மண் மணம் மாறாத தேனி

  • Home
  • India
  • Theni
  • மண் மணம் மாறாத தேனி

மண் மணம் மாறாத தேனி Official மண் மணம் மாறாத தேனி Team

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் தேனி பெரியகுளம் மெயின் ரோட்டில் ''கைலாசபட்டி'' என்ற கிராமத்தின் அருகில் மலைமேல் அமைந்து...
30/11/2022

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் தேனி பெரியகுளம் மெயின் ரோட்டில் ''கைலாசபட்டி'' என்ற கிராமத்தின் அருகில் மலைமேல் அமைந்துள்ளது இந்த கைலாசநாதர் கோவில் இது சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முந்தய கோவிலென்றும், மாறவர்மன் என்ற பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது என்றும் , சோழ மன்னரால் கட்டப்பட்டது என்றும் செவிவ்ழி செய்தி உள்ள்து. இக் கோவில் தென் கைலாசம் எனவும் தென்கயிலாயம் எனவும் அழைக்கப்படுகிறது .

இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 900 அடி உயர மலை மேல் அமைந்துள்ளது .

சப்தகன்னியர்: பிராமி - மாகேசுவரி - கவுமாரி - வைஷ்ணவி - வராகி - இந்திராணி - சாமுண்டி எனப்பெயர் பெறுவர்.இவர்களுடன் வீரபத்திரை என்ற திருமேனியும்; விநாயகி என்ற திருமேனியும்; திருக்கோயில்களில் இருக்க வேண்டும் ஆனால் தெட்சினாமூர்த்தியும் ,விநாயகரும் உள்ளனர் .

ஸ்தலவிருட்சகம் அத்தி மரம் இங்கு பவுர்னமி தோறும் சட்டநாத முனி ( பதினெட்டு சித்தர்களில் ஒருவர் ) வந்து கைலாசநாதரை வணங்குவதாகவும், ஸ்தல விருட்சகத்தின் அடியில் தவம் செய்வதாகவும் கருதபடுகிறது.

சட்டமுனி வடகயிலாயம் சென்று வணங்கும் பொழுது குளிர் தாங்க முடியவில்லை ( அதனால்தான் சட்டமுனி கம்பளி சட்டை அணிந்து கொண்டிருந்தார் என்வேதான் அவருக்கு சட்ட முனி என்ற பெயர் ஏற்ப்பட்டது ) என கூறி வேண்டிக்கொண்டதற்க்கு இண்ங்க சிவபெருமான் காட்சியளித்த திருத்தலம், காட்சியளித்த சிவனார் இனி வடகயிலாயம் வந்து வணங்க இயலாதவர்கள் எம்மை இங்கே காண்லாம், இங்கு எம்மை வணங்கினாலும் வடகயிலாயம் வந்து வணங்கிய பலன் கிடைக்கும் எனவும் அருளினார். திருவண்ணாமலைக்கு அடுத்து பெரிய அளவில் கிரிவலம் நடைபெறும் திருத்தலம் ஒரே திருத்தலத்தில் கயிலாயத்தையும் ,திருவண்ணாமலை திருத்தலத்தையும் தரிசித்து வணங்கிய புண்ணியம் கிடைக்கும், இங்கு வண்ங்கி வேண்டிக்கொள்வோருக்கு உடனடியாக பலன் கிடைக்கும் .

27/11/2022

இன்று அதிகாலை பெய்த கனமழையால் போடி மெட்டில் உள்ள புலி அருவியல் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டிய காட்சி

17/10/2022

தேனியில் பெய்த கனமழையால் ஆறு போல் காணப்படும் தேனி சாலை

தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்போர் கவனத்திற்கு...வரும் 01-10-2022 அன்று முதல் தேனியிலிருந்து உப்பார்பட்டி வழி...
24/09/2022

தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்போர் கவனத்திற்கு...

வரும் 01-10-2022 அன்று முதல் தேனியிலிருந்து உப்பார்பட்டி வழியாக குமுளி செல்வோர் உப்பார்பட்டி சுங்கசாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும்....

வணிகம் அல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு மாதக்கட்டணம்(பாஸ்) ரூ315/- வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளனர்...

20/09/2022

தலையாறு அருவி, சாதாரணமாகப் பொதுமக்கள் அணுக இயலாத்தாக கருதப்படுகிறது, அருவிக்குச் செல்ல எந்தச் சாலையும் இல்லை. அருவியின் உச்சிக்குச் செல்வதென்பது சவாலான இலக்கு ஆகும். இரு மேலைநாட்டுச் சுற்றுலா பயணிகள் மலை ஏறும்போது 2006 ஆண்டு விழுந்து இறந்துபோனார்கள். இதனால் மலையேறிகள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

மஞ்சளாறு அணைப் பகுதியில் இருந்து கோடைக்காலத்தில் அருவியின் அடிவாரம்வரை செல்வது சாத்தியம். இந்த நெடுந்தொலைவு மலை ஏற்றத்தின் பாதையில் மாந்தோப்புகளும், உருளைக் கிழங்கு தோட்டங்களும் மஞ்சளாறு நீர்தேக்கத்தைச் சுற்றியும் அமைந்துள்ளன. இவற்றைக் கடந்து மேலே சென்றால் இறைவி காமாட்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாய்ந்துவரும் ஓடை சிறியதாக பளபளத்து தெரியும். இங்கு நிலவும் தொன்மத்தின்படி இங்குள்ள ஒரு மூங்கில் புதரில் அருவி அடிவாரத்தில் காமாட்சி பிறந்தார் என்றும் இதனாலேயே அவர் ”மூங்கிலணை காமாட்சி” என அழைக்கப்படுகிறார் எனவும் கருதப்படுகிறது. இந்த இடம் அம்மா மச்சு என அழைக்கப்படுகிறது. இதன்பொருள் தேக்கு மரங்கள் அடர்ந்த ஒரு தோப்பின் நடுவில் என்பதாகும்.

இந்த இடத்தில் இருந்து ஓடை வழியாக மேலே ஏற வேண்டும். சிரமப்பட்டு மேலே ஏறினால் அருவியின் அடிவாரத்தை அடையலாம். அங்கு சுற்றிலும் பெரிய பெரிய கற்பாறைகளும், சுமார் 60 மீட்டருக்கு (200 அடி) 30 மீட்டர் (98 அடி) அளவிலான குளமும் உள்ளது. திரும்பி போவதும் மிகவும் கடினமான செயலாகும். முழுமையாக ஏறி இறங்கிவர ஆகும் தொலைவு சுமார் 15 கிலோமீட்டர் (9.3 மைல்) ஆகும். மேலும் இதற்கு ஒரு முழு நாள் ஆகும்.

மஞ்சளாறு அணை என்பது மஞ்சளாறு சாலையின் முடிவில் 5.5 கிலோமீட்டர் (3.4 மைல்) தொலைவில் மாநில செடுஞ்சாலை-36 சாலையின் வடக்கில் உள்ளது. தேவதானப்பட்டி ஊரில் இருந்து காமாட்சியம்ன் கோயிலுக்கு சாலை செல்கிறது.

17/09/2022

Mullai River now

17/09/2022

Seelaiyampatti

இது எந்த இடம்?
17/09/2022

இது எந்த இடம்?

16/09/2022

Sothuparai Periyakulam Theni

Address

Theni
625531

Website

Alerts

Be the first to know and let us send you an email when மண் மணம் மாறாத தேனி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share