10/05/2024
காளையார்கோவில் பகுதியில் தூய்மை காவலர்களாக பணிபுரியும் சுப்பையா மற்றும் அவரது மனைவி பஞ்சவர்ணம் இன்று (09.05.2024) காலை அவர்களுக்கென்று ஒதுக்க பட்ட பகுதியில் குப்பைகளை சேகரித்துவிட்டு அதனை குப்பை கிடங்கில் கொட்டிவிட்டு வரும்போது அந்த குப்பை பேட்டரி வண்டி கவிழ்ந்து விபத்தானது..
அந்த ரிப்பேர் ஆன குப்பை வண்டி பஞ்சவர்ணத்தின் தலையில் விழுந்தது.. அதில் அவர் மிகவும் பலத்த காயம் அடைந்துள்ளார்.. கண்ணில் கம்பி குத்தப்பட்டு கண்ணில் இருந்து ரத்தம் வந்த வண்ணம் இருந்தது. மேலும் அவரது காதில் இருந்து ரத்தமும், மூக்கில் இருந்து ரத்தமும் வந்தவாறு இருந்தது..
அவரை காளையார்கோவில் GH கொண்டு சென்று முதலுதவி செய்யப்பட்டது.. பிறகு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தோம்..
மக்களுக்காக உழைத்து வரும் இது போன்ற துப்புரவு பணியாளர்களுக்கு அரசு சார்பில் எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்ட்டர் தலையிட்டு அவர்களுக்கு உரிய உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தூய்மை பணியாளர்களின் அனைத்து குப்பை வண்டிகளையும் சரி செய்து தருமாறு சம்மந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட கேட்டுக்கொள்கிறோம். இது போன்று அடுத்து எந்த ஒரு தூய்மை பணியாளர்களுக்கும் நடக்காமல் இருக்கவும் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் விதத்தில் அவர்களுக்கான அனைத்து பாதுகாப்பையும் உறுதி செய்திட கேட்டுக்கொள்கிறோம்..
இப்படிக்கு,
V. கண்ணன்,
தூய்மை பணியாளரின் மகன்,
காளையார்கோவில்,
செல் :9042155321.