02/12/2015
நன்றி பாராட்டுவோம்..ரதிமீனா பேருந்து நிர்வாகத்திற்க்கு.வண்டி ஒட்டுரவன் பாண்டிச்சேரி காரன் டா...நேற்றைய (1.12.15) கனமழையின் காரணமாக சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு புறப்பட்ட அனைத்து பேருந்துகளும் சென்னையில் கோயம்பேடு Busstand ல் நிருத்தப்பட்டன,ஆனால் சுமார் 25 சென்னை to சிதம்பரம் செல்லும் பயணிகள் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரதிமீனா அலுவலகத்தை அணுகி குழந்தைகளுடன் சிதம்பரம் வரை செல்லவேண்டும் பேருந்து ஒன்றை அனுப்ப இயலுமா என கெஞ்சி கேட்ட போதுரதிமீனா அலுவலகத்தில் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அனுமதி பெற்று பேருந்து ஒன்றை இயக்க ஓத்துக்கொன்டனர். மாலை 04.00 மணிக்கு அனைத்து பயனிகளுடன் புறப்பட்ட பேருந்து ECR சாலையில் புறப்பட்டது பின்னர் மகாபலிபுரம் சாலையில் தண்ணீர் அதிகமாக செல்வதாக கூறி மகாபலிபுரத்தில்இருந்து பேருந்துகள் அனைத்தும் திண்டிவனம் to செங்கல்பட்டு சாலைக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர் பேருந்து செங்கல்பட்டு சென்று அங்கிருந்து திண்டிவனம் சென்றடைந்த போது இரவு 10.00 மணி ஆகிவிட்டது. இதற்கிடையில் பேருந்தில் இருந்த மாற்று ஓட்டுனர் சீனிவாசன் மற்றொரு நபர் பயனிகள், குழந்தைகளுக்கு தேவையான சிறு சிறு உதவிகளை ஒரு மணி நேரத்திற்க்கு ஒருமுறை பணிவுடன் கேட்டு செய்து கொடுத்தனர். திண்டிவனத்தில் ஒரு Hotel ல் இரவு 10. 00 மணிக்கு நின்ற பேருந்து அனைத்து பயணிகளுக்கும் இலவச உணவும், குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட பெருட்கள் அனைத்தும் இலவசமாக கொடுத்தனர். பின்னர் புறப்பட்ட பேருந்து திண்டிவனம், பாண்டிச்சேரி, கடலூர் வழியாக சிதம்பரம் வந்தடைந்த போது இரவு 01.00மணி ஆகிவிட்டது. சென்னையில் இருந்து சிதம்பரம் சென்றடைய முடியுமா என பயந்து கொன்டிருந்த பயணிகளை ஒரு பேருந்து நிர்வாகம் பயணத்தில் கவனித்து கொண்டவிதம் வார்த்தைகளால் சொல்ல இயலாது. சென்னை to சிதம்பரம் சென்றடைய பயணம் ஒன்பது மணி நேரம் ஆனது. சிதம்பரம் சென்றபோது பேருந்து கட்டணத்தை உயர்த்தி கேட்பார்கள் என நினைத்தோம் ஆனால் அதற்க்கும் இடம் கொடுக்க வில்லை. பயணிகள் கேட்டுகொண்டதற்கினங்க மனித நேயத்துடன் பேருந்தை மழை வெள்ளத்திலும் இயக்க அனுமதித்த நிர்வாகத்தையும்... மனிதாபிமானதாக நடந்து கொன்ட பேருந்து ஓட்டுநர் சீனிவாசன் உள்ளிட்ட ஊழியர்களை...மனதார பாராட்டுவோம். ...இவன். S.R.Ravi. Hotel Thillai ganesh Chidambaram.