JETBUS TRAVELS

JETBUS TRAVELS An ISO 9001:2015 Certified Company The Intercity Bus company mainly deemed to provide 100% comfort and customer satisfaction.
(27)

15/10/2022

😍❤️ மாதச் சம்பளம் வாங்காத சென்னை அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் டி.வி.தேவராஜன் MBBS, MD, FRCP(G), D.Sc.,

மென்மையான குரல், நடு இரவில் அழைத்தாலும் கோபம் வராத குணம், நோயாளிகள் சொல்வதைப் பொறுமையுடன் கேட்கும் பண்பு, இவை அனைத்தும் ஒருங்கே பெற்றவர்தான் டாக்டர் டி.வி.தேவராஜன்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று, கடந்த நாற்பது ஆண்டுகளாக ஒரு ரூபாய் பணம் கூட வாங்காமல் மாணவர்களுக்கு மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் (General Medicine,Cardiology)

பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் இந்தப் பேராசிரியர்.

டாக்டர் டி.வி.தேவராஜன், பி.சி. ராய் (சிறந்த ஆசிரியருக்கான விருது), பத்மஸ்ரீ விருது பெற்றவர். ராய் விருதை அன்று வழங்கியவர் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம். பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து பெற்றார்.

""ஏன் பணம் வாங்குவதில்லை?'' என்று கேட்டோம்:

""ஆரம்பத்தில் இருந்தே பணம் எனக்கு ஒருபொருட்டாக இருந்ததில்லை. அதனால் நான் எதோ பெரிய கோடீஸ்வரன் என்று யாரும் நினைக்கவேண்டாம். நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் தான்.

கஷ்டப்பட்டுத்தான் நானும் மருத்துவம் படித்தேன். வெறும் எம்.பி.பி.எஸ். என்றால் எந்த ஒரு பயனும் இல்லை என்று அன்றே எனக்குத் தோன்றியது. அதனால் மருத்துவத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்து, மேலும் படித்து முடித்தேன்.

(கிட்டத்தட்ட ஆங்கில எழுத்துகளில் பாதிக்கும் மேல் பட்டமாக இவர் பெயருக்குப் பின்னால் உள்ளது)

எனக்குச் சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் மருத்துவமனையில் வேலையும் கிடைத்தது. காலையில் பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு மாலையில் வரும் மக்களுக்கு வைத்தியம் பார்க்க முடிவெடுத்தேன். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது.

மாதச் சம்பளம் வாங்கினால் உன்னை எங்கு வேண்டுமானாலும் மாற்றம் செய்யமுடியும். மூன்று வருடத்திற்கு மேல் இடமாற்றம் உண்டு என்றார்கள், எனக்கோ மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி போதிப்பது தலையாயப் பணியாகப்பட்டது.

இதை விட மனமில்லை. எனவே மாதச் சம்பளம் வேண்டாம் என்று கூறிவிட்டேன். சுமார் நாற்பது ஆண்டுகளாக இன்று வரை எந்தப் பணமும் வாங்காமல் மாணவர்களுக்கு என்னால் முடிந்தவரை தொடர்ந்து பாடம் கற்றுத் தருகிறேன்.

அதில் ஓர் ஆத்மதிருப்தி. இன்று பல மருத்துவர்கள் என் பெயரை சொல்லி என் ஆசிரியர் என்று சொல்லும்போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

நான் வேலை செய்யும் அப்போலோ ஆஸ்பத்திரியில் இந்தியாவிலேயே முதன் முறையாக அட்வான்ஸ் டு ஃபீவர் கிளினிக் என்ற ஒன்றைத் தொடங்கி உள்ளேன். இதன் மூலம் 175 நோயாளிகள் இன்று வரை குணமாகி உள்ளார்கள், இந்த ஃபீவர் கிளினிக்கில் ஐந்து நாட்களுக்கு மேல் ஜுரம் தொடர்ந்து இருந்தால் பல்வேறு சோதனைகள் செய்து, ஏன் ஜுரம் தொடர்ந்து இருக்கிறது என்று கண்டுபிடித்து அதைக் குணமாக்குகிறோம்.

இரண்டு விஷயங்கள் என்றுமே எனக்கு மனநிறைவைத் தரும். அதில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது முதல் இடத்தைப் பெறுகிறது. இரண்டாவது நான் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து டெக்ஸ்ட் புக் ஆப் மெடிசின் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளிவர இருக்கிறது.

இது மருத்துவம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மிகவும் உபயோகமான நூல்'' என்கிறார் சிரித்துக் கொண்டே.

இவர் இதுவரை ஆறு புத்தகங்கள் எழுதி உள்ளார். இந்த புத்தகங்கள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

இவர் பல பல்கலைக்கழகங்களுக்கு கெüரவப் பேராசிரியராக இருந்துள்ளார். புதுச்சேரி மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு இன்றும் இவர்தான் கெüரவ பேராசிரியர். இதே போல் பல கல்லூரிகளுக்கு எக்சாமினராக சென்று வந்துள்ளார்.

இந்திய மருத்துவரில் சிறந்தவர் யார் என்ற பிஎம்ஜே விருதுக் குழுவில் ஒரு நீதிபதியாகவும் இருந்துள்ளார்.

71 வயதாகும் டி.வி.தேவராஜனின் பொழுதுபோக்கு இசை கேட்பது, நீந்துவது மற்றும் நண்பர்களிடம் பயனுள்ள விஷயங்களைப் பேசுவது. 😍❤️


14/10/2022

#வெற்றியின்_ரகசியம்

ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான் ?

பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார். பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான் "குருவே.. ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்றான். “இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்” என்றார் குரு. குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது ? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான்.

சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது ... முதல் போட்டி. சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது. எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக பையன் வெற்றி பெற்றான்.

இரண்டாவது போட்டி. அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான். அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.கடைசிப் போட்டி. எதிரே இருப்பவன் பலமுறை சேம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது. முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான். பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர், போட்டி நடத்துபவர்கள். “வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்” என்கிறார் குரு. இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான்.பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான். பார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள், போட்டியாளர்களுக்கு ஆச்சரியம். அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை.

அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான், "குருவே , நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன் ? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே “ என்றான். புன்னகைத்தபடியே குரு சொன்னார் “உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய். இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே ! உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது !”குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான். தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து ஆனந்தித்தான். நமது மனம் திறமைகளின் கடல். அதில் முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது...

அஸ்ட்ரோ
வெ.பழனியப்பன்

14/10/2022

இன்னமும் தன் குடும்பத்திற்காக ஒருவேளை உணவருந்தினால் 100 ரூபாய்க்கு மேல் ஆகும் என ஒரு டீ வடையை தின்றுவிட்டு வேலைக்குச் செல்லும் எண்ணற்ற ஆண்கள் உள்ளனர்.. அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அவர்கள் தன் குடும்பத்தின் மேல் எவ்வளவு அன்பும் காதலும் வைத்திருக்கிறார் என்று…

14/10/2022
12/10/2022

Address

Sivaganga
Sivagangai
630561

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 10pm

Telephone

7550333444

Alerts

Be the first to know and let us send you an email when JETBUS TRAVELS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JETBUS TRAVELS:

Videos

Share

Category


Other Travel Agencies in Sivagangai

Show All

You may also like