28/04/2024
ஆனானப்பட்ட.. நீலகிரி மாவட்டத்திலேயே இப்படியா? ஊட்டியிலும் நம்ப முடியல.. உச்சி வெயிலில் இது வேறயா?
ஊட்டி: கோடை வெயில் கொளுத்தி கொண்டிருக்கும்நிலையில், காய்கறிகள், பழங்களின் வரத்துக்களும் தமிழக மார்க்கெட்டுகளில் அதிகரித்துள்ளன.
கடந்த டிசம்பர் வரை பருவமழை, காலநிலை உள்ளிட்ட காரணங்களினால் பல்வேறு விளைபொருட்களின் விலையானது, தமிழகமெங்கும் தாறுமாறாக எகிறிவிட்டது.. ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உணவுத் தானியங்களின் விளைச்சலும் குறைந்துவிட்டதால், மளிகைப் பொருட்கள், காய்கறிகளின் வரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
காய்கறிகள்: கடந்த ஜனவரி மாதத்துக்கு பிறகு இந்த நிலைமை ஓரளவு மாறி வருகிறது.. தற்போது, கோடை காலம் துவங்கப்பட்டுள்ள நிலையில், காய்கறிகள், பழங்களின் வரத்துகள் கோயம்பேடு உள்ளிட்ட மார்க்கெட்டுகளுக்கு அதிகமாக வரத்துவங்கியுள்ளன..
ஆனால், நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை எகிறி உள்ளது.. தேயிலை தொழில் மட்டுமே நீலகிரியில் பிரதானமாக இருந்தாலும், இதற்கு அடுத்தபடியாக மலைத்தோட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.. வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால், விவசாயிகள் தங்களது விளைநிலங்களை தரிசாக வைத்திருந்து, ஜனவரி மாதம் முதல்விவசாயத்தை ஆரம்பிப்பதுவழக்கமாகும்.
கோடை சீசன்: அப்படித்தான் இந்த முறையும் விளைநிலங்களில் பயிர்களை பயிரிட்டிருக்கிறார்கள்.. ஆனால், தற்போது, கோடை சீசன் நீலகிரியில் துவங்கிவிட்டது.. வழக்கத்துக்கு மாறாக வெயில் கொளுத்தி வருகிறது..இதனால், பசுமையான புல்வெளிகள் வறண்டு வருகின்றன.. குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன... இதனால், தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள விளைபொருட்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை..தண்ணீர் இல்லாமல், விளைபொருட்கள் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. எனவே, காய்கறி வரத்தும் வெகுவாக குறைந்து கொண்டிருக்கிறது..
சமவெளி பகுதி: நீலகிரியை பொறுத்தவரை, ஒருசில வகையான காய்கறிகள் மட்டுமே பயிரிடப்படும்.. மற்ற நாட்டுக்காய்கள் உட்பட அனைத்துமே சமவெளி பகுதியில் இருந்துதான் கொண்டுவரப்படும். அதனால், காய்கறிகளின் விலையானது, நீலகிரியில் அதிகரித்துள்ளது.. அதிலும் நீலகிரியிலேயே விளையக்கூடிய காய்கறிகள் விலை எகிறி உள்ளது, மாவட்ட மக்களை கலங்கடித்து வருகிறது.
ஒரு கிலோ பீன்ஸ் ரூ.200, அவரை-ரூ.180, கேரட்-ரூ.80, உருளைக்கிழங்கு ரூ.80, முருங்கைக்காய் ரூ.200 அவரை-ரூ.180, கேரட்-ரூ.80, உருளைக்கிழங்கு ரூ.80, முருங்கைக்காய் ரூ.200, ப்ரோக்கோலி ரூ.240 என்று விற்கப்படுகிறது.. விளைச்சலும், வரத்தும் குறைந்துவிட்டதால், காய்கறி மண்டிகளிலும் காய்களின் விலையும் எகிறிவிட்டது.கோடை காலம் இன்னும் முழுமையாக முடியாத நிலையில், அக்னி நட்சத்திரம் இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில், கடும் வறட்சி இனிவரும் நாட்களில் இருக்கும் என்கிறார்கள்..
வெயில் தாக்கம்: ஏற்கனவே, வெயில் தாக்கம் இந்த முறை அதிகமாகும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள நிலையில், வறட்சியும் அதிகமாகும் என்கிறார்கள்.. இதனால், காய்கறிகளின் விலையும் தாறுமாறாக எகிற வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கலங்கி சொல்கிறார்கள்..
பல முக்கிய காய்கறிகளை விளைவித்து, கோயம்பேடு வரை சப்ளை செய்யப்படும் நீலகிரியில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவது, மாவட்ட மக்களை பீதியடைய செய்து வருகிறது.. எனவே, தமிழக அரசு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்க ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென நீலகிரி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.