Wild Tourism

Wild Tourism A place for adventurous tours around​ the globe where you can enjoy life to the fullest.

அடுத்த பயணம் வாகமான்... ❤ கேரளா / தமிழக பார்டரில் மலைகளுக்கு நடுவிலான ஒரு ஊர். அவசியம் பார்க்க வேண்டிய மலை வாசஸ்தலம்.  இ...
16/01/2024

அடுத்த பயணம் வாகமான்... ❤

கேரளா / தமிழக பார்டரில் மலைகளுக்கு நடுவிலான ஒரு ஊர். அவசியம் பார்க்க வேண்டிய மலை வாசஸ்தலம். இங்க காட்டுக்குள்ள 4 வீல் ஜீப் ரைடும், விவரிக்க முடியாத புல்வெளிகளும் அதை தழுவி செல்லும் காற்றும் அவ்ளோ ரம்யம்.

மழை இல்லாத, குளிர் கொண்ட மேகம் நம்மை மொத்தமா தழுவிக்கிற ஒரு இடம். சொர்க்கம் போன்ற அழகு பிரதேஷம்.

ரோடும் நல்லாருக்கும். நாம பயணம் போற பெரியார் நீர்பிடிப்பு பகுதிகளும் ஆட்கள் நுழையாத அடர்ந்த காடும் பெரும் போதை... !பைக் ரைடர்ஸ் தவற விடக்கூடாத பாதை இது. அட்டகாசமான அருவியும், ஜீப் ரைடும், அவசியம் அனுபவிக்க வேண்டிய ஒன்று..

வாங்க போய்ட்டு வரலாம். ❤

2 நாள், ஒரு ஸ்ட்ரெஸ் ப்ரீ பயணமாக இருக்கும். நாள் 27,28 ஜனவரி.

இப்போலாம் நம்ம ட்ரிப்ல அதிகமா பேமிலியா கல்ந்துக்கிறதால இந்த முறை ரிசார்ட் ஸ்டே போட்டாச்சு.. தங்கும் இடம் நல்ல வசதி இருக்கும். இணைந்து பயணிக்க விருப்பம் உள்ளவர்கள் 7358560776க்கு கால் செய்து, உங்க வருகையை உறுதி செய்துக்கலாம்.

வாங்க பயணிப்போம்.

மீண்டும் அந்தமான்....!போன முறை "மே" மாசம் போனப்போ எல்லோரும் சொன்னது சீஸன்ல அந்தமான் வேற லெவல இருக்கும்ன்னு... அதான் இப்ப...
11/10/2022

மீண்டும் அந்தமான்....!

போன முறை "மே" மாசம் போனப்போ எல்லோரும் சொன்னது சீஸன்ல அந்தமான் வேற லெவல இருக்கும்ன்னு... அதான் இப்போ சீஸன்ல ஒரு ட்ரிப்... !

குழுவாக பயணிப்பதில் பல நன்மைகள் உண்டு. புதிய நண்பர்களை சந்திப்பது, பாதுகாப்பு, புதுசா சில நாள் வாழ்தல் என்பதெல்லாம் இருந்தாலும் அதில் முக்கியமானது cost effective...! நிறைய செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும். அனைத்து எற்பாடுகளையும் நாங்க செய்துக்க நீங்க குடும்பத்தோட ரிலாக்ஸா பயணத்தை அனுபவிக்க முடியும்.

முன்கூட்டியே புக்கிங் செய்வதால ப்ளைட் டிக்கட்டில் கணிசமாக மிச்சப்படுத்தலாம் என்பதால முன்னாடியே அறிவிக்கிறேன்.

6 நாள் பயணமாக இது இருக்கும். நவம்பர் கடைசியில போறோம். அந்தமான் தீவுகளில் முக்கிய இடங்களை பார்த்துட்டு வரலாம். நல்ல வசதியான ஏசி, அறைகள், உணவு, உள்ளூர் ஏசி வாகன போக்குவரத்து, என எல்லாம் சேர்த்து 6 நாட்களுக்கு 19500 மட்டுமே + (விமான டிக்கட் தனி) குழந்தைகளுக்கு 9999/- மட்டும். மேலும் விபரங்களுக்கு 7358560776 அழைக்கலாம்.

காதலுக்கு அடுத்து பயணம் மட்டுமே நல்ல நினைவுகளை கொடுக்கும்..! அதனால பயணிப்போம் வாருங்கள்.❤

22/09/2022

மறையூர்.. தமிழக கேரள எல்லையில் காட்டுக்குள் தனி அருவி.. | ₹4000 | Trekking | contact no 7358560776 & 9080052846 | Group trip also available

மான்சூன் ஆரம்பிச்ச பின்னாடி அட்டகாசமா இருக்கு கேரளா..!எல்லா அருவியிலும் தண்ணீர் தண்ணீர்..! ஆனாலும் காட்டுக்குள்ள நடந்து ...
25/08/2022

மான்சூன் ஆரம்பிச்ச பின்னாடி அட்டகாசமா இருக்கு கேரளா..!எல்லா அருவியிலும் தண்ணீர் தண்ணீர்..! ஆனாலும் காட்டுக்குள்ள நடந்து போய் தூவானம் மாதிரி ஒரு பிரமாண்டமான அருவியை பார்க்கிறதும் குளிக்கிறதும் தனி அனுபவமா இருக்கும். கொரானாவுக்கு முன்னாடி போனது... ரொம்பவே அட்டகாசமான அனுபவமா இருக்கும்.

கேரளா டூரிசம்ல இருந்து பாதுகாப்புக்கு கார்டு கூட வருவாங்க. பயமில்லாம காட்டுக்குள்ள போய் வரலாம். தங்கவும் நல்ல ரிசார்ட் புக் செய்தாச்சு.. இனி கிளம்ப வேண்டியது தான்..

உடுமலைபேட்டையில இருந்து கிளம்பி போக ஏற்பாடு செய்திருக்கோம். விருப்பம் உள்ளவங்க 7358560776 அழைத்து புக் செய்துக்கலாம்.

நாள் : 17 & 18 செப்டம்பர், 2022. வாங்க பயணிப்போம். ❤

👣

வயநாடு பூமியின் சொர்க்கம். அடுத்த பயணம் இங்க தான். பெர்சனலா எனக்கு ரொம்ப நாள் ஆசை இந்த வயநாடு ட்ரெக்கிங் போறது. நம்ம மலை...
23/06/2022

வயநாடு பூமியின் சொர்க்கம். அடுத்த பயணம் இங்க தான். பெர்சனலா எனக்கு ரொம்ப நாள் ஆசை இந்த வயநாடு ட்ரெக்கிங் போறது. நம்ம மலைகளில் கொரானா காரணமா ட்ரெக்கிங் எல்லாம் மூட்டை கட்டிட்டாங்க.. ஆனால் இங்க மான்சூன் ட்ரெக்கிங் ரொம்ப பிரசித்தம்...!

மலை மேலே போய் அந்த "ஹார்ட்டின் லேக்" பாக்குறதும், மர பாலத்தில் நடந்து காட்டருவியில குளிக்கிறதும் மிஸ் செய்ய கூடாது ஒன்று...

இது கொஞ்சம் பிட்னெஸ் விரும்பிகளுக்கானது. பயண அனுபவம் நீளமானதாகவும் லைப் டைம் மெமரியாகவும் இருக்கும். அவசியம் வாங்க...

நாள் : 9.07.22 - 10.07.22

முன் பதிவு செய்ய 7358560776 அழைக்கவும்.

குறைவான காலடி தடங்கள், நமக்கே நமக்குனு ஒரு அருவி, வாரி தழுவிக்கிற இயற்கை இதுதா எப்பவுமே எங்களோட Wild Tourism special.. அ...
23/06/2022

குறைவான காலடி தடங்கள், நமக்கே நமக்குனு ஒரு அருவி, வாரி தழுவிக்கிற இயற்கை இதுதா எப்பவுமே எங்களோட Wild Tourism special.. அரக்க பறக்க ஓடி கூட்டதோட view points பார்த்தும் பார்க்காம இருக்க டென்ஷன் வேண்டாம்.. Book பண்ணிட்டு, ரெண்டு நாள் ரொம்பவே அமைதியா, ரெலாக்ஸடா இயற்கையோட பயணிக்கலாம்.. மாத மாதம் ட்ரிப் இருக்கும்.. முன் பதிவிற்கு : 7358560776.

12/06/2022

அந்தமானில் வரலாற்று சுவடுகளை முதல் நாள் கண்டு களித்த பின், நாள் இரண்டு நங்கள் சென்றது அழகான கல்பதர் கடற்கரை மற்றும் ஆசியாவின் மிக அழகான கடற்கரை என்ற பேர் கொண்ட ராதா நகர் கடற்கரை.

அந்தமான்!!!
கடல் மேல பயணம் கொண்டு, குட்டியான தீவுகள் சென்று பல பல புதிய அனுபவங்களையும்... அளவில்லா சந்தோஷத்தையும் தந்திருக்கும் இந்த வைல்டு டூரிசம் ட்ரிப்போட Vlog மூலமா அந்தமானை சுத்தி பார்ப்போம் வாங்க...
Contact 7358560776 for your tour arrangements and needs. we are happy to arrange your travels.
#அந்தமான் #வைல்டுடுரிசம் #ரோஸ்_தீவுகள் #நார்த்_பே_தீவுகள் #ஸ்கியூபா_டைவிங்

அந்தமான் தீவுகள் 0.3இரண்டாவது நாள் haveloc island போற ப்ளான்... ஒரு வாரத்துக்கு முன்னாடி புயல் அடிச்சு பவர் க்ரிட் வேலை ...
03/06/2022

அந்தமான் தீவுகள் 0.3

இரண்டாவது நாள் haveloc island போற ப்ளான்... ஒரு வாரத்துக்கு முன்னாடி புயல் அடிச்சு பவர் க்ரிட் வேலை செய்யாதனால எங்களுக்கு ரூம் ரெடி ஆகாம இருந்தது. ஆனால் கப்பலை விட்டுட்டா மறுபடி எப்படி போறது!? கிடைக்கிற ரூம்ல தங்கலாம்ன்னு முடிவு செய்துட்டு கிளம்பினோம். அதிர்ஷ்டவஷமா ஜெனரேட்டர் வேலை செய்ற ஒரு பீச் ரிசார்ட்ல ரூம் கிடைச்சது. எங்க ரூம்ல இருந்து நடக்கிற தூரத்துல அந்த பீச் கண்ணுல பட்டது. அவ்ளோ அழகான ஒரு கடல் வெளியை நான் பார்த்ததே இல்லை... பட்டு போல மண்ணும் ஒரு தனி நீலம் கலந்த தண்ணீரும் அப்படியே அள்ளுச்சு...!! ஆனால் அதை விட சிறந்த பீச் எக்ஸ்பீரியன்ஸ் அன்னிக்கு கிடைக்க போகுதுன்னு அப்போ எனக்கு தெரியாது....!!

இந்த பீச்ல கொஞ்சம் காலாற நடந்துட்டு வந்தோம். ஒரு மணி நேர ஓய்வுக்கு பின்னாடி நாங்க போன இடம் kalpathar beach.! அந்த பீச்சுக்கு போறதுக்கு முன்னாடியே அங்க தண்ணிக்குள்ள இறங்க கூடாதுன்னு லோக்கல் கைடு சொன்னான். ஆனா ஏன் இறங்க கூடாதுன்னு சொல்லாம விட்டுட்டான். அலையே இல்லாத மென்மையான மணலோட இருந்த அந்த கடல்வெளியை பார்த்ததும் அம்மு, 'இறங்கலாம்ப்பா ப்ளீஸ்ப்பான்னு' சொல்ல, என்னாலையும் கட்டுப்படுத்த முடியாம உள்ளே இறங்கிட்டேன். நான் இறங்குறதை பார்த்ததும் மொத்த கூட்டமும் உள்ள இறங்கிடுச்சு.......!

ஒரு மணி நேரம் ஆடி முடிச்சுட்டு மேல வந்தால் வேன்ல உள்ள ஏறக்கூடாதுன்னு பஞ்சாயத்து. அது ரொம்ப சின்ன தீவு, அங்க வர்றவங்க எல்லோரும் பீச் எக்ஸ்பீரியன்ஸ்காக தான் வாறாங்க என்பதால ஈரத்தோட வண்டிக்குள்ள ஏறினா மெய்ண்டெய்ன் பண்ண முடியுறதில்லன்னு இறங்க விடுறதில்லியாம். அவ்ளோ அழகான பீச்ல இறங்க விடலன்னு கடுப்பாகிட்டேன். கைடு, குளிக்கிறா மாதிரி வேற ஒரு பீச்சுக்கு கூடிட்டு போறேன்னு ப்ராமிஸ் பண்ணான், இதை விட அழகா இன்னொரு பீச் இருக்கும்ன்னு எல்லாம் நிஜமா அப்போ தோணலை. அந்த பீச்சோட பேர் கேட்டேன்... ராதாநகர் பீச்சுன்னு சொன்னான். என்னடா இது பீச்சுக்கு நகர்ன்னு பேர் வச்சிருக்கானுங்க பேரே மொக்கையா இருக்குன்னு நினைச்சுட்டே திரும்பி வந்தேன். ஆனால் அந்த ராதா நகர் பீச் கொடுத்த அனுபவம் என்னோட லைப்டைம்ல நான் பார்த்திராத ஒன்றுன்னு சொல்வேன்...!

நான் கோவா போயிருக்கேன். நம்ம மெரினா பார்த்திருக்கேன். திருச்செந்தூர், கன்னியாகுமரில இருந்து பாண்டிச்சேரி வரைக்கும் பல்வேறு பீச்சை பார்த்திருக்கேன். ஆனா வெயில் குறைந்ததும் சாயந்தரமா போன அந்த ராதா நகர் பீச் மாதிரி ஒன்னை என் வாழ்நாளில பார்க்கலை... என்னோட கண்களையே நம்ப முடியாத அளவுக்கு அவ்ளோ அட்டகாசமான, கலர்புல்லான பீச் அது...! குளிக்கிறதுக்கும் ஏதுவா வெகு தொலைவு வரை இடுப்பளவு ஆழத்துல, ஆற்று மண்ணை விட மென்மையான மணலோட, துளி கற்கள் இல்லாத ஒரு இயற்கை அற்புதம் அது...!

உலகத்திலேயே 7வது அழகான பீச் என்பதும் ஆசியாவின் நம்பர் ஒன் பீச் ராதாநகர் பீச் தான் என்பதும் அப்புறமா தெரிஞ்சுகிட்டேன்..! அந்த பீச்ல எடுத்த நிறைய போட்டோக்களை இணைச்சிருக்கேன். ஆனாலும் அந்த பீச்சோட அழகையும் அனுபவத்தையும். நாங்க நேரில் அனுபவிச்சதை எந்த வீடியோ / போட்டோக்களாலும் சொல்ல முடியாதுங்கிறது தான் உண்மை. நம்மை செல்லமா வருடிக் கொடுக்கும் அலைகள், திடிரென சஸ்பெண்சாக வரும் பெரிய அலைகள் என அந்த கடல் நம்மை தாலாட்டி விடுதுன்னு சொன்னா அது மிகை இல்லை. அத்தனை பேரும் சும்மா ஆடி களிச்சோம். ..! மனசே இல்லாம கிளம்பி ரூம்க்கு வந்தோம். இந்த பீச்ல கரையோரமா நிறைய பென்ச் போட்டிருக்காங்க. விளையாட்டுக்கு நடுவில ஓய்வெடுக்க நிறைய இடமும. நிழல் தரும் மரங்களும் வச்சிருக்காங்க. உடை மாற்ற அறைகளும் இருக்கிறதால வேன்ல ஏறும் போது பிரச்சனை இல்லை...!!

இரவில நாங்க தங்கி இருந்த பீச் ரிசார்ட்ல ஒரு பார்ட்டி நடந்தது .. கடற்கரையோரமா பிறந்த நாள் கொண்டாடிட்டு இருந்த ஒரு பெரிய குடும்பத்தை ரசிச்சுட்டு உறங்க போனோம். நள்ளிரவில் சிண்டூ என்னை எழுப்பி, 'அப்பா, கடல் உள் வாங்கி போய்ட்டே இருக்கு, வாங்கன்னு கூப்பிட்டான். கடல் சுமார் 70, 80 அடி நீளம் உள்ளே போயிருந்ததையும் பவள பாறைகள் வெளியே தெரிந்ததையும் பார்த்தோம். புது அனுபவமா இருந்தது. அந்தமான்ல கடல் உள் வாங்குறதை பல இடத்துல பார்க்க முடிஞ்சது...

அடுத்த நாள் Neil island போக கப்பலை பிடிக்கணும். போர்ட்ல கப்பல் கிளம்ப 15 நிமிஷம் இருந்தப்போ ஒரு பேஸஞ்சர் பேக் காணாம போயிருந்தது. அதை தேடி ஓடிய திகில் அனுபவங்களை அடுத்த பகுதியில பார்க்கலாம்...

31/05/2022

பயணங்கள் எப்பவுமே நமக்கு பல விஷயங்களை கத்துக்கொடுத்துட்டே இருக்கும்... புதிய மனிதர்களை சந்திப்பது, அந்த ஊரோட உணவுகளை ருசிப்பது, அங்க இருக்கும் பருவநிலை மாறுதல்களை ரசிப்பது பலவிதமான புது புது விஷயங்களையும் மாறுதல்களையும் அனுபவிக்க எல்லாருமே ஆசை படுவாங்க... ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கையில எதாச்சும் ஒரு இடத்துக்கு போய் சுத்தி பார்க்கனும்ன்னு ஆசை இருக்கும். ஆனா எப்படி போகனும்..எந்த எங்க தங்கனும்.. எந்த இடத்தை எல்லாம் சுத்தி பார்க்கனும்னு ஏகப்பட்ட கேள்வி வந்து தலையில உக்கார்ந்துக்கும்... ஆனா நம்ம வைல்டு டுரிசம்ல உங்க ட்ரிப்ப அழகா ஆர்கனைஸ் பண்ணி தந்து உங்கள சந்தோஷமா ட்ரிப் என்ஜாய் பண்ண வைப்பதுதான் எங்க நோக்கமே...
எப்பவும் மலைபிரதேசம் காடு அருவின்னு ட்ரிப் போய் ரசிச்சுட்டு இருந்த ரசனையில் கொஞ்சம் த்ரில் கொண்டுவர இந்த முறை கடல் மேல் பயணம்... எங்கன்னு கேக்குறீங்களா..?

அந்தமான்!!!

கடல் மேல பயணம் கொண்டு, குட்டியான தீவுகள் சென்று பல பல புதிய அனுபவங்களையும்... அளவில்லா சந்தோஷத்தையும் தந்திருக்கும் இந்த வைல்டு டூரிசம் ட்ரிப்போட Vlog மூலமா அந்தமானை சுத்தி பார்ப்போம் வாங்க...

Contact 7358560776 for your tour arrangements and needs. we are happy to arrange your travels.

#அந்தமான் #வைல்டுடுரிசம் #ரோஸ்_தீவுகள் #நார்த்_பே_தீவுகள் #ஸ்கியூபா_டைவிங்

அந்தமான் தீவுகள் 0.2 போர்ட் ப்ளேர்ல ப்ளைட் இறங்கி நாங்க வெளியேற முயற்சி செய்த சில நிமிடங்களிலேயே பெங்காலியா ஹிந்தியான்னு...
31/05/2022

அந்தமான் தீவுகள் 0.2
போர்ட் ப்ளேர்ல ப்ளைட் இறங்கி நாங்க வெளியேற முயற்சி செய்த சில நிமிடங்களிலேயே பெங்காலியா ஹிந்தியான்னு தெரியாத ஏதோ ஒரு பாஷைல மிரட்டும் தொணியில வேக்சின் போடாதவங்க எல்லோரும் இந்த வண்டியில ஏறுங்கன்னு மிலிட்டரி போலீஸ் சொன்னாங்க. கொஞ்ச நேரம் எதுவும் புரில.. அப்புறமா RTPCR டெஸ்ட் பார்த்துட்டு அனுப்பிடுவோம்ன்னு சொல்றாங்கன்னு புரிஞ்சது. அட பியூரோக்ரசிக்கு பொறந்தவனுங்களா நாங்க ஃப்ளைட் ஏறுறதுக்கு முன்னாடி தான்டா பார்த்தோம்ன்னு சொன்னாலும் அகியூஸ்ட்டை விரட்டுறா மாதிரி படுத்துனானுங்க. வடக்கனுங்களுக்கே நாம சொல்றது புரியாது, இவனுங்க மேற்கனுங்க, என்ன புரிய போகுதுன்னு நானும் சட்டுன்னு குழந்தைகளை ஏற்றின வண்டியில ஏறிட்டேன். விஜிகிட்ட மற்ற பயணிகளை ஹோட்டல் கூட்டிட்டு போக சொல்லிட்டு நாங்க இந்த வேன்ல போனோம். பெரிய ராணுவ மைதானத்துல எங்களை இறக்கி விட்டு ஒரு ஃபார்ம் பில் பண்ண சொல்லி நர்சம்மாவை வச்சு வாய்க்குள்ள மட்டும் சாம்பிள் எடுத்துட்டு எங்களை அனுப்பி வச்சுட்டானுங்க. கொரானா உச்சத்துல இருந்த சமயத்துல ஏதோ ஒரு பீடா வாயனுக்கு தோன்றின ஐடியாவா தான் இது இருக்கணும். இன்னும் அதை ராணுவ ஒழுங்கோட மாஸ்க் கூட இல்லாம நிறைவேத்திட்டிருக்கானுங்க... உஷ்ஷ்ன்னு கிளம்பி ரூம்க்கு வந்தோம்.

முதல் நாள் நாங்க போகணும்ன்னு முடிவு செய்திருந்த இடம் போர்ட் ப்ளேர்க்கு ரொம்ப பக்கத்துல இருக்க "ரோஸ் தீவு" sir hugh rose எங்கிற ராணுவ தளபதியின் பெயரால் அழைக்கப்பட்ட இந்த தீவை நம்ம "ஜீ" இப்போ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவுன்னு பெயர் மாத்திட்டார். அதனால இனிமே 'ரோஸ் ஐலாண்ட்' அன்புடன் 'போஸ் ஐலாண்ட்' என அழைக்கப்படும்.
இந்த தீவு ஒரு அட்டகாசமான இயற்கை வார்ப்பு...! கப்பல் அந்த கரையில எங்களை இறக்கியதும் அந்த கரையின் அழகை அள்ளி பருக இரண்டு கண்கள் போததுங்கிற அளவுக்கு இயற்கை தன்னோட தூரிகைகளால சும்மா வரைஞ்சு தள்ளிருந்ததை பார்க்க முடிஞ்சது. ரசிச்சு முடிச்ச உடனே அடுத்ததா கண்ல பட்டது ஜப்பான் மறைந்திருந்து ப்ரிட்டிஷ் நடவடிக்கையை கண்காணிக்க பயன்படுத்திய பங்கர்...! எனக்கு ஒரே உற்சாகமாகிடுச்சு... மனசில அப்படியே பின்னோக்கி இரண்டாம் உலகப்போர் காலத்துக்கும் அதுக்கும் முன்னே அந்தமானோட ஆரம்ப வரலாற்றுக்கும் போனது...!

'காலாபானி' என்கிற 700 கைதிகளை அடைச்சு வைக்க மிகப்பெரிய சிறைச்சாலையை போர்ட் ப்ளேர்ல கட்டிய ப்ரிட்டிஷ் அரசு, தங்கள் அதிகாரிகள் பொழுது போக்க ரசனையான ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கே சர்ச், க்ளப், லைப்ரரி, ஹாஸ்பிடல், சொகுசு மாளிகைகள், வீரர்கள் ஓய்வெடுக்கும் அலுவலகம் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சொகுசு தீவை உருவாக்கி தங்கள் காலனியின் தலைநகராக 1858'ல இருந்து 1942 வரை பயன்படுத்திய இடம் தான் இந்த ரோஸ் / போஸ் தீவு. ஆங்கிலேயர்கள் பார்த்து பார்த்து செதுக்கின ஒரு உல்லாச பூமின்னு இதை சொல்லலாம்.
1942'ல உலகப்போர் உச்சத்தில் இருந்த நேரத்துல ஜப்பான் இந்த தீவை ஆக்ரமிச்சிருந்தாங்க ஒரு 3 வருஷம் ஜப்பான் இதை சொந்தம் கொண்டாடினது. அந்த நேரத்துல அவங்க ஆடின ஆட்டம் எல்லாம் வரலாற்றுல வெளியே வரவே இல்லைன்னு தான் சொல்லணும். ஏன் அப்படி என்பது அரசியல் சார்ந்த விசயம் என்பதால அதை அப்படியே விட்டுட்டு நாம வரலாறை மட்டும் பார்ப்போம். ஜப்பான் கூட அப்போ நட்பு ரீதியாக இணைந்திருந்த நேதாஜி அவர்கள் இந்த காலகட்டத்துல தான் அந்தமானை சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக அறிவிச்சு ப்ரிட்டிஷ் தலைநகரான ரோஸ் ஐலாண்ட்ல மூவர்ண இந்திய கொடியை ஏற்றி வரலாற்று சாதனை புரிந்தார். மீண்டும் 1945'ல இங்கிலாந்தின் கை உலகப்போரில் ஓங்கினதும் தான் உருவாக்கின இந்த சொர்க்க பூமியில எவனும் இருக்க கூடாதுன்னு நீலாம்பரி மாதிரி முடிவெடுத்த மொத்த தீவு மேலேயும் நூற்றுக்கணக்கான குண்டு மழை பொழிஞ்சு தீவை மொத்தமா சிதைச்சுட்டாங்க. சர்ச்ல இருந்து க்ளப் வரை அனைத்தும் இடித்து அழித்த பின் ஜப்பானியர்களை விரட்டி விட்டு இங்கிலாந்தின் பிடிக்கு மீண்டது ரோஸ்...! அடுத்த இரண்டு வருஷத்துல சுதந்திரத்தை கொடுத்துட்டு கிளம்பினதால அந்த இடிபாடுகளை அப்படியே விட்டுட்டு போனாங்க ப்ரிட்டிஷ். டென்மார்க், ப்ரிட்டிஷ், ஜப்பான், இந்தியா என கை மாறிய ரோஸ் ஐலாண்டின் மிச்ச மீதி கட்டிடங்களை அதனுடைய ஒரிஜினல் ஓனர் இயற்கை இப்போ முழுசா ஆக்ரமிச்சுகிட்டாங்க.

இடிபாடுகளின் மேல் வளர்ந்த மரங்கள் அந்த கட்டிடங்களுக்கு தனி ஒரு கலைத்தன்மையை கொடுத்திருப்பதை வச்ச கண் வாங்காம பார்த்துட்டு வந்தேன். அந்த கட்டிடங்களை 1800 கால கட்டிட வடிவமைப்பில் கற்கள், மரங்கள் & இரும்புகள் கொண்டு கட்டிருக்காங்க. ஒரு சுவரையும் இன்னொரு சுவரையும் பிணைக்க இரும்பில் லாடம் செய்து அடிச்சு மிகப்பெரிய ஸ்க்ரூ போட்டு சுவரை இணைச்சிருப்பதை எல்லாம் பார்த்து மலைச்சு போனேன். இந்த பயணத்தில் எங்கப்பா கூட இருந்தனால (எங்க இரண்டு பேருக்கும் கட்டிட கலை மேல் தீவிர ஈடுபாடு உண்டு) இரண்டு பேரும் அந்த கட்டிடங்களை அப்படி ரசிச்சோம். (படங்கள் இணைச்சிருக்கேன்)
இப்போ இந்திய நேவி இந்த தீவை பராமரிக்குறாங்க. sir hugh rose என்னும் ஆங்கிலேயர் காலத்து கலங்கரை விளக்கம் மட்டும் இப்போ மிச்சமா நிக்குது. அதனுடைய வடிவமைப்பையும் அதை சுற்றி கடல் நீர் நிற்பதும், அதை கரை ஒட்டிய தென்னை மரங்களும் கற்பனைக்கு எட்டாத அழகுடன் நிற்கிறது. நிறைய மான்களும் மயில்களும் இப்போ வளர்க்கிறாங்க. துரதிருஷ்டவசமா இந்த தீவில் செலவழிக்க அதிக நேரம் எங்களுக்கு கிடைக்கலை அதனால சீக்கிரமா முடிச்சுட்டு அடுத்த இடமான நார்த் பே பீச்க்கு போனோம்.

நார்த் பே ஒரு வாட்டர் ஸ்போர்ட்ஸ்க்கான தளம். ஸ்கியூபா டைவிங், sea walk என இந்தியாவில் அரிதான தண்ணீர் சாகசங்களை செய்தோம். ஸ்கியூபா டைவிங்ல தண்ணீருக்கு கீழான தனி உலகத்தை காட்டுறாங்க. நமக்குன்னு ஸ்விம்மிங் சூட் கொடுத்து கடலுக்கு கீழே அழைச்சுட்டு போய் வசீகரமான மீன்கள், பவள பாறைகள்ன்னு அனைத்தையும் பார்த்து ரசிச்சோம்.
அன்றைய நாளின் மீதமிருந்த நேரத்தில் செல்லுலர் ஜெயில்க்கு போனோம். லைட்டிங் ஷோ என்ற பெயரில் நமது வரலாற்றை தப்பு தப்பா சொல்லி கொடுத்தாங்க. மீண்டும் செல்லுலர் ஜெயிலுக்கு போவோம் என்பதால அந்த ஜெயிலின் சுவாரஸியமான வரலாற்றை அப்போ பார்க்கலாம். இப்போ அடிச்சு போட்டா மாதிரி இருக்கிறதால போய் படுக்கையில் சுருள்வோம்....!
நாள் இரண்டில் திட்டம் போட்டிருந்தது havloc island. அந்த தீவை தான் ஆசானி புயல் கொத்து புரோட்டா போட்டிருந்தது. 33 பேரை அழைச்சுட்டு போறோம்.. எப்படி இருக்குமோன்னு பயம் கழுத்தில ஏறி உக்காந்துக்குச்சு.... போறதுக்கு முன்னாடியே ரூம் ரெடி ஆகலைன்னு குண்டு வந்தது... போனதும் என்ன நடந்ததுனுன்னு அடுத்த கட்டுரையில சொல்றேன்.



Contact 7358560776 for your tour arrangements and needs. we are happy to arrange your travels.

அந்தமான் தீவுகள்...!அந்தமான் ட்ரிப் அறிவிச்ச உடனே எல்லோரும் கேட்ட முதல் கேள்வி மே மாசத்துலையா?? வெயில் இருக்குமேன்னு தான...
29/05/2022

அந்தமான் தீவுகள்...!

அந்தமான் ட்ரிப் அறிவிச்ச உடனே எல்லோரும் கேட்ட முதல் கேள்வி மே மாசத்துலையா?? வெயில் இருக்குமேன்னு தான். கேட்டது சரி தான், ஏன்னா.... அந்தமானின் கடற்கரை உப்பு காற்றும், நம்ம டைம் ஜோன்க்கு 2 மணி நேரம் முன்னாடி பயணிக்கிறதால ஏற்படுற கூடுதல் வெப்பமும் ( நம்ம வாட்ச் 8 மணி காட்டும் ஆனால் உண்மையில் நம்ம ஊருக்கு அது 10 மணி...! அங்க காலை 4 மணிக்கு விடியுது ) நம்மளை ரொம்ப டயர்ட் ஆக்கும்ன்னு புரிஞ்சது. ஆனாலும் ஜூன்ல பருவ மழை ஆரம்பிக்கிற அந்தமான்ல மே கடைசியில போறோம் என்பதால கொஞ்சம் நம்பிக்கை இருந்துச்சு...

இந்த ட்ரிப் அறிவிக்கும் போதே 1 வார பயணம் என்பது எல்லோருக்கும் சாத்தியமில்லேன்னு தெரியும். சரி உள்ளது போல ஆகட்டும்ன்னு அறிவிச்சேன்... எதிர்பார்த்ததுக்கும் மேல 33 பேர் கொண்ட 2 வயசு கைக்குழந்தை முதல் 70 வயது பெரியவர்கள் வரை கலந்த adventure crew ஒன்று தயாரானது அச்சரியம்...! அதில், திருமணம் ஆகி 32 ஆண்டுகளுக்கு பின் மகளும் மருமகனும் சேர்ந்து ஹனிமூனுக்கு அனுப்பி வைத்த 'இளம்' ஜோடி உடபட 50%க்கும் மேல பெண்கள் கலந்து கொண்டது இன்னொரு ஆச்சரியம். எங்க டூரிசம் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை புரிந்து கொள்ள முடிந்தது.

சரி ஆட்கள் ரெடி... அடுத்து என்ன..? இப்ப தான் முதல் சவால் ஆரம்பம்..! அந்தமான் சுத்தி பார்ப்பது என்பது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தீவில் தங்கும் காரியம். கண்டிப்பாக படகுகளில் மட்டுமே தீவை அடைய முடியும். ஒவ்வொரு தீவுக்கும் ஒவ்வொரு விதமான நடைமுறை & செயல்முறைகள் உண்டு. ஆதார் கார்டு, தீவுக்குள் நுழைய பாஸ், வேக்சின் சர்டிபிகேட் என ஒவ்வொன்றையும் ராணுவம் ஆய்வு செய்து தான் தீவுக்குள் விடும். வெளியேறுவதும் அப்படி தான். 33 பேருக்கு விமான டிக்கட்டில் இருந்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தீவுகளில் இறங்கி ஏற டிக்கட் ஏற்பாடுகள் (இதில பெரிய சவால் டைமிங்...! நாம எழுந்திருக்கிற நேர்த்துல இருந்து சாப்பாடு முடிச்சுட்டு வண்டியில ஏறி port'டுக்கு ஓடி படகை புடிச்சு லக்கேஜ் ஏற்றி, இறக்கி...., அடுத்த தீவில் பார்க்க வேண்டிய இடங்களை பார்த்து, ஆட்டம் போட்டு, களைத்து தூங்கி மீண்டும் எழுந்து படகு வர்ற டைம்க்கு ஓடு ஓடு ஓடு......ன்னு தான் நேரத்தை பின்பற்ற முடிந்தது.)

அந்தமானில் 70% வங்காளிகள்..! கடல் உணவுகளும் வங்காளிகளின் அக்மார்க் புளி, காரம், தயிர் & இனிப்பு கலந்த உணவுகளும் தான் அதிகம். உப்புமாவுக்கு ஊறுகாய் வச்சு சாப்பிடுறாங்க.... அவங்க கிட்ட வெஜ் புலாவும் சிக்கன் கறியும் கேட்டால் இதெல்லாம் மனுஷன் தின்பானா என்பது போல நம்மை பார்க்கிறார்கள். அவர்கள் மத்தியில் ஓவ்வொரு தீவிலும் தங்குமிடம், அங்க சவுத் இண்டியன் உணவுகள் நம்ம வழக்கப்படி காலையிலும் மாலையிலும் காபி, தேனீர் என அனைத்தையும் ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு ஏற்பாடு செய்தோம்.

5 நாளும் தீவுகளில் எந்த எந்த இடத்துக்கு போறது என்னென்ன பார்க்கிறது என்பதை தெரிவு செய்ய விஜி பெரிய ரிசர்ச்சே செய்திருந்தது. முன்னாடி அந்தமான் போனவங்களை விசாரிச்சு நல்ல அனுபவம் கொடுக்க கூடிய இடங்களை தேர்வு செய்து அந்த இடங்களுக்கு அழைத்து செல்ல என்னென்ன தேவை என்பதை ஆராய்ந்து. உள்ளூரில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தோம். எங்கள் itinerary பல முறை மாற்றி அமைக்கப்பட்டது. முடிவில் ஒரு அட்டகாசமான பயண அனுபவத்துக்கு காத்து இருந்தோம்.

பயணத்தில் எங்களின் முதல் அதிர்ச்சி காத்திருந்தது.... மே 8' அன்னிக்கு asani cyclone அந்தமானை புரட்டி போடும்ன்னு இண்டியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிக்கை நியூஸ் போட்டிருந்தான். பல முறை அந்தமான்க்கு திட்டம் போட்டு கடைசி நிமிடத்தில் புயல் காரணமா ட்ரிப் கேன்சல் ஆன அனுபவம் இருக்கிறதால 'திக்குன்னு' ஆகிடுச்சு..! சொன்ன மாதிரியே மே 12க்கு மேல asani (கோபக்காரி) என்று சிங்களர்களால பெயர் சூட்டப்பட்ட அந்த புயல் வங்காள விரிகுடா கடலுக்கு நடுவில மட்டும் புடிச்சா மாதிரி ஆடி தீர்த்துட்டு அந்த பக்கமா அந்தமானை லைட்டா ஒரு காட்டு காட்டிட்டு வழக்கம் போல இந்த பக்கமா ஆந்திராவில 55 கிமீ வேகத்துல கரையை கடந்துச்சு. அதுக்கே ஒரு வாரம் அந்தமானில் எங்கள் தொடர்புகளை பிடிக்க முடியவில்லை...! தொலைபேசிகள், இண்டர்னெட் என எதுவும் நாங்கள் ஊருக்கு கிளம்புறதுக்கு சரியா 1 வாரம் முன்னாடி வேலை செய்யவில்லை....!!

ஒரு வழியாக எல்லாம் சரியாகி அவங்களை பிடிச்ச பின்னாடி தான் மூச்சே வந்தது. டிக்கட் போட்டாச்சா, ஹோட்டல், உணவு, வண்டி, ஆட்கள் எல்லாம் தயாரா போன்ற அனைத்து கேள்விக்கும் அப்புறமா தான் பதில் கிடைத்தது. வடிவேல் டயலாக், 'யார் என்ன முடிவெடுத்தாலும் அது நமக்கு சாதகமா தாண்டா இருக்கு' என்பது போல புயலால் க்ளைமேட் மாறி இருந்தது. புயல் அள்ளி தெளிச்சுட்டு போன மழையால அந்தமான் குளிர்ந்து பருவ மழை மே மத்தியிலேயே ஆரம்பிச்சு வெயில்ன்னா என்னாதுன்னு கேக்குறா மாதிரி செய்துட்டு போயிருந்தது. அதனால இறங்கும் போதே தூரலும் சாரலுமாய் எங்களை வரவேற்றது அந்தமான்...!

அந்தமானின் வரலாறு நம்ம சுதந்திர போராட்ட வரலாற்றுடன் கலந்தது. 'காலாபானி' என்ற அந்தமான் ஜெயில் தான் சுதந்தர போராட்ட வீரர்களை அடைத்து வைக்க வெள்ளையர்கள் தேர்வு செய்த இடம்... அந்தமானை ஆராய துவங்கினால் அதன் வேர் இரத்தமும் போர்களும், பட்டினியும், அடிமைத்தனமும் நிறைந்த ஒரு காலத்துக்கு தான் நம்மை அழைத்து செல்லும். ஏற்கனவே வரலாற்றிலும், புவியியலிலும், பயணங்களிலும் ஆர்வம் கொண்டவன் என்பதால அந்தமானை காண ஆர்வமாக இருந்தேன்.

ஆனால் இறங்கிய உடனே அடுத்த அதிர்ச்சி அந்தமானில் காத்திருந்தது...!! ஏர்போர்ட்டில் இருந்து வேக்சின் போடாத குழந்தைகளை மட்டும் தனியாக வண்டியில் ஏற்றியது ஆர்மி போலீஸ்....!! அவர்களை தனி முகாமிற்கு அழைத்து சென்றார்கள்.. எங்கள் பயணம் என்ன ஆனது..? அதை பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்...



Contact 7358560776 for your tour arrangements and needs. we are happy to arrange your travels.

29/05/2022

The first island we visited on andaman trip. Rose island..!

It’s an uninhibited island, a left over of reminds of British buildings preserved as a historical monument.

வாகமான் பயணம் ரொம்ப குறைவான நேரத்தில்  அறிவித்திருந்தேன்... எக்கோ டூரிசம் ஸ்பாட் என்பதாலயும் நல்ல சீசன் டைம் என்பதாலயும்...
21/05/2022

வாகமான் பயணம் ரொம்ப குறைவான நேரத்தில் அறிவித்திருந்தேன்... எக்கோ டூரிசம் ஸ்பாட் என்பதாலயும் நல்ல சீசன் டைம் என்பதாலயும் இடம் கிடைக்கவே இல்லை ஆனாலும் அழகான வியூ பாய்ண்ட் உடைய ஒரு ரிசார்ட்டை புக் செய்தோம்.

குமுளியை தாண்டியதில் இருந்தே மேகம் மொத்தமா போர்த்திக் கொண்டது போல் மஞ்சு போர்த்திய தூறல் எங்களை தொடர்ந்து வந்தது...!

முதல் நாள் ப்ரைவேட் பால்ஸ்க்கு சின்னதா ஒரு ட்ரெக்கிங் போக வேண்டியது இருந்தது. வழி முழுக்க அருவிச்சாரலாய் மழை நனைத்துக் கொண்டே இருந்தது. மற்றவர்கள் எப்படி எடுத்துக்குவாங்களோன்னு ஒரு கவலை அடி மனசில இருந்துட்டே இருந்தது. ஆனால் அந்த மழையிலும் அருவியில குளிச்சே தீருவோம்ன்னு போய்ட்டு கெட்ட ஆட்டம் வந்தது நம்ம க்ரூப்....! வழக்கம் போல இரவு கேம்ப் பயர் களை கட்டியது. ஆட்டம் பாட்டம் நடுவில் கொஞ்சம் அட்டை கடின்னு இரவு கடந்தது. தம்பதி சமேதரா வெங்கடேசன் பேமிலி போட்ட டான்ஸ் தான் அந்த இரவின் ஹைலைட்...!

இரண்டாவது நாள் மழை கருணை காட்டியது. மஞ்சு விலகி வழி விட, அவ்ளோ கஷ்டபட்டு நாங்கள் தேடி பிடித்த லொக்கேஷனை அப்ப தான் பார்க்கவே முடிந்தது. ரம்மியமான அந்த பின்னணியில் செல்பிக்கள் குவிய எல்லோரும் நடைப்பயணம் போய்ட்டிருந்தாங்க. மஞ்சு எங்களை தழுவியும் விலகியும் போக்கு காட்டி கொண்டிருந்தது. மழை வருமோன்னு பயத்தோடவே ஜீப் பயணம் கிளம்பினோம்.

ரோலர் கோஸ்டர் பயணம் அது. நாலு மணி நேரம் அட்டகாசமா பல இடங்களை பார்த்து மகிழ்ந்தோம். 'அஞ்சுருளி டன்னல்' என்னும் 5 கிமீ நீளத்துக்கு பாறையை குடைந்து செய்த குகையில் தண்ணீர் ஒரு டேம்ல இருந்து இன்னொரு டேம்க்கு திருப்பி விடப்பட்டிருப்பது ஒரு human made wonder. அனைத்தையும் பார்த்து முடித்து தேனி வந்து சேர்ந்தோம்.

மிக அருமையான சீசன் இது. நமக்கே நமக்குன்னு ஒரு மலையும் அருவிகளும்ன்னு வாகமானை யாரும் இவ்வளவு குளிர்ச்சியா பார்த்திருக்க முடியாது. முன்னாடி போற ஜீப் கண்ணுக்குப்தெரியாத அளவுக்கு மஞ்சு சூழ்ந்த இந்த மாதிரி பயணம் தனி சுகம் தான்.... ரசித்து களித்தோம்... ❤

இணைந்து பயணித்த அனைவருக்கும் நன்றி.. விரைவில் மீண்டும் பயணிப்போம்..

20/05/2022

Tunnel in vagamon - we found on day two… ❤




For trips to vagamon contact 7358560776

15/05/2022

The Vagamon Diaries … ❤



நம்ம ஆச்சி வீடு குழந்தைகள் கேம்ப் செட்டியூல்...!!Maaya Farm stay’ல 16.05.2022 முதல் 19.05.2022 வரை நடைபெறும் குழந்தைகளுக...
10/05/2022

நம்ம ஆச்சி வீடு குழந்தைகள் கேம்ப் செட்டியூல்...!!

Maaya Farm stay’ல 16.05.2022 முதல் 19.05.2022 வரை நடைபெறும் குழந்தைகளுக்கான ஆச்சி வீடு கிட்ஸ் கேம்ப் நிகழ்ச்சி அட்டவணை இது தான்... எங்களால் முடிந்த அளவிற்கு இயற்கை மீதான ஆர்வத்தை, சமூக நல்லிணக்கத்தை குழந்தைகளிடம் விதைக்க இருக்கிறோம். உங்க குழந்தையும் கலந்துக்க விரும்பினால் எங்களை 7358560776'ல் தொடர்பு கொள்ளவும். ❤

Day 1 - (16.05.22)

இறைவணக்கம் பாடல்
குழந்தைகள் மற்றும் பெற்றோரின் அறிமுகங்கள்.
இந்த பயிற்சியின் நோக்கம் குறித்து உரையாடுதல்
குழு பிரித்தல் மற்றும் குழுவிற்கான செயல்பாடுகள் வகுத்தல்.

இயற்கை குறித்த அறிமுகம், விதைகளின் முக்கியத்துவம், முளைத்தல் பற்றி விளக்கம், மண், உரம், தண்ணீர் பயன்பாடு குறித்த விளக்கம்.

மழை, வெயில், காற்று, பனி ஆகியவை எப்படி செயல்படுகின்றன என்பதை கதை மூலம் உணர்த்துதல்.

விதைகளை அறிமுகம் செய்து ஒவ்வொருவருக்கும் விதை கொடுத்து இடம் தேடி விதைக்கச் செய்தல்.

குழு விளையாட்டு மற்றும் பழங்கால விளையாட்டுக்கள்.

தோல்பாவை கூத்து அறிமுகம்.. பெரிய திரையில் அதை கண்டு களித்தல்...

தோட்டத்தில் நிலாச்சோறு சாப்பிடுதல்..!

Day 2 - (17.05.2022)

தோட்டங்களுக்கிடையேயான cycling &, பழங்கால மரங்கள் குறித்து பேசுதல், மூலிகைகள் & பாரம்பரிய சிகிச்சை முறைகள் குறித்து அறிதல்.

தாங்கள் பயிர் செய்த விதையின் வளர்ச்சியை கணக்கிடுதல் அதற்கு தண்ணீர் விடுதல்.

சேகரித்த மூலிகைகள் பதப்படுத்துல், அது குறித்து எழுதுதல்.

குழந்தைகள் தங்களின் ஆசைகள், கனவுகள், தனித்திறமைகள் குறித்து பேச வைத்தல்.

அவர்கள் கனவு குறித்த நம்பிக்கை விதைத்தல். உற்சாகப்படுத்துதல்...!

கதைகள் மூலமாக வாழ்வின் யதார்த்தம் மற்றும் எது வெற்றி என்பதை புரிய வைத்தல்.

மனிதம், தொண்டு செய்தல், நலிவுற்ற மக்களான மாற்றுதிறனாளிகள், திருநங்கைகள் குறித்த அறிமுகம், அதை குறித்த உரையாடல் & சிறுவர் இலக்கிய கதைகள் மூலம் மனிதம் உணர்த்துதல்.

ஆதரவற்றோர் இல்லம் செல்லுதல். அவர்களுடன் சிறுவர்களுக்கான உலகத்திரைப்படம் பார்த்தல்...!

Day 3 (18.05.22)

ஒன்றாக சேர்ந்து முல்லை ஆற்றில் குளித்தல்.
தாங்கள் பயிர் செய்த விதையின் வளர்ச்சியை கணக்கிடுதல் அதற்கு தண்ணீர் விடுதல்.

திருநங்கை ஸ்வாதி அறிமுகம், அவர் மூலம் நாட்டுப்புற கலைகள் சொல்லி கொடுத்தல்.தனித்தனியாக குழந்தைகளை பங்கேற்க வைத்தல்.

குச்சுப்புடி, பழங்குடியினர் நடனம் குறித்த பயிற்சிகள்.
குழந்தைகள் திரைப்படம் பார்த்தல்.

Day 3 (18.05.2022)

தோட்டங்களுக்கிடையேயான மென்நடை, பறவைகளை புரிதல் அவற்றினை வாழ்க்கையை கண்டறிதல்...!

தாங்கள் பயிர் செய்த விதையின் வளர்ச்சியை கணக்கிடுதல் அதற்கு தண்ணீர் விடுதல்
பறவைகள் குறித்து உரையாடல்.

இயற்கை சூழல் வட்டத்திற்கு பறவைகளின் முக்கியத்துவம்.

இயற்கைக்கு அவை அளிக்கும் கொடைகள். குறித்து அறிதல். பறவைகளின் தனித்துவம், திறன், செயல்பாடுகள் குறித்த சிறப்பு பார்வை
அருகிலுள்ள அருவி நோக்கி பயணம்.

Day 4 (19.05.2022)

காலை தோட்டத்தில் cycling & ஒவ்வொரு குழுவும் தாங்கள் அறிந்த விசயங்களை குறித்து விவாதித்தல். அவற்றை தொகுத்தல்.

தாங்கள் பயிர் செய்த விதையின் வளர்ச்சியை கணக்கிடுதல் அதற்கு தண்ணீர் விடுதல். அதன் வளர்ச்சி குறித்து விவாதித்தல்.

குழந்தைகளின் தனித்திறமைகள் குறித்தும் பயிற்சியில் கற்றுக்கொண்டவை குறித்தும் சுய மதிப்பிடு செய்தல்.
முகாமில் கற்றுக் கொண்டவை குறித்த ஆலோசனை & கலந்துரையாடல்.

நன்றி கூறுதல் & விடை பெறுதல்

PC : அனைத்து கலைகளும் அதற்குரிய சிறப்பு கலைஞர்களுடன் முறையாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.

மொத்த கேம்ப்பிற்கு 4000/- மட்டுமே. முன்பதிவிற்கு: 7358560776.

  தாத்தா வீடு, ஆற்றில் குளியல், மலை மேல் பயணம், ஆடு, கோழிகளுக்கு உணவிடுதல், 7 ஸ்டெப் விளையாடுறது...  பாட்டி கிட்ட கதை கே...
06/05/2022


தாத்தா வீடு, ஆற்றில் குளியல், மலை மேல் பயணம், ஆடு, கோழிகளுக்கு உணவிடுதல், 7 ஸ்டெப் விளையாடுறது... பாட்டி கிட்ட கதை கேட்கிறதுன்னு நாம வாழந்த சிறார் வாழ்க்கையை நம்ம பசங்களுக்கு அறிமுகம் செய்யணும்ன்னு இந்த 80's - 90's கிட்ஸ்க்கெல்லாம் ஒரு ஏக்கம் இருக்கும்ல. அதை செய்லபடுத்திறதுக்கு இந்த சம்மர் லீவை பயன்படுத்தி ஒரு சின்ன ப்ளான்...!!
குழந்தைகளுக்கான ஷார்ட் & ஸ்வீட் 4 நாள் பாரம்பரிய கோடை விழாவாக இந்த கேம்ப் இருக்கும். இயற்கையை நேசித்தல், மனிதாபிமானம் உணர்தல், யாரையும் சாராதிருத்தல்..! - இது தான் கேம்போட நோக்கம்...
குழந்தைகளுக்கு விளையாட்டு மூலம் கற்பித்தலாக விவசாயம், ஆதரவற்றோரிடம் அன்பு, நடனம், இயற்கையுடன் வாழ்தல், அதிகாலை நடைப்பயணம், பறவைகளை உணர்தல், கூட்டாஞ்சோறு, நிலாச்சோறுன்னு அவங்க அதிகம் கண்டிராத விசயங்களை வேடிக்கையாக சொல்லி கொடுக்க போறோம். முக்கியமா மொபைல் இல்லாம 5 நாள்..!
இந்த கேம்ப்பில் அதிகாலை ட்ரெக்கிங் போறோம்,
பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடுறோம், கலப்படமில்லாத கீரை காய்கள்ன்னு இயற்கை உணவினை சாப்பிடுறோம்,
ஆற்றில் நீந்தறோம்,
பூக்கள், காய்கறிகள் சேகரிக்கிறோம்.
பறவைகளை தேடி காணுறோம்.
குழந்தைகளுக்கான உலக திரைப்படம் பார்க்கிறோம்,
தாத்தா பாட்டிகளின் கதைகள் கேட்கிறோம், நாட்டுப்புற இசை, நடனம், பாடல்கள் கேட்கிறோம்....
சிலம்பம், கபடி, கோலிகுண்டு, சொட்டாங்கல், பல்லாங்குழி ஆடுறோம்,
குழந்தைகள் தங்கள் கையால் குறு விவசாயம் செய்ய வைக்கிறோம். அவங்க நட்ட விதைகள் செடிகளாக துளிர்விடுவதையும் அவை வளர்வதையும் ரசிக்க வைத்து அவர்களுக்கு இயற்கையின் உன்னதத்தை போதிக்கிறோம்.
இன்னிக்கு IAS உட்பட பல்வேறு பரீட்சைகளில் குழு மணப்பான்மை ஒரு முக்கிய பங்கு வைக்குது. தனி நபராக வாழ்வது அதிகரித்து வரும் வேலையில் ஒரு குழுவை எப்படி பராமரிக்கிறது, அதற்கான தலைமை பண்பு நமக்கு இருக்கான்னு பல்வேறு சோதனைகளில் அதை உறுதி செய்றாங்க. இந்த குழு பண்புகளான விட்டுக்கொடுத்தல், தலைமைத்துவம், உதவி செய்தல், ஆறுதல் அளித்தல், கூட்டாக சிந்தித்தல், செயல்படுத்துதல் எல்லாமே விளையாட்டுகளின் மூலமாக தான் கிடைக்கும் என்பது ஆராய்ச்சிகளின் முடிவு. இந்த கேம்ப், உங்க குழந்தையின் தலைமை பண்பை வெளிக்கொணர்வதாக இருக்கும். அதனால உங்க குழந்தை 5 - 15 வயதுக்குள் இருந்தால் கண்டிப்பாக கலந்துக்க வைங்க...!
நல்ல பாதுகாப்பான கிராம சூழ்நிலையில் தங்குமிடம் உணவுகள், பயிற்சிகள் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 1000. மொத்தம் 4 நாட்கள்..!
இடம்: Maaya Farm stay, Theni
நாள் : 16 மே முதல் 19 மே வரை
விருப்பமுள்ளவர்கள் 7358560776 கால் செய்து புக் செய்துக்கலாம். 20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.

குளிரும் மழையும் பின்னே வந்த சூரியனும்....!வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்த மதிய நேரத்தில் தான் சூரியநெல்லிக்கு கிளம்ப...
06/05/2022

குளிரும் மழையும் பின்னே வந்த சூரியனும்....!
வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்த மதிய நேரத்தில் தான் சூரியநெல்லிக்கு கிளம்பியிருந்தோம். காம்ப் சைட்டில் போய் இறங்கும் வரை கொளுத்தி கொண்டிருந்தது வெயில். டென்ட் ஏற்பாடு செய்தவங்க கிட்ட என்னங்க இவளோ வெயில் அடிக்குதுன்னு கேட்டப்போ... மேலையும் கீழேயும் பார்த்துட்டு பத்து நிமிஷம் வெய்ட் பண்ணுங்க்ன்னு சொல்லிட்டு போனார்....
சொன்ன மாதிரியே பத்தாவது நிமிடத்தில் ஒரு காற்று வந்து சூரியனை ஒளிச்சு வச்சுட்டு மேக கூட்டத்தை களத்தில் இறக்கியது. அடுத்த ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் 'ராக்கி பாயை' போல பறபற வென படம் காட்டியது வானிலை...!
வெயில் இல்லை, ட்ரெக்கிங் போகலாம்ன்னு பக்கத்தில இருந்த மலை மேல ஏற ஆரம்பிச்சிருந்தோம். நிமிடத்துகொருமுறை என மழையும் குளிரும் காற்றும் பனியும் சுழன்று சுழன்று "மாப்பு வச்சுட்டாய்ங்க்டா ஆப்புன்னு" எங்களை வச்சு செஞ்சது. வெறும் டி-ஷர்ட்டில் ஏற துவங்கியிருந்த எனக்கு குளிரில் உள்ளங்கை, கால் எல்லாம் நீலம் பாய்ந்திருந்தது. இதுக்கு மேல முடியாதுன்னு நினைக்கும் போது பாவம் போனா போகுதுன்னு விட்டுட்டு போனது மழை..! நேரா கேம்ப்ஃபயர்ல வந்து தஞ்சம் ஆனோம்..! அந்த குளிருக்கு டெண்ட் தூக்கம் என்பது சுகமானதாக மாறியிருந்தது.
அப்போ தான் படுத்தா மாதிரி இருந்தது., விடியற்காலை 4.30 க்கு எழுந்து இன்னும் 3000 அடி மேலே போனோம். முரட்டு ஜீப்பில் முரட்டு ரோட்டில் குலுக்கு குலுக்கு என குலுக்கியபடி நகர்ந்தது ஜீப். கைக்கு எட்டும் தூரத்தில் சவுத் இந்தியாவின் உயரமான குன்றான 'மீசைபுலி மலைக்கு' அருகில் 6 மணிக்கு முடிந்தது அந்த ரோலர்கோஸ்டர் பயணம்...! குளிர்ன்னா குளிர் அப்படி ஒரு குளிர்..! காதை சுற்றி துண்டை கட்டிட்டு தான் குளிரை சமாளிச்சேன்... இன்னும் கொஞ்ச நேரத்தில குளிரால சம்பவம் நடக்க போகுதுன்னு நினைச்ச நொடியில.... உலகத்தலைவன் "சன்னி பாய்" வெளிப்பட்டார்...! அவ்ளோ தான் குளிர் எங்க போச்சுன்னு தெரில.... அட்டகாசமான க்ளைமேட்டில் அவ்ளொ உயரத்தில் இருந்து அந்த பள்ளத்தாக்குகளை பார்த்து ரசித்தோம்.
மீண்டும் கேம்பிற்கு வந்து சூடான காலை உணவை முடிச்சுட்டு அருவியை நோக்கி மீண்டும் ஒரு நடைப் பயணம்.. வழியில அட்டை மிரட்ட தண்ணிக்குள்ள தஞ்ச்சம் புகுந்தோம். சம்மருக்கு அந்த அருவி குளியல் பேரானந்தமாக இருந்தது. வெளியேற மனசில்லாமல் வந்து மதிய உணவை முடித்து குட்டித் தூக்கத்துடன் கிளம்பி விடை பெற்றோம்.
அட்டையும் திடீர் மழையும் இதை ஒரு அட்வெச்சர் பயணமாக்கி விட்டதை தவிர்த்து மிக அற்புதமான நினைவுகளை கொடுத்தது இந்த பயணம். இரண்டு நாள் அனுபவங்களை சிரிப்பும் கிண்டலுமாக அனைவரும் feedback'ல் விவரித்தார்கள். மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திப்போம் என விடை பெற்று பிரிந்தோம்.
மிஸ் யூ ஆல்... லவ்வியூக்கள். ❤

Address

Theni
625531

Telephone

9842775242

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wild Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wild Tourism:

Videos

Share

Nearby travel agencies


Other Tourist Information Centers in Theni

Show All