Munnar Memories Tour & Trekking

Munnar Memories Tour & Trekking Tours & Travels

Munnar Memories Tour & Trekking
05/01/2024

Munnar Memories Tour & Trekking

Munnar Memories Tour & Trekking
02/01/2024

Munnar Memories Tour & Trekking

❤️💐
25/12/2023

❤️💐

ஒரு மணி நேரம் யானைக் கூட்டம் ஒன்று தண்ணீர் அருந்துவதை, தண்ணீர் அடித்து விளையாடி மகிழ்வதை அத்தனை பக்கத்தில் ஒரு no confli...
24/12/2023

ஒரு மணி நேரம் யானைக் கூட்டம் ஒன்று தண்ணீர் அருந்துவதை, தண்ணீர் அடித்து விளையாடி மகிழ்வதை அத்தனை பக்கத்தில் ஒரு no conflict zone ல் உட்கார்ந்து அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது என் வாழ்வின் மிகச் சிறந்த நேரம் என்பேன்.

ஏற்கனவே Bhasker Dev தம்பி கடந்த ஆண்டு ஏற்பாடு செய்த கொழுக்குமலை, மூணார் பகுதிக்கு நட்புகளுடன் சென்ற பயண அனுபவம் உண்டு என்பதால், இம்முறை குடும்பமாக அங்கேயே செல்வது, ஆனால் போகாத இடங்களுக்கு என முடிவு செய்துகொண்டேன். கூடியமட்டும் குழந்தைகள் இருவரையும் குஷிப் படுத்துவதே பயணத்தின் நோக்கம்.

பாஸ்கர் ஆனைக்குளம் என சொன்னதும் அடித்துப் பிடித்து கூகிளில் படங்களைத் தேடினால் ஒரே ஆனை ஆனை தான். மகிழ்ச்சி, அங்கேயே போகலாம், இரண்டு நாள்கள் சுற்றிப் பார்க்கலாம் என சொல்லி இருந்தேன்.

எங்களை வரவேற்று முதல் நாள் பயணம் அழைத்துச் சென்ற பாஸ்கரின் தம்பியுடன் என் உரையாடல் இப்படிப் போனது:

"தம்பி போனவாட்டி நாங்க உங்க ஊருக்கு வந்திருந்தோம். நீங்க பாஸ்கர் பெரியப்பா பையனா?"

"ஆமாக்கா"

"அடடா... வந்த அன்னிக்கே அடம்புடிச்சு எங்களை ஊருக்கு கூட்டிட்டுப் போய் தம்பி கல்யாணம் அப்டின்னு கல்யாணச் சோறு போட்டாப்டி. அந்த சேமியா பால் பாயாசம் சூப்பரா இருந்துச்சு"

"ஆமாக்கா... நல்லா இருந்துச்சு!"

"லக்கிடியா ஊர்ப் பேரு?"

"இல்லக்கா. லாக்காடு"

"ஆங்... ஆமாமா. பக்கத்துல தான் இட்லி ஹில்ஸ் இல்லையா?"

"ஆமாக்கா... அதேதான்."

"அந்த கல்யாண பொண்ணு மாப்பிள்ளை எல்லாம் நல்லா இருக்காங்களா?"

"ஆமாக்கா. அந்த மாப்பிள்ளை நான் தான். நீங்க என் கல்யாணத்துக்கு வந்து சாப்பிட்டுட்டு போனீங்க"

டுமீல் டுமீல்!
என்னடா இது வரலாற்று ஆய்வாளருக்கு வந்த சோதனை!

இரண்டு நாள்களும் zip line, Jeep river crossing, hanging bridge, trek, ஆனை பார்த்தல், அருவிகள், அணைகள் என அமர்க்களமாக போனது. டைகர் கேவ் ட்ரெக்கிங் என்று சொல்லி அழைத்துச் சென்றார்கள் பாருங்கள். ஆகா ஆகா. அட்டைப்பூச்சி கடியுடன் அப்படி ஒரு அமர்க்களமான அனுபவம்! மழைக்கால மூணார் தேனிலவு செல்ல சரியான இடம். 😜

அப்படியே தங்கியிருந்த இடமும் பாஸ்கரின் மாமா வீடு cm resort. தினமும் காலை அந்த வீட்டின் பின் கட்டில் அமர்ந்தபடி பறவைகள் ஒலி கேட்டு, பள்ளத்தாக்கை ரசித்து இட்லியும் ஆப்பமும் உண்டு ரசித்தோம்.

மூன்றாவது நாள் பயணம் நீட்டித்தோம். அன்று பொன்முடி அணை viewpoint ஒன்றுக்கு ராம் (பாஸ்கரின் தம்பி) அழைத்துச் சென்றார். அப்படி ஒரு காட்சி அது❤️ மாலை மங்கும் நேரம் அங்கு மீண்டும் ஒருமுறை செல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டேன். அன்று மதியம் dreamland adventure park சென்றோம். இரண்டு குட்டீசும் அவ்வளவு சிரித்து மகிழ்ந்து இருந்ததைப் பார்த்து வெகுகாலம் ஆகியிருந்தது என உணர்ந்துகொண்டேன்! All in all a wonderful time spent in the right places with the best stay and guidance. தினமும் மாலை பாஸ்கர் அழைத்து எப்படி இருந்தது என விசாரித்து ஒரு personal touch கொடுத்துக் கொண்டே இருந்தார். ஏனைய பணம் பிடுங்கும் பயண நிறுவனமாக நடத்தாமல், இந்த பெர்சனல் டச்சுடன் நடத்துவதால்தான் மீண்டும் மீண்டும் மூணார் போக வேண்டும் என நினைக்கத் தோன்றுகிறது❤️

கிடைக்கும் லாபத்தை அப்பகுதி குழந்தைகள் மேம்பாட்டுக்காக பாஸ்கர் செலவிடுவதை அறிவதால், நம்மால் முடிந்த எதையோ செய்வதாக மனதில் சிறு மகிழ்வும் இதில் உண்டு, without compromising on the quality of the vacation!

Thank you for the wonderful memories we made, Baskar! Much love to your team ❤️

Munnar Memories Tour & Trekking

DrArun Kumar Tvm அண்ணா பேமிலியோட மூணார் கேட்டு இருந்தாங்க கேக்கும் போதே பாஸ் எனக்கு ட்ரக்கீங் எல்லாம் வேணாம்னு சொன்னாங்க...
22/12/2023

DrArun Kumar Tvm அண்ணா பேமிலியோட மூணார் கேட்டு இருந்தாங்க கேக்கும் போதே பாஸ் எனக்கு ட்ரக்கீங் எல்லாம் வேணாம்னு சொன்னாங்க நானும் அதே தான் சொன்னேன் ட்ரக்கீங்ங்கிறது நான் தனியாக அழைச்சிட்டு போறது பேமிலி புக்கிங்ல ஒரு நாளும் ட்ரக்கீங் கொடுக்க மாட்டேன் பேமிலிக்கு தகுந்தவாறு ப்ளான் பண்ணி தான் கொடுப்பேன்னு சொன்னேன்.

அதே மாதிரி நம்ம ஜீப்ல பிக்கப் ஆகி இரண்டு நாள் மாமா ரிசார்ட்ல தான் இருந்தாங்க எல்லாமே சிறப்பா இருந்ததாக இருந்துச்சு பாஸ்கர் இந்த அளவுக்கு சூப்பராக இருக்கும்னு எதிர் பார்க்கலனு சொன்னாங்க ரொம்பவே மகிழ்ச்சியா இருந்துச்சு நன்றியும் மகிழ்ச்சியும் அண்ணா... ❤️😇🙏

Munnar Memories Tour & Trekking

நண்பர்களுக்கு வணக்கம் வரும் பிப்ரவரி 10/11 சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வயநாடு டூர் ப்ளான் செய்துள்ளோம் இது கோழிக்கோடு ...
21/12/2023

நண்பர்களுக்கு வணக்கம் வரும் பிப்ரவரி 10/11 சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வயநாடு டூர் ப்ளான் செய்துள்ளோம் இது கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து ஆரம்பித்து வயநாடு வழியாக காரப்புழா டாம் பார்த்து விட்டு மதிய உணவை முடித்து விட்டு சூஜிபாறை வாட்டர் பால்ஸ் பார்த்த பிறகு அங்கிருந்து முழுக்க முழுக்க சோலைகளுக்கு நடுவே அமைந்துள்ள டென் ஸ்டேக்கு ஜீப் சவாரி வழியாக சென்று அங்கு மாலை சிற்றுண்டியாக டி & ஸ்னாக்ஸ் முடிந்ததும் பாரஸ்ட் ஹைக்கிங் போயி அங்குள்ள அருவியில் குளித்தும் சோலை காடுகளுக்குள் பரவி கிடக்கும் ஆறுகளில் நடந்து விட்டு கேம்பயர் & ம்யூசிக் முடிந்த பின்பு இரவு உணவை முடித்து விட்டு இயற்கையின் மடியில் டென் ஸ்டே.

அடுத்த நாள் எழுந்து ப்ளாக் டி குடித்து விட்டு மீன்டும் வேறு திசையில் ரிவர் ஹைக்கிங் முடித்து வந்ததும் ப்ரேக் பாஸ்ட் முடித்து விட்டு க்ளாஸ் பிரிட்ஜ் பார்த்து விட்டு மதிய உணவு முடித்து விட்ட பின்பு கோழிக்கோடு ரயில் நிலையத்தில் ட்ராப் செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு கீழ் காணும் என்னை தொடர்பு கொண்டு உங்களின் வரவை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் வர இயலாத நண்பர்கள் #ஷேர் செய்யுது உதவினால் புதிய நண்பர்கள் வர உதவியாக இருக்கும் என்றும் அன்புடன்... பாஸ்கர் தேவ் ❤️🙏

94817 88944 /9739394464.

Munnar Memories Tour & Trekking
18/12/2023

Munnar Memories Tour & Trekking

Munnar Memories Tour & Trekking
13/12/2023

Munnar Memories Tour & Trekking

Munnar Memories Tour & Trekking
12/12/2023

Munnar Memories Tour & Trekking

Munnar Memories Tour & Trekking
01/12/2023

Munnar Memories Tour & Trekking

நம்ம Saravanan அண்ணா இரண்டு நாளைக்கு வாகமான் கேட்டு இருந்தாங்க நண்பர்களோட போகனும்னு எனக்கு தெரிந்த ரிசார்ட் எல்லாம் full...
30/11/2023

நம்ம Saravanan அண்ணா இரண்டு நாளைக்கு வாகமான் கேட்டு இருந்தாங்க நண்பர்களோட போகனும்னு எனக்கு தெரிந்த ரிசார்ட் எல்லாம் full லா இருக்கு ணேனு சொல்லியும் விடல எப்படியாவது அரேன்ஞ் பண்ணி கொடுனு சொன்னாங்க சரினு நம்ம மூணார்ல சேட்டாட்ட கேட்டு அரேன்ஞ் பண்ணியாச்சு அங்க போயிட்டு திடிர்னு தம்பி காந்தலுர் வரணும்னு சொன்னாங்க சரினு தேடினா அதே நிலை தான் புல்லா இருக்கு அப்றமா தெரிஞ்ச இடத்தில் கேட்டு அவங்க கிட்ட ரூம்ஸ் இல்லை ஹோம் ஸ்டே தான் இருக்கு பரவாயில்லையானு கேட்டேன் பரயில்லைனு புக் பண்ணிடுனு பணத்தை போட்டு விட்டாங்க எல்லாம் நல்ல படியாக முடிஞ்சது.

ரொம்ப நன்றியும் மகிழ்ச்சியும் அண்ணா ❤️😇🙏

Munnar Memories Tour & Trekking

Munnar Memories Tour & Trekking
26/11/2023

Munnar Memories Tour & Trekking

Munnar Memories Tour & Trekking
22/11/2023

Munnar Memories Tour & Trekking

Munnar Memories Tour & Trekking
18/11/2023

Munnar Memories Tour & Trekking

Munnar Memories Tour & Trekking
15/11/2023

Munnar Memories Tour & Trekking

Munnar Memories Tour & Trekking
11/11/2023

Munnar Memories Tour & Trekking

Munnar Memories Tour & Trekking
11/11/2023

Munnar Memories Tour & Trekking

Munnar Memories Tour & Trekking
10/11/2023

Munnar Memories Tour & Trekking

Munnar Memories Tour & Trekking
09/11/2023

Munnar Memories Tour & Trekking

Munnar Memories Tour & Trekking
07/11/2023

Munnar Memories Tour & Trekking

Munnar Memories Tour & Trekking
12/10/2023

Munnar Memories Tour & Trekking

 Munnar Memories Tour & Trekking
09/10/2023

Munnar Memories Tour & Trekking

ஆகஸ்ட் 12 ந்தேதி காலைல உடுமலைல எப்பவும் பிக்கப் பண்ற நம்ம காமராஜ் அண்ணா இரண்டு பஸ்ல போக தயாராக எல்லாரும் கிளம்பினோம் முத...
17/08/2023

ஆகஸ்ட் 12 ந்தேதி காலைல உடுமலைல எப்பவும் பிக்கப் பண்ற நம்ம காமராஜ் அண்ணா இரண்டு பஸ்ல போக தயாராக எல்லாரும் கிளம்பினோம் முதல் தூவானம் ட்ரக்கீங் போயிட்டு மதியம் வந்து வெஜ் சாப்பாடு முடிந்ததும் அங்கே இருந்து லக்கம் வாட்டர் பால்ஸ்ல குளிச்சிட்டு அங்கே இருந்து மறுபடியும் ரிசார்ட் வரும் போது சூடான டீயும் & சூடான பஜ்ஜியும் அந்த குளிருக்கு நல்ல இருந்துச்சு அப்றமா ரிசார்ட்ல போயி கொஞ்ச நேரம் எல்லாம் ஓய்வெடுக்க மறுபடியும் 7 மணிக்கு கேம்பயர் & மியூசிக் போட்டதும் சின்ன குழந்தைகளோட டான்ஸோசட ஆரம்பம் ஆனது அந்த இரவு அப்றமா ஒருவருக்குவர் அறிமுகம் செய்து கொண்டார்கள். அப்றமா மூணார் பற்றிய வரலாறு மற்றும் தேயிலை உற்பத்தி பற்றியும் தேயிலை தோட்ட தொழிலாளிகள் இப்பவும் எவ்வளவு கஷ்டபடுறாங்க அதற்காக தான் இந்த டூரிசம் ஆரம்பித்து வரை பேசும் போது கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்.
எல்லாம் பேசி முடித்த பின்னர் இரவு உணவு தயாராக இருந்தது வெஜ் & மற்றும் நான் வெஜ் தனி தனியாக வழங்க பட்டது எல்லாம் உறங்க சென்றார்கள்.

ஆகஸ்ட் 13 காலை எல்லாருக்கும் டி கொடுக்கப்பட்டு எழுந்து ரெடி ஆகி காலை சிற்றுண்டியை முடித்து விட்டு காந்தலுருக்கு போக தயாராக இருந்த ஜீப்பில் ஏறி புறப்பட்டோம் ட்ரைவர்கள் எல்லாம் ஒவ்வொரு இடமாக சுற்றி கான்பித்து கீழந்தூர் அறுவியில் மறுபடியும் ஒரு குளியல் போட்டு விட்டு முருகன் பாறையில் ஜீப் சவாரி முடிவடைந்ததும் ரிசார்ட் வந்து தயாராக இருந்த வெஜ் & நான் வெஜ் பிரியாணியை சாப்பிட்டு கிளம்பி உடுமலை போயி ட்ராப் செய்யப்பட்டது எல்லா ட்ரிப் போலவும் இதுவும் ரொம்ப நல்ல படியா முடிஞ்சது 3 வயது குழந்தைள் முதல் 60 /70 வயது பெரியவர்கள் வரை வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருந்து எல்லாரிடமும் கேட்டேன் எப்படி இருந்துச்சுனு எல்லாமே சூப்பர் ரிசார்ட் & உணவு இரண்டும் ரொம்பவே அருமையா இருந்துனு சொன்னாங்க அதற்கு காரணம் எங்க நஃபல் அண்ணா தான் நான் தனியாக பேக்கேஜ் கொடுக்கும் போதும் சரி க்ருப் கொடுக்கும் போதும் சரி அவ்ளோ சூப்பரா பார்த்துப்பாரு எப்பவும் நல்ல விஷயங்கள் சொல்லிக் கொடுத்துட்டே இருப்பாரு உனக்காக ரேட் கம்மி பண்ணல நீ படிக்க வைக்கிற குழந்தைகளுக்காக தான் இந்த ரேட்னு அடிக்கடி சொல்லுவாரு ரொம்ப நன்றி ணே..

இந்த ட்ரிப்ல இரண்டு விஷயங்கள் எனக்கு ரொம்ப மகிழ்ச்சிய கொடுத்து ஒன்னு சங்கர் அண்ணா தன்னோட வயதான அப்பா, அம்மாவ கூட்டிட்டு வந்து அவங்க வயால நல்லா இருக்கு தங்கம் இந்த மாதிரி இடம் எல்லாம் நாங்க பார்த்தே இல்லை ரொம்ப சந்தோஷம் நீ நல்லா இருக்கனும்னு வாழ்த்தியது. ஐயப்பன் அண்ணா இதே காந்தலுர் மறையூர் டூருக்கு நான்கு வருஷம் முன்பு வந்த போது இருந்த பட்ஜெட்ட விட ரொம்ப குறைவாக பட்ஜெட் இருக்கு எப்படினு என் கிட்ட கேம்பயர் டைம்ல எல்லார் முன்பும் கேட்டது அவர் கிட்ட சொல்ற பதில் தான் உங்க கிட்டயும் எனக்கு இது தொழில் இல்ல எனக்குனு ஒரு வேலை இருக்கு இதுல வரும் சொர்ப வருமானம் எல்லாம் தேயிலை தோட்ட தொழிலாளிகள் குழந்தைகறுக்கு தான் போகும்.

இந்த ட்ரிப் குறித்த தகவல்களை சொல்லும் போது எனக்காக ஷேர் செய்து உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் மகிழ்ச்சியும் உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப நன்றி.. 🙏❤️

பின்குறிப்பு :
1)இரண்டு நாள் பஸ்
2) ரிசார்ட் ஸ்டே
3) 4 டைம் உணவு அதில் இரண்டு முறை நான் வெஜ்
4) ஜீப் சவாரி
5)என்றி பாஸ் எல்லாம் சேர்ந்து ஒரு ஆளுக்கு 3750 ரூபாய் தான் வாங்கினேன். 😊

Munnar Memories Tour & Trekking

Address

685612, Devikulam
Munnar
685612

Alerts

Be the first to know and let us send you an email when Munnar Memories Tour & Trekking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby travel agencies



You may also like