20/11/2019
பொதுமக்களுக்கு ஒரு அன்பான #வேண்டுகோள்.. #விளக்கம்.. எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்..
ஒரு #சுற்றுலா_வாடகை_வாகனம் வைத்திருப்பவர் என்னென்ன செய்து அந்த #வாகனத்தை இயக்கி வருகிறார் என்று உங்கள் #பார்வைக்கு.
உதாரணத்திற்கு என்னுடைய ஒரு வாகனத்தை எடுத்துக்கொள்வோம்..
2013 மாடல் மகேந்திரா சைலோ 7+1..
1. #இன்சூரன்ஸ் 2013 மாடலுக்கு - 25895
இது புதிய வாகனங்களுக்கு 40,000 வரை வருகிறது,
2. டூரிஸ்ட் #பர்மிட் - 5000 வரை ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை
3. #வரி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை -2150,
4. #எப்_சி (FC) என்று சொல்லக்கூடிய தகுதி சான்று - 2500 வரை,
5. #புகைசான்று -100. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை..
இது எல்லாம் #பேப்பருக்காக நாங்கள் செய்யும் செலவு..
இவற்றில் எது ஒன்று இல்லாவிட்டாலும் வாகனத்தை இயக்கவே முடியாது
இது மட்டும் இல்லாமல் #வண்டிக்காக ஆயில் சர்வீஸ், வீல் அலாய்ண்மெண்ட், டயர் தேய்மானம், உதிரி பாகங்களின் விலை சுற்றுலா வாகன ஓட்டுநருக்கு #வெள்ளை_சீருடை..
ஆனால் சிலபேர் இதில் எந்த புத்தக #செலவும் செய்யாமல் சொந்த உபயோகத்திற்க்கு உபயோகப்படுத்தம் வாகனங்களை( ) வைத்து #வாடகைக்கு ஓட்டுகின்றனர். சில மக்களும் அதை உபயோகப்படுத்துகின்றனர்..
நாங்கள் இவ்வளவு பெரிய தொகையை #காப்பீட்டுக்காக( ) எதற்க்கு கட்டுகிறோம் என்றால் பயணிகளின் #பாதுகாப்புக்காக தான்.
எந்த #பாதுகாப்பும் இல்லாத சரியான ஓட்டுநர் #அனுபவம்( ) இல்லாத #ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தவிர்த்திடுங்கள்..
#உங்களையே நம்பி ஓட்டுநர் தொழிலையே முழுமையாக #நம்பி இருக்கும் முறையாக #ஓட்டுநர் தொழிலை செய்யும் எங்களுக்கு உங்களுடைய முழு #ஆதரவை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏