Durai Travels

  • Home
  • Durai Travels

Durai Travels Durai Travels has the capacity to meet all your transportation needs. We provide an array of transportation services to every point of India.
(5)

We provide an array of transportation services to every point India. We are offering 100% quality services to our customers and our efficient travel desk and offers the best & competitive prices. 'Durai Travels' has more than 10 years of trusted services

17/02/2016

சாகசம் செய்யும் இடம் சாலை அல்ல.

கார் உரிமையாளர்கள், மோசமாக ஓட்டும் டிரைவர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தாலோ, உரிமையாளர்களே பாதுகாப்பு இல்லாத வகையில் ஓட்டி...
13/09/2014

கார் உரிமையாளர்கள், மோசமாக ஓட்டும் டிரைவர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தாலோ, உரிமையாளர்களே பாதுகாப்பு இல்லாத வகையில் ஓட்டினாலோ இனி காரின் இன்சூரன்ஸ் ப்ரீமியம் அதிகமாகும். மத்திய அரசு உருவாக்கிவரும் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் இந்த அம்சம் சேர்க்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதுநாள் வரை இன்சூரன்ஸ், காரை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இருந்தது. இனிமேல், காரை ஓட்டுபவரைப் பொறுத்தும் இன்சூரன்ஸ் ப்ரீமியம் நிர்ணயிக்கப்படும்.

அடுத்த 2 வருடங்களுக்கு, இந்தியாவில் உள்ள அனைத்து ஓட்டுனர்களைப் பற்றிய தகவல்களும் ஒரு சிறப்பு டேட்டாபேஸில் சேமிக்கப்படும். இந்த டேட்டாபேஸை நாம் ஆன்லைனில் படிக்கமுடியும். ஒரு கார் உரிமையாளர் ஒரு டிரைவரை வேலைக்கு சேர்க்கும்முன், அவருடைய தகவல்களை இந்த டேட்டாபேஸில் படித்து, 'பாதுகாப்பான டிரைவரா?, இதற்குமுன் இவரால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டிருக்கிறதா?' என்று சோதிக்க முடியும்.

இந்த டேட்டாபேஸில் ஒரு டிரைவருக்கு நெகட்டிவ் பாயின்ட்டுகள் கூடக்கூட, காருடைய இன்சூரன்ஸ் ப்ரீமியமும் கூடிக்கொண்டே போகும். எனவே, உரிமையாளர்கள் பாதுகாப்பான டிரைவரைத்தான் வேலைக்கு அமர்த்துவார்கள். தானே கார் ஓட்டிக்கொள்ளும் கார் உரிமையாளராக இருந்தால், அவருக்கும் இது பொருந்தும்.

நம்நாட்டின் சாலைகளுக்கான வேக வரம்பு (ஸ்பீடு லிமிட்) விதிகளை மாற்றியமைத்துள்ளது மத்திய அரசு. புதிய விதிகள் விரைவில் அமலுக...
06/08/2014

நம்நாட்டின் சாலைகளுக்கான வேக வரம்பு (ஸ்பீடு லிமிட்) விதிகளை மாற்றியமைத்துள்ளது மத்திய அரசு. புதிய விதிகள் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விதிகளின்படி, கார்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீயாகவும், கனரக வாகனங்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீயாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுவரை டூவீலர்கள் மணிக்கு 50 கிமீ வேகம் வரை மட்டுமே செல்லலாம் என இருந்தது. இனி, மணிக்கு 80 கிமீ வரை செல்லலாம். விரைவில் செயல்பாட்டில் வர இருக்கும் குவாட்ரிசைக்கிள்கள் மணிக்கு 70 கிமீ வரை செல்லலாம்.

தற்போது செயல்பாட்டில் இருக்கும் வேக வரம்பு விதிகள் அனைத்தும் 1989-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டவை. அப்போது இந்தியாவில் சாலை வசதிகளும் குறைவு, வாகனங்களும் அதிக அளவில் இல்லை. அதனால், வாகனத்தைப் பொறுத்து அப்போது சாலை விதிகளை வடிவமைத்தார்கள். ஆனால், இப்போது சாலை வசதிகளும், வாகனங்களும் கூடிவிட்டதால், விதிகளை மாற்றியமைக்க முடிவெடுத்துள்ளார்கள்.

மேலும் அமலுக்கு வர இருக்கும் புதிய வேக வரம்பு விதிகளின்படி ஒரு பயணிகள் வாகனத்துக்குள் எத்தனை பேர் பயணிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வாகனத்தில் டிரைவரைத் தவிர, ஒன்பது பேர் பயணிக்க முடியுமென்றால், அந்த வாகனம் மணிக்கு 80 கிமீ வரை மட்டுமே செல்ல வேண்டும். ஆனால், 8 பேர் மட்டுமே பயணிக்க கூடிய வாகனமாக இருந்தால், மணிக்கு 100 கிமீ வரை செல்லலாம். 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அனைத்து கனரக வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக்ஸ் பொருத்தப்பட்டிருக்கவேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

03/08/2014

Largest National Highway : NH7

குடும்பத்தோடு சொந்த ஊருக்கு, சொந்த காரில் டிரைவ் செய்து கொண்டே போவது ஜாலியான அனுபவம்தான். ஆனால், பல சமயங்களில் வழியில் க...
05/07/2014

குடும்பத்தோடு சொந்த ஊருக்கு, சொந்த காரில் டிரைவ் செய்து கொண்டே போவது ஜாலியான அனுபவம்தான். ஆனால், பல சமயங்களில் வழியில் கண்டதையும் சாப்பிட்டுவிட்டு, ஜாலியான பயணத்தைப் பலரும் சொதப்பல் பயணமாக மாற்றிவிடுவது வாடிக்கையாகி விட்டது. காரில் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது என்பது பற்றி, விஜயா மருத்துவமனையின் சீனியர் டயட் கவுன்சிலர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தரும் டிப்ஸ் இதோ!

நீண்ட தூரப் பயணம் என்றாலே சிப்ஸ் பாக்கெட், கோலா, சாக்லேட் என அள்ளிப் போட்டுக் கொண்டு காரில் கிளம்புவதை முதலில் நிறுத்துங்கள். சிப்ஸ், கோலா, சாக்லேட் ஆகியவற்றைச் சாப்பிடும்போது, முதலில் உற்சாகம் தொற்றிக்கொள்வது போல இருக்கும். ஆனால், இவை அஜீரணக் கோளாறை ஏற்படுத்தி உடம்பைச் சோர்வாக்கிவிடும்.

'கணவர்தானே கார் ஓட்டுகிறார், அப்பாதானே கார் ஓட்டுகிறார்’ என அருகில் உட்காருபவர்கள் கண்டதையும் சாப்பிட்டுவிட்டு தூங்கி விடக் கூடாது. கார் ஓட்டுபவருடன் ஒருவர் பேசிக்கொண்டே வருவது மிக மிக அவசியம். காருக்குள் இருக்கும் எல்லோரும் தூங்கும்போது காரை ஓட்டுபவருக்கு தூக்கம் எளிதில் தொற்றிக்கொள்ளும். இது பெரிய ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.

காருக்குள் சின்ன ஃப்ரிஜ் அல்லது ஐஸ் கட்டிகள் நிரம்பிய கூலர் பாக்ஸை வைத்திருப்பது நல்லது. பழங்கள், ஜூஸ் ஆகியவற்றைக் கெட்டுப் போகாமல் நீண்ட நேரம் இதில் வைத்திருக்க முடியும்.

காரில் பயணம் செய்யும்போது சாக்லேட் சாப்பிடுவதை முழுவதுமாகத் தவிர்த்து விடுங்கள்.சாக்லேட்டில் அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு இருப்பதால், உடலை விரைவில் மந்தமாக்கி தூக்கத்தை வரவழைக்கும். மேலும், சாக்லேட்டுகள் காரின் டேஷ் போர்டு மற்றும் இருக்கைகளில் பட்டு காரையும் அசுத்தப்படுத்திவிடும்.

சிப்ஸ் சாப்பிடுவதால் பசி குறையாது. கலோரிகள் இதில் அதிகம் என்றாலும், ஃபைபர் இல்லை என்பதால் சீக்கிரத்தில் பசி எடுக்கும். சிப்ஸ் சாப்பிடுவதால் கலோரிகளும், உப்பும்தான் சேர்ந்து கொண்டே போகுமே தவிர, பசி குறையாது.

கோதுமை கலந்த சர்க்கரை இல்லாத ஃபைபர் பிஸ்கெட்டுகளை பயணத்தின்போது அதிகம் சாப்பிடுவது நல்லது. எனவே, சிப்ஸ் பாக்கெட்டுகளுக்குப் பதில் நிறைய பிஸ்கெட் பாக்கெட்டுகளை எப்போதும் காருக்குள் வைத்திருங்கள்!

வறுத்த வேர்க்கடலை, பாதாம், முந்திரிப் பருப்பு உள்ளிட்ட உலர் பழங்களை பயணத்தின்போது எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் ஊட்டச்சத்து அதிகம்; பசியும் அதிகம் எடுக்காது. அதேசமயம், வயிற்றைக் கெடுக்காது என்பதோடு சீக்கிரத்தில் ஜீரணமாகிவிடும். ஆனால், 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை மறக்காதீர்கள்.

வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு பழங்களைப் பயணத்தின்போது அதிகம் எடுத்துக்கொள்ளலாம். இதில் வைட்டமின்கள் அதிகம் இருக்கிறது என்பதோடு, உடலுக்குத் தேவையான தண்ணீரையும் இது கொடுக்கும். கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், விரைவில் ஜீரணமாகி விடும். பைபர் சத்தும் இதில் அதிகம்.

கோதுமை ப்ரெட், ஃப்ரூட் சாலட், காய்கறிகள் கலந்த சான்ட்விச் போன்றவற்றை இரவு நேரத்தின்போது சாப்பிடலாம். சான்ட்விச், பயணத்துக்கான சிறந்த உணவு!

கோலா குளிர்பானங்களுக்குப் பதில் ஆரஞ்சு ஜூஸ், லெமன் ஜூஸ் குடிக்கலாம். பயணத்தின்போது நீண்ட நேரம் காரில் உட்கார்ந்துகொண்டே இருப்பதால், உடலில் வெப்பம் அதிகரிக்கும். வெப்பத்தைத் தணிக்க ஃப்ரெஷ் ஜூஸ்கள்தான் சரியான வழி. அதேபோல், இளநீர் அதிகமாகக் குடிக்கலாம். டீ, காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் எனில், பயணத்தின்போது வெறும் பால் குடிப்பது நல்லது. டீ, காபி குடிப்பதைத் தவிர்க்கவே முடியாது என்பவர்கள், ஸ்ட்ராங்காக இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது! டீ, காபி அசிடிட்டியை ஏற்படுத்தும்.

பயணங்களின்போது காரமான உணவுகளை முழுக்கவே தவிர்த்துவிடுங்கள். சாலையோர ஃபாஸ்ட் ஃபுட், தாபாக்களில் கூடுமானவரை உணவு உண்ண வேண்டாம். இவை வயிற்றைக் கெடுப்பதோடு, ஜாலியான பயண அனுபவத்தையும் கெடுத்துவிடும். இரவு நேரங்களில் பரோட்டா, ஃப்ரைடு ரைஸ் போன்றவற்றுக்குப் பதில் இட்லி, இடியாப்பம் உள்ளிட்ட விரைவில் ஜீரணமாகும் உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

பஜ்ஜி, போண்டா, பக்கோடா ஆகிய உணவுகளைப் பயணத்தின்போது சாப்பிட வேண்டாம். நீண்ட தூரப் பயணங்களின்போது, வழக்கமாக சாப்பிடும் அளவைவிட கொஞ்சம் சாப்பிட்டாலும் சீக்கிரம் செரிக்கக் கூடிய, ஊட்டச்சத்து மிக்க தரமான உணவுகளை உட்கொள்வதே நல்லது.

உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்!

ஆக்ஸிலரேட்டர் மாட்டிக் கொண்டால்...ஆக்ஸிலரேட்டர் பெடலில் இருந்து நீங்கள் காலை எடுத்த பிறகும் கார் அதே வேகத்தில் சென்றாலோ,...
23/06/2014

ஆக்ஸிலரேட்டர் மாட்டிக் கொண்டால்...

ஆக்ஸிலரேட்டர் பெடலில் இருந்து நீங்கள் காலை எடுத்த பிறகும் கார் அதே வேகத்தில் சென்றாலோ, அல்லது இன்னும் வேகமாகச் சென்றாலோ ஆக்ஸிலரேட்டர் பெடல் ஸ்டக் ஆகிவிட்டது என்று அர்த்தம். கிளட்ச்சை அழுத்தி கியர்களை படிப்படியாகக் குறையுங்கள். ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார் என்றால், கியரை நியூட்ரலுக்குக் கொண்டு வாருங்கள். வீல்களை லாக் செய்யாமல், பிரேக்கை நன்றாக அழுத்துங்கள். அப்படியே சாலையின் ஓரத்துக்கு வந்து விடுங்கள். காரை நிறுத்திய பிறகு இன்ஜினை ஆஃப் செய்யுங்கள்.

செல்ஃப் ஸ்டார்ட் இருக்கிறதா?காலையில் முதல்தடவையாக பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது, கிக் ஸ்டார்ட் செய்வதுதான் சிறந்தது. ஏனென...
23/06/2014

செல்ஃப் ஸ்டார்ட் இருக்கிறதா?
காலையில் முதல்தடவையாக பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது, கிக் ஸ்டார்ட் செய்வதுதான் சிறந்தது. ஏனெனில், இரவு முழுதும் சும்மா நின்றிருந்த இன்ஜின் குளிர்ந்திருக்கும். அப்போது செல்ஃப் ஸ்டார்ட் செய்தால், உடனே ஸ்டார்ட் ஆகாது. அதனால், சிலமுறை கிக் செய்துவிட்டு செல்ஃப் பயன்படுத்தலாம் அல்லது கிக் ஸ்டார்ட்டையே பயன்படுத்தலாம். இதனால், பேட்டரி, செல்ஃப் மோட்டார் ஆயுள் நீடிக்கும். மேலும், செல்ஃப் ஸ்டார்ட்டரை ஒருமுறை பயன்படுத்தும்போது, பேட்டரியின் பெருமளவு சக்தி செலவாகிறது. அது மீண்டும் சார்ஜ் ஆவதற்கு, குறைந்தது 20 கி.மீ தூரமாவது பயணிக்க வேண்டும். அதனால், குறைவான தூரம் பயணிப்பவர்கள் அடிக்கடி செல்ஃப் ஸ்டார்ட் பயன்படுத்துவதில் கவனம் கொள்வது நல்லது.
அதேபோல், காலையில் ஸ்டார்ட் செய்த பிறகு, ஒருசில நிமிடங்களாவது ஆயில் இன்ஜின் முழுவதும் பரவ ஐடிலிங்கில் ஓட அனுமதியுங்கள். ஆக்ஸிலரேட்டரை முறுக்காதீர்கள். அப்படிச் செய்தால், இன்ஜின் பாதிக்கப்படும். கிக் ஸ்டார்ட் இல்லாத பைக்குகளில், சக்திவாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும்.

22/06/2014
நேரம், காலம், எங்கே, எப்போது என்று இல்லாமல் வாகன ஓட்டிகளின் எரிச்சலைத் தூண்டும் ஒரே விஷயம் 'பஞ்சர்.’ காரில் செல்பவர்களுக...
21/06/2014

நேரம், காலம், எங்கே, எப்போது என்று இல்லாமல் வாகன ஓட்டிகளின் எரிச்சலைத் தூண்டும் ஒரே விஷயம் 'பஞ்சர்.’ காரில் செல்பவர்களுக்கு உடனடி உதவியாக ஸ்டெப்னி இருக்கும். ஆனால், பைக் ஓட்டிகளின் நிலைதான் பரிதாபமானது. அவர்கள் எப்படியாவது பஞ்சர் கடையைத் தேடியே ஆக வேண்டும். இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக வந்ததுதான் 'ட்யூப்லெஸ்’ டயர். இது, பஞ்சராகி டயரில் காற்று குறைய ஆரம்பிக்கும்போது, டயரில் குத்தி உள்ள ஆணியை அகற்றாமலே 200 கி.மீ வரை பயணத்தைத் தொடர முடியும். பின்பு, நமக்கு வசதியான நேரத்தில், இடத்தில் ஆணியை அகற்றி ட்யூப்லெஸ் டயரை சரிசெய்து கொள்ளலாம். மேலும், ட்யூப்லெஸ் டயரில் நாமே பஞ்சர் போட்டுக்கொள்ள முடியும் என்பதுதான் விசேஷமே. அது எப்படி என்பதை விளக்குகிறார் கோவையைச் சேர்ந்த மெக்கானிக் வாசுதேவன்.

அதிவேகப்பிரியன் நான்,என் வாகனம் என்றும்,பிறர் வண்டியை முந்திச்செல்ல விட்டதில்லை,முன்செல்லும் வண்டியை முந்தாமலும் இருந்தத...
17/06/2014

அதிவேகப்பிரியன் நான்,
என் வாகனம் என்றும்,
பிறர் வண்டியை முந்திச்செல்ல விட்டதில்லை,
முன்செல்லும் வண்டியை முந்தாமலும் இருந்ததில்லை...

தலைக்கவசம் அணியமாட்டேன்,
என் அசுரப்பாய்ச்சலை பிறர் பார்க்கட்டும்,
என்று விரும்பிச்செய்வேன்...

இன்றென் காலை விடிந்ததும் அவ்வாறே!

காகமொன்றை ஒரு சரக்குந்து,
சருகாக்கிச் சென்றது..!
உச்சுக்கொட்டி நகர்ந்தேன்..

பாம்பொன்றை பேருந்து நசுக்கிச்சென்றது,
நகர்ந்தவாறே கடந்து வந்தேன்..

நாயொன்றை மகிழுந்து,
மரிக்கச்செய்தது,
அருகிலின்னோர் நாய், அழுதுகொண்டிருந்தது,
என் வேகம் குறையத்தொடங்கியது...

வண்டியை நிறுத்தினேன்,
என் நண்பனின் விபத்துச்செய்தி,
பதறிப்போனேன்,
கதறிவிட்டேன்,
அழுது நின்றேன்,

மீண்டும் தொடங்கியது என் பயணம்,
வேகமின்றி, என் கைகள் நடுங்கியவாறு!!!!

அதிவேகம் தவிர்ப்போம், தலைக்கவசம் அணிவோம். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்ப்போம்...

07/06/2014

தூத்துக்குடி 2ம் ரயில்வே கேட்
வரும் 8ம் தேதி ஒருநாள்
முழுவதும் மூடப்படுகிறது.
தூத்துக்குடியில் கடந்த
இரு வாரங்களுக்கு முன் எவ்வித
முன்னறிவிப்பும்
இன்றி 4வது ரயில்வே கேட்
காலை முதல் மாலை வரையில்
மூடப்பட்டது. இதனால்
பொதுமக்கள், வாகன ஓட்டிகள்
கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில்
தற்போது பராமரிப்பு பணிக்காக
தூத்துக்குடி நகரின்
மையப்பகுதியில் உள்ள
2வது ரயில்வே கேட்
மூடப்படுகிறது. வரும் 8ம்
தேதி மேலூர் ரயில் நிலையம்
அருகே உள்ள
2வது ரயில்வே கேட் பகுதியில்
உள்ள ரயில்வே ட்ராக்
உள்ளிட்டவற்றில்
பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.
இதனால் அன்று காலை 8
மணி முதல் மாலை 6
மணி வரையில் அந்த
ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ரயில்வே நிர்வாகம்
சார்பில் கேட்டில் சிறிய
அறிவிப்பு பலகைகள்
வைக்கப்பட்டுள்ளன. எப்போதும்
பலத்த போக்குவரத்து நெரிசல்
மிகுந்த அப்பகுதியில் மிகவும்
சிறிய அளவில் இந்த
அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள
து. இது பலரது கண்ணில் படும்
அளவிற்கு இல்லை. இது போன்ற
முக்கிய அறிவிப்புகள்
சற்றே பெரிய அளவில்
வைக்கப்படவேண்டும்
என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள
்ளது.

07/06/2014

மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டாதீர்...
உயிர் விலைமதிப்பற்றது...

"தேவனே நான் உமதண்டையில்இன்னும் நெருங்கி சேர்வதேஎன் ஆவல் பூமியில்".என்ன அருமையான பாடல் இது. ஏனோ இதை இப்போதெல்லாம் துக்கவீ...
06/06/2014

"தேவனே நான் உமதண்டையில்
இன்னும் நெருங்கி சேர்வதே
என் ஆவல் பூமியில்".
என்ன அருமையான பாடல் இது. ஏனோ இதை இப்போதெல்லாம் துக்கவீட்டில் பாடமட்டுமே என‌ ஒதுக்கிவிட்டார்கள். ஆனால் அதில் இருக்கும் கருத்தாழ‌ங்களைப் பார்த்தால் அது எந்த‌ உண்மை கிறிஸ்தவனையும் பரவசமடையச் செய்வதாக இருக்கும். இப்பாடலை எழுதியது சந்தியாகு ஐயர் அவர்கள். இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் வாழ்ந்தவர்கள். இந்து சமுதாயத்தில் பிறந்தாலும் தன் வாலிப வயதிலே, தன் இரு சகோதரரோடும், தந்தையோடும் கூட‌ இயேசு கிறிஸ்துவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்.பிற்காலத்தில் கணிதப் பேராசிரியராக பணிபுரிந்து, பின்னர் மதுரையில் திருச்சபைப் போதகராக, முழு நேரப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.விந்தைக் கிறிஸ்தேசு நாதா, தாசரே இத்தரணியை அன்பாய் பாடல்கள் எல்லாம் இவரிடமிருந்து வந்தவையே. சந்தியாகு ஐயர் அவர்கள் 1929-ம் ஆண்டு தமது 60-வது வயதில் மரித்தார். விந்தைக் கிறிஸ்தேசுவின் சிலுவையின் மேன்மையைப் பாடிய சந்தியாகுவின் கல்லறையில் 10 அடி உயரச் சிலுவையை நினைவுச்சின்னமாக வத்தலக்குண்டில் எழுப்பியிருக்கின்றனர். அவரது அடக்க ஆராதனையின் சிறப்பென்னவெனில், அவர் இயற்றிய பாடல்களே அந்த ஆராதனையில் பாடப்பட்டனவாம். கர்த்தருக்கே மகிமை

04/06/2014

Like this

You can do...

காரின் பெட்ரோல் டேங்கை முழுமையாக நிரப்பினால் வெடிக்குமா?தற்போது, சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப்&ல் ஒரு பகீர் செய்தி உ...
02/06/2014

காரின் பெட்ரோல் டேங்கை முழுமையாக நிரப்பினால் வெடிக்குமா?

தற்போது, சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப்&ல் ஒரு பகீர் செய்தி உலா வருகிறது. அது, ‘அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பம் கடுமையாக இருக்கும் என்பதால், கார்களுக்கு எரிபொருள் நிரப்புபவர்கள் டேங்க்கை முழுவதுமாக நிரப்ப வேண்டாம். அப்படிச் செய்தால், டேங்க் வெடித்து பெரும் விபத்து ஏற்படும் ஆபத்து இருக்கிறது. இதை பிரபல எண்ணை நிறுவனமே செய்திக் குறிப்பு அனுப்பிச் சொல்லியிருக்கிறது’ என்று அந்த செய்தி திகில் கிளப்புகிறது. இது உண்மையா?

சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, இந்தச் செய்தி தொடர்பாக விசாரித்தோம். ‘‘இப்படி ஒரு செய்தியை எந்த எண்ணை நிறுவனமும் வெளியிடவில்லை. இது முழுக்க முழுக்க பொய்யான தகவல்’’ என்று மறுத்தார்கள்.

இது பற்றி மேலும் சில தொழில்நுட்ப வல்லுநர்களை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘பொதுவாக, பெட்ரோல் நிரப்புபவர்களில் சிலர், டேங்கின் கழுத்துவரை நிரப்புவார்கள். சிலர் காரை ஆட்டி ஆட்டி நிரப்புபவர்களும் உண்டு. இப்படி டேங்க்கில் கொஞ்சம்கூட வெற்றிடம் இல்லாமல் பெட்ரோல் நிரப்புவது தவறு. ஏனெனில், பெட்ரோல் சுலபமாக ஆவியாகும் என்பதுடன் விரிவடையும் தன்மை கொண்டது. மேலும், டேங்க்கில் சிறிதளவு வெற்றிடம் இருந்தால்தான் இன்ஜின் பகுதிக்கு பெட்ரோல் சுலபமாகச் செல்வதுடன் இன்ஜின் சுமூகமாக இயங்குவதற்கு உதவியாக இருக்கும். முழுமையாக நிரப்பும்போது, இன்ஜின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவதோடு, சீரான இயக்கத்துக்கு குந்தகம் ஏற்படும்.

அதேபோல், இரவு அல்லது அதிகாலை நேரம் எரிபொருள் நிரப்ப சரியான சமயம். வெப்பநிலை குறைவாக இருக்கும் இந்தச் சமயத்தில் எரிபொருள் நிரப்பும்போது, எரிபொருள் அடர்த்தியாக இருக்கும். இதனால், மைலேஜ் கனிசமாக அதிகரிக்கும். மற்றபடி முழு டேங்க்வரை எரிபொருள் நிரப்பினால் விபத்து நேரிடும் என்பதெல்லாம் கட்டுக்கதை’’ என்றனர்.

02/06/2014

You can do...

10/05/2014

ஒரு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரின் பதிவு.

தேர்வு முடிவு எதுவாயினும் குழந்தைகளை ஒரு புன்னகையோடு அரவணையுங்கள்.

நல்ல மதிப்பெண்களோடு வரும் குழந்தையை " உம் " மென்று அணுகாதீர்கள். " உன்னைத் தவிர வேறு யாருக்கு இது சாத்தியப் படுமென்று? " பொய்யாகவேனும் கொண்டாடுங்கள்.
ஒருக்கால் குறைவாய் பெற்றுவிட்டான் எனில் கோபப்பட வோண்டாம்.
வெறும் 575 மட்டுமே பெற்ற என்னையே என் அப்பாவும் அம்மாவும் கொண்டாடினார்கள். நான் என்ன குறைந்தா போய்விட்டேன். ஒன்று தெரியுமா?,
575 எடுத்த நான் இன்று ஒரு மேல்நிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியன். 923 எடுத்த என் வகுப்புத் தோழன் இப்போது ஒரு பள்ளியில் ரெக்கார்டு கிளார்க்.
ஒன்றும் இல்லை மதிப்பெண்களில் என்பதை உணருங்கள். குழந்தையைக் கொண்டாடி உற்சாகப் படுத்துங்கள். பெரிதாய் வருவான்.
தேர்வில் தோற்றுப்போன என் வகுப்புத் தோழன் ஒருவன் இன்று முப்பது பேர் பணியாற்றக்கூடிய நிறுவனத்தின் முதலாளி.
ஒருக்கால் பிள்ளை தோற்றே போயிருப்பின் அதிக அன்போடு " விடுப்பா. இப்ப பாஸ் பண்ணினவன் எல்லாம் என்ன பெரிய மேதையா? பார்த்துககலாம் வா" என்று உற்சாகப் படுத்துங்கள். கூடுமான வரைக்கும் கூடவே இருங்கள்.
இது போனால் ஜூனில்,அக்டோபரில், மார்ச்சில் என்று வாய்ப்புகள் உண்டு. குழந்தை போனால்?

முடிவு எதுவாயினும் குழந்தைகளை அன்போடும் புன்னகையோடும் வாரிக் கொள்வோம்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Durai Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Durai Travels:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share