18/01/2021
#செங்கோட்டை நம் மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள்💐
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியை சேர்ந்த தற்காப்பு கலை மாணவ, மாணவியா்கள் முதன்மை மாநில நடுவராக தேர்ச்சி பெற்றனா்.
கடந்த வாரம் சென்னை பூந்தமல்லியில் வைத்து தமிழ்நாடு ஓவீனம் தற்காப்பு கலையின் சார்பில் மாநில அளவிலான தற்காப்பு கலை பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியை சேர்ந்த தற்காப்பு கலை மாணவா்கள் மைதீன்அன்வா், முகம்மதுதவுபீக், அப்துல்கலாம்ஆசாத், முகம்மதுயாசர்அராபத், நதீம்சேட், கோகிலாதேவி ஆகியோர் கலந்து கொண்டு முதன்மை மாநில போட்டி நடுவராக தேர்ச்சி பெற்றனா்.
தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியா்களை தென்காசி மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவா் அல்ஹாஜ் உஸ்தாது, சேக்மதார்(மலேசியா) ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைமை பயிற்சியாளா் ஷிபு, ஹாஜி, ஜாகீர்உசேன், (3ஸ்டார் வெப்பன் பிளாக்பெல்ட்) பயிற்சியாளா் முகம்மதுமுஸ்தபா(பிளாக் பெல்ட்) மற்றும் மாணவ, மாணவியா், பெற்றோர் பொதுமக்கள் உள்பட பலா் பாராட்டி வாழ்த்தினா்.