10/12/2023
விடுமுறைக்கு ஊருக்கு போயிட்டு , திரும்பி வர போற சூழ்நிலை , "ஐயையோ இதெல்லாம் பண்ணி இருக்கணுமே இதெல்லாம் பண்ணாம விட்டோமே " அப்படின்னு கடைசி நாளில் வருந்துவோம்ல ,
மனித வாழ்க்கையும் அதே மாதிரிதான் ஒரு விடுமுறையிலிருந்து திரும்பும் அனுபவமே
விடுமுறையை நன்றாக அனுபவித்துக் கொள்ளுங்கள் , அதற்கு பின் வாழும் வாழ்வு நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்கலாம் அதற்கு மேலாகவோ இல்லை கீழாகவோ இருக்கலாம் , இப்பொழுது உங்களுக்கு கிடைத்தது இந்த விடுமுறை மட்டுமே, இதுவே அதுவை தீர்மானிக்கலாம்
தவறவிட்ட வாய்ப்புகள் கடந்து போன காலங்கள் எல்லாம் மீட்கப்படாமலையே போகிறது.
வாழ்க்கைப் பயணத்தில், "அப்படி இருந்திருக்க வேண்டும்", "அப்படி செய்திருக்கலாம்" என்று கடந்த பிறகே திருத்த நினைத்து, காலப்பயணம் முயற்சிக்கிறோம் அதுவெல்லாம் கனவே.
வாழ்க்கையின் அழகு தற்போதைய தருணத்தை ரசிப்பதில் உள்ளது.
கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியையும் ரசிக்க, நம்மைச் சுற்றியுள்ள எளிய மகிழ்ச்சிகளை அனுபவியுங்கள்.
தற்போதைய தருணத்தைக் கடப்பது என்பது குறைபாடுகளை உள்ளடக்கியதே, ஏற்றுக்கொள்வதே வாழ்வு .
உங்கள் கண்முன் நிகழ்வதை நம்பிவிடாதீர்கள். எல்லாமே உங்களுக்கு மிகைப்படுத்தியே காட்டப்படுகிறது . நீங்கள் கடந்து செல்லும் எல்லா மனிதர்களிடத்தும் குறைகள் , பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது, ஆனால் அவைகள் உங்கள் கண்களுக்கு மறைக்கப்பட்டிருக்கிறது , புறத்தோட்டத்தின் மூலமாக அதை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது.
வாழ்க்கையின் தெருக்களில் மெதுவாகவே அலைந்து திரியுங்கள், தவறவிட்ட திருப்பங்கள் , எதிர்பாராத மாற்றுப்பாதைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம்.
இறுதியில் இலக்கை அடைவதல்ல வாழ்வு, பயணத்தை அனுபவிப்பதே. பயணம் எங்கு முடிகிறதோ அதுவே உங்கள் இலக்கு.
இப்னு உமர் அவர்கள் குறிப்பிட்டிருப்பர்கள்
"மாலையில் காலை வரை வாழ்வதை எதிர்பார்க்காதீர்கள், காலையில் மாலை வரை வாழ்வதை எதிர்பார்க்காதீர்கள். நோய் வருவதற்கு முன் உங்கள் ஆரோக்கியத்தைப் பேணுங்கள், மரணத்திற்கு முன் உங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்"
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைத்தாலும் கவலை வேண்டாம். மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்தி, தொடர்ந்து செல்லுங்கள்.
நீங்கள் அதனை அடையாவிட்டாலும் , அதனை அடைவதற்கு உண்டான அந்த பயணமே உங்கள் வாழ்வு அதுவே உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வாழ்
முஹம்மது நபி (ஸல்) சொன்னது போல "Be in this world as though you were a stranger.”
- ரசிகவ் ஞானியார்
10-12-2023