18/04/2024
இது இந்த ஆண்டு அகில இந்திய அளவில் ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவரின் பயிற்சி விடைத்தாள்களில் ஒன்று.
https://drive.google.com/file/d/1qZnaZs0rSN2qJSd8F-OGIHbq0rxkV6Te/view?usp=sharing
நன்றாக எழுதியுள்ளார். ஆனால் இந்த விடைத்தாளின் தரத்திற்கு சற்றும் குறைந்ததல்ல குரூப் 2/2A மெயின் தேர்வுக்கு முறையாக படித்தவர்களின் வாரந்திர பயிற்சி விடைத்தாள்கள். உண்மையை சொல்வதெனில் அவர்களது பலருடைய பயிற்சி விடைத்தாள்கள் இதை விட சிறப்பாக இருந்தது.
ஒருவேளை, இந்திய அளவில முதலிடம் பிடித்த இந்த ஆதித்ய ஸ்ரீவத்சவ் TNPSC குரூப் 2 மெயின் எழுதியிருந்தால் Zone of Consideration க்கு கூட Reach ஆகியிருப்பாரா என்பது சந்தேகமே..!!!!!
TNPSC எதிர்பார்க்கும் விடைத்தாளின் தரம் UPSC விடைத்தாளின் தரத்தைவிட அதிகம் போல ......!!!!
மெயின் தாள்களை திருத்துவதில் என்னென்ன குளறுபடிகள் நடந்தது?
விடைத்தாள் திருத்துபவர்களுக்கு கொடுக்கப்பட்ட மர்மமான, ரகசிய அறிவுறுத்தல்கள் ....என்னென்ன?
விடைத்தாள் திருத்தியவர்கள், தங்களுக்கு கொடுக்கப்பட்ட லிஸ்ட்டில் இருந்தவர்களுக்கு கூட்டியோ அல்லது குறைத்தோ மதிப்பெண்களை வழங்கினார்களா ?
அல்லது திருத்தியவர்கள் சரியாக திருத்தி அவர்கள் வழங்கிய மதிப்பெண்களை Data Sheet இல் உள்ளீடு செய்யும் பணியில் இருந்தவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட லிஸ்ட்டில் இருந்தவர்களுக்கு திருத்தியவர்கள் வழங்கிய மதிப்பெண்களுக்கு மாறாக கூட்டியோ அல்லது குறைத்தோ மதிப்பெண்களை உள்ளீடு(Data Entry) செய்தார்களா ?
மேற்கண்ட முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்பது உண்மையெனில் மெயின் தேர்வு எழுதிய அனைவரின் (50,000+ Candidates) விடைத்தாள்களையும் கடந்த 2019 ஆம் ஆண்டு குரூப் 2 மெயின் தாள்களை வழங்கியது போல TNPSC வெளியிடுமா ?
உண்மை என்றாவது ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும்.
R.Sathya
Director, Sathya IAS Academy,
Erode.
18.04.2024