Kumbakonam #Tourism

Kumbakonam #Tourism This page describe about kumbakonam. Do you want any queries about kumbakonam we will rectify that o
(2)

22/04/2024

19/04/2024

18/04/2024

14/04/2024
14/04/2024
23/02/2024

நன்றி. நித்ரா காலண்டர்.

#மாசிமகம்

மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் சேர்ந்து வரும் மக நட்சத்திர நாள் ஆகும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது மிகவும் சிறப்பான நாளாகும். மாசி மக நாளானது கடலாடும் விழா என்றும், தீர்த்தமாடும் விழா என்றும் அழைக்கப்படுகிறது.

'மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்' என்பது நம் முன்னோர் வாக்கு. ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தை 'மாசி மகம்' என்று சிறப்பித்துக் கூறுவது வழக்கம்.

சிவன், விஷ்ணு, முருகனுக்கு உகந்த நாள் :

மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம்.

உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாள் பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்று தான்.

இந்நாள் முருகப்பெருமானுக்கும் உகந்த நாளாகும். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. இதற்கு காரணமான தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசி மகம் தான்.

சிவபெருமான் வருணனிற்கு சாப விமோசனம் அளித்ததும் இந்நாளிலேயாகும். இதனால் சிவனை வழிபடுவதற்கும் உகந்த நாளாகிறது மாசி மகம்.

பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான். இதனால் இந்நாள் பெருமாளை வணங்குவதற்குரிய நாளும் ஆகிறது.

எல்லா தெய்வங்களையும் வழிபடுவதற்கான சிறப்பு நாளாக அமைகிறது மாசி மகம். இந்த நன்னாள் தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.

இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள் மற்றும் தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர்க்கடன் செய்வதும் நன்மை தரும்.

குலதெய்வ வழிபாடு :

மாசி மகத்தன்று குலதெய்வத்தை வழிபாடு செய்வதால் குலதெய்வம் மனம் மகிழ்ந்து நம் குலத்தைக் காக்கும், வாழ்வாங்கு வாழ வைக்கும், வம்சம் வாழையடி வாழையென தழைத்து வளரும்.

மாசி மாதம் மகம் நட்சத்திரம் மற்றும் நிறைந்த பௌர்ணமி நாளில் இல்லத்தை சுத்தமாக்கி விளக்கேற்றி, மாவிளக்கிட்டு படையலிட்டு குலதெய்வத்தை வழிபட வேண்டும்.

மேலும் அருகில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயிலுக்கு சென்று சிவனையும், பெருமாளையும் மனதார வழிபட்டால் பிறவிப்பயனை அடையலாம். வழக்கு முதலான சிக்கல்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் தீயசக்திகள் அண்டாமல் குலதெய்வம் நம்மைக் காத்தருளும்.

இந்நாளில் விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். இவ்வாறு தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும், சகல தோஷங்களும் நீங்கும்.

பித்ரு தோஷம் நீங்கும் :

பித்ருக்கள் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் என்று பொருள். தோஷம் என்றால் குற்றம். எனவே பித்ருதோஷம் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் சம்பந்தப்பட்ட குற்றம் என்று பொருள்.

இந்த தோஷ நிவர்த்திக்கு அருமையான பரிகார தினம் மாசி மகம். அன்றைய தினம் கும்பகோணம் மகா மக குளத்தில் பிதுர் தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

மாசி மக விரதம் :

மாசி மகத்தன்று விரதம் இருக்க விரும்புபவர்கள், காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும்.

நீராடிய பின்னர் விரதம் இருந்து சிவன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

முழுநேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒரு வேளை உணவு சாப்பிட்டும் விரதத்தை கடைபிடிக்கலாம்.

மாசி மகத்தில் புனித நீராட முடியாதவர்களும், கோயிலுக்கு செல்ல முடியாதவர்களும் மாசி மக புராணத்தை படிக்கவோ அல்லது கேட்கவோ செய்யலாம்.

அன்றைய தினம் முழுவதும் வேறு எந்த பணிகள் செய்தாலும் இறைவனை மனதில் நினைத்து ஒரே சிந்தனையோடு இருக்க வேண்டும்.

மாசி மகத்தில் நீராடுதல் :

மாசி மகத்தன்று கடல், குளம், ஆறு என எந்த நீர்நிலைகளாக இருந்தாலும் அதில் புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதாக ஐதீகம் உள்ளது.

அது மட்டுமின்றி மாசி மகத்தன்று புனித நீராடினால், ஏழு ஜென்ம பாவங்களையும் அடியோடு போக்கும் என்பது ஐதீகம்.

பலன்கள் :

மாசி மகத்தன்று குழந்தையில்லாத தம்பதிகள் விரதமிருந்து அன்னதானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மாசி மக நாளில் புனித நீராடி இறைவனை வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கும். மேலும் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.

உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் மாசி மக நாளில் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.

மாசி மாதத்தில் பெண்கள் புது மாங்கல்ய சரடு கட்டிக் கொள்வது மிகவும் சிறப்பானது.

மாசி மக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபட்டால் இன்பமும், வெற்றியும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

ஆகவே, இந்த சிறப்பு மிக்க மாசி மக நாளில் புனித நீராடி, வழிபாடு செய்து மகிழுங்கள்.🙏🙏🙏

11/06/2023

வண்டி எண் - 12083/ 12084
கோவை - மயிலாடுதுறை - கோவை ஜன் சதாப்தி அதிவிரைவு வண்டி

கோவை - 07:15 (காலை) 21:15
இருகூர் - 07:29. 20:29
திருப்பூர் - 07:53. 20:03
ஈரோடு - 08:38. 17:18
கரூர் - 09:28. 18:23
திருச்சி - 10:50. 16:45
தஞ்சாவூர் - 11:48. 15:53
பாபநாசம் - 12:11. 15:29
கும்பகோணம் - 12:23. 15:16
மயிலாடுதுறை - 13:50. 14:50

தமிழ்நாட்டில் ஒடும் ஒரே ஏழைகளின் சொகுசு ரயில். ஆனால் பொதுமக்கள் இன்னும் இந்த ரயிலைப் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். கோவையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு திருப்பூர் ஈரோடு கரூர் திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரை செல்கிறது.

பொதுவாக கோவையில் இருந்து சிதம்பரம் சீர்காழி தஞ்சாவூர் மயிலாடுதுறை காரைக்கால் போன்ற பகுதிகளுக்கு செல்ல மிகக் குறைந்த அளவில் பேருந்துகள் உள்ளது. அதிலும் மிக நீண்ட தூரம் செல்வதால் கடுமையான உடல் சோர்வு ஏற்படும். கட்டணமும் 400 ரூபாயில் இருந்து 500க்கும் மேல் வரை உள்ளது. வழியில் அடிக்கடி சாலையோர கொள்ளை கூடாரங்கள் என்ற வடிவில் உணவகங்களில் நின்று நின்று செல்லும். சிங்காநல்லூர் பல்லடம் காங்கயம் வெள்ளகோவில் குளித்தலை திருச்சி பாபநாசம் தஞ்சாவூர் கும்பகோணம் என்று பல இடங்களில் நின்று நின்று செல்லும். ஆனால் சாமானிய மக்கள் இந்த ரயிலைப் பற்றி அறியாத காரணத்தால் இன்னும் பேருந்தில் தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.

நமக்காக பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஏழைகளின் ரதம், மொத்தம் 16 பெட்டிகளை கொண்ட ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 100 பேர் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது வெறும் ஆறு மணி நேரத்தில் மயிலாடுதுறை சென்று அடைந்து விடும். கோவையில் இருந்து புறப்படும் அதிவேக ரயில் களில் இது தான் முதன்மையானது.

திருச்சிக்கு பணி நிமித்தமாக செல்பவர்கள் இந்த ரயிலை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள் காரணம் வெறும் நான்கு மணி நேரத்தில் திருச்சியை அடைந்துவிடும். சொகுசான இருக்கைகள். கழிப்பறை வசதி நேரமும் மின் விசிறிகள் மற்றும் தென்றல் காற்று மூலம் குளு குளு பயணத்தை அனுபவிக்கலாம். மேலும் நியாயமான விலையில் தண்ணீர் பாட்டில் இருந்து உணவு பொருட்கள் வரை அனைத்தும் ரயில்வே மூலம் உள்ளேயே கிடைக்கிறது. இவ்வளவு வசதிகளும் வெறும் 170 ரூபாய் மட்டுமே. அட ஆமாங்க இந்த ரயிலில் கட்டணம் வெறும் 170 ரூபாய் மட்டும்தான். முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்டதால் மிகவும் தூய்மையாக இருக்கும். இந்த ரயிலில் பயணிக்க முன்கூட்டியே நாம் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். கடைசி நேரத்தில் பயணிக்கக்கூடியவர்களுக்கும் ரயில் புறப்படும் 30 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. கோவை, இருகூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்கிறது ஆனாலும் பேருந்தை விட இரண்டு மடங்கு முன்கூட்டியே சென்று சேர்கிறது. மதியம் மயிலாடுதுறை சென்று அடைந்த பிறகு மீண்டும் ஒரு மணி நேர இடைவெளியில் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணி அளவில் கோவைக்கு வந்து சேர்கிறது. மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மதியம் 2 மணி வரை இந்த ரயிலுக்கான டிக்கெட்டுகள் கிடைக்கிறது. ஆனால் தினமும் கிட்டத்தட்ட 800 இருக்கைகள் காலியாக இந்த வண்டி செல்கிறது. பொங்கல் தீபாவளி மற்றும் விடுமுறை காலங்களில் ஒரு இடம் கூட இல்லாமல் முழுமையாக நிரம்பி வழியும் இந்த வண்டி ஏழைகளுக்காக பிரத்தியேகமாக இயக்கப்படும் வண்டி. ஆனால் முன்பதிவு நடைமுறை தெரியாத காரணத்தால் ஏழைகள் இதை பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். இது நமக்கான வண்டி. இதை நாம் பயன்படுத்தாமல் விட்டால் எதிர்காலத்தில் இதை ரத்து செய்து வட மாநிலங்களுக்கு திருப்பி விடவும் வாய்ப்பு உள்ளது எனவே நமது உரிமையை இழக்காமல் இந்த வண்டியை பற்றி அறியாத மக்களுக்கு கொண்டு செல்லுங்கள்.

11/04/2022

video credit.BBC Tamilhttps://youtu.be/Qo_Hdjo-0m8
23/01/2022

video credit.BBC Tamil

https://youtu.be/Qo_Hdjo-0m8

Tamil Food Series: Kumbakonam Kadappa Dish செய்வது எப்படி? ஏன் இந்த பெயர்?தமிழ்நாட்டின் பிராந்திய உணவுகளின் சிறப்பு குறித்து நீங்கள் அறி.....

 #நண்பனின் பைக்; தப்பிக்க புது டெக்னிக்;  #கும்பகோணத்தில்  #செயின் பறிக்கும் இளைஞர்கள் கைதானது எப்படி? In   Police arres...
18/07/2021

#நண்பனின் பைக்; தப்பிக்க புது டெக்னிக்; #கும்பகோணத்தில் #செயின் பறிக்கும் இளைஞர்கள் கைதானது எப்படி? In Police arrested five youth for - https://www.vikatan.com/news/crime/in-kumbakonam-police-arrested-five-youth-for-chain-snatching

Thanks: Vikatan EMagazine

ஐந்து இளைஞர்களை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 11 பவுன் நகை, இரண்டு உயர் ரக பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீத...

09/07/2021

Need a candidates for e seva centre Kumbakonam.

28/06/2021



Dinesh Online Services

63 Dr Moorthy Road, Kumbakonam.

Mob:9894455601

https://youtu.be/hEuGbAbzHCA
26/06/2021

https://youtu.be/hEuGbAbzHCA

ராஜேந்திர சோழனின் அரண்மனை கண்டெடுப்பு | Raja Raja Cholan Palace V News27 Live is a 24x7 streaming Tamil Live News Channel f...

Friends please avoid to come shop, u can contact me via what's app or mail, I will try to help u as soon as possible.
14/05/2021

Friends please avoid to come shop, u can contact me via what's app or mail, I will try to help u as soon as possible.

Find out more about Dinesh Online Services. (Eseva Services) by following them on Google

Courtesy: Vikatan EMagazine   Ramasamy Temple, Kumbakonam.
21/04/2021

Courtesy: Vikatan EMagazine

Ramasamy Temple, Kumbakonam.

இந்த ஆலயத்தை பக்தர்கள் 'தென்னக அயோத்தி' என்றே அழைக்கிறார்கள். காரணம், இந்த ஆலயத்தின் கருவறையில், ஶ்ரீ ராம பிரான்...

  new time table for     due to Corona issues. #கும்பகோணம்  #பேருந்து  #நிலையம் புதிய கால அட்டவணை.
20/04/2021

new time table for due to Corona issues.

#கும்பகோணம் #பேருந்து #நிலையம் புதிய கால அட்டவணை.

Address

Dr Moorthy Road, Kumbakonam
Thanjavur
612001

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm
Sunday 9am - 7pm

Telephone

+919894455601

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kumbakonam #Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kumbakonam #Tourism:

Videos

Share


Other Thanjavur travel agencies

Show All