22/04/2024
#இந்தியாவில்_காணாமல்_போன_34000_சிறுமிகள்: ¶மோ'டி அரசாங்கம் தான் பதில் சொல்ல வேண்டும் !
தின்தோறும் பெண்கள், சிறுமிகள் மீதான அனைத்துவிதமான தாக்குதல்களும் மோ'டி ஆட்சியில் நடந்துகொண்டு இருக்க, மல்லாந்து படுத்துக்கொண்டு காறிஉமிழ்ந்து கொள்வதுபோல, பா'ஜ'க எம்எல்ஏ திருமதி வா'னதி சீனிவாசன் அவர்கள் எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்; பரப்புரையும் செய்து வருகிறார். படிக்கவும்.
*********************************************
¶வானதி சீனிவாசன் (மோ'டி குடும்பம்)
"கடந்த 4 ஆண்டுகளில் கேரளாவில் 5338 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். ஆயினும்கூட, இந்த ஆபத்தான புள்ளிவிவரங்களைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, திரு பினராயி விஜயன் அவற்றை வெறும் பா'ஜ'க பிரச்சாரம் என்று ஒதுக்கித் தள்ளுகிறார்! அரசியல் நிகழ்ச்சி நிரல்களைக் காட்டிலும் நம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது. காணாமல் போகும் ஒவ்வொரு பெண்ணும் வேதனையில் இருக்கும் ஒரு குடும்பத்தையும், துயரத்தில் இருக்கும் சமூகத்தையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். நமது பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கும், அனைவருக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் ஒன்றுபடுவோம்!"
********************************************
மேலே உள்ளது, பா'ஜ'க செய்யும் விஷமப் பிரச்சாரம். உண்மை நிலவரம் என்ன?
¶இந்தியாவில், கேரளாவில், குசராத்தில் காணாமல் போனவர்கள் பற்றி :-
தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau, சுருக்கமாக: NCRB), இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட குற்றப் புள்ளிவிவரங்களை சேகரித்து வெளியிடுகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வழியாக காணாமல் போனவர்கள் பற்றிய கணக்கு எடுப்பது 2016 ல் இருந்து தான் துவக்கப்பட்டது.
என்சிஆர்பி தரவுகளின்படி, 2016 முதல் 2021 வரையிலான ஆறு ஆண்டுகளில் மொத்தம் 20.36 லட்சம் பேர் காணாமல் போயுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 3.4 லட்சம் பேர் போயுள்ளனர். மேலும், 2016ல் 2.9 லட்சமாக இருந்த காணாமல் போனவர்களின் எண்ணிக்கை, 2021ல் கிட்டத்தட்ட 3.9 லட்சமாக அதிகரித்து, 34% அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களில் பெண்களே பெரும்பான்மையாக உள்ளனர். 2016 இல் 60% என்ற பங்கில் இருந்து, 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டிலும் காணாமல் போனவர்களில் 68% க்கும் அதிகமானவர்கள் பெண்கள் ஆவர்.
மக்கள் காணாமல் போனதற்கான பல்வேறு காரணங்கள் உள்ளன. முதன்மை காரணமாக, காதல், கடன், கல்வி தோல்வி, வாழ்விடத்தில் தாக்குதல்கள் அல்லது சிக்கல்கள் ஆகியவற்றால் சொல்லாமல் கொள்ளாமல் தானாக முன்வந்து வெளியேறுதல் / ஓடிவிடுவது நடைபெறுகிறது. மேற்கூறிய காரணங்கள் மட்டுமல்லாமல் விபச்சாரத்திற்காக பெண்கள் கடத்தப்படுவதும் பெரியளவில் நடைபெறுகிறது. காணாமல் போனவர்களில் பாதிக்கும் அதிகமானோர் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.
¶சிறுமிகள் காணவில்லை :-
இந்தியாவில் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், 18 வயதுக்கு கீழ் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் சிறுமிகள் காணாமல் போனதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் NCRB தெரிவித்துள்ளது. 2023 ம் ஆண்டில் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் 2021-ல் மட்டும் 18 வயதுக்கும் மேற்பட்ட பெண்களில் 3,75,058 பேர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
¶அதிரவைக்கும் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குசராத் :-
பெண்கள் காணாமால் போகும் குற்றம் நடைபெறும் மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்த இரு மாநிலங்களில் தான் 2019 முதல் 2021 வரை அதிகளவிலான பெண்கள் காணாமல் போயுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 2019-ஆம் ஆண்டு 52,119 பெண்கள், 2020 ஆம் ஆண்டு 52,357 பெண்கள், 2021-ஆம் ஆண்டு 55,704 பெண்கள் காணாமல் போயுள்ளனர். மகாராஷ்டிராவில் 2019-ல் 63,167 பெண்கள், 2020-ல் 58,735 பெண்கள், 2021-ல் 56,498 பெண்கள் மாயமாகியுள்ளனர்.
குசராத்தில் 2016 - 20 ஆண்டுகளில் மட்டும் 41,321 பெண்கள் காணாமல் போனதாக NCRB தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சொல்கிறது. இப் பிரச்சினை மீது கடந்த ஆண்டில் மாபெரும் விவாதம் உருவாக, 41,321 பெண்களில் 1328 பேர்கள் தவிர மீதி எல்லாம் கண்டுபிடிக்கப் பட்டதாக குசராத் போலீஸ் சொல்லிக் கொள்கிறது. ஆனாலும், இதுகுறித்து எந்த தரவுகளைகளையும் குசராத் போலீஸ் வழங்கவில்லை.
¶கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுமிகள் மீட்கப்படவில்லை :-
ஒட்டுமொத்தமாக, 2022 ஆம் ஆண்டில் 62,099 சிறுமிகள் கடத்தப்பட்டதாகவோ அல்லது கடத்தப்பட்டதாகவோ அறிவிக்கப்பட்டதாக என்சிஆர்பி புள்ளிவிவரம் கூறுகிறது. இதற்கு முந்தைய கடந்த ஆண்டுகளில் கடத்தல் அல்லது கடத்தலுக்கு ஆளான மீட்கப்படாத சிறுமிகளின் எண்ணிக்கை 40,219 ஆகும். ஆக, 2022ஆம் ஆண்டுக்குள் கடத்தப்பட்ட அல்லது கடத்தப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 1,02,318 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஒரே ஆண்டில் 63,513 சிறுமிகள் உயிருடன் மீட்கப்பட்டதோடு 590 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். கடத்தப்பட்ட அல்லது கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 38,215 சிறுமிகளை அந்த ஆண்டின் இறுதிக்குள் மீட்க முடியவில்லை.
காணாமல் போன மற்றும் கண்டுபிடிக்கப்படாத பெண்கள் பட்டியலில் 2023 ஆம் ஆண்டில் மேலும் 62,946 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனதாகக் கூறப்படும் 31,133 சிறுமிகளுடன் சேர்த்தால், காணாமல் போன சிறுமிகளின் மொத்த எண்ணிக்கை 94,079 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 60,281 சிறுமிகள் ஒரே ஆண்டில் மீட்கப்பட்டனர் அல்லது கண்டுபிடிக்கப்பட்டனர், 2023 ம் ஆண்டின் இறுதிக்குள் 33,798 சிறுமிகள் கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது மீட்கப்படவில்லை.
சங்'கி பரிவாரங்களே !
கேரளா ஸ்டோரி கதை போல, குசராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிர என அனைத்து மாநிலங்களிலும் காணாமல் போனவர்களை ஜிகாதி புரட்சி பட்டியலில் சேர்த்து விடுவீர்களா?
இந்தியா முழுவதும் காணாமல் போன சிறுமியர் பிரச்சினைக்கு மாநில அரசுகள் தான் காரணமா? ஒன்றிய அரசின் பொறுப்பு என்ன?
¶இது கேரளா ஸ்டோரி அல்ல - இந்தியாவின் ஸ்டோரி !
¶பத்தாண்டு காலம் ஆட்சி செய்யும்
மோ'டி பரிவாரங்கள் இதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டும்!
நன்றி!
பதிவு Chandra Mohan