11/04/2024
"அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பு ஏதுக்கு"
"மடிப்புள்ளைக் காரிக்கு மல்லிகைப்பூ எதுக்கு ?"
"மல்லிகைப்பூ மார்லே பட்டா மழலைக்கு பாலேது ?"
-----------
பூ வச்சிக்கறது, பொட்டு வச்சிக்கறது, கை, கால், காது, மூக்கு, தலை, மற்றும் கழுத்திலே நகைப் போட்டுக்கறது - இதெல்லாம் பெண்களுக்கு உரிய நளினமான, மிடுக்கான, பிடித்த, பிரியமான பழக்கங்கள்.
அதிலும்...
விதவிதமாக, தலையில் பூ வச்சிக்கறது என்பது அவங்களுக்கு ரொம்ப பிடிஅச்சு சமாச்சாரம்.
சரி. இருக்கட்டும்.
அந்த காலத்துலே அடுப்படி'னாலே, கரி புடிச்சி, வெப்ப மயமாக இருக்கும்.
ஒரு தடவை சமைக்கறதுக்கு, அடுப்படிக்கு போனாங்க'னா கண்ணிலே தண்ணி, மற்றும் உடம்பெல்லாம் வியர்வையோட தான் வெளியே வருவாங்க.
அப்படி இருக்கையிலே,
அடுப்படிக்கு போறதுக்கு முன்னாடி, சீவி சிங்காரிச்சிக்கிட்டு, தலை நிறைய பூ வச்சிக்கிட்டு போனாக்க, போட்டுக்கிட்ட மேக்கப் என்னாகும் ?
குறிப்பாக ...
வச்சிக்கிட்ட அம்புட்டுப் பூவும் என்னாகும் ?
வாடி, வதங்கி, சருகாகிப் போகும்தானே ?
படி அளவுப் பூவை வாங்கி, அதை நூலிலேக் கோர்த்து தலையிலே மணக்க, மணக்க வச்சிக்கிட்டு ...
அடுப்படியிலே போயி ஊதி, ஊதி நெருப்பை தகிக்க விட்டு, சமையல் செஞ்சி, முடிச்சிட்டு, வெளியே வரப்போ...
தலையிலே வச்சிருந்த பூவெல்லாம் வாடி வதங்கி போயி கெடக்கும்.
அதுக்கு மாறாக ...
அடுப்பு வேலையெல்லாம் முடிஞ்ச பிறகு, பூ அணிந்துக் கொண்டு, அழகான மலர்போல பெண்கள் மலர்ச்சியாக இருந்தாக்க ...
யாரு வேணாம்'னு சொல்லப் போறாங்க ?
"அடுப்பு ஊதும் பெண்களுக்கு, படிப் பூ எதுக்கு (தலையிலே) ?!!"
"மடிப்புள்ளைக் காரிக்கு மல்லிகைப்பூ எதுக்கு ?"
கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்தாச்சி ... இந்த சமயத்துல ...
யாரை மயக்கறத்துக் கோசரம் மல்லிகைப் பூவை தலையில வச்சிக்கிட்டு மினிக்கிகிட்டு போறே ? - என்பது அர்த்தமாகிறதா ?
உண்மையான அர்த்தம் என்ன ? ...
மடிப்புள்ளைக்காரி'னா ... வெகு சமீபத்தில் பிள்ளைப் பெற்றவள்.
மல்லியப் பூவானது,
பாலைக் கொறைச்சி உட்டுடும்.
அப்புறம் கொழந்தைக்கு பால் கொறைஞ்சிப் போயிடிச்சி'னு சொல்லக் கூடாது.
அதனால், பிள்ளைக்கு பால் தரும் பருவத்தில் மல்லிகைப் பூவை தவிர்.
இன்னொரு பழமொழி.
"மல்லிகைப்பூ மார்லே பட்டா மழலைக்கு பாலேது ?"
இது சம்மந்தமா வைத்தியர் சொல்லுவார் ...
"வடிச்ச கஞ்சியை மட்டும் உப்பு போட்டுக் கொடு."
"தாகம் குறையற அளவுக்கு கொஞ்சமாக தண்ணீர் கொடு."
"வலியை பொறுத்துக் கொள்ள சொல்.
"நெருங்கிய தோழியை அழைத்து அவளின் மார்பை வருடி பாலைக் கறந்து விடச் சொல்."
"மல்லிகைப் பூ நிறைய வாங்கி வந்து அவள் மார்பில் கட்டச் சொல்."
"மார்பில் வைத்துக் கட்டிய மல்லிகைக்கு மேல், இரவிக்கையை போட்டுக்கச் சொல்."
"இரவில் மல்லிகையை எடுத்து விட்டு ...
தனலில் காட்டிய ஊமத்தை இலையை வைத்து கட்டச் சொல்."
"வாட்டிய ஊமத்தை போக்கிடும் பால்கட்டை"
எதற்காக இந்த ஏற்பாடு எல்லாம் ?
சில சமயம் வானம் இடிந்து, தலையில் விழுவது போன்ற துயரம் வந்து சேர்ந்து விடும்.
எப்படி ?
நேற்றுவரை, பிறக்கப் போகும் குழந்தையை எதிர்நோக்கி ...
மகிழ்ச்சியுடன் காத்திருந்த நிலையில் ...
இன்று?
குழந்தை இறந்தே பிறந்தது !
ஆனால், தாயின்
உடலில், பிறந்த குழந்தைக்கு ஊட்டுவதற்கு ஏதுவாக, பால் சுரக்க ஆரம்பித்து விட்டது.
என் செய்ய?
பாலை நிறுத்த முடியலை.
குழந்தை இல்லாத தால், அதற்காக ஊறுகின்ற பாலானது, குடிக்க ஆளில்லாமல் ....
தங்கி நின்ற பாலினால், பால்கட்டு ஏற்பட்டு, வலி உயிரை வாட்டுகிறது.
பிள்ளைப் பெற்ற அயற்சி உடலைப் புரட்டிப் போடுகிறது.
இறந்த பிள்ளையை நினைத்து மன உளைச்சல் ஏற்படுகிறது.
உற்றாருக்கு சோகம்.
பெற்றோருக்கு ?
சொல்லொண்ணா துயரம்.
இதை அனுபவித்தாருக்கு தெரியும் ... எவ்வளவு வேதனை'னு.
மேலே சொன்ன துயரத்திற்கு மருந்துதான் ...
"மல்லிகைப் பூ மார்லே பட்டால் மழலைக்கு பாலேது ? "
இன்னொரு பழமொழி.
"உப்பு உண்பதே தப்பு"
உடலில் சமச்சீராக உப்பு உள்ளது. வெளியிலிருந்து உட்செல்லும் உப்பானது, ஒரு சில இடங்களில் உப்புநீர்த் தேக்கத்தை ஏற்படுத்தும்.
எந்த உடல் பகுதியில், உப்புத்தன்மை அதிகம் உள்ள நீர்மம் உள்ளதோ ...
அது இருக்கும், இடம் நோக்கி ...
நம் உடல் திசுக்களிலிருந்து நிணநீர்க் கசிந்து சென்று, உப்பைச் சமச்சீர் செய்து விடுவது இயற்கை.
அதுக்காகத்தான்...
மருந்து எடுத்துக்கும் போது, உப்பில்லா பத்தியம் இருக்கச் சொல்றது.
எதுக்காக'னா ...
மருந்து உள்ளே வரும்போது அதை கிரகிக்கும் பொறுப்புலே இருக்கற திசு நீர்,
மருந்தை கிரகிக்கறதுக்கு போகாமல்,
உப்பை சமச்சீர் படுத்தறதை நோக்கி போயிட்டு இருந்திச்சி'னா ...
மருந்தோட வினையானது, உடலில் செயல்படுத்திக் கொள்ள, காலதாமதம் ஆகிப் போகும்'லே ? அதனாலத்தான்.
எப்போதுமே உப்பு கொஞ்சம் கொறைச்சலாவே எடுத்துக்கணும்.
மற்றபடி ...
ஓலைச்சுவடி படிச்சிருக்கீங்களா?
அதுலேயும் ...
மருத்துவ குறிப்புகளை தெரிவிக்கும் ஓலைச் சுவடிகளைப் பாத்து இருக்கீங்களா ?
எப்படி ஆரம்பிக்கும் ?
"பாரப்பா"
"கேளப்பா"
"காணப்பா"
"ஆமப்பா"
"சொல்லுவேன் மானுடர்க்கு"
"சாற்றுவேன் நானுனக்கு"
இப்புடித்தானே ஆரம்பிக்கும் ?
பாரப்பா, கேளப்பா'னு ஆரம்பிச்சி என்னாத்தை சொல்லுவாங்க ?
மருந்தைப் பற்றி !
மருந்து'னா என்னாது ?
நல்லா போயிட்டிருந்த ஒடம்பு ...
திங்க கூடாததை தின்னோ, செய்யக் கூடாததை செஞ்சோ ... கெட்டு போனவுடன் ...
உடனே, உடனே உடம்பை சொஸ்தம் பண்ணிக்கரத்துக் கோசரம் ... அவசர அவசரமா டாக்டர்கிட்டே போயி, அவதி அவதியா சில-பலதை உள்ளேத் தள்ளி வைக்கிற வஸ்துக்கு பேரு மருந்து !
இதுதானே இப்போதைக்கு ... மருந்துக்கு நாம கத்து வச்சிருக்கற அர்த்தம் ?
ஆனால் முன்னோர்க் குறிப்பிடும் மருந்து என்பதன் அர்த்தம் ... நோய் வரும்போது மட்டும் அதன் தேவையை உணர்வதல்ல: தினத்துக்கும் அனுசரிப்பது.
உடல், உள நோய்களைத் தீர்ப்பதும், நோய் வராதிருக்க உதவுவதும், உரிய வயது வரும் முன்னரே மரணம் வருவதை தடுப்பதற்கும், உள்ள பொருட்கள் எதுவோ ... அதுவே மருந்து !
"மறுப்பதுடல் நோய் மருந்தெனலாகும்
மறுப்பதுள நோய் மருந்தெனச்சாலும்
மறுப்பதினி நோய் வராதிருக்க
மறுப்பது சாவை மருந்தெனலாமே"
- எண்ணாயிரம்.
இந்த அர்த்தத்துல பாத்தாக்க, நாம தெனத்துக்கும் மருந்து எடுத்துக்கணும்.
இப்போ எடுத்துக்கற மருந்துகள் எல்லாம், உணவு வகையைச் சார்ந்தது. உணவுதான் இப்போதுள்ள மருந்துகள் யாவும்.
பின்னே, உண்மையான மருந்து'னா என்னாது ?
பாஷாணங்கள் !
கெந்திபாஷாணம், கற்பாஷாணம், கவுரிபாஷாணம், ஆகுபாஷாணம், முட்பாஷாணம், குதிரைப்பற்பாஷாணம், காய்ச்சற்பாஷாணம் மற்றும் பல ...
பாஷணங்களே மருந்துகள்.
பாஷாணம்'ங்கறது விஷம் !
உணவு வகைகள் RNA (Ribonucleic Acid) வரைக்கும் சென்று செயல்புரிவன.
பாஷாண வகைகள் DNA (deoxyribonucleic acid) வரைக்கும் சென்று செயல்புரிவன.
பழனிக்கு மொட்டை அடிச்சிக்கிட்டு போறது எதுக்காக என்றால் ...
பழனியில் உள்ள முருகனின் சிலை நவபாஷாணத்தால் செய்யப் பட்டுள்ளது. அதில் அபிஷேகம் செய்யப் பட்ட சந்தனத்தை, மொட்டைத் தலையில் பூசிக் கொண்டால், அது சர்வ ரோக நிவாரணியாக செயல்படும்.
இன்று அந்த நிலை அங்கில்லை என்பது வருத்தத்திற்கு உரியது.
போகட்டும்.
மருந்துங்கறது ... உணவு வகையைப் போலவே, சிரமம் இல்லாமல் ஜீரணிக்கப்பட வேண்டும்; கிரகிக்கப் பட வேண்டும்.
உடல் இயக்கத்திற்குத் தக்கவாறு மெல்ல, மெல்ல நோயை நீக்கி செம்மைப் படுத்த வேண்டும். செடி வளர்வதைப் போல மெல்ல மெல்ல நடைபெற வேண்டிய இயற்கை செயல் - நோய் நீக்கம் என்பது.
திடீர் புரட்சி செய்வது உடம்புக்கு உகந்தது அல்ல.
ஒரு மாத்திரையைப் போட்ட உடனே வலி சரியாப் போச்சி'னு டம்பம் அடிச்சிக்கிட்டு திரிஞ்சோம்'னா என்னா அர்த்தம் ?
தலைவலி போயிடிச்சி; திருகுவலி வந்துடிச்சி'னு அர்த்தம்.
" ... தலைவலிக்கொரு மாத்திரேய், தடிமனுக்கொரு மாத்திரேய், தவறிப் போயி போட்டுக்கிட்டா ... தர்மலோக யாத்திரேய் ! ..."
வேறு வேறு உறுப்புகளை நாளாவட்டத்தில் கெடுத்துவிட நாமே வழிவகை செய்துவிடக் கூடாது.
ஒரு மருந்து, ஒரு உறுப்புக்கு மருந்தாக செயல்பட்டால்,
இன்னொரு உறுப்புக்கு நஞ்சாக செயல்படவே செய்யும்.
அந்த நஞ்சை முறிச்சி வெளியே அனுப்பிடணும்.
நச்சுமுறி (Detoxicating)
நம் அன்றாட வாழ்வியலின் செயல்பாடுகளால் உடலில் உருவாகும் நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் ...
மற்றும் ...
நம் அன்றாட செயல்பாடுகளில் தவிர்க்க முடியாததும், நாம் அன்றாடம் செய்து வருவதுமான நடவடிக்கைகளில் உருவாகுவதான நச்சுகளை நீக்குவதற்கு ...
நஞ்சுமுறி அவசியம்.
அது மட்டுமல்ல ...
உடலை நல்ல ஒரு வாகனமாக, கடத்தியாக, வளைந்து கொடுப்பதற்கு உகந்ததாக மாற்றுவதற்கு ...
வழக்கமாக சில வஸ்துகளை அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வஸ்துக்களில் ஜெயநீர், முப்பூ மற்றும் இலகு கற்ப வஸ்துக்கள் கலந்து இருந்தால்,
அந்த வஸ்துவின் குணத்தில் வீரியம் மிகுந்து, உடலுக்கு உரம் சேர்க்கின்றது.
அதற்கானது, ஏழு கூட்டு உட்களிகள்.
முதல் உட்களி:
பல்துலக்குதல்: பல்லுக்கு அடியில் ஈறு பகுதியிலிருந்து பிரிந்து செல்லும் நரம்புக் கூட்டங்கள் ... மூளைக்கும், முகத்தின் பிற பகுதிகளுக்கும் செல்கிறது.
சொல்லப் போனால், இரண்டு கடைவாய்ப் பற்களில் சிறிது லாவகமாக அசைவு கொடுத்தால் ... ஆக்ஞா சக்கரத்தின் உணர்வை உணர முடியும் !
ஆகவே பல்லின் மகிமையானது, கடித்து தின்பதோடு நின்று விடுவதாக கருதிவிடக் கூடாது.
முதல் உட்களி என்பது, காலையில் பல் துலக்குவதற்கான வஸ்து இது. கடற் சங்குடன் வேறு சில பொருட்களை இட்டுச் செய்யப் படுவதானது.
ஆள்காட்டிவிரல் மற்றும் பெரு விரல் கொண்டு, முறையாக பல் துலக்கினால், பல்லின் கீழ் உள்ள நரம்புத் தொடர்பானது ... மலஜலம் கழிக்கும் பகுதியை உந்தச் செய்து ... அந்த செயல்பாட்டை இலகு ஆக்குகிறது.
இரண்டாம் உட்களி :
இரவில் எடுத்துக் கொள்ள வேண்டியது இது. காலை 5 மணிக்கு எழுப்பி விட்டு, மலம் கழிப்பதற்கு வழியனுப்பும் மருந்து.
அழுக்குகள்/ நச்சுகள் தினமும் வெளியேற்றப் படல் அவசியம்.
மூன்றாம் உட்களி:
வாரம் ஒருமுறை கபாலத்தை சுத்தம் செய்து கொள்வது அவசியம்.
ஒரு நாசி வழியே நசிய நீர்மத்தை உட் செலுத்தி, மறு நாசித் துவாரத்தின் வழியே வெளியேறச் செய்வதே, கபால சுத்தி செய்வது என்பது.
நான்காம் உட்களி:
காலைமுதல் மாலைவரை உழைத்து, பின்னர் ஓய்வு எடுக்கப் போகும் வேளையில் கண்ணில் இடும் வஸ்து ஒன்று உண்டு. அது கண்ணில் உள்ள தூசுகளை அகற்றுவதோடு கண்சோர்வைப் போக்குகிறது ... காற்றுவழி வரும் நச்சுக்களை மூக்கினில் படியாமல் அகற்றிவிடுவதற்கும், முழு விழிப்புணர்வோடு வேலை செய்ய பயன்படுத்திய மூளை, தன் இயல்புக்கு திரும்பி ... ஓய்வு பெறுவதற்கு உகந்ததாக, இந்த பதங்கம் உதவி செய்விக்கிறது.
ஐந்தாம் உட்களி:
இரவு உணவுக்கு பின் அரை மணிநேரம் கழித்து ஒரு எளிய மூலிகை - பிரபஞ்ச கற்ப உப்பு மற்றும் அரிய அரிசியில் செய்த பானம் ஒன்று உண்டு.
அது ஆழ்நிலைத் தூக்கத்துக்கு இட்டுச் செல்லும். இரவில், இடையிடையே விழிப்புத் தொந்தரவு ஏற்படுவதை இது தவிர்க்கும்.
ஆறாம் உட்களி :
காலை எழுந்தவுடன் தண்ணீர் அருந்துவதை ஊக்கப் படுத்துவதோடு, அன்றாடம் இடைஇடையே அருந்தும் தண்ணீரில் கலந்து குடிப்பதற்கு உகந்த வஸ்து ஒன்று உண்டு. அது மூலிகையின் உயிர்மையாகிய பச்சையத்தை பிரித்தெடுத்து முப்பூ சேர்த்த கலப்பு. இது நச்சு வெளியேற்றலுக்கு உபயோகப் படுகிறது.
ஏழாம் உட்களி:
நச்சுக்களை வெளியேற்ற முனையும் போது ...
சில நல்ல சத்துக்களும் அதனுடன் வெளியேறக் கூடும். அதை தவிர்க்க இயலாது.
அவ்வாறு நச்சுடன் நட்பு கொண்டு வெளியேறக் கூடிய நல் உரம் மிகுந்த பொருட்கள் எவை என்று கண்டு பிடிக்க முடியாதது அல்ல.
அந்த நல் உரம் மிகுந்த உயிர்சத்தை மீண்டும் உடலில் ஊற்றெடுக்க வைக்க ஒரு சரோவிரேஷணம் உண்டு.
இந்த ஏழாங்கூட்டு உட்களி என்கின்ற ...
ஏழு தனித்தனியான களங்குகளை ஒரு சிறு பெட்டியிலிட்டு தினசரி பயன் பாட்டுக்கு எடுத்துக் கொள்வது என்பது...
உடல் இயங்குவதனால் ஏற்படும், ஆற்றல் இழப்பை சரி செய்வதற்கும், வெளிப்புற நச்சுகள் உடலில் சேர்வதை அகற்றுவதற்கும் உறு துணையானது.
மற்றபடி,
சில பழக்கங்களை வழக்கப் படுத்திக் கொள்வது - மிக அவசியம்.
"சூரியனைப் பார்க்க எழுபவன் சுறுசுறுப்புக் காரன்; சூரியன் பார்க்க எழுபவன் நோய்நொடிக்காரன் "
வேலை இருந்தாலும், இல்லாட்டியும் அதிகாலையில் எழுவது திடகாத்திரமான உடலுக்கு ஆணிவேர்.
விழித்துவிட்ட பின்னர் படுத்தே இருப்பது ... நம் உடக்கு நாமே மூட்டிக் கொள்ளும் தீ போன்றது.
காலையில் எழுந்தவுடன் நீர் அருந்தும் பழக்கத்துக்கு ஆட்படுத்திக் கொண்டால் ... தேகம் ஒருவித பளபளப்பு பெறுவதோடு, பழுதில்லா புது இயந்திரம் போல தங்குதடையின்றி
இயங்கும்.
அதன் காரணமாக, உள்ளம், மலர்ச்சி மற்றும் குதுகலம் பெறல் போன்றவை துளிர்ப்பதை நுட்பமாக உணரமுடியும்.
காலை சூரியனொளி காது துவாரம், தொப்பூள் மற்றும் கண் ஆகிய பிரதேசங்களில் ஊடுருவச் செய்ய வேண்டும்.
The Amiable Aid Foundation has developed an ideal destination for health and wellness tourism in Tamilnadu, the sacred land of the Tamil Siddhars. The campaign is called GITGIOH!