26/05/2023
#உவரி வைகாசி #விசாகத்திருவிழா.!
"மாட்டு வண்டிகளின் அணி வகுப்பைக் காணக் கொடுத்துவைக்க வேண்டும்"
மாசி மாதம் துவங்கி பங்குனி, சித்திரை வரைக்கும் பல்வேறு ஊர்களில் கொடை விழா நடத்தி வைகாசி விசாகத்திற்கு உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலுக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கிராமத்து மக்கள் செல்வது வழக்கம். அந்த காலம் மாட்டு வண்டி கட்டி அடிப் பக்கம் கூடையில் மாம்பழம் , கட்டு சோறும் கட்டி வழி நெடுக பொங்கி சாப்பிட்டு செல்லும் வழக்கத்தை மறக்க முடியாது.!!!
'வெள்ளையுள் சொள்ளையுமாக' உடுத்திய ஆண், பெண், மாட்டின் வேகநடைக்கு ஏற்ப எட்டி நடக்கும் இளவட்டங்கள், அத்தனை முகங்களிலும் ஆனந்தம் பொங்கும், அதைக் காண்போர் மனமும் ஆனந்தமாகவே இருக்கும்! உவரிக்கு சென்று தங்கி சாமி கும்பிட்டு திருவிழா கூட்டம், வேடிக்கைகள், இரவு டிராமா, கச்சேரி வாகனப் பவனி......
பொங்கி சாப்பிட்டு, தெரிந்தவர்களோ உறவினர்களோ வந்தால் அவர்களுக்கும் மனமுவந்து விருந்தளித்து மனதுக்குள் ரொம்பவும் ஆனந்தம் சந்தோஷம் உற்சாகம் போன்ற உணர்வுகளில் ஒரு வருடத்திற்கான சக்தி ரீசார்ஜ் ஆகிவிட்டதுபோல இருக்கும்.
விசாகம் முடிந்த மறுநாள் முதல், வண்டிகள் திரும்பிவரத்தொடங்கும். போனபோது இருந்த உற்சாகம் மறைந்து தூங்குமூஞ்சியாக மனிதர்கள்.... எதிர்வரும் பேரூந்துகளுக்கு தாங்களாகவே வழிவிட்டு நடக்கும் வண்டி மாடுகள்.... சுமார் ஒரு வாரமாவது வண்டிகள் திரும்பி வருவதைப் பார்க்க கிடைக்கும்! காணக் கொடுத்து வைத்த சுயம்புலிங்கசுவாமிக்கு கோடான கோடி நன்றிகள்! அப்பனாகவும் தாத்தாவாகவும் பக்தர்களாகிய எங்களோடு இருந்து எங்களைவாழவைக்கும் சுவாமியே இந்த கொரோனா கொடியனை இன்னும் ஏன் கண்டும் காணாமல் இருக்கிறீர்? மக்கள் அனைவருக்கும் அமைதியும் நிம்மதியுமான வாழ்க்கையைத் தாரும்!
மாட்டு வண்டியில் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே செல்ல துவங்கி விடுவார்கள். வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தனது வாகனத்தில் இலவசமாக பக்தர்களை அழைத்து செல்வார்கள்.
வழியில் #கூடன்குளம் சிரட்டைப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று அவரையும், சுடலைமாடனையும் மனம் உருக வணங்கி தங்கள் குறைகளை எடுத்துக்கூறி ஆறுதலைப்பெற்று அம்மனிடம் வழிபாடு செய்து தேங்காய் உடைத்து, அதில் தேங்காயை மட்டும் எடுத்துச் கொண்டு சிரட்டையை கோவிலிலேயே விட்டு விடுவர்.
ஆலயத்தில் சுடலைமாடசுவாமியின் அருள் பெற்று மீண்டும் மக்கள் புறப்படுவர். விசாகத்திற்கு முந்தைய நாள் காலைப்பொழுது புலரும் வேளையில் நாட்டாறு கடந்து பத்திரகாளியம்மன் கோவில் வந்து சேர்வார்கள். அங்கே காலையில் பல் துலக்கி, அம்மனை வழிபட்டு, பதநீர் அருந்தியபின் உவரி வந்து சேர்வார்கள், முற்காலத்தில் உவரி செல்லும் வழி முழுவதும் இலவசமாக பதநீர் குடிக்க கிடைக்கும்.
வழி நெடுக கனி வகைகளை உண்டு மகிழ்வார்கள்.குறிப்பாக இது கோடை காலம் மாம்பழம் அதிகம் கிடைக்கும் கால மாதலால் மாம்பழம், வாழைப்பழமும் சாப்பிடுவார்கள். முற்காலத்தில் மட்டுமின்றி இன்றும் ஏராளாமான மக்கள் விசாக நேரத்தில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து உவரி சுயம்புநாதரை வந்து வழிபடுகின்றனர்.
தொகுப்பு..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.
உவரி விசாகத்திற்கு வரும் மக்கள் விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி கடல் தங்கமாகிய கடல் மண்ணை எடுத்து சுயம்பு நாதர் ஆலயத்தின் அருகில் தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து குவிப்பார்கள். இதனால் தீரும் பாவ வினைகளும், நோய்களும், கஷ்டங்களும் ஏராளம். செல்வங்கள் சேரும், புகழ் சேரும், கல்வி அறிவு அதிகரிக்கும்.
நினைத்த காரியங்கள் வெற்றி அடையும் சுயம்புலிங்கத்தின் அருள் என்றும் மண் சுமந்தாருடன் நிலைத்து நிற்கும். கடல் குளித்த பின் விநாயகரை வழிபட்டு மும்முறை வலம் வந்து, சுயம்பு நாதர் ஆலயத்தை சுற்றி வந்து வணங்கி, முன்னோடியைத் தொழுது பிரம்மசக்தி அம்பாள், பேச்சியம்மன் ஆலயங்களை வலம் வந்து சாஸ்தாவை வழிபடுவார்கள்.
தெப்பக்குளம் அல்லது கிணற்று நீரில் நீராடி தூய ஆடை அணிந்து சுயம்பு நாதர் ஆயலத்தினுள் சென்று மூலஸ்தானத்தை மூன்று முறை வலம் வந்து அர்ச்சனை செய்து கொடி மரத்தைத் தொழுது பிரார்த்தனை செய்வார்கள். குமரி மாவட்ட மக்கள் உவரியில் தங்குவதற்கும்,சமையல் செய்து பரிமாறுவதற்கும், பாதுகாப்பிற்காகவும் மடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நான்கு கால பூஜையும் முடிந்த பின் உற்சவ மூர்த்தி வீதிவுலா நடைபெறும். இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்று உற்சவ மூர்த்தி ஆலயத்தினுள் எழுந்தருளும் போது விடியும் நேரம் ஆகிய விடும் அதன் பின் மக்கள் தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டுச் செல்வர். விசாகத்திற்கு மறுநாள் பவுர்ணமி ஆகும். பெரும் பான்மையான மக்கள் உவரியில் பவுர்ணமி தீர்த்தமாடி சுயம்புலிங்க சுவாமியை வழிபடுவது வழக்கம்.
பணங்கிழங்கும், வேர்க்கடலையும் வழியில் அதிகம் வாங்கிச் சாப்பிடுவர். தங்கள் உறவினர்களை எல்லாம் கண்டு கடற்கரையில் அமர்ந்து பேசி மகிழ்வர். வைகாசி விசாக திருவிழா முடிவில் ஒரு வருடத்திற்கான புண்ணியத்தை ஒரே நாளில் உவரியில் பெற்ற திருப்தி ஒவ்வொரு பக்தனுக்கும் உண்டாகும்.
இன்றும் இந்த கலாச்சார முறைகளும், விழாவினை கொண்டாடும் முறைகளும் ஓரளவுக்கு நடைமுறையில் உள்ளன.
உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமியைத் தரிசித்து, சந்தனத்தை உடலில் மணக்க மணக்கப் பூசிக் கொண்டு, கடல் காற்றை அனுபவிக்கும்போது, கவலையாவது துக்கமாவது... எல்லாம் காற்றோடு காற்றாகக் கலந்துவிடும் என்பது உறுதி!
நன்றி!!!
என்றும் அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.
#உவரி வைகாசி #விசாகத்திருவிழா.!
சுவாமி உவரியில் #மகரமீனுக்கு காட்சி கொடுக்கும் திருவிளையாடல்..!
வைகாசி விசாகம் (வைகாசி - 19. 02-06-2023 - வெள்ளிக்கிழமை)
ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை - உவரி - திருநெல்வேலி மாவட்டம்.!
பேரன்புடையீர்...!
நமது திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா பல ஆண்டுகளாக இறை கருணையால் சிறப்புற நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் இந்த ஆண்டும் வரும் (வைகாசி-18 01-06-2023) மற்றும் (வைகாசி-19 02-06-2023), ஆகிய நாட்களில் விசாகத் திருவிழா, பெருவிழாவாகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
விசாகத்தை முன்னிட்டு அன்று இரவு, இறைவன் முருகனாக, சப்பரத்தில் எழுந்தருளி மகர மீனுக்குக் காட்சி தரும் அருள்பொழியும் நிகழ்ச்சி நடைபெறும்.
பக்த பெருமக்கள் வைகாசி விசாகத் திருநாளன்று பரமனைத் தரிசித்து இறையின்பத்தில் மகிழ உவரி திருத்தலம் வருக...!
இறைபணியில்....
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி-திருநெல்வேலி மாவட்டம்.
அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.
தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் பழைமையும், பெருமையும் நிறைந்தது திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில். இங்கு சுவாமி சுயம்புவாக தோன்றி அருள்புரிந்து வருகிறார்.
வைகாசி விசாக திருவிழா :
இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 1-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறவிருக்கிறது.
01-06-2023 (வியாழக்கிழமை) அதிகாலை கோவில் நடை திறப்பு, தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை, இரவு சமைய சொற்பொழிவு, சுயம்புலிங்கசுவாமி வரலாறு வில்லிசை, நகைச்சுவை, திரை இசை பட்டிமன்றம் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடைபெறவிருக்கிறது.
மகர மீனுக்கு காட்சி:
வருகிற 02-06-2023-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விசாக திருவிழா அதிகாலை கோவில் நடைத்திறப்பு தொடர்ந்து பல்வேறு வகையான சிறப்பு பூஜைகள் திருவாசக முற்றோதுதல், மாலை மங்கள இசை, நாதஸ்வரம் இரவு சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை கச்சேரி, சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மகர மீனுக்கு காட்சி கொடுத்தல், வாண வேடிக்கை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது.
திருவிழாவையொட்டி நாகர்கோவிலில் இருந்து உவரிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பக்த பெருமக்கள் வைகாசி விசாகத் திருநாளன்று பரமனைத் தரிசித்து இறையின்பத்தில் மகிழ உவரி திருத்தலம் வருக...!
தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!
இறைபணியில்....
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி-திருநெல்வேலி மாவட்டம்.
அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.