறான் :
தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான் , கேரளா வில் உள்ளனர்.

15. *தந்தி* :
மேற்கு வங்காளம் ஜார்கன்ட்

16. *மணியார்* : மஹாராஷ்டிரா

17. *பவ்சார்* : மஹாராஷ்டிரா

18. *கோஷ்டி* : மஹாராஷ்டிரா

19. *நேதகனி* : மஹாராஷ்டிரா தெலுங்கானா. நேத்கனி / மஹர் சமூகம் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

20. *டங்காசியா* - குஜராத்

21.*கத்ரி* -
ஆந்திரா, கர்நாடகா, குஜராத்

22. *மல்தாரி* -
குஜராத்

23. *மஹேஸ்வரி* - குஜராத்

24. *மேக்வால்* மக்கவாலா - ராஜஸ்தான்,
குஜராத்,
மஹாராஷ்டிரா

25. *கோரி* -
உத்திர பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம்

26. *கோலி* -
மத்திய பிரதேசம்

27. *மொமின்* -
மத்திய பிரதேசம் (மதம் மாறிய முஸ்லிம்கள்)

28. *கங்கர்* -
மத்திய பிரதேசம்

29. *பமி* -
மத்திய பிரதேசம்

30. *டோபி
மத்திய பிரதேசம்

31. *மபி* - மத்திய பிரதேசம்

32. *தட்டமா* - பிஹார்

33. *தந்தி* - பிஹார்

34. *பட்வான்* - பிஹார்

35. *படோர்* - மேற்கு வங்காளம்

36. *ஜூகி / சூல்கி* - மேற்கு வாங்கலாம்

37. *குவிந்தா3ஸ்* - மேற்கு வங்காளம்

38. *கர்னி* - மேற்கு வங்காளம்

39. *நெகுவா* - மேற்கு வங்காளம்

40. *தனி யூபாஸ்* - மேற்கு வங்காளம்

41. *பு4லியா* - ஒரிசா

42. *கோஸ்தா*, 43. *குலி*, 44. *தேரா*, 45. *சரகா*, 46. *ரங்கணி*, 47. *கௌடி3யா*, 48. *படாரா*, 49. *ஆசானி படாரா*, 50. *பெங்காலி தந்தி*, 51. *ஆசானி தந்தி*, 52. *கௌடியா தந்தி*, 53. *பன தந்தி*, 54. *மதியா*, 55. *ஜோ2லா* 56. *கண்டா*. 57.
*பாணா* 58. *போண்டா* 59. *குதியா கண்டா* - ஒரிசா

60. *கோம்* - மணிப்பூர்,

61. *ஹஜொங்* - மேகாலயா

62 *ஜூலாஹா* - திரிபுரா

63. *ஜூலாஹா* - சிக்கிம்

64. *த4ங்க3ர்* - கோவா

65. *முதலியார்* - பாண்டிச்சேரி

66. சிக் பாரிக் ஜார்கண்ட்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when arumugamarumugam5494 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share