09/07/2021
⭐ எந்தந்த சுற்றுலா தளங்கள் திறந்துள்ளது ?எப்போது சுற்றுலா செல்லலாம் ?என்ன என்ன நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும் ? ⛱️🌊முழு விபரங்கள் இதோ⭐
தற்போது எல்லா மாவட்டங்களும் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது..🤗
கடந்த லாக்டவுன் முடிந்த பிறகு சுற்றுலா பயணிகள் உள்ளூர் சுற்றுலா தளங்களுக்கும் சென்று குவிந்து விட்டனர்...⛱️⛱️😎 உண்மையில் மிக கடுமையான பொருளாதார பாதிப்பில் இருந்த சுற்றுலாத்துறை சார்ந்த மக்களுக்கு இழந்ததை ஓரளவு சரி செய்ய ஒரு சிறிய வாய்ப்பாக அமைந்தது...😍 ஆனால் கடைசியில் கோரோனா பரவல் நிமித்தம் மீண்டும் அகல பாதாளத்திற்கு சென்று விட்டது..😔
தற்போது பெரும்பாலான மக்கள் மீண்டும் சுற்றுலா செல்ல ஆயத்தமாகி விட்டனர்...தினமும் நிறைய பேர் என்னிடம் தொடர்பு கொண்டு விசாரிக்கிறார்கள்...☎️ அதெற்கான முழுமையான பதில் இதோ👍
⭐ எந்தெந்த சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டுள்ளன?
தற்போது வரை கிடைத்த தகவல் படி கள நிலவரம் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க ஆரம்பித்து விட்டனர்🤗🤗😍😍 ஆனால் சுற்றுலா தளங்களில் உள்ள சுற்றிபார்க்கும் இடங்கள் திறந்தும் திறக்காமல் காணப்படுகின்றன...😷குறிப்பாக தமிழ்நாடு முதற்கொண்டு எல்லா சுற்றுலா தளங்களிலும் அதன் அனைத்து தங்குமிடங்களிலும் தங்கலாம் ஆனால் சுற்றி பார்க்கும் இடங்கள் அரசால் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. ⛱️ உதாரணமாக : ஊட்டியில் செல்வதற்க்கு முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, அனைத்து அழகிய ரிசார்ட்களிலும் தங்கலாம்..ஆனால் சுற்றிபார்க்கும் இடங்கள் திறக்கப்படவில்லை... 😗
🌿 கேரளாவிலும் இந்த சூழ்நிலை தான் அரசால் பராமரிக்கப்படும் சுற்றுலா பகுதிகள்🌺, பூங்காக்கள், அருங்காட்சியாகங்கள்⚱️, திறக்கபடவில்லை ஆனால் தனியாரால் நடத்தப்படும் ஆலபுழை படகு வீடு🛥️ போன்றவை செயல்பட தொடங்கி விட்டன..👍😎😀இதே நிலைதான் கர்நாடகா, கோவா, டெல்லி, காஷ்மீர் போன்ற பெரும்பாலான மாநிலங்களில் நீடிக்கிறது.
✍️ குறிப்பு: அந்தமான் போன்ற சில தீவுகளில் சுற்றுலா பயணிகள் இன்னும் அனுமதிக்கபடவில்லை தடை நீடிக்கிறது.
⭐ 🌍 ✈️வெளிநாடு சுற்றுலா செல்லலாமா ?
கடுமையான கடந்த காலங்களிலும் சுற்றுலா பயணிகளை வரவேற்ற🙏 துபாய், மாலதீவுகள் போன்ற நாடுகள் கூட தங்கள் கதவை அடைத்து விட்டன..😷 ஆனாலும் சில ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனுமதிக்கின்றன ஆனால் விமான கட்டணங்கள் மிக மிக அதிகம்💰😳 மற்றும் அதிகமாக விமான சேவைகள் கேன்சல் ஆகிறது...⛔ எனவே கடைசி நிமிடம் கூட உங்கள் சுற்றுலா பாதிக்கப்படலாம்..😔 எனவே வெளிநாட்டு பயணங்களை அடுத்த வருடம் தள்ளி வைப்பது சிறந்தது 👍😎
⭐ யார் தற்போது சுற்றுலா செல்லலாம் ?
சுற்றுலா பயணிகளில் இரண்டு வகை உள்ளனர்... ☝️ ஒன்று ஒரு சுற்றுலா தளத்திற்கு சென்றால் தங்குமிடங்களை பெரிது படுத்தாமல் கையில் ஒரு நீண்ட லிஸ்ட் வைத்துக்கொண்டு அனைத்து இடங்களையும் சுற்றிபார்த்து விட வேண்டும்... 🤓 சும்மா ரூம்ல கிடைக்கவா இங்க வந்தோம்.. இதுக்கு நாம வீட்லயே இருந்திருக்கலாமே என்பவர்கள்...☺️ இந்த வகையினராக👉 நீங்கள் இருந்தால் தயவுசெய்து சுற்றுலா செல்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது இது உங்களுக்கான நேரம் இல்லை.🙏😎
அடுத்த வகை பயணிகள் சூப்பரா ஒரு ரிசார்ட் எடுக்கணும்😍 அறக்க பறக்க எங்கயும் சுத்தமா புது இடம்🏡 , ஜில்லான கால நிலை☃️ , புதிய உணவு 🌮🥗🍲என குடும்பத்துடன் ரிலாக்ஸாக அனுபவிக்க நினைப்பவர்கள்😎 . 100% இது உங்களுக்கான நேரம்...👍 நீங்கள் கிளம்பலாம்....🏁 அதிலும் பல அழகிய ரிசார்ட்கள் அசத்தலான சலுகைகளை தற்போது வழங்குகிகொண்டிருக்கின்றனர்..😍
⭐ தற்போதய சூழலில் சுற்றுலா செல்ல எது சரியான மாதம்?
ஆகஸ்ட் 1ம் தேதிக்கு மேல் உங்கள் பயணங்களை திட்டமிடுங்கள்.. வட இந்தியாவை பொறுத்தவரை செப்டெம்பர் கடைசியில் திட்டமிடுவது சிறந்தது தற்போது அங்கு கடுமையான மழை காலம் ஆரம்பமாகபோகிறது.
வெளிநாட்டு சுற்றுலாக்களை ஜனவரி 2022ல் இருந்து திட்டமிடங்கள்👍
⭐ ஈ பாஸ், கோரோனா நெகட்டிவ் ரிசல்ட் மற்றும் தடுப்பூசி கட்டாயமா ??😷😷
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு நம் மாநிலத்தை சார்ந்தவர்கள் செல்வதற்கு மேற்கொண்ட எதுவும் கட்டாயம் ஆக்கவில்லை... 👍 ஆனால் பிற மாநில சுற்றுலா தளங்களுக்கு செல்லவேண்டுமானால் ✍️ஈ பதிவு, மற்றும் கோரோன நெகட்டிவ் ரிசல்ட்📃 அல்லது இரண்டு 💉தடுப்பூசியும் போட்டதிற்கான சான்றிதழ் இந்த இரண்டில் ஒன்று கட்டாயம்⚖️. இது இருந்தால் மட்டுமே மாநிலத்தின் எல்லைக்குள்ளும், தங்கும் விடுதிகளுக்குள்ளும் அனுமதிப்பார்கள்.
📌இதில் தடுப்பூசி இலவசமா கிடைக்கிறது
📌கோரானா டெஸ்ட் ரிப்போர்ட் ரூ.800ல் இருந்து ரூ.1200 வரை
இதில் இருந்து எது நமக்கு சிறந்தது என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்😎
⭐ தற்போதைய சூழ்நிலையில் சுற்றுலா செல்லும் முன் கட்டாயம் கடைப்பிடுக்க வேண்டிய நடைமுறைகள் ?? ✍️✍️
1. கட்டாயமாக இரண்டு தடுப்பூசிகளும்💉 எடுத்த பின் சுற்றுலாவிற்கு கிளம்புது மிக மிக சிறந்தது.. இதனால் நீங்களும் பாதுகாப்பாக உணர்வீர்கள்..🤗சுற்றுலா துறையில் பணியாற்றும் நபர்களும் தைரியமாக உங்களை அணுகுவார்கள். ஒரு தங்கும் விடுதியின் மூலம் கோரோனா பரவியது கண்டுபிடிக்க பட்டால் நாள் வரையின்றி அரசால் அதனை மூடும் சூழ்நிலை கூட ஏற்படலாம்..😔
2.கொஞ்சம் விலை அதிகமாக இருந்தாலும் தரமான தங்கும் விடுதிகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது.🏣🏡 உங்கள் அறைகள் தினமும் sanitize😷 செய்யபடுமா மற்றும் பெட் கவர் மற்றும் பில்லோ கவர் தினமும் மாற்ற படுமா என்பதை முன்பே கேட்டு உறுதிப்படுத்தி கொள்வது சிறந்தது 👍
3.உணவகங்களில் சென்று சாப்பிடுவதை தவிர்க்கலாம் பெரும்பாலான சுற்றுலா தலங்களில் தற்போது Swiggy & Zomoto போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள்🍲🌮🥗 வந்து விட்டன. அல்லது ஒரு நபர் சென்று வாங்கி வருவது சிறந்தது. நீங்கள் தங்கும் விடுதிகளில் எப்போதும் விலை சற்று அதிகமாக இருக்கும்... ஆனால் நீங்கள் மூன்று வேளை உணவு எடுக்கும் போது நீங்கள் அவர்களிடம் நிச்சயம் பேசி சலுகைகள் பெறலாம்👍😎
உங்கள் அன்பு நண்பன்❤️
Tamilnadu Travelman
ஜாண்லின்