Save Bahour Lake

Save Bahour Lake The second largest irrigation tank of Pondicherry, this is facing threats from unmindful tourism projects. Join hands to protect this beautiful tank!!

புதுவையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள "பாகூர்", மாநிலத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் "அழகிய சதுர்வேதி மங்கலம்" என இவ்வூர் அழைக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் உள்ள ஏரிகளில் பாகூர் ஏரி 2வது பெரிய ஏரியாகும். 1762 ஹெக்டர் பரப்பளவும் 3.60 மீ உயரமும் கொண்ட இந்த ஏரியில் சேமிக்கப்படும் நீர் அப்பகுதி விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஏரி புதுச்சேரி அரசின் பராமர

ிப்பில் இருந்து வருகிறது.

புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் உள்ள பாகூரின் மையப் பகுதியில் "ஸ்ரீ மூலநாத சுவாமி கோயில்" சோழ மன்னர்கள் காலத்தில் நிர்மானிக்கப்பட்டது.

பழங்கால நூல்களில் பாகூரின் பெயர் "வாகூர் நாடு" என அழைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலானது முந்தைய காலத்தில் மூலஸ்தானம் உடைய பெருமானடிகள், பரமேஸ்வரா என அழைக்கப்பட்டு பின்னர் மூலநாத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் பண்டைய கால கல்வெட்டுகளும் உள்ளன. குறிப்பாக 10-ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த ராஷ்ட்ரகூட மன்னர்கள் காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சோழ மன்னர்களை போரில் தோற்கடித்த ராஷ்ட்ரகூட மன்னர் கிருஷ்ணா காலத்தில் நடந்த நிகழ்வுகள் கோயில் கல்வெட்டுகளாக செதுக்கப்பட்டுள்ளன.

சோழர் கல்வெட்டுகள் ஆதித்தய சோழன் காலத்தில் செதுக்கப்பட்டவை. பல்லவ மன்னர்கள் ஆட்சிக் காலம் குறித்த பழமையான செப்பேடும் இக்கோயில் மூலம் கண்டெடுக்கப்பட்டது.

இதன் மூலம் பாகூர் சிறந்த கல்வித் தலமாக விளங்கியதை அறிய முடிகிறது. இக்கோயிலில் ஜூன் மாதம் நடைபெறும் தேர்த் திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

தொல்லியல் துறை கட்டுப்பாடு.
பாகூர் மூலநாத சுவாமி கோயில் தேசிய நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டு, மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கோயில் பூஜைகள், புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் நடைபெறுகின்றன.
இத்தலத்தில் பிரதோஷம், சனிப்பெயர்ச்சிக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக இங்குள்ள பொங்கு சனிபகவான் சன்னதி பிரசித்தி பெற்றதாகும்.
இக்கோயில் தஞ்சாவூர் கோயிலுக்கு முன்பு கட்டப்பட்டது என்ற சிறப்புடையது.

பாகூர் ஏரி 08.01.2025
09/01/2025

பாகூர் ஏரி 08.01.2025

பாகூர் ஏரி ஆக்கிரமிப்பு நடவடிக்கை தேவை
15/09/2024

பாகூர் ஏரி ஆக்கிரமிப்பு நடவடிக்கை தேவை

04/09/2024

Puducherry state Bahour commune. Kuruvinatham village Tenpennai river in sitter dam in the middle night lorry TATA at and tempo van are lifting the illegal sand.

And then in Soriyankuppam village near the burial ground both ways inside of the thenpennai river lifting the sand by the lorry.

The Revenue department
P. W. D department and the police department don't take action.
Two years ago fiction the check post on the kuruvinatham Tookkypaalam and periyar Nagaraj. Now that check post is not functioning.
So the thefting persons are lifting sand and sale on the Tavalakuppam and Puducherry town.

Svarnim Puducherry, Sri Aurobindo Society
24/07/2024

Svarnim Puducherry, Sri Aurobindo Society

13/06/2024
இந்த ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை
10/06/2024

இந்த ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை

புதுச்சேரியின் நெற்களஞ்சியம் பாகூர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இங்கு விளைவிக்கப்படும் நெல்லை விற்பனை செய்யமுடியாமல்...
27/05/2024

புதுச்சேரியின் நெற்களஞ்சியம் பாகூர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இங்கு விளைவிக்கப்படும் நெல்லை விற்பனை செய்யமுடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். புதுச்சேரி மார்க்கெட் கமிட்டியின் சார்பாக கன்னியக்கோயிலில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஒன்று உள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு இதனால் ஒரு பயனும் இல்லை. நவரை அறுவடை செய்யப்படும் இந்நேரத்தில், இதுவரை ஒரு மூட்டை நெல் கூட இங்கு வியாபாரம் ஆகவில்லை. வியாபாரிகள் நெல்லை விவசாயிகளின் நிலத்திற்கே சென்று குறைந்த விலைக்கு வாங்குகிறார்கள். இதனால் மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதில்லை. ஒரு சில விவசாயிகள் இங்கிருந்து தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு நெல்லை கொண்டு போய் விற்பனை செய்ய வேண்டிய சூழல் நிலவுகிறது. வியாபாரமே நடக்காத கன்னியக்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒரு கண்காணிப்பாளர் உட்பட மொத்தம் 7 பேர் வேலை செய்கின்றனர். *யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்தறீங்கனு* விவேக் டயலாக் தான் ஞாபகம் வருகிறது. வியாபாரிகளை கன்னியக்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு வந்து கொள்முதல் செய்ய புதுச்சேரி மார்க்கெட் கமிட்டியின் செயலர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்திய உணவுக் கழகம் மூலமாக மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும். அதற்காக விவசாயிகளுக்கு ஒரு கிலோவிற்கு ரூ 2 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று வேளாண் அமைச்சர் அறிவித்தார். ஆனால் கன்னியக்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அதற்குண்டான எந்த ஏற்பாட்டினையும் இதுவரை வேளாண்துறை செய்யவில்லை. கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகம் தற்போது விவசாயிகளுக்கு அரசு அறிவித்த எந்த திட்டத்தினையும் செயல்படுத்துவதில் மெத்தனப் போக்கினை கடைபிடிக்கிறது. எனவே மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் உடனடியாக இதில் வேளாண்துறைக்கு உரிய நடவடிக்கை எடுக்கஉத்தரவிட்டு விவசாயிகளுக்கு உதவிட கேட்டுக்கொள்கிறோம்.

V. சந்திரசேகர்
தலைவர்
பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு
பாகூர்

பாகூர் பகுதியில் தொடர்ந்து பறவைகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அரசு மற்றும் வனத்துறை...
10/04/2024

பாகூர் பகுதியில் தொடர்ந்து பறவைகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அரசு மற்றும் வனத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

பாகூரில் மரம் வெட்டி கடத்தல் தொடர்கிறது.
02/01/2024

பாகூரில் மரம் வெட்டி கடத்தல் தொடர்கிறது.

14/09/2023

To

The Hon'ble Lt. Governor

Raj Nivas

Govt of Puducherry

The Chief Secretary

Govt. of Puducherry

The Secretary (Revenue)

Govt of Puducherry.

The Secretary (Agriculture)

Govt of Puducherry.

The Registrar

National Green Tribunal

Chennai

Tamilnadu.

Dear Madam/Sirs,

Bahour is the rice bowl and watershed of Puducherry which remains to be one of leading agriculture spaces as well as having prime water bodies which gets filled up on an yearly basis without fail unlike other regions of the district. Ultimately, since the groundwater of Puducherry is getting depleted month after month and year and after year, the water bodies in Bahour, the agricultural lands in Bahour holds the key for future water security for Puducherry as agricultural lands when converted into non-permeable non-agricultural use prevents ground water recharge as well as accelerates draining of rainwater into the Bay of Bengal for lack of water to stay and spread and flow on a slower rate.

The new NH bypass passing through Bahour has instigated a number of illegal real=estate mafia in the region and prime agricultural lands are being sold off as plots with no approval from the Administrator (Hon'be Lt.Governor) nor by the statutory authorities and departments including Departments of Agriculture or Revenue for that matter. These real-estate plots are also being illegally developed at the cost of natural flow of rain water blocking existing irrigation channels and the PWD Irrigation Department officials are also turning a blind eye to this fast pace of illegal land-alienation and appropriation of irrigation system by real-estate mafia.

This is to request Her Excellency the Lt. Govenor and the responsibile Secretaries to immediately look into this matter and issue standing orders stopping all sales/registration of agricultural land as plots or even as agricultural land (most plots are being illegally registered as agri-lands, but with open creation of layouts in broad daylight without any approvals). A heavy rain will create havoc as these plots illegally have encroached upon existing wide irrigation/drainage channels.

We also as a farmers' organization and not having the wherewithal to file independent PILs on this matter, request the Hon'ble Courts of this country including the Registrar of the Hon'ble National Green Tribunal, Chennai Regional Court to take suo-moto notice of this issue and direct the authorities to immediately curb the ongoing alienation of prime paddy fields which will ultimately lead to choking of water channels and water bodies and thus will create irreparable loss to the water security of Bahour and Puducherry.

By not acting on this day-light robbery of the land and water systems, we will be committing an inter-generational robbery of the rights of our future generation and thus we plead that immediate action may kindly be taken on this matter,

With Sincere & Kind Regards,

V. Chandrasekhar

President,
Bangaaru Vaickal Neeraadhara Koottamaippu
No.64, East Street, Bahour
Puducherry-607402.

பாகூர் பகுதி நிலத்தடி நீர் ஆதார பாதுகாப்பிற்காகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் மணல் கொள்ளை தடுக்கவும் பாகூர் ஏரிய...
14/09/2023

பாகூர் பகுதி நிலத்தடி நீர் ஆதார பாதுகாப்பிற்காகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் மணல் கொள்ளை தடுக்கவும் பாகூர் ஏரியை அதன் வாய்க்கால்களை பாதுகாக்கவும் தொடர்ந்து பாடுபட்டு வந்த சந்திரசேகர் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதற்காக பல மாதங்களாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் வரும் அவருக்கு மேல் சிகிச்சைக்காக பண உதவி தேவைப்படுகிறது.

அவருக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வோம்.

Chandirasekar V wants to raise funds for Medical Fundraiser for Chandirasekar V: Help Save a Life. Your donation has the power to help them move closer to their goal amount. Please contribute.

கிராமப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு தோண்டும் விவகாரம் தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனு...
17/07/2023

கிராமப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு தோண்டும் விவகாரம் தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

17/05/2023

Illegal Cutting of age-old palm trees on Olandai Eri boundaries for road construction - Giving pattas in Eri Vaickal- violation of Supreme Court Orders - Urgent action - Requested.

To
The Hon'ble Lt.Governor
Raj Nivas
Govt. of Puducherry.

The Chief Secretary
Govt. of Puducherry.

The Secretary (Revenue) cm District Collector
Govt. of Puducherry.

The DCR (North)
Govt of Puducherry.

The Deputy Conservator of Forests
Govt. of Puducherry.

Dear Madam,

This is to bring to your immediate attention that currently age-old palm trees on the Olandai Eri (which comes under the custodianship of the Local Administration Department ) which shows the natural boundary of the Olandai Eri are being cut down and a road is being constructed encroaching into the water body. Primarily there are serious offences being committed here due to :

Cutting down of age-old palm trees which are integral part of the waterbody precincts (boundary/bund) and which are planted by our ancestors to strengthen the tank bund. The Forest Department is hereby requested to take immediate action against any government or private people who have done this grave offence and arrest them on existing orders of the Hon'ble Supreme Court after getting permissions from the Puducherry Administrator, the Hon'ble Lt.Governor. It is absolutely shameless on the part of the concerned departments to go ahead and cut these trees and hence destroy the strenth and integrity of a water body created thousands of years ago. It is completely deplorable, condemnable and extreme cruelty to a natural heritage and puts the entire government on a shame of maximum degree.
The portion which has been a natural vaickal / drainage channel which again is an integral part of the Water body has been or is in the process of being issued as house-pattas and this again is a state-sponsored crime teasing all the existing rules and Hon'ble Supreme Court orders which prohibits any water body or its structures /precincts being converted into any other land use. Any construction either permanent or temporary should be immediately removed and any road or any other construction either by the state or by any private parties should be abandoned with immediate effect as it violates existing rules of the nation reiterated by the Hon'ble Supreme Court.
I would also like to point out another press release which appeared in local press which states that the state assembly would discuss the possibilities of converting wetlands/water bodies/channels into house pattas in case if they are not currently being used. Being knowledgeable administrators and not being political leaders who have short-sighted vested interests on only pleasing their voters and not the larger ecological interests or the welfare of the UT as a whole, it is the duty of the bureaucracy to tell the elected government that rules are rules and Supreme Court orders are to be implemented in letter and spirit and that no official machinery can or should go against the laws of the nation. Thus it may be pointed out that though a water body may not have water or though a water channel has no flowing water (because the same political patronage would have encroached on the upper parts of the channel) they do not cease to be water bodies or channels and when it rains, the water would know where to flow and rest as historically these are designed to carry water and store water.
Thus any move to convert the historical Olandai Eri or its parts or bunds into anything like house pattas or roads is an offence of unpardonable levels and should be immediately reverted back. It may also please be noted that as for common property resources like water bodies and their integral systems, the role of the government is only to protect them and they have no rights whatsoever to convert any such natural historic heritage water bodies to anything else for short-sighted political mileage.
Looking forward to hearing from each and every concerned departments and officials involved and hoping that there are still committed officers with integrity to protect the limited water resources of Puducherry,

With Sincere & Kind Regards,

V. Chandrasekhar
President,
Bangaaru Vaickal Neeraadhara Koottamaippu
No.64, East Street, Bahour
Puducherry-607402.
Mob: 97516-81227

புதுச்சேரி அரசுக்கு நோட்டீஸ்
15/05/2023

புதுச்சேரி அரசுக்கு நோட்டீஸ்

04/04/2023
*வன்மையாக கண்டிக்கிறோம்*கடந்த ஒரு மாதமாக தவளகுப்பம் உழவர்  உதவியகத்தில் வேளாண் அலுவலர் பதவி காலியாக உள்ளதால் விவசாயிகள் ...
12/01/2023

*வன்மையாக கண்டிக்கிறோம்*

கடந்த ஒரு மாதமாக தவளகுப்பம் உழவர் உதவியகத்தில் வேளாண் அலுவலர் பதவி காலியாக உள்ளதால் விவசாயிகள் அனைவரும் சிரமப்படுகின்றனர். சென்ற மாதம் மேதகு துணைநிலை ஆளுநர் அவர்களின் உத்தரவின் பேரில் வேளாண் அலுவலர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர். வேளாண்துறை தலைமையகத்தில் பணியாற்றும் வேளாண் அலுவலர் திரு தண்டபாணி அவர்களை தவளகுப்பம் உழவர் உதவியகத்தில் வேளாண் அலுவலராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், இதுவரை அவர் தவளகுப்பம் உழவர் உதயகத்தில் பணியில் சேரவில்லை. அவரை வேளாண்துறை இயக்குனர் திரு பாலகாந்தி விடுவிக்காத காரணத்தினால் அவர் இதுவரை பணியில் சேரவில்லை. இதனால், இங்கு செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் விவசாயிகளுக்கு சென்றடையவில்லை. உற்பத்தி மானியம் வழங்க விவசாயிகளின் பயிர் பார்வையிடப்பட்டு பட்டியல் தயார் செய்யப்படவில்லை, புது விவசாய அடையாள அட்டை வழங்க AGRISTACK மற்றும் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படாமல் தேங்கியுள்ளன. இது போன்று அனைத்து விதமான விவசாய நலத்திட்டங்களும் தவளகுப்பம் உதவியகத்தில் அடங்கியுள்ள கிராமங்களை சென்றடையாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். தவளகுப்பம் உழவர் உதவியகம் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களின் தொகுதியில் உள்ளது . ஒரு சட்டப்பேரவை தலைவர் அவர்களின் தொகுதிக்கே இந்த நிலை என்றால் வேளாண்துறை எப்படி செயல்படுகிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.

வேளாண் துறை இயக்குனர் திரு பாலகாந்தி அவர்கள் எதேச்சதிகாரமாக, சர்வாதிகாரியாக விவசாயிகளின் நலனை கருதமாமல் செயல்படுகிறார் என்று பலமுறை அரசுக்கு விவசாய சங்கங்கள் முறையிட்டும் இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்பொழுது மேதகு துணை நிலை ஆளுநர் அவர்களின் உத்தரவை மதிக்காமலும், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களின் தொகுதியில் செயல்படுத்தப்பட வேண்டிய வேளாண் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் முடக்கியுள்ள திரு பாலாகாந்தி மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கும். இவரது செயலை கைகட்டி வேடிக்கை பார்க்கும் வேளாண்துறை செயலாளர் உடனடியாக தூக்கத்திலிருந்து விழித்து இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் வேளாண்துறை செயலாளர் அவர்கள் வேளாண் இயக்குனரை கூப்பிட்டு கண்டித்து மேதகு துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவினை இன்றே செயல்படுத்த வேண்டும். இதுபோன்று மேதகு துணைநிலை ஆளுநர், புதுச்சேரியின் தலைமை பொறுப்பில் இருப்பவர் பிறப்பிக்கும் உத்தரவை கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கதாகும். சட்டப்பேரவை தலைவரின் தொகுதியை புறக்கணித்து அங்கு அனைத்து திட்டங்களையும் முடக்கி வைத்துள்ள வேளாண்துறை இயக்குனர் மீது உரிமை மீறல் பிரச்சினையை எழுப்ப வேண்டும் என்று எங்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

V. சந்திரசேகர்
தலைவர்
பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு
பாகூர்

Address

Bahour Lake
Pondicherry
607402

Alerts

Be the first to know and let us send you an email when Save Bahour Lake posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share