04/12/2023
🇨🇦🍁கனடாவுக்கு கௌரவமான முறையில் குடியேற விரும்பின் கல்வி விசா (Study Visa) , திறமைசாலிகள் குடியேற்றம் ( Skilled Migration) அல்லது குடும்ப அனுசரணை விசா ( Family Sponsorship Visa) மூலம் குடியேறுவதனூடாக மட்டுமே நிரந்தர குடியுரிமையை பெற முடியும். 🍁🇨🇦
விசிட்டர் விசா ( 6 month) பெற்று வருவதாயின்.
1. ஸ்டுடென்ட் விசா (Student Visa/ Study Permit) பெற்று கல்வி கற்று பின் work permit and Permanent Residency பெற்று கொள்ளலாம்.
2. LMIA Approved Job ஒன்றினை பெற்று Work Permit பெறுவதன் மூலம் Permanent Residency பெறலாம்.
( ஆனால் கனடாவில் நெருங்கிய நண்பர்கள், உறவுகள் , பண வசதி அன்றி LMIA Approved Job ஒண்றினை பெறுவது சிரமமானதொன்றாகும்.)
மேல் கூறிய இரு வழிகளில் ஒன்றை தொடர்வதாயின் கனடா 🇨🇦 வாருங்கள் . வாழ்க்கையில் கற்க முன்னேற நிறைய சந்தர்ப்பங்களை வழங்கும் நாடு 🇨🇦. ஆனால் மேலே கூறிய இரண்டில் ஒன்றை தொடராமல் வெறுமனே 6 மாத விசாவில் வந்து எதனையும் சாதிக்க முடியாது.
இது தொடர்பாக அபிப்பிராயம் சொல்லப் புறப்பட்டால் எரிச்சல்,பொறாமை என்ற பதில் தான் வரும். எனது நோக்கம் இந்த கனடா தந்துள்ள அரிய சந்தர்ப்பத்தை எம்மவர்கள் தவற விடவும் கூடாது. அதே நேரம் உதவி செய்பவர்கள் பாதிக்கவும் கூடாது. அதே போல் வர இருப்பவர்கள் முகவர்களிடம் மாட்டி பணம் இழக்கவும் கூடாது. அதை போல் வர இருப்பவர்கள் பல லட்சங்களை வீணாக செலவு செய்யவும் கூடாது என்பதே.
ஓருவருடைய ஆவணத்தை மதீப்பீடு செய்தலே புரியும் இவருடைய பொருளாதார நிலை என்ன இவருக்கு விணண்பித்தால் கிடைக்குமா இல்லையா எல்லாம் தெரிந்தும் பண உழைக்கும் நோக்கத்துக்காக பல குடுபங்கள் இன்று நடுதெருவில் தயவு செய்து சிந்தியுங்கள் 😞🥲
60 , 70 லச்சம் வங்கியில் வைப்பு செய்ய வட்டிக்கு எடுத்து
மாதம் 350,000 வட்டி செலூத்தி ஆவணங்கள் தயார் செய்ய 200,000 செலுத்தி விண்ணப்ப கட்டணம் 750,000-1,000,000 செலுத்தி சிலர் அடைவு ஈடு வைத்து மறுக்கபட்டு உள்ளனர் இவர்கலால் மிள முடியுமா???
சில கனடா வில் இருக்கும் உறவுகள் முழூமையான ஆவணங்களை சமர்பிக்காது கடமைக்கு செய்கிறார்கள் பண உதவி வழங்குவதில்லை இதனால் பலர் பாதிப்பு அடைந்துள்ளனர். தேவை அற்ற பண இழப்பு மற்றும் ஏமாற்று வழிகளில் இருந்து பாதுகாத்து பொய்யான போலி தகவல்களை நம்பாமல் சிந்திது செய்படுங்கள்.
முதல் தடவை விசா மறுக்கபட்ட நபராக இருந்தால் பொருளாதரிதியாக நீங்கள் பாதிக்க படாதவரா இருந்தால்
மீண்டும் ஒருதடவை மிக தெளிவான விளக்கத்துடன் முயற்சி செய்யுங்கள். மீண்டும் முயற்சி செய்ய விண்ணபிக்க தகுதி இருதால் மட்டுமே முயற்சி செய்யுங்கள்
ஆவணங்கள் மட்டுமே விசிட் வீசாவுக்கு
மிக மிக முக்கியமான ஒன்று.
🍁இதில் ஆவணங்கள் பிரதான அங்கம் ( Documents)தான் மிக மிக முக்கியமான விடயம் நீங்கள் சரியான ஆவணங்கள் வழங்காவிட்டால் உங்கள் வீசா கோரிக்கை வீசா ஆபிசரால் (Visa officer) ( Refused / Rejected )நிராகரிக்கப்படும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
🍁தயவு செய்து எமாற்றுகாரர்களின் போலி கதைகளை நம்பி போலி ஆவணங்களை சமர்பிப்பதை தவிருங்கள்.
🪔நீங்கள் கனடா செல்ல என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதனை பார்ப்போம்.
🍁Proof of funds அதாவது Show money என்பார்கள் அதாவது நான் கனடா வந்து யாருடைய தயவிலும் தங்கி இருக்க மாட்டேன் நான் கனடா வந்து தங்கியிருக்கும் காலம் வரை செலவு செய்ய என்னிடம் போதுமான அளவு பணம் இருக்கிறது என்பதனை கனேடியன் அரசாங்கத்திற்கு நிரூபிக்க வேண்டும். எவ்வளவு அதிகமான பணம் உங்களால் காட்டமுடியுமோ அவ்வளவுக்கு அதிகமாக காட்டுங்கள் அப்போது தான் வீசா கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருக்கும்.
( Bank balance Confirmation letter)&(6 months bank statement)
🍁Supporting Documents மேலதிக ஆவணங்கள்-உங்கள் பெயரில் உள்ள (FD) அதாவது நிலையான வங்கி வைப்பு, உங்கள் பெயரில் உள்ள (Asset ,Property, Vehicle's, investment document's with valuation.)
வீடு காணி, வாகனங்கள், முதலீடு ஏதாவது செய்துள்ளீர்கள் என்றால் அந்த ஆவணங்கள் காட்ட முடியும்.
🍁Travel history நீங்கள் ஏதாவது ஒரு நாட்டிற்கு பயணம் செய்திருந்தால் இந்த விடயம் நீங்கள் ஒரு நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு மீண்டும் உங்கள் நாட்டிற்கு திரும்பியதை உறுதிப்படுத்துவது.
🍁Letter of Invitation இந்த Letter of invitation யார் யார் உங்களுக்கு கொடுக்க முடியும் என்று பார்த்தால் உங்கள் உறவினர்கள் அல்லது உங்கள் நண்பர்கள் யாராவது கனடாவில் இருந்தால் நீங்கள் அங்கு செல்லும் போது அவர்கள் உங்களை பொறுப்பு எடுப்பார்கள் என்பதனை உறுதிப்படுத்த இந்த Letter of invitation வழங்க முடியும்.
மிக முக்கியமான ஒன்று (Travel plan)
🍁Reservations of a Retern ticket or (Travel itinerary ) அதாவது உங்கள் பயணத்திற்கான காரணம் என்ன நீங்கள் எப்போது கனடா சென்று எப்போது உங்கள் நாட்டிற்கு திரும்ப செல்வீர்கள் என்பதனை உறுதிப்படுத்த வேண்டும்.
🍁நீங்கள் விசிட் வீசாவில் அங்கு ( Work) வேலை செய்ய மாட்டீர்கள் என்பதனையும் உறுதிப்படுத்த வேண்டும். எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? எனக்கு எனது நாட்டில் ஒரு ( On Business ) சொந்த தொழில் இருக்கின்றது அல்லது நான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கின்றேன் அல்லது அரசாங்க வேலையில் உள்ளேன் ஆகையால் மீண்டும் எனது நாட்டிற்கு போக வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதனை -( Business Registration, appointment letter, pay slips Proof) தொழில் பதிவுச் சான்றிதழ், சம்பள பட்டியல், மூலம் நிரூபிக்க வேண்டும்.
வேறு என்ன காரணத்திற்காக நீங்கள்
நாடு திரும்புவீர்கள் என்பதற்கான ஆவணங்களை வழங்க முடியும்........?
🍁Married certificate எனக்கு திருமணம் ஆகிவிட்டது மனைவி இங்கு உள்ளார் என்று நிரூபிக்கலாம் .
🍁Children details எனக்கு குழந்தைகள் இங்கு உள்ளனர் என்று நிரூபிக்கலாம்.
🍁parents & siblings details எனது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இங்கு உள்ளார்கள் என்று நிரூபிக்கலாம்.
🍁Business or employee Proof எனக்கு இங்கு ஒரு சொந்த தொழில் இருக்கின்றது அல்லது நான் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகின்றேன் அல்லது நான் அரசாங்க வேலையில் உள்ளேன் ஆகையால் நான் திரும்ப தொழிலிலை தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதனை நிருபிக்கலாம்.
🍁எனது நாட்டில் எனக்கு வீடு காணி வாகனங்கள் வேலை இருக்கின்றது ஆகையால் நான் உங்கள் நாட்டிற்கு ஒரு சுமையாக இருக்க மாட்டேன் மீண்டும் எனது நாட்டிற்கு சென்று விடுவேன் என்பதனை நிரூபிக்க வேண்டும்.
உங்கள் ஆவணங்களை நீங்கள் சரியான முறையில் கனேடியன் தூதரகத்திற்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில் உங்கள் ஆவணங்களை வீசா ஆபிசர் பார்த்து மனத்திருப்தி-(Certified) அடைந்தால் மாத்திரமே உங்களுக்கு வீசா Approval ஆகும் இல்லை என்றால் உங்கள் வீசா கோரிக்கை நிராகரிக்கப்படக்கூடிய வாய்ப்புக்களே அதிகம் உள்ளது.
கேப்பார் பேச்சு கேட்டு உங்கள் கனடா கனவினை கனவாகவே புதைத்துவிடாமல் மிக மிக கவனமாக கையாளுங்கள் நன்றி 🍁🇨🇦🍁
இலவச ஆலோசனை சேவைகளுக்கு தொடர்புகொள்ளுங்கள்!!!!