28/10/2022
அரசின் இலவச காசி மற்றும் அயோத்தி சுற்றுலா
#சென்னை #ஐஐடி, #காசி #தமிழ் #சங்கம், #மற்றும் #பனாரஸ் #பல்கலைகழகம் #நடத்தும் #இலவச #காசி #மற்றும் #அயோத்தி #கலாச்சார #சுற்றுலா #எப்படி #விண்ணப்பிப்பது
காசி, அயோத்திக்கு இலவச சுற்றுலா: சென்னை ஐ.ஐ.டி. ஏற்பாடு.
சென்னை ஐ.ஐ.டி.யும், பனாரஸ் ஹிந்து பல்கலையும், காசி தமிழ் சங்கமம் இணைந்து 3,000 சிறப்பு விருந்தினர்கள் காசி மற்றும் அயோத்தியை பார்க்க, தமிழகத்தில் இருந்து இலவசமாக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி. வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேசிய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.,யும், பனாரஸ் ஹிந்து பல்கலையும் இணைந்து, காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளன. தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே உள்ள கல்வி, பொருளாதார, சமூக, கலாசார உறவுகளை வெளிக் கொண்டுவர இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
அடுத்த மாதம், 16ம் தேதி முதல் டிச., 20 வரை, சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது. தமிழகத்தில், 12 இடங்களில் இருந்து, கலை, இலக்கியம், ஆன்மீகம், கல்வி உள்ளிட்ட துறைகளை சேர்ந்தவர்களை, காசிக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, கோவை, ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் இருந்து, 12 நாட்களில், ரயில்களில் சிறப்பு பெட்டி அமைக்கப்பட்டு, காசிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். ஒவ்வொரு குழுவினரும் புறப்பட்டு திரும்பி வர, எட்டு நாட்களாகும்.
இந்த பயணத்தில், காசி, அயோத்தி உள்ளிட்ட இடங்களை பார்வையிடுவர். கங்கையில் படகு சவாரியும் உண்டு. பயண செலவு, தங்குமிடம் முழுவதும் இலவசமாகும்.
விருப்பம் உள்ளவர்கள், https://kash*tamil.iitm.ac.in என்ற இணையதளத்தில், உடனடியாக தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
#காசி #காசிதமிழ்ச்சங்கம்
#இந்துமதம் #காசியாத்திரை Thanks To Ra Muruganandam sir
Kashi Tamil Sangamam 2022