20/05/2023
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் IAS அவர்கள் கடந்த 15.06.2021 அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொறுப்பேற்று முதல் அவர் தஞ்சை மாவட்டதிற்கும் தஞ்சை மக்களுக்கும் செய்த சாதனைகள் வளர்ச்சி பணிகள்....
*2021 கொரோனா காலத்தில் மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவ முகாம்.
*அனைத்து பொது சுகாதார நிலையைங்களில் கொரோனா தடுப்புசி கிடைக்க வழிசெய்தார்.
* கொரோனா இரண்டாம் அலையில் போது தஞ்சை மாவட்டத்தை கொரோனா பாதிப்பு இருந்து கட்டுக்குள் வைத்திருந்தது.
*தஞ்சாவூர் விவசாய மக்கள் மூன்றாம் போகம் விவசாயத்தை செய்வதற்கு உறுதுணையாக இருந்தார்.
*தஞ்சையில் நஞ்சை என்ற திட்டத்தின் உளுந்து விவசாயம் தின் மூலம் ரூ 163 கோடி விவசாயத்தில் வருவாய் கிடைக்க வழிசெய்தார்.
*பழங்குடியினர் மக்கள் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழங்குடியினர் மக்கள் சாதி சான்றிதழ் வழங்கி அவர்களின் பிள்ளைகள் படிக்கபிற்காகவும் உதவி செய்தார்.
*தஞ்சை மாவட்டத்தில் பழங்குடியினர், விளிம்புநிலை மக்கள் சுமார் 2800 பேர்க்கு இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளார்.
*தஞ்சாவூர் கலெக்டர், `செந்தமிழ் நகர்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்திவருகிறார். அதன் மூலம் பல்லாண்டு காலமாக இருக்க வீடின்றி புறம்போக்கு நிலத்தில் இருக்கும் விளிம்புநிலை மக்களைக் கண்டறிந்து இலவச வீட்டுமனைப் பட்டா கொடுத்து, அதில் வீடு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறார். 30 வருடங்களாக நடப்பதற்குச் சாலைகூட இல்லாமல் சாலை அமைத்துக் கொடுத்ததுடன் அனைத்து வசதிகளையும் செய்து தரவிருக்கும் கலெக்டரின் செயல் நாடோடிச் சமூகத்தினரான பல்லாண்டு காலமாக புறம்போக்கு நிலத்தில் குடிசைகளில், எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் துயரங்களுடன் வாழ்ந்துவரும் அன்றாடக் கூலிகள் ஏராளம். இது போன்ற விளிம்புநிலை மக்களைக் கண்டறிந்து, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியதுடன் குடிநீர், மின்சாரம், சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுத்திருக்கிறார்.
*ரெட்டவயல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையா – செல்வி தம்பதி. இவர்களின் மூத்த மகள் பாண்டிமீனா (20), நர்சிங் படித்துள்ளார். இரண்டாவது மகள் பாண்டிஸ்வரி, மூளை நரம்பியல் பிரச்சினை உடைய மாற்றுதிறனாளி. கண்ணையா கடந்த ஆண்டு நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது மனைவி செல்வி சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். மிகவும் சேதமடைந்த கூரைவீட்டில் பாண்டிமீனா, தனது தங்கையுடன் வசித்து வந்தார். இதுகுறித்து அவர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேரில் சந்தித்து தனது நிலையை எடுத்துக்கூறி உதவி கோரினார். மேலும், தான் வசிக்கும் கூரை வீட்டை புகைப்படங்கள் எடுத்து அவற்றை ஆட்சியருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்தார். இதையடுத்து, பாண்டிமீனாவின் வீட்டுக்கு நேரில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2.40 லட்சம் ரூபாயையும், தன் விருப்ப நிதியில் இருந்து 1.50 லட்சம் ரூபாயும் முதற்கட்டமாக வழங்கினார். பின்னர், தன்னார்வலர்களையும் இணைத்து நிதி உதவி கிடைக்கச் செய்தார். பேராவூரணி லன்யஸ் கிளப் சார்பில் சுமார் 1.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிதி உதவிகளின் மூலம் வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து 4-ம் தேதி அன்று காலை பாண்டிமீனாவின் வீட்டுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், புதிய வீட்டை பாண்டிமீனாளிடம் ஒப்படைத்து, அவரை ரிப்பன் வெட்ட வைத்து, குத்து விளக்கு ஏற்ற வைத்தார். மேலும், பாண்டிமீனாளுக்கும் அவரது தங்கைக்கும் புத்தாடைகளை வழங்கினார்.
*தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமலை சமுத்திரம் என்ற ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான நிலப்பரப்பு விருட்சவனம் என்ற ஒரு மரங்கள் சரணாலயம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முயற்சியால் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திருவோடு, இத்தி, சிவகுண்டலம், அத்தி, எட்டி, மாவிலங்கை, ருத்ராட்சம் என 216 வகையான 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதுபோன்று அரிய வகை மரக்கன்றுகளை வளர்த்து பராமரித்து மண் வளத்தையும் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்
பட்டுள்ளது. அதேபோல உலகத்திலேயே சிறிய ரகமான கோழி மற்றும் பெரிய கோழி இனங்களும், வாத்து, முயல், வான்கோழி போன்றவைகளும் வளர்க்கப்படுகிறது. மேலும், ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் கீழ் மீன் பண்ணை குட்டையும், காய்கறி தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயம் பெரிய அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது.
*தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மகளிர் திட்டத்தின் சார்பில் கைவினை பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை மாநகராட்சி பகுதியில் பூமாலை வணிக வளாகத்திலும், மாரியம் கோவில், கல்லணையிலும் விற்பனை அங்காடிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 35 மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் 125 குழு உறுப்பினர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர். இதில் தஞ்சை தலையாட்டி பொம்மைகள், பொய்க்கால் குதிரைகள், கால் மிதியடி, பொம்மை வகைகள், பைகள், மூங்கில் கூடைகள், பனைப்பொருட்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கத்தார்.
*தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி நிர்வாகம் இனைந்து தஞ்சாவூர் மாநகராட்சி சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டிடங்களை 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்புகளை மீட்டுள்ளார்.
*தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அருங்காட்சியகம் மாற்றியுள்ளார் அருங்காட்சியகத்தில் 7D தொழில்நுட்ப கொண்ட சிறிய திரையரங்கம், அருகில் வெளிநாடு பல பறவைகள் கொண்டு ராஜாலி பறவைகள் பூங்காவையும் உருவாக்கியுள்ளார்.
*அறிவியல் தொழில்நுட்ப கொண்ட அறிவியல் பூங்கா உருவாக்கியுள்ளார்.
*தஞ்சை மக்களின் குறைகள் மனுவை மற்றும் பெற்று திர்க்காமல் பொதுமக்கள்
அனுப்பும் (What's app, E.mail) கோரிக்கை படித்து உடனடியாக தீர்வு காண்பார்.
மேலும் தஞ்சாவூர் மக்களுக்கு பல நலதிட்டங்கள் செய்துள்ளார்.
இரண்டே ஆண்டுகளில் தஞ்சாவூர் வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்களிப்பும், சாதனையும் நம் மாவட்ட ஆட்சியர் உயர்திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் IAS அவர்கள் மட்டுமே.
★★★★★
Text Credits to : Vignesh