20/05/2023
*444444444444444444444444அப்படி இந்த ‘நாலு’க்கு என்னதாங்க ஸ்பெஷல்....?????*
01. ‘நாலு’ பேரு ‘நாலு’ விதமா பேசுவாங்க.
02. ‘நாலு’ பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல.
03. ‘நாலு’ காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல....????
04. ‘நாலு’ ஊரு சுற்றினாதான் உலகம் புரியும்.
05. அவரு ‘நாலு’ம் தெரிஞ்சவரு., ‘நாலு’ம் புரிஞ்சவரு.
06. ‘நாலு’ வார்த்த நறுக்குன்னு நல்லா கேக்கணும்.
ஏன் இந்த ‘நாலு’ மட்டும் இவ்ளோ ஸ்பெஷல்....
சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில்., பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு., நாற்பது மற்றும் எட்டுத்தொகையில் நானூறு., பிரபந்தத்தில் நாலாயிரம் என ‘நான்கு’ வரும்.
நாலடியார்., நான்மணிக்கடிகை.,இன்னா நாற்பது., இனியவை நாற்பது
அக நானூறு., புற நானூறு., நாலாயிர திவ்ய பிரபந்தம்....
“
ஔவையாரின் ‘நால்’வழி நீதி நூல். சொல்லும் நான்கு பொருட்கள் பால்., தெளிதேன்., பாகு., பருப்பு இவை ‘நாலு’.
நாலும்., இரண்டும் சொல்லுக்குறுதி... இதில் ‘நாலு’ என்பது.. நாலடியார்....
“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
‘வேதம் நான்கினின்’ மெய்ப்பொருளாவது நாராயணா.
‘நான்மறை’.... என்பது வேதங்கள் ‘நான்கு’.
வைணவ நெறியைப் பரப்பிய ஆச்சார்யர்களில் முதன்மையானவர்கள் ‘நான்கு’ பேர். ஸ்ரீமந்நாதமுனிகள் ஆளவந்தார் எம்பெருமானார் ,ஸ்வாமி தேசிகன். இவர்களை நால்வர் என அழைக்கிறோம்.
மஹாவிஷ்ணுவின் பத்து (ஒன்பதில்) அவதாரங்களில் ‘நான்கு’ அவதாரங்களுக்கு மட்டுமே மனிதனாக (கர்பவாசத்தில்) எடுத்ததாகும்.
வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர்., அவற்றை ‘நாலு’ ரிஷிக்களிடம் பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார். அவர்கள்
ருக் ═ பைலர்., யஜூர் ═ ஜைமினி., சாம ═ வைசம்பாயன., அதர்வண ═ சுமந்து.
தசரதனுக்கு ‘நான்கு’ பிள்ளைகள்.
‘நான்கு’ புருஷார்த்தங்கள்....
அவை தர்ம., அர்த்த., காம., மோட்சம்.
மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை
கடக்க வேண்டிய நிலைகளும் ‘நான்கு’
அவை ~ பிரம்மசர்யம்., கிருஹஸ்தாச்ரமம்., வானப்ரஸ்தம்., சந்யாசம்.
கண்ணனிடம் பக்தி செய்யும் நால்வர் கீதை சொல்வது
ஆர்த்தி,அர்தார்த்தி,ஜிஞ்ஜாசு,ஞானி
திருமங்கை ஆழ்வார் பெருமாளை திருஎழுகூற்றிருக்கையில் விளிப்பது
சுந்தரநால்தோளன் என
பிரம்மாவின் மானஸ புத்திரர்கள் ‘நான்கு’ பேர். சநகர்., சநாதனர்., சநந்தனர்., சனத் குமாரர்.
பிரம்மாவுக்கு ‘நான்கு’ த