Kodaikanal Rooms & Cottages

Kodaikanal Rooms & Cottages Mountain view, Clouds N Mist Cottage is located in Kodaikānāl, a 5-minute walk from Chettiar Park,
(2)

01/11/2022

இனி பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு 30 நிமிடத்தில் செல்லலாம்.

பழனி டு கொடைக்கானல் ரோப்கார் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதைப் பற்றிய விரிவான வீடியோ...

அந்நிய மரங்கள் என்றால் என்ன??? அவற்றை 10 ஆண்டுகளுக்குள் தமிழகத்தின் வனப்பகுதியில் இருந்து அழிக்க வேண்டும் என சென்னை உயர்...
27/07/2022

அந்நிய மரங்கள் என்றால் என்ன???

அவற்றை 10 ஆண்டுகளுக்குள் தமிழகத்தின் வனப்பகுதியில் இருந்து அழிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ஏன் அறிவுறுத்தி இருக்கிறது?

அந்நிய மரங்களால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

நம் நாட்டின் பருவநிலைக்கு ஒத்து வராத சுற்றுச்சூழலிலும் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் வெளிநாட்டு மரங்களே அந்நிய மரங்கள் எனப்படுகின்றன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அந்நிய மரங்கள் இருந்தாலும் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் இவற்றின் எண்ணிக்கையும் சுற்றுச்சூழலில் இவை ஏற்படுத்தும் பாதிப்பும் அதிக அளவில் இருக்கின்றன.

முக்கியமாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் யூகலிப்டஸ் (குங்கிலியம்), பைன் போன்ற அந்நிய மரங்களும் லேண்டனா (உன்னி செடி) போன்ற அந்நிய செடிகளின் ஆக்கிரமிப்பும் அதிக அளவில் இருக்கிறது.

இவையாவும் ஆங்கிலேயர்கள் காலத்தில் கொடைக்கானலில் அறிமுகப்படுத்தப்பட்ட மரங்கள் ஆகும்.

மலைப்பகுதிகளில் உள்ள சோலைக் காடுகள் நிலத்தடி நீரை அதிக அளவில் தக்க வைப்பதுடன் சுற்றுப்புறத்தை ஈரமாகவும் குளிர்ச்சியுடனும் வைத்திருப்பதிற்கும் அதிக அளவில் மழைப்பொழிவிற்கும் காரணமாக இருந்தது.

ஆகவே குளிரையும் மழையையும் குறைக்க விரும்பிய ஆங்கிலேயர்கள் வேறு வேறு நாடுகளில் இருந்து பல்வேறு மரங்கள் மற்றும் செடிகளை மலைப்பகுதிகளுக்கு வரவழைத்து அவற்றை வளர்த்ததன் மூலமாக குளிரையும் மழைப் பொழிவையும் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் இவ்வாறு கொண்டுவரப்பட்ட மரங்களும் செடிகளும் நம் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது அல்ல.

அதோடு மலைப்பகுதிகளின் இயல்பான பருவநிலையும் இவைகளால் பெருத்த மாறுதலுக்கு உள்ளாகி இருக்கிறது.

உதாரணமாக யூகலிப்டஸ் மரங்கள் நிலத்தடி நீரை மிக அதிக அளவில் உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது.

அதேபோல் பைன் மரங்கள் வளர்ந்துள்ள காடுகளில் வேறு எந்த செடியும் வளர முடியாது. தன்னை சுற்றிலும் வேறு எந்த வகைத் தாவரங்களையும் வளர விடாத தன்மை கொண்டது பைன் மரங்கள்.

இதன் காரணமாக மண் வளம் பாதிக்கப்படுவதுடன் போதிய உணவின்றி காட்டு விலங்குகள் ஊருக்குள் வரும் நிலை ஏற்படுகிறது.

இதனால் மனித, விலங்கு மோதல்களும் இருதருப்பில் ஏதோ ஒரு தரப்பிற்கு உயிர்ச் சேதமும் ஏற்பட வாய்ப்பாகிறது.

அந்நிய மரங்களின் மூலமாக தைலங்கள், மரசாமான்கள், அலங்கார பொருட்கள் போன்ற பயன்கள் கிடைக்கின்றன என்றாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளே மிக அதிகம்.

முக்கியமாக மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரிய தனிச்சிறப்பான புல்வெளி அமைப்பும் சோலைக் காடுகளும் அழிய இவை முக்கிய காரணமாக இருக்கின்றன.

எனவே இவற்றை அகற்றுவதுடன் மலைப்பகுதிகளின் பருவ நிலைக்கு ஏற்ற சோலைக் காடுகளை உருவாக்குவதே மேற்குத் தொடர்ச்சி மலைக்கு நாம் செய்யும் மிகச்சிறந்த சேவையாகும்!

Thanks
Ruban Jaya

The monsoon has arrived at Kodaikanal! The Princess of Hills  welcome you with the fresh, pleasant scent of air; the tre...
05/07/2022

The monsoon has arrived at Kodaikanal! The Princess of Hills welcome you with the fresh, pleasant scent of air; the trees glisten with a green shine and the rain drops entice you with its gentle whispers.

Plan your perfect holiday out at Clouds n Mist Cottage with the monsoon package that lets you enjoy the rains to the fullest!

2Nights & 3 Days with Breakfast, Dinner Per Person Rs.1999 ONLY (Minimum 6 Persons required)

For Booking what's app +91 98414 04989

  ஆயிரமாயிரம் வருடங்களாக கொடைக்கானல் கிராமப் பகுதிகளில் மக்கள் வாழ்ந்து விவசாயம் செய்து வந்ததற்கு போதுமான ஆதாரம் இருக்கு...
26/05/2022




ஆயிரமாயிரம் வருடங்களாக கொடைக்கானல் கிராமப் பகுதிகளில் மக்கள் வாழ்ந்து விவசாயம் செய்து வந்ததற்கு போதுமான ஆதாரம் இருக்கும் போது மே 26ம் தேதியான இன்று 'கொடைக்கானல் நகரம் உருவாகி 177 ஆண்டுகள்தான் ஆகிறது!' என்று கொடைக்கானல் நகராட்சியாலும் உள்ளூர் மக்களாலும் எப்படி கொண்டாடப்படுகிறது?

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கொடைக்கானல் பகுதியில் பூர்வகுடிகள் வாழ்ந்து வருவது உண்மைதான்!

ஆனால் அவர்களெல்லாம் மேல்மலை கிராமங்களிலும் கீழ்மலை கிராமப் பகுதிகளிலும் மட்டுமே வாழ்ந்து வந்தனர்.

அப்போது கொடைக்கானல் என்ற நகரமே கிடையாது.

1821ம் ஆண்டு பி.எஸ்.வார்டு என்கிற ஆங்கிலேய நில அளவையாளர் பெரியகுளம் வழியாக மலையேறி வந்து வெள்ளகவி கிராமத்தைக் கடந்து தற்போதைய பாம்பார்புரம் பகுதி வந்தடைந்தார்.

அந்த வகையில் வெள்ளகவி மலை கிராமம்தான் ஆங்கிலேயர் ஒருவரின் காலடிபட்ட கொடைக்கானலின் முதல் குடியிருப்புப் பகுதியாகும்!

அப்போது சோலைக்காடுகளாகக் காணப்பட்ட இப்போதைய பாம்பார்புரம் பகுதியில் தங்கள் நாட்டின் காலநிலைக்கு ஏற்ற சூழ்நிலை நிலவுவதை உணர்ந்த பி.எஸ்.வார்டு அவர்கள்...

ஆங்கிலேயர்கள் வந்து தங்கி செல்வதற்கான கட்டிடம் ஒன்றை அப்பகுதியில் கட்டத் துவங்கினார்.

கொடைக்கானல் வருவதற்கான சாலை வசதிகள் அப்போது இல்லாததால் குதிரைகளின் மூலமாக மலைப்பகுதி வழியாகவே கட்டுமான பொருட்கள் கொண்டு வரப்பட்டு அந்த இல்லம் எழுப்பப்பட்டது!

1845ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த இல்லத்திற்கு ஹாலிடே ஹோம் (விடுமுறை இல்லம்) என பெயர் வைத்தார் பி.எஸ்.வார்டு.

இப்போதும் அந்த இடத்தில் உள்ள கட்டிடங்கள் அந்தப் பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகின்றன!

1845ம் ஆண்டு மே 26ம் தேதி முதல் ஆங்கிலேயர்கள் இந்த விடுமுறை இல்லத்தில் வந்து தங்கிச் செல்ல துவங்கினர்.

அதில் கொடைக்கானலின் சூழ்நிலை பிடித்துப்போன சில ஆங்கிலேயர்கள் நிரந்தரமாக இங்கேயே தங்க முடிவெடுத்தனர்!

அவர்களுக்காக கடைவீதிகள் உருவாக்கப்பட்டன... பள்ளிகள் துவக்கப்பட்டன... மருத்துவமனைகள் ஆரம்பிக்கப்பட்டன..
உணவகங்கள் திறக்கப்பட்டன...
மேலும் குடியிருப்புகள் பெருகத் துவங்கின!

ஆங்கிலேயர்களின் எண்ணிக்கையும் கூடியது. கொடைக்கானல் என்னும் நகரப் பகுதியும் மெல்ல மெல்ல உருவாகத் தொடங்கியது!

இப்படி இப்போது கொடைக்கானல் நகரம் என்று அழைக்கப்படும் ஒரு ஊர் உருவாக காரணமாக இருந்த 1845ம் ஆண்டு மே 26ம் நாளைக் கணக்கில் வைத்துதான் இந்த நாள் ' #கொடைக்கானல்_தினம்!" எனவும்...

கொடைக்கானல் உருவாகி இந்த வருடம் 177ம் ஆண்டு எனவும் கொண்டாடப்பட்டு வருகிறது!

BEAT the HEAT, Plan your summer trip to Princess of Hills , Enjoy in affordable price.... 9841404989
11/05/2022

BEAT the HEAT, Plan your summer trip to Princess of Hills , Enjoy in affordable price.... 9841404989

கொடைக்கானலில் பொதுமக்கள் அறிந்திடாத பழமையான சுற்றுலா இடங்கள்.மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் எப்போதும் குளுமையான சீசனை ...
06/05/2022

கொடைக்கானலில் பொதுமக்கள் அறிந்திடாத பழமையான சுற்றுலா இடங்கள்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் எப்போதும் குளுமையான சீசனை அனுபவிக்க நாள்தோறும் எராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் நகரைச் சுற்றியுள்ள மோயர்சதுக்கம், பில்லர் ராக், குணா குகை, பைன் மரச்சோலை, பசுமைப்பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, படகு குழாம் போன்ற சுற்றுலா இடங்களை மட்டும் கண்டு ரசித்து செல்கின்றனர். அதன் பின்னர் மேல் மலை கிராமத்தில் உள்ள ஒரு சில இடங்களை மட்டும் கண்டு ரசித்துச் செல்கின்றனர். இவைகளைக் கண்டு ரசிப்பதற்கு ஒரு நாள் அல்லது 2 நாள் மட்டுமே அறை எடுத்து தங்கி விட்டுச் செல்கின்றனர்.

ஆனால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கக்கூடிய அரியவகை சுற்றுலாத்தலங்கள் அதிக அளவில் உள்ளது. மேல் மலை கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒரு அரிய வகை அருவி உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியை முறையாக சீர்செய்து சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் உருவாக்க முயற்சி மேற்கொள்ளலாம். ஆனால் இவ்விடம் வனத்துறையால் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.

இதேபோல் பேத்துப்பாறை கிராமத்தில் ஐந்து வீடு அருவி, ஓராவி அருவி, ஆதிமனிதன் வாழ்ந்த குகைகள், கல்திட்டைகள் என சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கக்கூடிய இதுவரை அறிந்திராத அரிய இடங்கள் நிறைந்துள்ளன.

இதேபோல் அடுக்கம் பகுதியிலும் ஆதிமனிதன் வாழ்ந்த கல்திட்டைகளும், சுவர் சிற்பங்களும் நிறைந்துள்ளன. இவைகளையும் சுற்றுலா வளர்ச்சி கழகம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கக்கூடிய சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்.

மேலும் கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி கிராமத்தில் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலைப்போல் வரலாற்று சிறப்புமிக்க பண்டையகால முருகன் கோவில் உள்ளது. இங்கும் பழங்கால கல்வெட்டு ஒன்று கோவிலின் சிறப்பை பற்றி பொறிக்கப்பட்டுள்ள வாசகங்களுடன் உள்ளது. மேலும் இதே பகுதியில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்கு ஏற்ற அருவியும் உள்ளது. தற்போது இந்த கோவிலை பழனி தண்டாயுதபாணி கோவிலின் உப கோவிலாக அறங்காவல் குழு ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இப்பகுதியையும் இங்குள்ள அருவியையும் சீரமைத்து சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க ஏதுவாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு புதுமையாக அமைந்துள்ள இவ்விடங்களை புதிய சுற்றுலா தலங்களாக மாற்றியமைத்தால் கொடைக்கானல் சுற்றுலா வளர்ச்சி அடைவதோடு கொடைக்கானலில் உள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வருவதால் ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடுவது குறைவதோடு பல்வேறு இடங்களுக்கும் அவர்கள் செல்லும் நிலை உருவாகும்.
மேலும் இப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வரலாற்றுச் சான்றுகள் ஏதேனும் கிடைக்கிறதா? என்பதையும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். --மாலைமலர்

Plan your Upcoming Long weekend (Ramzan Eid) Holidays @ Princess of Hills Kodaikanal....Hall with 2, 3, 4, 5 Bedroom Cot...
26/04/2022

Plan your Upcoming Long weekend (Ramzan Eid) Holidays @ Princess of Hills Kodaikanal....Hall with 2, 3, 4, 5 Bedroom Cottage & Homestay available in Offers.
Please call +91 98414 04989

14.04.22 முதல்தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டலம் கொடைக்கானல் பணிமனை சார்பாக, #இயற்கை_எழில்காட்சியை(...
16/04/2022

14.04.22 முதல்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
திண்டுக்கல் மண்டலம் கொடைக்கானல்
பணிமனை சார்பாக,
#இயற்கை_எழில்காட்சியை(Nature Scene)
[பனிரெண்டு இடங்கள்]
கண்டு ரசிப்பதற்கு கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது! 😊😘

இயற்கை எழிலல்காட்சியை கண்டுகளிப்படுதற்கு
#பெரியவர்களுக்கு ரூ.150-ம்,
#சிறுவர்களுக்கு ரூ.75 எனவும் கட்டணம்
நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது!

தினமும் காலை 08:00 மணிமுதல் துவங்கும் இச்சேவையை சுற்றுலா பயணிகள்,
பொது மக்கள் என அனைவர்களும்
பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்!

* #பொது_போக்குவரத்தை_பயன்படுத்துவீர்!* 😎

For Budget type Rooms, Cottage, Homestay.... Please call 98 41 40 49 89

குளு, குளு சீசனை அனுபவிக்க கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்குளு, குளு சீசன்‘மலைகளின் இளவரசி’யான  கொடைக்கானலில் தற...
12/04/2022

குளு, குளு சீசனை அனுபவிக்க கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

குளு, குளு சீசன்
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவுகிறது. கடந்த 2 நாட்களாக கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழையினால் பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதுமட்டுமின்றி திரும்பி பார்க்கும் திசையில் எல்லாம் பச்சைப்பசேல் என்று காட்சி அளிக்கிறது.இதயத்தை வருடும் இதமான சீசனை அனுபவிப்பதற்காக தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் உள்ள மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணாகுகை, பில்லர்ராக், பசுமை பள்ளத்தாக்கு மற்றும் மன்னவனூரில் உள்ள சுற்றுச்சூழல் மையம் போன்ற பகுதிகளை சுற்றி பார்த்தனர். அங்கு அவர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் நகரில் பல்வேறு பகுதிகளில் தவழ்ந்து வந்த மேக கூட்டங்களை அவர்கள் ஆர்வத்துடன் ரசித்தனர். நட்சத்திர ஏரியில் ஆனந்தமாய் படகுசவாரி செய்தனர். பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் உள்ள புல்வெளிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அமர்ந்து பொழுதை போக்கினர். அத்துடன் அங்குள்ள பூக்களை கண்டு ரசித்தனர்.

மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக பிற்பகல் முதல் நகரில் குளிர் நிலவியது. அதனை பொருட்படுத்தாமல் குளிருக்கு பாதுகாப்பான உடைகளை அணிந்தபடி சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் நடமாடினர். சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை தருவதால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

04/04/2022

குடும்பத்துடன் குதூகலம்
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனை அனுபவிக்க, சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
அதன்படி வாரவிடுமுறையான நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நண்பர்கள், குடும்பத்துடன் வருகை தந்த சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர்.

பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மோயர்பாயிண்ட், பைன்மரக்காடுகள், தூண்பாறை உள்ளிட்ட இடங்களை கண்டுகளித்தனர்.
சாரல் மழையில் படகு சவாரி
இதனிடையே சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், நேற்று பிற்பகல் 2 மணி முதல் சுமார் ½ மணி நேரம் நகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதில் நனைந்தபடி பல்வேறு இடங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
குறிப்பாக சாரல் மழை தூறிய நிலையில், நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் ஆனந்தம் அடைந்தனர். மழையை தொடர்ந்து இதயத்தை வருடும் இதமான வானிலை நிலவியது.
மாறுபட்ட இந்த சூழ்நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர். கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகளால், சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

-‘தினத்தந்தி’

29/03/2022
Welcome to Princess of Hills..
24/03/2022

Welcome to Princess of Hills..

மழை அடித்ததால் இன்று மிகவும் குளுகுளுவென காணப்படுகிறது கொடைக்கானல்!.... Kodaikanal today
11/10/2021

மழை அடித்ததால் இன்று மிகவும் குளுகுளுவென காணப்படுகிறது கொடைக்கானல்!.... Kodaikanal today

கொடைக்கானல் அஞ்சு வீடு அருவி...
11/10/2021

கொடைக்கானல் அஞ்சு வீடு அருவி...

POST COVID SPECIAL OFFER PRICE Rs.400 Per Person , Whatsapp +91 98414 04989
05/07/2021

POST COVID SPECIAL OFFER PRICE Rs.400 Per Person , Whatsapp +91 98414 04989

 #மலைகளின்_இளவரசி  #உங்களை_வரவேற்கிறாள் நாளை முதல் சுற்றுலா பயணிகள் எந்தவித குழப்பமும் இல்லாமல் கார், பைக், பஸ் என தங்கள...
04/07/2021

#மலைகளின்_இளவரசி
#உங்களை_வரவேற்கிறாள்

நாளை முதல் சுற்றுலா பயணிகள் எந்தவித குழப்பமும் இல்லாமல் கார், பைக், பஸ் என தங்கள் வசதிக்கேற்ப எந்த வாகனத்திலும் சுற்றுலாவிற்காக கொடைக்கானலுக்கு வரலாம்.

எந்த வகையிலும் தடையில்லை!

For Budget Room Booking in Mountain view cottage Rs.300 Per person, What's App 98414 04989...

கொடைக்கானல் பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள் யூடியூப் மூலம் ரசிக்க தோட்டக்கலைத்துறை ஏற்பாடு....கரோனா காரணமாக கொட...
21/06/2021

கொடைக்கானல் பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள் யூடியூப் மூலம் ரசிக்க தோட்டக்கலைத்துறை ஏற்பாடு....

கரோனா காரணமாக கொடைக் கானலில் 2-வது ஆண்டாக கோடைவிழா, மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து பூங்காக்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு ரசிக்க தோட்டக்கலைத்துறை சிறப்பு ஏற்பாடு செய்து இதற்கென யூடியூப் சேனலை தொடங்கியுள்ளது. இதில் இந்த ஆண்டு பூங்காக்களில் பூத்துக் குலுங்கும் பூக்களை வீட்டி லிருந்தபடியே கண்டு ரசிக்கலாம்.

Youtube Link....

https://www.youtube.com/watch?v=6x8dwJ9XJLc

Best Offer of the Month...
25/02/2021

Best Offer of the Month...

24/12/2020

Merry Christmas ⛄⛄🎉🌲

கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சேவை தொடக்கம்‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாள...
02/11/2020

கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சேவை தொடக்கம்

‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இங்குள்ள சுற்றுலா இடங்களை வாகனங்கள் மூலம் சென்று சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர். மேலும் அவர்கள் பொழுதுபோக்குவதற்கு நட்சத்திர ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்து மகிழ்கின்றனர்.

இந்தநிலையில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், ஹெலிகாப்டர் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை, கொடைக்கானல் எம்.எம். தெருவில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் (Nearby Clouds N Mist Cottage) அமைக் கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் இயக்கப்படுகிறது.

ஹெலிகாப்டரில் 15 நிமிடங்கள், வானில் பறந்தபடி கொடைக்கானலின் இயற்கை எழிலை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.6 ஆயிரம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வருகையை பொறுத்து ஹெலிகாப்டர் சேவை தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்பவர்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

https://youtu.be/pp6cVxuarkAE-passes no longer needed for travel, Tamil Nadu government tells High Court...எளிமையான முறை...
31/10/2020

https://youtu.be/pp6cVxuarkA

E-passes no longer needed for travel, Tamil Nadu government tells High Court...

எளிமையான முறையில்
e ரிஜிஸ்ட்ரேசன் பதிவு செய்து கொடைக்கானல் வரலாம்...

e registration பதிவு செய்து கொடைக்கானல் வரலாம்

29/09/2020

Kodaikanal All Tourist Places opening from OCT 1st.....

17/09/2020

No E-pass for tourists travelling in Buses

17/09/2020
14/09/2020
இ-பாஸ் இன்றி கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்.....கொடைக்கானலில் தற்போது 2-வது சீசன் நடைபெற்று வருகிறது. ஊரடங்கு த...
14/09/2020

இ-பாஸ் இன்றி கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்.....

கொடைக்கானலில் தற்போது 2-வது சீசன் நடைபெற்று வருகிறது. ஊரடங்கு தளர்வை தொடர்ந்து இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொடைக்கானலுக்கு படையெடுக்க தொடங்கினர். குறிப்பாக பைக்குகளில் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் கூட்டமாக செல்வதை காண முடிந்தது.

மேலும் கார், அரசு பஸ்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பூங்காக்களில் புதுமண தம்பதிகள் உற்சாகமாக இயற்கை அழகை கண்டு ரசித்து ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.

கொடைக்கானலில் தங்கும் சுற்றுலா பயணிகளுக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே நுழைவு வாயிலில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

பெரும்பாலானோர் இ-பாஸ் இன்றி வந்து தங்களை சுற்றுலா இடங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டனர். முறையாக இ-பாஸ் பெற்று வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதனை ஏற்க மறுத்து பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எனவே கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் முறையாக இ-பாஸ் பெற்று வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

08/09/2020

காத்திருக்கிறது கொடைக்கானல்: நாளை முதல் பயணிகளின் வருகைக்கு அனுமதி!!

02/09/2020

Address

Building Society Main Road
Kodaikanal

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 6am - 8pm
Wednesday 6am - 8pm
Thursday 6am - 8pm
Friday 6am - 8pm
Saturday 6am - 8pm
Sunday 6am - 8pm

Telephone

+919841404989

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kodaikanal Rooms & Cottages posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kodaikanal Rooms & Cottages:

Videos

Share

Nearby travel agencies


Other Vacation Home Rental in Kodaikanal

Show All