28/12/2016
MACSAR Computer shop இன் கடனட்டை திருட்டு தொடர்பான FB பதிவொன்று. Share பண்ணி எம்மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
இம்மாதம் 2ம் திகதி (02.12.2016 மாலை 5.45) எனது மடிக்கனிணிக்கு Battery ஒன்றைக்கொள்வனவு செய்வதற்காக மட்டக்களப்பு நகரிலுள்ள ஒரு கனிணி, மற்றும் கனிணி உதிரிப்பாக விற்பனை நிலையத்திற்குச் சென்று அவர்களிடம், Battery ஐ கொள்வனவு செய்து அதன் விலை ரூபா 5500/= ஐ கொடுப்பதற்கு என்னிடம் ரூபா 4000/= மாத்திரம் பணமாக இருந்தது, அதைக்கொடுத்துவிட்டு மிகுதி ரூபா 1500/= இற்கு எனது கடனட்டையைக் கொடுத்து அதில் பரிமாற்றம் செய்யும் படி கூறி, பொருளை பெற்றுக்கொண்டு,
கடனட்டையை தவறுதாக மீள அவர்களிடம் பெற்றுக்கொள்ளாமல் வீடு சென்றுவிட்டேன்.
அதன் பின் அட்டையின் தேவை அல்லது அதன் நினைவோ வரவில்லை அதனால் அட்டை தவறிவிட்டேன் என்பதையே மறந்து விட்டேன். அதன் பின் 24.12.2016 அன்றுதான் அட்டையின் தேவையொன்று ஏற்பட தவறவிட்டதை உணர்ந்தேன், எனினும் எங்கு தவற விட்டேன் என்பது உடனடியாக நினைவிற்கு வரவில்லை. எனினும் கடனட்டையின் பெரும்பகுதி தொகையை நான் பயன்படுத்திவிட்டேன், பயன்படுத்தக்கூடிய தொகை கிட்டத்தட்ட ரூபா 5000/= மட்டுமே என்பது ஏற்கனவே தெரிந்திருந்தது இதனால் அதிக பதற்றமடையாமலும் உடனடியாக card centre க்கு call பண்ணி அட்டையை செயலிழக்கவும் செய்யாமலும் குறித்த வங்கியில் எனது கணக்கை நிர்வகிப்பதற்கு இருந்த online வசதியை பயன்படுத்தி கணக்கு விபரத்தைப் பரிசோதித்தேன் அப்போதுதான் அட்டை தவற விட்ட இடம் தெரியவந்தது, அத்தோடு சிறு அதிர்ச்சியும் அடைந்தேன்.
2ம் திகதி தவறவிட்டுச் சென்ற அட்டையினால் 5ம் திகதி ரூபா 5000/= இற்கு அவர்களால் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்தது, நிட்சயமாக அவர்கள் ஒரு பெரிய தொகையை பெறுவதற்குத்தான் பலதடவைகள் முயற்சித்திருப்பார்கள், அட்டையில் கடன் மிகுதி 5000/= இருந்ததனால் இத்தொகை சாத்தியமாகி இருக்கிறது என்பது ஊகிக்க முடிகிறது. இதே நேரம் அவர்களால் வழங்கப்பட்ட Bill இலும் எனது பணப்பையில் இருந்தது அதையும் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டேன்.
இவ்வாறு விடயத்தை அறிந்து கொண்ட நான் உடனடியாக வியாபார நிலையத்திற்குச் சென்று முழு விடயத்தையும் கூறாமல் " எனது கடனட்டையை விட்டுச் சென்று விட்டேன்" என்று மாத்திரம் கூற இப்பதானா வாறீர்கள் எனக் கூறிவிட்டு உடனடியாக அட்டையை என்னிடம் தந்துவிட்டார்கள், அட்டையைப்பெற்று சட்டைப்பையினுள் வைத்துவிட்டு, 5ம் திகதி அவர்களால் செய்யப்பட்ட பணப்பரிமாற்றம் பற்றி நான் கூற அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் கடுமையாக விவாதித்தனர், திருட்டு புலப்பட்டதை அறிந்து ஏதோ திட்டத்திற்காக என்னிடம் மீளவும் கடனட்டையை சம்மந்தப்பட்டவர் கேட்டார், வங்கிக்கு உரித்தான எனக்கு வழங்கப்பட்ட அட்டையில் அவரால் என்ன தகவல் அறிய முடியும்? ஏன் அட்டையை திரும்பக்கேட்டார்?, நான் கொடுக்கவில்லை
உடனே எனது Phone இல் online account ஐ திறந்து Transaction history ஐ காட்டினேன் அதையும் நம்பாத மாதிரி விவாதித்தார்கள், அப்போது நான் நினைத்தேன் இந்த திருடர்களுடன் கதைத்து பிரயோசனம் இல்லை வேறு ஏதாவது நடவடிக்கையை மேற்கொள்வோம் என அவ்விடத்திலிருந்து நகர்ந்து வீடு சென்று விட்டேன். அந்நேரம் எனது கடனட்டையின் Paper Bill உம் வீட்டில் வந்திருந்தது, உடனே அதை எடுத்துக்கொண்டு திரும்பவும் வியாபார நிலையம் சென்ற போது அங்கு நிலைமை முற்றிலும் மாறுபட்டிருந்தது, திருட்டுத்தனத்தை ஆதாரத்துடன் நான் வெளிப்படுத்தியதனால் மேலும் அதை மறைக்கவும் மறுக்கவும் முடியாமல் புதிதாக ஒரு கதையைச்சொல்லி இறங்கி வந்தனர், அந்தக்கதைதான் இது "அங்கு வேலை செய்யும் ஒருவர் வேறு ஒரு அட்டைக்கு பதிலாக தவறுதலாக எனது அட்டையைப் பயன்படுத்தி விட்டாராம்" எப்படியிருக்கிறது திருட்டை மறைக்க சொல்லப்பட்ட கதை... பின்னர் எனது பங்கிற்கு சூடான சில சொற்களால் வாழ்த்திவிட்டு ரூபா 5000/= பணத்தையும் பெற்றுக்கெண்டு சென்று விட்டேன்...
இவர்கள் நேர்மையாளர்களாக இருந்திருந்தால் 2 அல்லது 3 நாட்கள் பார்த்து விட்டு கடனட்டையை குறித்த வங்கியில் ஒப்படைத்திருக்கலாம் அதுதான் முறை , இவர்களிடம் அவ்வாறான தன்மை இருக்கவில்லை, இவ்வாறன கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் வியாபாரிகளிடம் எவ்வாறு நாம் பொருட்களின் தரம் , நியாய விலை, நம்பகத்தன்மை என்பவற்றை எதிர்பார்க்க முடியும்? கூடுமானவரை இப்பதிவை பகிர்ந்து இவர்களது கீழ்த்தரமான செயலை ஊரறியச் செய்து, இவர்களிடம் பொருட்கள் கொள்வனவு செய்வதைத் தவிர்ப்போம்.
வைரமுத்து அற்புதன்.
https://www.facebook.com/vyramuthu.atputhan