03/01/2024
யாரும் Online ஊடாக இலவசமாக TIN க்கு Apply பண்ண முடியும்.. அல்லது அருகிலுள்ள Regional Office ல் வழிகாட்டலை பெற முடியும்...
TIN எடுக்கவும் காசு கட்டுபவர்கள் உங்கள் பிள்ளைகளையாவது படிக்க வையுங்கள்....
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனிநபர் பதிவு இலக்கம் கட்டாயம் தேவை....
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தனிநபர் பதிவு இலக்கம் பதிவதற்குத் தேவைப்படும் விபரங்கள்
01.தேசிய அடையாள அட்டை இல.
02. முழுப்பெயர் ஆங்கிலத்தில் -
03.முழுப் பெயர் தமிழில்
04.திரு.திருமதி, செல்வி,டொக்ரர்,கப்ரன் போன்ற பெயர் எழுத முன்பாக இட வேண்டிய அடையாளங்கள்.
முதல் எழுத்துடன் பெயர் - ஆங்கிலத்தில்
05.முதல் எழுத்துடன் பெயர் - தமிழில்
06. பிறந்த திகதி ,பிறந்த நாடு
07. பால்- ஆண்,பெண்
08. தாய் மொழி - தமிழ்
09. இணையத்தளம் எதையாவது கொண்டிருந்தால் அதன் URL -யுஆர்எல்.
10. இரட்டைப் பிரசாவுரிமை கொண்டிருந்தால் எந்த நாட்டுப் பிரசாவுரிமை.
11.வருமானம் கிடைக்கும் வழி.- வியாபாரம் அல்லது ஊழியர் அல்லது முதலீடு அல்லது வேறுவழிகளில்.
12.தொழில்-
கணக்காளர்,கட்டிடக் கலைஞர், சமையல்,வைத்தியர்,பொறியியலாளர், நீதிபதி,சட்டத்தரணி, விரிவுரையாளர், வேறுதுறைகள்
13.உங்களது முகவரிக்கு அண்மித்ததாக உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகம்- உதாரணம்- யாழ்ப்பாணம்.
14- நிரந்தர முகவரி- ஆங்கிலத்தில் - வீட்டு இலக்கம்,வட்டார இலக்கம் இருப்பின்
15- நிரந்தர முகவரி- தமிழில் - வீட்டு இலக்கம்,வட்டார இலக்கம் இருப்பின்
16. உங்களது முகவரிக்குரிய தபால் குறியீட்டு எண் - உதாரணம் - யாழ்ப்பாண நகரம் 40 000,கைதடி 40016.
17.மாகாணம்,மாவட்டம்,பிரதேச செயலகப் பிரிவு,கிராம சேவகர் பிரிவுப் பெயர்.
18.வதிவிட முகவரி- அதற்குரிய தபால் குறியீட்டு எண்.
19.தொடர்பு தொலைபேசி இல. அலைபேசி,வீட்டு கேபிள் இல. அலுவலக தொலைபேசி இல. FAX -பக்ஸ் இல.
20- மின்னஞ்சல் முகவரி - இருந்தால் குறிப்பிடுக.
21- வங்கிக் கணக்கு விபரம் - வங்கியின் பெயர்,கணக்கு இல. ஒரு வங்கியை மட்டும் பதிய இடமுள்ளது.
22- குடியியல் நிலை - தனியாள்,திருமணமானவர்.
23- வாழ்க்கைத் துணையின் பெயர், தேசிய அடையாள அட்டை இல. தனிநபர் வரிப் பதிவு இல.
24- பிள்ளைகள் தொடர்பான விபரம்- விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டை இல. அல்லது தனிநபர் வரிப்பதிவு இல.
பிள்ளையின் பெயர், பால்- ஆண், பெண், பிறந்த ஆண்டு,மாதம்,திகதி.
25- தனிப்பட்ட வியாபாரம் இருந்தால் அது தொடர்பாகப் பின்வரும் விபரங்கள்- வியாபாரத்தின் பெயர்,பதிவு இல.
வியாபாரத்தின் முதன்மையான செயற்பாடு, வியாபாரம் ஆரம்பித்த திகதி, வியாபாரத்தின் முகவரி, தபாலகக் குறியீட்டு இல.
26. தேசிய அடையாள அட்டையின் முன்பக்கம்,பின் பக்கம் ஸ்கான் செய்த மூலப்பிரதி JPG-ஜேபிஜி பிரதிகள்-- PDF -பிடிஎவ் தேவையில்லை.
தொடர்புகளிற்கு:
D&A BUSINESS
0774581078
0213150315