MahaLakshmi Tour's & Travel's

MahaLakshmi Tour's & Travel's 96006 88500 � Choice is yours
Service is ours �

MahaLakshmi Tour's & Travel's ℕ𝕖𝕨 𝔼𝕟𝕋𝕣𝕐 𝔻ℤ𝕚ℝ𝕖 ℙ𝕖𝕋ℝ𝕠𝕃
14/04/2024

MahaLakshmi Tour's & Travel's
ℕ𝕖𝕨 𝔼𝕟𝕋𝕣𝕐 𝔻ℤ𝕚ℝ𝕖 ℙ𝕖𝕋ℝ𝕠𝕃

ஐயணை காண இரண்டாம் பயணம்ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா      👉 👈          MahaLakshmi Tour's & Travel's               MahaLaksh...
09/01/2024

ஐயணை காண இரண்டாம் பயணம்
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா


👉 👈
MahaLakshmi Tour's & Travel's
MahaLakshmi Travel's

👉 Any Enquiry & Bookings Plz contact 👈

https://maps.app.goo.gl/vV3ygr6KnW4Bxpcw6

🅥︎🅔︎🅛︎🅢︎🅐︎🅜︎🅨︎ 🅐︎🅢︎🅒︎
9️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣ 5️⃣ 0️⃣ 8️⃣ 7️⃣ 4️⃣ 2️⃣
9️⃣ 6️⃣ 0️⃣ 0️⃣ 6️⃣ 8️⃣ 8️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣

👨‍👩‍👧‍👧Family Tours
🏫School Tours
🏢College Tours
🏭Industrial Visit
⛰Devotional Tour
🏰Corporate Tours

09/01/2024

கும்கி இன்றைய ஆன்மீகப் பயணம்
ஐந்து மலை ஐயனை காண
சபரிமலை

ஐயனை காண இரண்டாம் பயணம்
👉 👈
MahaLakshmi Tour's & Travel's

👉 Any Enquiry & Bookings Plz contact 👈

https://maps.app.goo.gl/vV3ygr6KnW4Bxpcw6

🅥︎🅔︎🅛︎🅢︎🅐︎🅜︎🅨︎ 🅐︎🅢︎🅒︎
9️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣ 5️⃣ 0️⃣ 8️⃣ 7️⃣ 4️⃣ 2️⃣
9️⃣ 6️⃣ 0️⃣ 0️⃣ 6️⃣ 8️⃣ 8️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣

👨‍👩‍👧‍👧Family Tours
🏫School Tours
🏢College Tours
🏭Industrial Visit
⛰Devotional Tour
🏰Corporate Tours

வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மகாலட்சுமி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் சார்பாக இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்...
01/01/2024

வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மகாலட்சுமி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் சார்பாக
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஐயணை காண முதல் பயணம்ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா         👉 👈               MahaLakshmi Tour's & Travel's          👉 Any Enq...
23/12/2023

ஐயணை காண முதல் பயணம்
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா


👉 👈
MahaLakshmi Tour's & Travel's

👉 Any Enquiry & Bookings Plz contact 👈

https://maps.app.goo.gl/vV3ygr6KnW4Bxpcw6

🅥︎🅔︎🅛︎🅢︎🅐︎🅜︎🅨︎ 🅐︎🅢︎🅒︎
9️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣ 5️⃣ 0️⃣ 8️⃣ 7️⃣ 4️⃣ 2️⃣
9️⃣ 6️⃣ 0️⃣ 0️⃣ 6️⃣ 8️⃣ 8️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣

👨‍👩‍👧‍👧Family Tours
🏫School Tours
🏢College Tours
🏭Industrial Visit
⛰Devotional Tour
🏰Corporate Tours

23/12/2023

இந்த ஆண்டின் முதல் சபரிமலை பயணம்


👉 👈
MahaLakshmi Tour's & Travel's

👉 Any Enquiry & Bookings Plz contact 👈

https://maps.app.goo.gl/vV3ygr6KnW4Bxpcw6

🅥︎🅔︎🅛︎🅢︎🅐︎🅜︎🅨︎ 🅐︎🅢︎🅒︎
9️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣ 5️⃣ 0️⃣ 8️⃣ 7️⃣ 4️⃣ 2️⃣
9️⃣ 6️⃣ 0️⃣ 0️⃣ 6️⃣ 8️⃣ 8️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣

👨‍👩‍👧‍👧Family Tours
🏫School Tours
🏢College Tours
🏭Industrial Visit
⛰Devotional Tour
🏰Corporate Tours

வள்ளி குடைவரை கோவில்!அமைவிடம் - திருச்செந்தூர் கோயில்-வள்ளி குகைஊர் - திருச்செந்தூர்வட்டம் - திருச்செந்தூர்மாவட்டம் - தூ...
20/12/2023

வள்ளி குடைவரை கோவில்!

அமைவிடம் - திருச்செந்தூர்

கோயில்-வள்ளி குகை

ஊர் - திருச்செந்தூர்

வட்டம் - திருச்செந்தூர்

மாவட்டம் - தூத்துக்குடி

வகை - குடைவரை

தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் - கி.பி.8-ஆம் நூற்றாண்டு

அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் - திருச்செந்தூர், தூத்துக்குடி துறைமுகம், கொற்கை அகழாய்விடம்

பாதுகாக்கும் நிறுவனம் - மத்தியத் தொல்லியல் துறை!
❤️
விளக்கம் - தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரின் கடற்கரையையொட்டி அமைந்துள்ள மணற்பாறையில் சிறியதொரு குடைவரைக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

😍இக்குடைவரைக் கோயிலையொட்டி முன்புறம் சமீபகாலத்திய மண்டபம் முதலான பகுதிகள் குடைவரையின் அழகினை மறைத்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. குடைவரையின் உள்ளே செல்ல குறுகிய நுழைவாயிலே அமைக்கப்பட்டுள்ளது. குடைவரையின் உள்ளே சிறிய கருவறைகள் உள்ளன. குடைவரையில் முதலாம் வரகுணனின் கல்வெட்டு காணப்படுகிறது.

இக்குடைவரையின் கருவறையைச் சுற்றிவர வலம் வரும் பாதை குறுகலாக குடையப்பட்டுள்ளது. "சாந்தர” வகை குடைவரையாக இது அமைந்துள்ளது. மணற்கல்லினால் குடையப்பட்டுள்ளதால் சிற்பங்கள் அழிந்துள்ளன. இதுபோன்ற குடைவரை கொற்கைக்கு அருகில் "மணப்பாடு " என்ற இடத்திலும் உள்ளது. இக்குடைவரையும் சிதைவுற்ற நிலையில் உள்ளது!

❤️
சுருக்கம் - கோயிலின் வடக்குப்புறத்தில், அமைந்துள்ளது வள்ளிக் குகை. இது குன்றைக் குடைந்து உருவாக்கப்பட்ட ஆலயம். முன் பகுதியில் 16 கால் மண்டபம் உள்ளது. வட பக்கமுள்ள சுவரை, சூரசம்ஹார நிகழ்ச்சி ஓவியங்களாகச் சித்திரிக்கின்றன.

வள்ளியம்மையின் தந்தையான நம்பிராஜனும் அவனது படைவீரர்களும் முருகப்பெருமானுடன் போரிட வந்தபோது, வள்ளியம்மை, பயந்து ஒளிந்து கொண்டதுதான் இந்த குகை என்கிறது தலபுராணம். இதனை ‘வள்ளி ஒளிந்த வளிநாடு’ என்றும் குறிப்பிடுவார்கள்.

குகைக்குள் சென்று மாலை 6 மணிக்குள் வழிபடலாம். குழந்தை வரம் கோரி மலைமீது தொட்டில் கட்டி வணங்கும் பக்தர்கள் ஏராளம். இங்கும் ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது.

ஆறுபடை வீட்டில் இரண்டாம்  படை வீடு திருச்செந்தூர். கோபுர தரிசனம்கோடி புண்ணியம்.....°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°திருச்செ...
13/11/2023

ஆறுபடை வீட்டில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர்.

கோபுர தரிசனம்
கோடி புண்ணியம்.....

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருச்செந்தூரில் ஒரு தின உபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்ல
திருச்செந்தூர் முருகனை நாம் தரிசிக்க செல் லும் பொழுது இறங்கி தான் செல்ல வேண்டும் தரிசித்துவிட்டு வரும்பொழுது ஏறித்தான் வர வேண்டும்.
இதுஎதை குறிக்கிறது என்றால் நாம் கந்தனை தரிசிக்க எவ்வளவு இறங்கி சென்றாலும் தரிசித்த பின்பு நம் வாழ்க்கையி ல் என்றும் ஏற்றம்தான் இருக்கும் என்று உணர்த்துகிறது.
◆திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி, சண் முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். சுப்பிரம ணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.
◆திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார் இதனால் இத்தலத்துக்கு வீரபாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.
◆திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரபாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவ ருக்கு பூஜை நடத்தப்படுகிறது.
◆மூலவர் சுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படு கிற து. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.
◆மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங் கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்ப றை என்றும் ஒரு பெயர் உண்டு.
◆திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்பு ள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.
◆திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களி ல் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.
◆திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.
◆திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
◆திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரம் ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.
◆மூலவருக்கு பக்தர்கள் தங்க அங்கி அணிவி த்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.
◆திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.
◆திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று சுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
◆நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.
◆திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர் அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.
◆தமிழகத்தில் முதன்முதலில் நாகரீகம் தோன் றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று.
◆முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்க ள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
◆திருச்செந்தூர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.
◆இத்திருத்தலம் மன்னார் வளைகுடா கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திரு ப்பதால், அலைவாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப் பட்டு, ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப் படுகின்றது.
◆இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண் டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநா யகரை வணங்கிய பின்னர்தான் முருகப் பெரு மானை வணங்கச் செல்ல வேண்டும்.
◆இத்திருக்கோயிலில் பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது.
◆முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமா க மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் கடற்கரை ஓரமாக உள்ள மாப் பாடு என்ற இடம் ஆகும். தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.
◆திருச்செந்தூர் முற்காலத்தில் முருகன் தீம்பு னல் அடைவாய் என்று தொல்காப்பியத்திலும்
வெண்டலைப் புணரி யலைக் குஞ் செந்தில் நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறை என்று புறநானூற்றிலும், திருமணி விளக்கின லை வாய்ச்செரு மிகுசேஏய் என்று அகநானூ ற்றிலும், உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய் என்று திருமுருகாற்றுப்படையிலு ம், சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண் குன்றும் என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது, அதுமட்டுமின்றி வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேரல், செந்தி ல், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம் இன்றும் கூட அழைக்கப்பட்டது.
◆முருகனின் அறுபடை வீடுகளில் இது 2- வது படை வீடு எனப்படுகிறது.
◆முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை சம்ஹாரம் செய்வதுதான். திருச்செந்தூரில் தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும், அதுமட்டுமின்றி என்றும் நம க்கு ஞானத்தை அருளி தீயவைகளிடமிருந்து நம்மை காப்பாற்றுகிறார்.
◆முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.
◆முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத்துக்கு செந்தூர் என்ற பெயர் ஏற்பட்டது.
◆திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவப்கொழுந்தீசுவரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று கருதுகிறார்கள்.
◆கிறிஸ்தவ மீனவர்கள் திருச்செந்தூர் முரு னை உறவுமுறை சொல்லி அழைக்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் திருப்பணிகளுக்கு காயல்பட்டினத்தில் வசித்த சீதக்காதி எனும் வள்ளல் நன்கொடை அளித்துள்ளார். எனவே திருச்செந்தூர் முருகன் ஆலயம் சமய ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.
◆அருணகிரி நாதர் தன் பாடல்களில் பல இடங்களில் திருச்செந்தூரை குறிப்பிட்டுள்ளார். அவர் திருச்செந்தூரை மகா புனிதம் தங்கும் செந்திதூர் என்று போற்றியுள்ளார்.
◆திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்தவாசல் திறக்கப்படும்
◆திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.
◆குமரகுருபரர், பகழிக் கூத்தர், ஆதி சங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருள் பெற்றனர்.
◆முருகன், மால், ரங்கநாதப் பெருமாள் ஆகிய சைவ, வைணவ மூர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன.
◆சண்முகருக்கு ஆறுமுக நயினார் என்றும் பெயர் உள்ளது. திருச்செந்தூர் தாலுகா பகுதி யில் வாழும் பலருக்கு நயினார் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணலாம். இசுலாமிய ரும் நயினார் எனும் பெயர் சூட்டியுள்ளனர்.
◆வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
◆மூலவர் தவ கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.
◆முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பேரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகிய ன இடம் பெறுகின்றன.
◆உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்கு வார்கள்.
◆இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.
◆சண்முகருக்கு ஆண்டுக்கு 36 திருமுழுக்கு மட்டுமே நடைபெறுகிறது.
சித்திரை, ஐப்பசி, தை - 3
ஆடி, தை அமாவாசை - 2
ஆவணி, மாசித் திருவிழா - 10
ஐப்பசி, பங்குனி திருக்கல்யாணம் - 2
மாத விசாகம் - 12
ஆனி தை வருடாபிஷேகம் - 3
தீபாவளி, மகாசிவராத்திரி - 4
மொத்தம் 36
◆திருச்செந்தூர் முருகன் கோவிலின் ஆண்டு வருமானம் தற்போது சுமார் ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளது.
◆இத்தலத்தில் கோவில் வெளிபிரகாரங்களில் தூண்களில் கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்டு ள்ளது. அதுபோல உள்பிரகாரங்களில் தல வரலாற்றை கூறும் வரை படங்களை அமைத்துள்ளனர்.
◆திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்த தும் மணி ஒலிக்கப்பட்ட பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் சாப்பிடுவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 250 ஆண்டு பழமையான, அந்த 100 கிலோ எடை கொண்ட அந்த பிரமாண்ட மணி தற்போது ராஜகோபுரம் 9-ம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.
◆சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். அதை உணர்த்து வகையில் இன்றும் மூலவர் சிலை யின் வலது கையில் தாமரை மலர் உள்ளது. முதல் 6 நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் நடைபெறும். 7-ம் நாள் முருகன்-தெய்வானை திருமணம் நடைபெறும். அதன் பிறகு 5 நாட்கள் கல்யாண ஊஞ்சல் சேவை நடைபெறும்.
◆திருச்செந்தூரில் கருவறைக்கு எதிரில் இரண்டு மயில்கள் மற்றும் ஒரு நந்தி இருக்கின்றன அது ஏன் தெரியுமா? முருகனுக்கு ஏற்கனவே ஒரு மயில் வாகனமாக இருந்து வருகிறது. பின்னர் சூரனைப்பிளந்தும், ஒருபகுதி மயிலா கவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் ஆனதல்லவா? சூரசம்ஹாரம் முடிந்ததும், ஏற்கனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து செந்தூரில் இரண்டு மயில்களாக நின்றுவிட்டன. சூரசம்ஹாரத்திற்கு முன்புவரை இந்திரனே முருகனுக்கு மயில் வாகனமாக இருந்தான். முருகன் சூரனை வென்றபின் இந்திரனுக்கு தேவலோக தலைமை பதவியை கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தன் வாகனமாகக் கொண்டார். பஞ்சலிங்ககளை வைத்து முருகன் பூஜை செய்யும் கோலத்தில் சிவனுடன் இருக்கிறார். எனவே, சிவனுக்குரிய நந்தி, மயில்களுடன் சேர்ந்து கருவறைக்கு எதிரே இருக்கிறது.
◆ஆவணி,மாசி திருவிழாவின்போது முருகப் பெருமான், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.
◆திருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு ஒரு பாத்திரத்தில் பால் அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு கங்கை பூஜை என்று பெயர்.
◆மூலவருக்கு போற்றிமார், சண்முகருக்கு திரிசுதந்திரர், திருமாலுக்குத் வைணவர்கள், தனித்தனியே 3 இடங்களில் நைவேத்தியம் தயாரிக்கின்றனர்.
◆கோவில் திருப்பணி செய்த துறவிகளில் காசி சுவாமி கி.பி. 1882-ல் வசந்த மண்டபம் கட்டினார். மவுன சாமி 1897-ல் மண்டபத்தை கட்டி முடித்தார். வள்ளிநாயக சுவாமி - கிரிப்பி ரகாரத்துக்கு தகரக் கொட்டகை அமைத்தார். ஆறுமுக சுவாமி - கோவிலுக்குள் கருங்கல் தூண்கள் அமைத்தார். தேசியமூர்த்தி சுவாமி - ராஜகோபுரத்தை கட்டினார்.
◆திருச்செந்தூர் கோவில் தங்க தேரில் அறுங் கோண வடிவில் அறுபடை வீட்டு முருகன் சிலைகள் உள்ளன.
◆சஷ்டித் தகடுகளில் எழுதப்பட்ட மந்திரம் ஓம் சரவணபவ என்பதாகும்.
◆திருச்செந்தூர் தலத்தில் பழங்காலத்தில் பல மணற் குன்றுகள் முருகனது சிறிய சந்நிதி யைச் சூழ்ந்திருக்க வேண்டும். அவற்றுள் பெரிய மணற்குன்று ஒன்றைக் கந்த மாதன பர்வதம் என்ற பெயரால் குறித்திருக்க வேண்டும். நாளடைவில் மணற் குன்றுகள் தேய்ந்து தேய்ந்து பிராகாரங்கள் ஆகியிருக்க வேண்டும். வடக்குப் பக்கத்தில் மணற்குன்றே ஒரு மதிலாக அமைந்திருப்பதை இப்போதும் காணலாம். இம்மணற்குன்றின் தாழ்வரையி ல் தான் ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார்.
◆கந்த சஷ்டி என்றால், கந்தவேளுக்குரிய ஆறாவது நாள் என்று பொருள்.
◆மாறாத உடல் அழகும் மாறாத உள்ளத்தழகும் என்றும் இளமை நிலையும்கொண்டருள்பவன் திருமுருகன்.
◆சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஐந்து நிறங்கள் கொண்ட வண்ண மயில் ஏறி வருபவன் திருமுருகன்.
◆யோகம், போகம், வேகம் என மூவகை வடிவங்களைக் கொண்டருள்பவன் திருமுருகன்.
◆வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே
செந்தூர் நகர் சேவகா என்று திருநீர்
அணிவார்க்கு வராதே வினை.
(நக்கீரர் பாடிய திருச்செந்தூர் விபூதியை பற்றிய வெண்பா).
◆திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை. இச்சரிதத்தை எழுதுவோரும் படிப்போரும் கேட்போரும் நீங்காத செல்வங்களைப் பெற்று வாழ்ந்திருப்பர் என்று சூதம முனிவர் உரைத்த ருளி உள்ளார்.
கருணைக்கடலே கந்தா சரணம்...
முருகா சரணம்... ஷண்முகா சரணம்...

❤❤❤❤❤❤❤❤❤

என்கடன் பணிசெய்து கிடப்பதே முருகா

மகாலட்சுமி டூர்ஸ் & டிராவல்ஸ்
அருப்புக்கோட்டை
9️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣ 5️⃣ 0️⃣ 8️⃣ 7️⃣ 4️⃣ 2️⃣
9️⃣ 6️⃣ 0️⃣ 0️⃣ 6️⃣ 8️⃣ 8️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣

வாடிக்கையாளர்கள் மற்றும்நண்பர்கள் அனைவருக்கும்மகாலட்சுமி டூர்ஸ் அன் டிராவல்ஸ்சார்பாக இனிய தீபாவளி திருநாள்நல்வாழ்த்துகளை...
12/11/2023

வாடிக்கையாளர்கள் மற்றும்
நண்பர்கள் அனைவருக்கும்
மகாலட்சுமி டூர்ஸ் அன் டிராவல்ஸ்
சார்பாக இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்

https://maps.app.goo.gl/DNG5ta64kmPhFPja8

For Enquiry & Bookings Plz contact
9️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣ 5️⃣ 0️⃣ 8️⃣ 7️⃣ 4️⃣ 2️⃣
9️⃣ 6️⃣ 0️⃣ 0️⃣ 6️⃣ 8️⃣ 8️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣

05/11/2023

சபரிமலை செல்லும் நண்பர்கள் கவனத்திற்கு

   👉  👈    Any Enquiry & Bookings Plz contact      MahaLakshmi Tour's & Travel's https://maps.app.goo.gl/hdALMckTmf2b942...
03/11/2023


👉 👈
Any Enquiry & Bookings Plz contact
MahaLakshmi Tour's & Travel's
https://maps.app.goo.gl/hdALMckTmf2b942o9
9️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣ 5️⃣ 0️⃣ 8️⃣ 7️⃣ 4️⃣ 2️⃣
9️⃣ 6️⃣ 0️⃣ 0️⃣ 6️⃣ 8️⃣ 8️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣

🦣   🦣        👉 👈   MahaLakshmi Travel's      Lakshmi VelSamy              MahaLakshmi Tour's & Travel's        👉 Any Enq...
30/09/2023

🦣 🦣
👉 👈
MahaLakshmi Travel's Lakshmi VelSamy
MahaLakshmi Tour's & Travel's

👉 Any Enquiry & Bookings Plz contact 👈

https://maps.app.goo.gl/vV3ygr6KnW4Bxpcw6

Velsamy Asc
9️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣ 5️⃣ 0️⃣ 8️⃣ 7️⃣ 4️⃣ 2️⃣
9️⃣ 6️⃣ 0️⃣ 0️⃣ 6️⃣ 8️⃣ 8️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣

👨‍👩‍👧‍👧Family Tours
🏫School Tours
🏢College Tours
🏭Industrial Visit
⛰Devotional Tour
🏰Corporate Tours

முருகன் ஆலயங்கள் மாவட்ட வாரியாக !..*🔯 அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், கந்தக்கோட்டம், சென்னை**🔯 அருள்மிகு வடபழநி ஆண்டவ...
27/09/2023

முருகன் ஆலயங்கள் மாவட்ட வாரியாக !..

*🔯 அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், கந்தக்கோட்டம், சென்னை*

*🔯 அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், குமரன்குன்றம், சென்னை*

*🔯 அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், கந்தாஸ்ரமம், சென்னை*

*🔯 அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில், மடிப்பாக்கம், சென்னை*

*🔯 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பொள்ளாச்சி, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில், ஊதியூர், கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு முருகன் திருக்கோயில், வேல்கோட்டம், கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில், குமரன் கோட்டம், கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில், அனுவாவி, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில், கிணத்துக்கடவு, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில், இரும்பறை, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு வேதாயுத சுவாமி திருக்கோயில், செஞ்சேரி, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோயில், சரவணம்பட்டி, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோயில், கிணத்துக்கடவு, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மருதமலை, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், குமாரசாமி பேட்டை, தர்மபுரி*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருமலைக்கேணி, திண்டுக்கல்*

*🔯 அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில், பழநி, திண்டுக்கல்*

*🔯 அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், தாண்டிக்குடி, திண்டுக்கல்*

*🔯 அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில், கதித்த மலை, ஈரோடு*

*🔯 அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோபி, ஈரோடு*

*🔯 அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில், திண்டல்மலை, ஈரோடு*

*🔯 அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், சென்னிமலை, ஈரோடு*

*🔯 அருள்மிகு முத்துவேலாயுத சுவாமி திருக்கோயில், மலையப்பப்பாளையம், ஈரோடு*

*🔯 அருள்மிகு பாலதண்டாயுத பாணி திருக்கோயில், கொருமடுவு, ஈரோடு,*

*🔯 அருள்மிகுமுருகன் திருக்கோயில்,வட்டமலை, காங்கயம் திருப்பூர் மாவட்டம்*

*🔯 அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில், உத்திரமேரூர், காஞ்சிபுரம்*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வல்லக்கோட்டை, காஞ்சிபுரம்*

*🔯 அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர், காஞ்சிபுரம்*

*🔯 அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில், காஞ்சிபுரம்,*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குன்றத்தூர், காஞ்சிபுரம்*

*🔯 அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில், குமார கோயில், கன்னியாகுமரி*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், மருங்கூர், கன்னியாகுமரி*

*🔯 அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், வேலாயுதம்பாளையம், கரூர்*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், வெண்ணெய் மலை, கரூர்*

*🔯 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை*

*🔯 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புத்தூர், உசிலம்பட்டி, மதுரை*

*🔯 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சோலைமலை, மதுரை*

*🔯 அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், நேதாஜி ரோடு, மதுரை*

*🔯 அருள்மிகு குமரன் திருக்கோயில், நாகப்பட்டினம்*

*🔯 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பெரம்பூர், நாகப்பட்டினம்*

*🔯 அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில், எட்டுக்குடி, நாகப்பட்டினம்*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மோகனூர், நாமக்கல்*

*🔯 அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில், பேளுக்குறிச்சி, நாமக்கல்*

*🔯 அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், குருசாமிபாளையம், நாமக்கல்*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், கபிலர்மலை, நாமக்கல்*

*🔯 அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், அலவாய்ப்பட்டி, நாமக்கல்*

*🔯 அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், செட்டிகுளம், பெரம்பலூர்*

*🔯 அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், குமரமலை, புதுக்கோட்டை*

*🔯 அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம்*

*🔯 அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோயில், ராமநாதபுரம், ராமநாதபுரம்*

*🔯 அருள்மிகு பால சுப்பிரமணியர் திருக்கோயில், சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை, சேலம்*

*🔯 அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், கஞ்சமலை, சேலம்*

*🔯 அருள்மிகு கந்தாஸ்ரமம் திருக்கோயில், உடையாபட்டி, சேலம்*

*🔯 அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், குமரகிரி, சேலம்*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், வடசென்னிமலை, சேலம்*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், கோவனூர், சிவகங்கை*

*🔯 அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், குன்றக்குடி, சிவகங்கை*

*🔯 அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில், தெப்பம்பட்டி, தேனி*

*🔯 அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில், கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி, தேனி*

*🔯 அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில், சுருளிமலை, தேனி*

*🔯 அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆண்டார்குப்பம், திருவள்ளூர்*

*🔯 அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில், வானகரம், திருவள்ளூர்*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், சிறுவாபுரி, சின்னம்பேடு, திருவள்ளூர்*

*🔯 அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி, திருவள்ளூர்*

*🔯 அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில், அம்மையார்குப்பம், திருவள்ளூர்*

*🔯 அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி*

*🔯 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமாரவயலூர், திருச்சி*

*🔯 அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில், மணக்கால், திருச்சி*

*🔯 அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில், கொழுந்துமாமலை, திருநெல்வேலி*

*🔯 அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி, திருநெல்வேலி*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், ஆய்க்குடி, திருநெல்வேலி*

*🔯 அருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி, திருநெல்வேலி*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிவகிரி, திருநெல்வேலி*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், செங்கம், வில்வாரணி, திருவண்ணாமலை*

*🔯 அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண், திருவாரூர்*

*🔯 அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், எல்க் மலை, நீலகிரி*

*🔯 அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மஞ்சூர், நீலகிரி*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காங்கேயநல்லூர், வேலூர்*

*🔯 அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், ரத்தினகிரி, வேலூர்*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வள்ளிமலை, வேலூர்*

*🔯 அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், திருத்தங்கல், விருதுநகர்*

*🔯 அருள்மிகு ஹரிப்பாடு முருகன் திருக்கோயில், ஹரிப்பாடு, ஆலப்புழா*

*🔯 அருள்மிகு சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில், வில்லுடையான் பட்டு, கடலூர்*

*🔯 அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர், விருத்தாசலம், கடலூர்*

*🔯 அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோயில், சி.மானம்பட்டி, கடலூர்*

*🔯 அருள்மிகு முத்துக்குமர சுவாமி திருக்கோயில், பரங்கிப்பேட்டை, கடலூர்*

*🔯 அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புதுவண்டிப்பாளையம், கடலூர்*

*🔯 அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில், குக்கி சுப்ரமண்யா, தட்ஷின கன்னடா*

*🔯 அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, தஞ்சாவூர்*

*🔯 அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகு மலை, தூத்துக்குடி*

*🔯 அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில், கிடங்கூர், கோட்டயம்*

*🔯 அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில், விராலிமலை, புதுக்கோட்டை.*

Any Enquiry & Bookings Plz contact

https://maps.app.goo.gl/W8CSGK2zveayKBsPA

மகாலட்சுமி டூர்ஸ் & டிராவல்ஸ்
MahaLakshmi Tour's & Travel's
9️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣ 5️⃣ 0️⃣ 8️⃣ 7️⃣ 4️⃣ 2️⃣
9️⃣ 6️⃣ 0️⃣ 0️⃣ 6️⃣ 8️⃣ 8️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣

நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம்எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.  கதை  மெத்த படித்த விஞ்ஞானி ஒருவர்.. தன் க...
25/09/2023

நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம்
எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.

கதை

மெத்த படித்த விஞ்ஞானி ஒருவர்..
தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்…
வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது..
கடை ஏதும் இல்லை.. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது..
கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்..

அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்க போகும் போது கால் இடறி கீழே விழுந்தார்..

கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டது..

இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தார்..

அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான்..

அந்த வழிப்போக்கன், இவரைப்பார்த்து ஐயா என்ன ஆச்சு.. என்றான். இவரோ இவனிடம் சொல்லி என்ன ஆக போகிறது என்று எண்ணிய விஞ்ஞானி ஒன்றும் இல்லை நீங்கள் போகலாம்..என்றார்.

அந்த வழிப்போக்கன் கிளம்ப எத்தனித்தான்.. அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது..

இந்த சாக்கடை குட்டையில் இவனை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள், அதனால் இவனை இறங்க சொல்லலாம் என்று எண்ணி அவனிடம், நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்த குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்து தாருங்கள் என்றார்..

ஒ.. இது தான் உங்கள் பிரச்சனையா..? ..
நான் அந்த குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை..
ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது..

மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்களை கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள்ளுங்கள் என்று சொன்னார்.

தான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும் நமக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே என்றும்..
இவருக்கு மூளை இல்லை என்றும் தப்பாக நினைத்ததற்கு
வெட்கி தலை குனிந்தான்..

நீதி:
யாரையும் குறைவாக எண்ணக்கூடாது.,
ஆம்..நண்பர்களே..,
உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு;
உயிரற்ற பறவையோ எறும்புக்கு உணவு.
ஒரு மரத்தில் பல்லாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம்.
அதே ஒரு தீக்குச்சியினால்
பல்லாயிரம் மரங்களை அழிக்கலாம்.
நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம்
எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.

நல்லதையே நினைப்போம்.

https://maps.app.goo.gl/W8CSGK2zveayKBsPA

மகாலட்சுமி டூர்ஸ் அன் டிராவல்ஸ்
அருப்புக்கோட்டை 626101
9️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣ 5️⃣ 0️⃣ 8️⃣ 7️⃣ 4️⃣ 2️⃣
9️⃣ 6️⃣ 0️⃣ 0️⃣ 6️⃣ 8️⃣ 8️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣

🆘🆘🆘19:9:2023  10.30 Amகொடைக்கானல் இன்றைய தினம் சுற்றுலா தளங்களில் காட்டுயானை உள்ளதால் தற்காலிகமாக சுற்றுலா தலங்கள் மூடபட...
19/09/2023

🆘🆘🆘19:9:2023 10.30 Am
கொடைக்கானல் இன்றைய தினம் சுற்றுலா தளங்களில் காட்டுயானை உள்ளதால் தற்காலிகமாக சுற்றுலா தலங்கள் மூடபட்டிருக்கிறது🆘🆘🆘

வாடிக்கையாளர்கள் மற்றும்நண்பர்கள் அனைவருக்கும்மகாலட்சுமி டூர்ஸ் & டிராவல்ஸ் சார்பாகஇனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்...
18/09/2023

வாடிக்கையாளர்கள் மற்றும்
நண்பர்கள் அனைவருக்கும்
மகாலட்சுமி டூர்ஸ் & டிராவல்ஸ் சார்பாக
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

    KumKi RiDe aT Princess of Hills Any enquiry & Bookings Plz contact    MahaLakshmi Tour's & Travel's    Lakshmi VelSa...
08/09/2023


KumKi RiDe aT Princess of Hills
Any enquiry & Bookings Plz contact
MahaLakshmi Tour's & Travel's
Lakshmi VelSamy Velsamy Asc
MahaLakshmi Travel's
9️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣ 5️⃣ 0️⃣ 8️⃣ 7️⃣ 4️⃣ 2️⃣
9️⃣ 6️⃣ 0️⃣ 0️⃣ 6️⃣ 8️⃣ 8️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣

👉 🦣   🦣 👈   Madurai JuNcTioN TriP OnLyLakshmi VelSamy  Velsamy Asc      MahaLakshmi Travel's 😍ViSiT our Google Page🥰http...
06/09/2023

👉 🦣 🦣 👈
Madurai JuNcTioN TriP OnLy
Lakshmi VelSamy Velsamy Asc
MahaLakshmi Travel's

😍ViSiT our Google Page🥰
https://maps.app.goo.gl/sAehj8JZfMr5bLvGA

Any Enquiry & Bookings Plz contact
MahaLakshmi Tour's & Travel's
9️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣ 5️⃣ 0️⃣ 8️⃣ 7️⃣ 4️⃣ 2️⃣
9️⃣ 6️⃣ 0️⃣ 0️⃣ 6️⃣ 8️⃣ 8️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣

அதிமுக மாநாடு | மதுரையில் போக்குவரத்து மாற்றம் - நகருக்குள் கட்சி வாகனங்கள் நுழைய தடை.மதுரை: அதிமுக மாநில மாநாடு மதுரை ‘...
19/08/2023

அதிமுக மாநாடு | மதுரையில் போக்குவரத்து மாற்றம் - நகருக்குள் கட்சி வாகனங்கள் நுழைய தடை.

மதுரை: அதிமுக மாநில மாநாடு மதுரை ‘ரிங்’ ரோட்டில் நாளை (ஆக.20) நடக்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் வாகனங்களில் திரள வாய்ப்புள்ளதால், மாநாட்டை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் குறித்து மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு: மதுரை - கப்பலூர் செல்லும் சுற்றுச்சாலையில் வலையங்குளம் கருப்புச்சாமி கோவில் அருகில் அதிமுக மாநாடு நாளை (ஆகஸ்ட் 20) நடைபெறுகிறது. இதனால் போக்குவரத்தை சீர்படுத்தும் வகையில் பிற மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் கீழ்காணும் மாற்று பாதை வழியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

1. தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகரிலிருந்து வரும் வாகனங்கள் திருச்சி மற்றும் சென்னைக்கு திருமங்கலம், கப்பலூர், வாடிப்பட்டி, திண்டுக்கல் மார்க்கமாக செல்ல வேண்டும்.

2. தூத்துக்குடியிலிருந்து வரும் வாகனங்கள் திருச்சி மற்றும் சென்னை செல்வதற்கு எட்டயபுரம் வழியாக கோவில்பட்டி சென்று விருதுநகர், திருமங்கலம், கப்பலூர் வாடிப்பட்டி, திண்டுக்கல் வழியை பயன்படுத்த வேண்டும்.

3. சென்னை மற்றும் திருச்சியிலிருந்து மதுரை வழியாக விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள் கொட்டாம்பட்டியில் இருந்து நத்தம், திண்டுக்கல், வாடிப்பட்டி, திருமங்கலம் வழியாக செல்ல வேண்டும்.

4. சென்னை மற்றும் திருச்சியிலிருந்து மதுரை மார்க்கமாக தூத்துக்குடி செல்லும் வாகனங்கள், மேலூரிலிருந்து திருவாதவூர், பூவந்தி, திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை சாலை வழியாக செல்ல வேண்டும்.

5. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையிலிருந்து தூத்துக்குடி மற்றும் விருதுநகர் செல்லும் வாகனங்கள் திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை சாலை வழியாக செல்ல வேண்டும்.

6. சென்னை மற்றும் திருச்சியிலிருந்து மதுரை வழியாக ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் மேலூரிலிருந்து சிவகங்கை வழியாக செல்ல வேண்டும்.

7. தேனியிலிருந்து மதுரை வழியாக திருச்சி செல்லும் வாகனங்கள், நாகமலை புதுக்கோட்டையிலிருந்து வாடிப்பட்டி, திண்டுக்கல் வழியாக திருச்சி மற்றும் சென்னை செல்ல வேண்டும்.

8. தேனியிலிருந்து மதுரை மார்க்கமாக சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள், நாகமலை புதுக்கோட்டையிலிருந்து துவரிமான், நகரி, தனிச்சியம், அலங்காநல்லூர், சத்திரப்பட்டி, அழகர்கோவில், மேலூர் வழியில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் செல்ல வேண்டும்.

9. திண்டுக்கல்லிலிருந்து மதுரை வழியாக சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் நத்தம், கொட்டாம்பட்டி, திருப்பத்தூர் வழியாக செல்ல வேண்டும்.

10. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையிலிருந்து தேனி செல்லும் வாகனங்கள் சிவகங்கையிலிருந்து மேலூர், அழகர்கோவில், சத்திரப்பட்டி, அலங்காநல்லூர், தனிச்சியம், நகரி, துவரிமான், நாகமலை புதுக்கோட்டை வழியாக செல்ல வேண்டும்.

11.மதுரை நகர் பகுதியில் இருந்து விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் மதுரையில் இருந்து காளவாசல், துவரிமான், கப்பலூர், திருமங்கலம் வழியாக செல்ல வேண்டும்.

கட்சி வாகனங்களுக்கான கட்டுப்பாடு:

1.மாநாட்டில் பங்கேற்க வரும் கட்சியினரின் வாகனங்கள் போக்குவரத்து நெறிசலை குறைக்கும் பொருட்டு மதுரை மாநகருக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்.

2. திருச்சி, மேலூர் வழியாக மாநாட்டுக்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் மதுரை மாநகருக்குள் செல்லாமல் நான்குவழிச் சாலையில் சென்று மண்டேலா நகர் வழியாக மாநாடு திடலுக்கு செல்ல வேண்டும்.

3. திண்டுக்கல், வாடிப்பட்டி மார்க்கமாக மாநாட்டுக்கு வரக்கூடிய கட்சியினர் வாகனங்கள் தனிச்சியம், துவரிமான் வழியாக கப்பலூர் சென்று மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

4 தேனி, உசிலம்பட்டி மார்க்கமாக மாநாட்டுக்கு வரக்கூடிய கட்சியினர் வாகனங்கள் நாகமலை புதுக்கோட்டையிலிருந்து தோப்பூர், கப்பலூர் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

கார்கள் உள்ளிட்ட இதர ரக வாகனங்கள் :

1. திருச்சியிலிருந்து சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி செல்ல ராமேசுவரம் நான்கு வழிச்சாலை, திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை வழியாக செல்ல வேண்டும்.

2. திருச்சியிலிருந்து விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி செல்லும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மதுரை மாநகர் தெப்பக்குளம் வழியாக திருப்பரங்குன்றம், திருநகர், கப்பலூர் வழியாக செல்ல வேண்டும்.

3. போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில் திருச்சியிலிருந்து விருதுநகர், தென்காசி செல்லும் இலகு ரக வாகனங்கள் மேலூரிலிருந்து திருவாதவூர், பூவந்தி, திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை வழியாக செல்ல வேண்டும்.

4. மேற்சொன்ன வழித்தடங்களில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலையில், கனரக சரக்கு வாகனங்கள் செல்ல குறிப்பிடப்பட்டுள்ள மாற்று வழித்தடங்கள் வழியில் தனியார் இலகு ரக வாகனங்கள் அனுப்பப்படும்.

விமான நிலையம் செல்லும் வாகனங்கள் :

1. விருதுநகர், தென்காசி பகுதியிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் கப்பலூர், தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் வழியாக செல்ல வேண்டும்.

2. தூத்துக்குடியிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் எட்டையபுரம், கோவில்பட்டி, விருதுநகர் திருமங்கலம், கப்பலூர், திருநகர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் வழியில் செல்ல வேண்டும்.

3. மேலூரிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் ஒத்தக்கடை, மதுரை மாநகர், மாட்டுத்தாவணி வழியாக தெற்குவாசல், அவனியாபுரம் சென்று விமான நிலையம் செல்ல வேண்டும்.

MahaLakshmi Tour's & Travel's
9️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣ 5️⃣ 0️⃣ 8️⃣ 7️⃣ 4️⃣ 2️⃣
9️⃣ 6️⃣ 0️⃣ 0️⃣ 6️⃣ 8️⃣ 8️⃣ 5️⃣ 0️⃣ 0️⃣

Address

MahaLakshmi Tour's & Travel's, 5/23/202 A, Postal Colony, Palayampatty
Aruppukkottai
626112

Telephone

95005 08742

Website

Alerts

Be the first to know and let us send you an email when MahaLakshmi Tour's & Travel's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MahaLakshmi Tour's & Travel's:

Videos

Share

Category


Other Travel Companies in Aruppukkottai

Show All