Safari.LK

Safari.LK Destination Sri Lanka �

Sweet Tamarind 😋😋😋😋
03/04/2024

Sweet Tamarind 😋😋😋😋

Nanu oya Water Falls, Nanu Oya - Sri Lanka 🇱🇰 🚂🚆🚊 🇱🇰
19/11/2023

Nanu oya Water Falls, Nanu Oya - Sri Lanka 🇱🇰 🚂🚆🚊 🇱🇰

Information:Divisional Secretariat Delft நெடுந்தீவு பிரதேசசெயலக பிரிவில் வருகைதரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த சேவையினை...
17/11/2023

Information:
Divisional Secretariat Delft

நெடுந்தீவு பிரதேசசெயலக பிரிவில் வருகைதரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த சேவையினை வழங்கிவரும் சுற்றுலா தொடர்பான சேவை வழங்குனர்களுக்கு #மாகாண_சுற்றுலா_பணியகத்தின் ஏற்பாட்டில் திறன்விருத்திக்கான பயிற்சிநெறி.

பயிற்சியில் இணைந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது பிரிவின் கிராம அலுவலர்களிடம் பெயர் விபரங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Information:  Northern-Province Tourism-Bureau Technical training for Micro and Small entrepreneurs who involve in makin...
17/11/2023

Information:
Northern-Province Tourism-Bureau

Technical training for Micro and Small entrepreneurs who involve in making tourism related souvenirs




Wonder of Asia 🌏 📌| Colombo - Sri Lanka 🇱🇰 📸 credit goes to respective owner
13/11/2023

Wonder of Asia 🌏

📌| Colombo - Sri Lanka 🇱🇰

📸 credit goes to respective owner

"Tourist Friendly Service Provider" training programme in DelftInformation: Northern-Province Tourism-Bureau
13/11/2023

"Tourist Friendly Service Provider" training programme in Delft

Information: Northern-Province Tourism-Bureau

Galle - Sri Lanka 🇱🇰
11/11/2023

Galle - Sri Lanka 🇱🇰

Sri Lanka 🇱🇰
11/11/2023

Sri Lanka 🇱🇰

📌| Thiruvannamalai, Tamilnadu
09/11/2023

📌| Thiruvannamalai, Tamilnadu

இலங்கையில் உள்ள உணவகங்களில் கிடைக்கும் சிற்றுண்டி உணவுகள் இவை ஆகும்.
27/10/2023

இலங்கையில் உள்ள உணவகங்களில் கிடைக்கும் சிற்றுண்டி உணவுகள் இவை ஆகும்.

Egg roti 🥚🍳🍲😋Sri Lankan foods 😋 இலங்கையில் பிரபலமான "முட்டை ரொட்டி" எனும் உணவு இது ஆகும். இது இலங்கையின் வடக்கு முதல் தெ...
15/10/2023

Egg roti 🥚🍳🍲😋

Sri Lankan foods 😋

இலங்கையில் பிரபலமான "முட்டை ரொட்டி" எனும் உணவு இது ஆகும்.

இது இலங்கையின் வடக்கு முதல் தெற்கு வரையில் அனைத்து பிரதேச ஹோட்டல் மற்றும் உணவகங்களில் கிடைக்கும் உணவாகும்.

Sri Lanka 🇱🇰 Wonder of Asia 🌏 📸 credit goes to respective owner
07/08/2023

Sri Lanka 🇱🇰

Wonder of Asia 🌏

📸 credit goes to respective owner

காலை உணவுகள்.
06/08/2023

காலை உணவுகள்.

📌| Hilton Yala Resort, Sri Lanka 🇱🇰 📸 respective owner
03/08/2023

📌| Hilton Yala Resort,
Sri Lanka 🇱🇰

📸 respective owner

நெடுந்தீவின் வரலாற்று தொன்மையும் சுற்றுலாத்துறையும்.📕 இலங்கையின் சிகரமென விளங்கும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் வட மேற்கே க...
13/06/2023

நெடுந்தீவின் வரலாற்று தொன்மையும் சுற்றுலாத்துறையும்.

📕 இலங்கையின் சிகரமென விளங்கும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் வட மேற்கே காணப்படும் சப்ததீவுகளில் ஒன்றாய், ஆழ்ந்த அலை கடல்களின் மத்தியில் முத்தென விளங்குவது பசுத்தீவெனும் நெடுந்தீவாகும்.

📒 இத்தீவு யாழ்ப்பாணத்திற்கு தென் மேற்கே 45KM மீற்றர் தொலைவிலும், குறிகட்டுவான் துறைமுகத்திலிருந்து 7 KM தூரத்திலும், தென் இந்தியாவிலுள்ள இராமேஸ்வரத்தில் இருந்து 38KM தூரத்திலும் அமைந்துள்ளது. இத் தீவானது கிழக்கு மேற்காக 8KM நீளமும், வடக்குத் தெற்காக 6KM அகலமும் உடையதாய் சுமார் 48 KM சதுர பரப்பளவைக் கொண்ட பிரதேசமாக அமைந்துள்ளது.

📒 யாழ்ப்பாணக் குடாநாட்டைப் போலவே 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கொண்டுள்ள இத்தீவு பசுத்தீவு, அபிஷேகத் தீவு, மருத்துவ மாவனம், புட்கரம், நெடுந்தீவு, டெல்வ்ற் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இவை யாவும் காரணப் பெயர்களாகும். ஆதிகாலத்தில் பசுக்கள் நிறைந்து காணப்பட்டமையாலும், பாற்பண்ணைத் தொழில் நன்கு விருத்தியுற்றிருந்தமையாலும், இத்தீவு பசுத்தீவென்று அழைக்கப்பட்டது. போர்த்துக்கீசர் ஆட்சிக்காலம் வரை இப்பெயராலேயே அழைக்கப்பட்டு வந்துள்ளமை அறியப்பட்டுள்ளது.

📒 போர்த்துக்கீசரும், தமது மொழியில் -இல்காஸ் டாஸ் வாகாஸ்-என அழைத்தனர். பசுத்தீவு என்னும் பெயர் இப்பகுதியின் தரைத் தன்மையையும், மக்களின் பொருண்மிய நடவடிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு வழக்குப் பெற்றதாகும். இத்தீவின் கிழக்குப் பகுதியும், தென் பகுதியும் பரந்த புல்நிலங்களாக அமைந்தமையாலும், மந்தைகள் மேய்வதற்குப் பெரிதும் பயன்பட்டமையாலும் இத்தீவுக்குப் பசுத்தீவு என்ற பெயர் ஏற்பட்டதென இடப்பெயர் ஆய்வாளர் பேராசிரியர் இ.பாலசுந்தரம் கூறுவது பொருத்தமாகிறது. இங்கிருந்து பால், தயிர், இளநீர் ஆகிய அபிஷேகத் திரவியங்கள் தென் இந்தியாவிலுள்ள இராமேஸ்வரர் ஆலயத்திற்கு லிங்கேஸ்வரப் பெருமானின் அபிஷேகத்திற்காகக் கொண்டு செல்லப்பட்டு வந்தமையால், அபிஷேகத் தீவு அழைக்கப்பட்டு வந்தது.

📒 இராம இராவண யுத்தகாலத்தில் மயக்க முற்றிருந்த தமது வீரர்களைக் காப்பாற்றுவதற்காக, அனுமன் இந்தியாவிலுள்ள சஞ்சீவி மலையொன்றினைப் பெயர்த்தெடுத்து தோழில் சுமந்து கொண்டு ஆகாய மார்க்கமாகப் பாக்குத் தொடுகடலைக் கடந்து இலங்கைக்கு வரும் பொழுது அம்மலையின் சிறு பகுதி உடைந்து பாக்குத் தொடுகடலில் வீழ்ந்து விட்டதென்றும், மூலிகைகள் நிறைந்து காணப்படும் அப்பகுதியே நெடுந்தீவென்றும் கூறப்படுகிறது.

📒 இங்கு அனேக நோய் தீர்க்கும் மூலிகைகள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இன்றும் இங்கு பொற்சீந்தில், சாறணை, மிசிட்டை, பிரண்டை, வீணாலை போன்ற பல மூலிகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் வைத்தியத் தொழிலில் புகழ்பெற்ற வைத்திய இராஜசிங்கன் என்ற பட்டப்பெயரைப் பெற்றவனான செகராசசேகரன் என்னும் யாழ்ப்பாண மன்னன் பசுத்தீவை மருத்துவ மாவனம் எனக் குறிப்பிட்டதாக யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

📒 சிங்கள மக்கள் இக்கருத்தில் அவுசத லோகய என்று அழைத்தார்கள். இதன் கருத்து சஞ்சீவி உலகமென்பதாகும். இங்கு மூலிகைள் நிறைந்து காணப்பட்டதாலும், அவற்றை அங்கு வாழ்ந்த மக்கள் முற்காலங்களில் உண்டு வந்ததாலுமே நீண்ட ஆயுள் உள்ளவர்களாகவும், வயோதிப காலங்களிலும், தலைமயிர் நரை விழாமலும், உதிராமலும், பற்கள் விழாமலும் உடல் திடகாத்திரம் உள்ளவர்களாகவும், நூறு தொடக்கம் நூற்றி இருபத்தைந்து வயதுக்கு மேல் வாழ்ந்துள்ளார்கள் எனவும் அறியக்கிடக்கின்றது. இங்குள்ள மக்கள் நான்கு தலைமுறைகளுக்கு மேலாக வாழ்ந்தார்களென்பதற்கான ஒரு கதையுண்டு.

📒 நெடுந்தீவு மந்தை வளர்ப்புக்கேற்ற இயற்கை வளம் கொண்டது இங்கு சில மக்கள் பட்டி பட்டியாக ஆடு வளர்ப்பதை ஒரு பிரதான தொழிலாகக் கொண்டிருந்தனர். ஆடுகள் வாங்குவதற்காக வியாபாரிகள், இங்கு காலத்திற்குக் காலம் வருவார்கள். மேய்ச்சல் நிலங்களில் மந்தைகள் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்ட வியாபாரிகள் மேய்த்துக் கொண்டிருக்கும் இளைஞனை அணுகி, விற்க ஆடு உண்டா எனக் கேட்டால் இளைஞன் மறு மொழியாக ஆம் உண்டு, ஆனால் அப்புவிடம் கேட்கவேண்டும் எனக் கூறி அப்புவிடம் அழைத்துச் செல்வான். அப்பு துாரத்தே வேப்பமர நிழலில் உட்கார்ந்திருப்பார். அப்புவிடம் வியாபாரி ஆடு விற்க உண்டா எனக் கேட்பார். அவரும் மறுமொழியாக ஆடு விற்க உண்டு எனக்கூறி, எழுந்து அப்புவிடம் கேட்போம் என வீட்டிற்குள் போவார். அப்பு வெளியில் சாய்வு நாற்காலியில் படுத்திருப்பார். அவரும் அப்புவிடம் கேட்போம் என உள்ளே செல்வார். அங்கே அப்பு உறிபோன்ற ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பார். அவரிடம் போய் அனுமதி பெற்று வருவார். இவ்வாறு அநேக குடும்பங்கள் நான்கு தலைமுறையாக வாழ்ந்ததாகவும் சில குடும்பங்கள் ஐந்து தலைமுறையாக வாழ்ந்ததாகவும் அறியப்படுகிறது.

📔 புராண காவியங்களிலும், இலக்கியங்களிலும் இத்தீவு அதிக தொடர்புடையதாக விளங்கியதென்றும் புட்கரம் என்பது நெடுந்தீவையே குறிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள். இத்தீவானது யாழ். குடா நாட்டிலிருந்து நெடுந்தொலைவில் இருப்பதால் நெடுந்தீவு என்று அழைக்கப்பட்டது. இன்றும் தமிழில் இத்தீவு நெடுந்தீவு என்றே அழைக்கப்பட்டு வருகிறது. டெல்வ்ற் என்ற பெயர் ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்தில் அவர்களாலே பசுத்தீவிற்குச் சூட்டப்பட்ட பெயராகும்.

📒 ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் எல்லாத் தீவுகளுக்கும், தங்கள் நாட்டில் காணப்பட்ட இடங்களின் பெயர்களைச் சூட்டினார்கள். நெடுந்தீவிற்கும் தங்கள் நாட்டிலுள்ள ஒரு பாற்பண்ணை நகரின் பெயரான டெல்வ்ற் என்ற பெயரைச் சூட்டினார்கள். டெல்வ்ற் என்ற இப் பெயராலேயே இன்றும் இத்தீவு அழைக்கப்பட்டு வருகிறது.

📕 மக்கள் குடியேற்றம்

📒 நெடுந்தீவில் பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதும், மக்கள் வாழக்கூடிய வசதிகள் இங்கு இருந்தன என்பதும் அங்கு கண்டெடுக்கப்பட்ட 2000 ஆண்டு பழைய கறுப்பு சிவப்பு மட்பாண்ட பாத்திரங்கள், உரோமர் கால நாணயங்கள், கல்லாலான கருவிகள், இடிந்த பண்டைக்கால வீட்டுச் சுவர்கள் என்பவற்றாலும், இங்கு பண்டைக்காலம் முதலாக மக்கள் வாழ்ந்து வந்தமையை அறியக் கூடியதாகவுள்ளது.

📒 மக்கள் குறைந்த இடங்களில், தென் இந்தியாவிலிருந்து மக்களைக் கொணர்ந்து யாழ்ப்பாண அரசர்கள் குடியேறச் செய்த பொழுது, நெடுந்தீவிலும் குடியேற்றினார்கள் என அறிய முடிகிறது. இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வெடியரசன் நெடுந்தீவையே இராசதானியாகக் கொண்டு, கோட்டை கட்டி, பிரதானிகள் சகிதம் ஆட்சி செய்தமையும் நெடுந்தீவில் மக்கள் நெடுங்காலமாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

📒 சிங்கை ஆரியன் என்னும் மன்னன், புவனேகபாகு என்னும் மந்திரியுடனும், பரிவாரங்களுடனும் யாழ்ப்பாணம் வந்து நல்லுாரை தலைநகராகக் கொண்டு கி.பி. 950 வரையில் ஆட்சி செய்தான். முதல் ஆரியச் சக்கரவர்த்தியான இவன் மனுநீதி வழுவாது ஆட்சி செய்து வருங்காலத்தில் குடிசனம் குறைந்த இந்நாட்டிலே அனேக பிரசைகள் வாசம் செய்ய வேண்டுமென்று ஓர் நாள் மந்திரியாகிய புவனேகபாகுவுடன் ஆலோசனை செய்து இங்கும் சில தமிழ்க் குடிகளைக் குடியேற்ற வேண்டுமென்று, இந்தியத் தமிழ் அரசர்களுக்கு கடிதம் அனுப்பினான். அத்தமிழ் அரசர்கள் இவனது வேண்டுகோளுக்கிசைந்து சிற்சில இடங்களிலிருந்து தமிழ்க் குடிகளை அனுப்பி வைத்தனர் அவர்கள் தங்கள் அடிமை, குடிமைகளுடன் யாழ்ப்பாணம் வந்தனர். இவர்களில் இந்தியாவிலிருந்து வந்த பிரபுக்களை அவரவர் அடிமை குடிமைகளுடன் திருநெல்வேலி, மயிலிட்டி, தெல்லிப்பழை,இணுவில், பச்சிலைப்பள்ளி, புலோலி, தொல்புரம் கோயிலாக்கண்டி, இருபாலை போன்ற இடங்களுக்கு அதிபதிகளாக்கிக் குடியமர்த்தினான்.

📒 இவர்களுடன் வந்த பிரபுவான சேயூர் வேளாளனும், இந்திரனைப்போன்ற செல்வனும், நீதி, பொறுமை ஆகிய நற்குணங்களை யுடையவனும், வாசனை பரிமளிக்கும் குவளை மாலை தரித்த மார்பனும் மிகுந்த கீர்த்திப்பிரதாபனும், தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனும் ஆகிய தனிநாயக முதலியை அவரது பரிவாரங்களுடன் நெடுந்தீவிற்கு அதிபதியாக்கினான்.

📒 இவ்வரலாறு பற்றி யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூலிலும், யாழ்ப்பாண வைபவ கௌமுதி என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. தனிநாயக முதலியின் பரம்பரையினரே ஏனைய தீவுகளுக்கும் அதிபதியாக்கப்பட்டனர் என்றும் இங்கிருந்தே ஏனைய தீவுகளுக்கும் மக்கள் சென்று குடியேறினர் என்றும் அறியக்கிடக்கின்றது. இதனால் தான் இன்றும் நெடுந்தீவு மக்களுக்கும் ஏனைய தீவு மக்களுக்கும் இடையே மொழி, சமயம், கலை, கலாச்சாரப் பண்புகள் ஒத்தனவாகவே காணப்படுகின்றன. இவை மட்டும் அன்றி, மக்களுக்கு இடையே பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே குடும்ப உறவுகள், 'நிலைத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சமய ரீதியாகவும் நெடுந்தீவு மக்கள் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம், புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம், அனலைதீவு ஐயனார் ஆலயம், வேலணை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் உற்சவங்களிலும் பெருந்தொகையாகக் கலந்து கொள்வர்.இவ்வாறாகப் பண்டைக்காலத்தில் வந்து குடியேறிய மக்களே நெடுந்தீவின் பரம்பரை மக்களாவர்.

📕 வரலாற்றுச் சின்னங்களும், அடையாளங்களும்
* வெடியரசன் கோட்டை
* பெரியதுறை
* மாவிலித்துறைமுகம்
* போர்த்துக்கீசர் கோட்டை
* ஒல்லாந்தர் கோட்டை
* குதிரைகள் குதிரை லாயங்கள்
* குவிந்தா
* பூதம் வெட்டிய கிணறுகள்
* 40 அடி மனிதனின் காலடி
* பழமை வாய்ந்த ஆலமரம்
* அரசனை அரசு
* பெருக்கு மரம்
* மணல் கடற்கரை
* வெல்லைக் கடற்கரை
* புறாக்கூடு
* கல்வேலி
*வளரும் கல்
போன்றன காணப்படுகின்றது

📗 நெடுந்தீவின் பிரதான துறைமுகங்களும் வரலாற்றுச் சின்னங்களும்

📘 நெடுந்தீவின் துறைமுகங்கள்

பெரியதுறை
நெடுந்தீவிலிருந்து மக்கள் பண்டைக் காலத்தில் வேறு இடங்களுக்குப் பிரயாணம் செய்துள்ளார்கள். தென் இந்தியாவிலுள்ள நாகபட்டினம், இராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு மக்கள் சென்று பொருட்களைப் பண்டமாற்றுச் செய்து தமக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவது வழக்கமாய் இருந்திருக்கிறது. அக்காலத்தில் மக்கள் பட்டினம் போய் வருவதாகக் கூறுவது இந்தியாவிலுள்ள நாகபட்டினம் போய் வருவதையே குறிக்கும். இதற்காகப் பாவிக்கப்பட்ட துறைமுகம் பெரியதுறை என அழைக்கப்பட்டது.

📒 இங்கிருந்து மக்கள் பாய் வள்ளங்களிலும், வத்தைகளிலும் யாழ்ப்பாணக் கிட்டங்கிக்கும், ஊர்காவற்றுறை, புங்குடுதீவு ஆகிய தீவுகளுக்கும் பிரயாணஞ் செய்தனர். வெளி நாடுகளிலிருந்து போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும் பாய்க்கப்பல்கள் மூலம் பொருட்களை இத்துறை மூலமே இறக்கினர். இவற்றை விட வேறு சிறிய துறைகளுமிருந்திருக்கின்றன. அவையாவன: கிழக்கே கிழக்குத்துறை, வடக்காக தாளைத்துறை, குடவிலித்துறை, தெற்காக குவிந்தாத்துறை, வெல்லைத்துறை என்பனவாகும். எனினும் பெரிய துறை என்ற பெயரைக் கொண்ட இத்துறையே மிகவும் பெரிய துறையாக அக்காலத்தில் விளங்கியது என்பதனை அறியமுடிகின்றது. இத்துறை நெடுந்தீவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. மன்னராட்சிக் காலங்களிலும் இத்துறைமுகமே வழக்கிலிருந்திருக்கிறது. ஒல்லாந்தராட்சிக் காலத்தில் எவரும் இத்துறையிலிருந்து இந்தியாவிற்குச் செல்லாதபடி தடை விதிக்கப்பட்டிருந்ததாக அறியக்கிடக்கின்றது. இத் துறைமுகத்தையண்டியே வெடியரசனுக்கும் மீகாமனுக்கும்
சண்டை நடந்ததாக வரலாறு கூறுகின்றது.

📘 மாவிலித்துறைமுகம்

மாவிலித்துறைமுகத்திற்கு மாவிலி என்ற பெயர் வந்ததற்குப் பல கதைகள் கூறப்படுகின்றன. மாவிலி என்ற பெயர் வரக்காரணம் தென் இந்திய அரசன் மாவல்லவன், இத்தீவை ஆண்டதாகவும் அதனால் மாவல்லபுர மக்கள் இத்துறைமுகத்தை மாவிலி என அழைத்ததாகவும் ஒரு கர்ணபரம்பரைக் கதையுண்டு. இதற்கான சரித்திரச் சான்றுகளில்லை.

📒 ஒல்லாந்தர் நெடுந்தீவை ஆட்சி செய்த காலத்தில் இத்துறைமுகம் மூலமாகவே குதிரைகளை இறக்கி ஏற்றினார்கள். மா என்ற சொல்லுக்கு குதிரை, பெரிய என்ற அர்த்தங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆகவே குதிரைகள் ஏற்றி, இறக்கியதனாலேயே மாவிலி என்ற பெயர் உண்டாயிற்று என்பதே உண்மையான காரணமாகும். இத்துறைமுகமே இன்று நெடுந்தீவு மக்கள் ஏனைய தீவுகளுக்கும், யாழ்ப்பாணக்குடா நாட்டிற்கும் கடல்மூலம் பிரயாணஞ் செய்யப் பயன்படும் பிரதான துறைமுகமாகவும் விளங்குகின்றது. இது ஏறக்குறைய 300 அடி நீளமும் 75 அடி அகலமும் கொண்டுள்ளதாகக் காணப்படுகிறது. பிரயாணிகள் இறங்கவும், பொருட்களை இறக்கவும் கொங்கிறீற்றினால் கட்டப்பட்ட துறை ஒன்று உள்ளது. இது கடலினுள் 15 அடி நீளமமும், 10 அடி அகலமுமமாகக் கட்டப்பட்டுள்ளது. முற்காலத்தில் வத்தைகள் மூலமும், பாய்வள்ளங்கள் மூலமும் பிரயாணம் செய்த மக்கள் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதி தொடக்கம் இன்றுவரை இயந்திரப் படகுகள் மூலமும் இயந்திரமிணைக்கப்பட்ட வள்ளங்கள் மூலமும் குறுகிய நேரத்திலும் வசதியாகவும் இத்துறைமுகத்திலிருந்து பிரயாணஞ் செய்கின்றார்கள். இதற்காகச் சில்வஸ்பிறே, இராசேஸ்வரி, குமுதினி, வடதாரகை, எலாரா எனப் பல இயந்திரப் படகுகள் காலத்திற்குக் காலம் சேவையிலீடுபடுத்தப்பட்டன. இவற்றுடன் பல தனியார் வள்ளங்களும், இயந்திரப் படகுகளும், வத்தைகளும் சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன. மாவிலித்துறையுடன் பேரூந்து செல்லும், பிரதான வீதி இணைக்கப் பட்டுள்ளது.

📘 வெடியரசன் கோட்டை

2000 ஆண்டு பழமையான பெருங்கற்கால மையம் இதுவாகும் என்பதற்காக ஆதாரமாக அங்கு கண்டெடுக்கப்பட்ட கறுப்பு சிவப்பு மட்பாண்டம் சிறந்த எடுத்துக் காட்டாகும் நெடுந்தீவின் மேற்கே கோட்டைக்காடு என்னும் பகுதியில் அமைந்திருந்தது. இங்கிருந்தே வெடியரசன் என்னும் மன்னன் தனது ஆட்சியைச் செலுத்தினான். இக்கோட்டை சோழர் காலக் கட்டிட முறைப்படியே கட்டப்பட்டிருந்தது. இதன் வடிவமைப்பு பல சித்திர வேலைப்பாடுகளைக் கொண்டி ருந்திருக்கலாமென அதன் சிதைந்த பகுதிகளைக் கொண்டு புதை பொருள் ஆராட்சியாளர்கள் கருதுகிறார்கள். இன்று இக் கோட்டை அழிந்த நிலையிலுள்ளது. இக்கோட்டையை அண்மித்துள்ள பகுதிகளில் மட்பாண்ட ஓடுகள், கூரை ஓடுகள், வட்டமான நாணயங்கள், சதுரமான நாணயங்கள் என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

📗 போர்த்துக்கீசர் கோட்டை

போர்த்துக்கீசரும் நெடுந்தீவின் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்து நெடுந்தீவின் மேற்கே பெரியதுறை என்னும் துறைமுகத்திற்கண்மையில் ஒரு கோட்டையைக் கட்டி அங்கிருந்து ஆட்சி செய்தனர். இக்கோட்டை இடிந்த நிலையில் மண்மேடாகக் காட்சியளிக்கிறது. இக்கோட்டை பற்றி பாசெற் என்னும் பாதிரியார், இது ஒரு இரண்டு மாடிக் கட்டிடமாகக் கட்டப்பட்டிருந்தது. இதன் சுவர்கள் மிகவும் அகலமாகவிருந்தன. மேலே இரண்டு அறைகளும், கீழே இரண்டு அறைகளுமிருந்தன. இவற்றுக்குக் கீழே ஒரு சுரங்க அறையிருந்தது. அதற்குக் கதவுகள் போடப்படவில்லை. அவ்வறையிலிருந்து மேலறைக்குச் செல்லக்கூடியதாக இரட்டைச் சுவர்ப்படி கட்டப்பட்டிருந்தது. அதற்கு வெளிப்புறமாக நாலு நாலு அடி சதுர யன்னல் அமைக்கப்பட்டிருந்தது. இதன் கூரை தட்டையாகவிருந்தது எனவும் கூறியுள்ளார்.

📗 ஒல்லாந்தர் கோட்டை

ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இக்கோட்டை நெடுந்தீவின் மத்தியில் தற்போதைய வைத்தியசாலைக் கண்மையில் கடற்கரைப் பக்கமாகக் கட்டப்பட்டிருந்தது. இதனுள் சுரங்க அறை ஒன்றும் காணப்படுகிறது. இதுவும் இன்று அழிந்த நிலையிலேயே உள்ளது. இதன் சுவர்கள் மிக அகலமானவை. இதன் உள்ளும் புறமும் பல உடைந்த ஒல்லாந்தர் பாவித்த பொருட்களும், செப்பு நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன. இதன் சுவர்கள் இன்றும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன.

📗 குதிரைகள்

ஓல்லாந்தர் ஆட்சிக்காலத்தில், அவர்கள் தங்களின் தேவைகளுக்காகவும், வியாபாரத்திற்காகவும் பல நூற்றுக்கணக்கான குதிரைகளை அரேபியா, பேர்சியா, முதலிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தார்கள். இவை யாவும் உயர்ந்த இனத்தைச் சேர்ந்த குதிரைகளாகும். இவற்றுக்காக ஒல்லாந்தர் பல கிணறுகளையும், கேணிகளையும் கட்டியிருந்தார்கள். அத்துடன் பல குதிரை கட்டும் லாயங்களையும் அமைத்திருந்தார்கள். இவையின்றும் சிதைந்த நிலையில் நெடுந்தீவின் மேற்கே காணப்படுகின்றன.

📒 இக்குதிரைகள், ஒல்லாந்தர் நாட்டை விட்டுப் போனதும், போதிய பராமரிப்பின்மையாலும், அவற்றைத் தேடுவாரின்மையாலும், அவை சுயேச்சையாகத் தீவின் தெற்கேயுள்ள புல்வெளிகளில் சுதந்திரமாகத் திரிவதைக் காணலாம். இவை இன்று காட்டுக் குதிரைகளாக மாறிவிட்டன. இவற்றின் வாரிசுகள் வெல்லையென அழைக்கப்படும் புல்வெளிப் பிரதேசத்தில் கூட்டம், கூட்டமாகத் திரியும் காட்சி பார்ப்போர் கண்களுக்கு நல் விருந்தாகும். இன்று இவற்றின் தொகை குறைந்துகொண்டே செல்கின்றது.

📗 குவிந்தா

இது நெடுந்தீவின் தென் கிழக்கே காணப்பட்ட உயரிய முக்கோண வடிவமாகக் கட்டப்பட்ட வெளிச்சவீட்டுக் கோபுரமாகும். இதனை ஒல்லாந்தர்களே கட்டினார்கள். இவர்களால் கட்டப்பட்ட இக்கோபுரத்திற்கு இராணியின் கோபுரம் எனப் பெயரிட்டார்கள். இதுவே நாளடைவில் மக்களால் குவிந்தா என அழைக்கப்பட்டது. நெடுந்தீவை நோக்கி வரும் பெரிய கப்பல்கள் திசைமாறிச் செல்லாதிருக்க இது ஒரு திசைகாட்டிக் கோபுரமாக விளங்கியது.

📒 குவீன்ரவர் என்ற பெயரைக் கொண்டு சிலர் இக்கோபுரத்தைப் பிரித்தானியர்களே கட்டியிருக்கக் கூடுமெனக் கருதியபோதிலும், இக்கோட்டை ஒல்லாந்தர் காலத்திலேயே கட்டப்பட்டதென மூதாதையர்களின் கர்ணபரம்பரைக் கதைகளாலும், அக்கோபுரத்தின் கட்டிட அமைப்பு, காலம் என்பவற்றைக் கொண்டும் அதனைக் கட்டியவர்கள் ஒல்லாந்தரேயென அறியப்பட்டுள்ளது. இன்று இக்கோபுரம் அழிந்த நிலையில் உள்ளதைக் காணலாம்.

📗 பூதம் வெட்டிய கிணறுகள்

சாறாப்பிட்டி கோளாங்கற் பாறைகளின் மத்தியில் பொழியப்பட்ட சில நன்னீர்க் கிணறுகள் காணப்படுகின்றன. சுமார் முப்பது கிணறுகள் வரை ஒன்றுக்கொன்று மிக அண்மையில் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் சுமார் பத்தடி ஆழமுடையன. சில கிணறுகளை இணைத்துக் கட்டிய வடிகால்களும் நீர்த்தொட்டிகளும் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.

📒 குதிரைகளுக்காகவே இக்கிணறுகள் வெட்டப்பட்டன என அறியப்படுகிறது. இவை இயந்திரங்கள் இல்லாத காலத்தில் பொழியப்பட்டிருப்பதால் இவை மனித வலுவுக்கப்பாற்பட்ட ஒரு சக்தியினால்தான் வெட்டப்பட்டிருக்க வேண்டுமென மக்கள் கருதுவதால் இவற்றைப் பூதம் வெட்டிய கிணறுகள் அழைக்கின்றார்கள். இவற்றில் சில என கிணறுகளிலிருந்தே தீவிற்கான குடிநீர், குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

📗 குதிரை லாயங்கள்

ஒல்லாந்தர்களால் குதிரைகள் கட்டுவதற்காகக் கட்டப்பட்ட பலதூண்கள் இன்றும் சாறாப்பிட்டிப் பகுதியில் காணப்படுகின்றன. இவை பலநூற்றாண்டுகளாகியும் முற்றாக அழிந்துவிடாமல் இன்றும் நிமிர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றன. இவை குதிரை லாயங்கள் என அழைக்கப்படுகின்றன.

📗 நெடுந்தீவில் 40 அடி மனிதனின் காலடி

நெடுந்தீவு மேற்கில் சாறாப்பிட்டி கோளாங்கற்பாறைகளின் மத்தியில் ஒரு பெரிய மனிதனின் பாதம் காணப்படுகிறது. இது சாதாரண மனிதர்களின் பாதங்களை விட மிகவும் பெரிதாகக் காணப்படுவதால் நாற்பதடி மனிதனின் கால் பாதம் எனக் கூறப்படுகிறது. அத்துடன் இப்பாதத்தை இராமபிரானின் கால்பாதமெனவும் சிலர் கூறுகிறார்கள்.

‘நெடுந்தீவில் 40 அடி மனிதனின் பாதச் சுவடு’ என்ற செய்தி வெளிவந்தது. அது பற்றிய விஞ்ஞான, ஐதீக அனுமானங்களை இப்படி இப்படிப் பேசிக்கொள்கிறார்கள் என்று தப்பித்துக் கொண்டீர்கள் என்றாலும். திடமான அறிவியற் பார்வையைத் தொலைக்க உதவும் செய்திகளைப் பிரசுரிக்காதிருப்பீர்களா என்ற பணிவானதொரு வேண்டுதல்.குவேனியும்-சிங்கமும்(மகாவம்சம்) கூழைக்கடாவும்-கொக்கும் (வாடைக்காற்று) புணருவதால் புதிய தலைமுறை உருவாக முடியும் என நம்பவைத்த அறிவற்ற எழுத்துச் செயற்பாடுகள் ஏற்படுத்திய தொல்லைகளைக் கடந்துவர முடியாது திணறும் மக்களை ஐதீகக் கருத்துக்களை தவிர்த்து வடிக்கும் ஆக்கங்கள் ஊடகங்களுக்கு உவப்பானது.

📗 பழமைவாய்ந்த ஆலமரம்

நெடுந்தீவின் கிழக்கே பிள்ளையார் கோவிலின் அருகே நூறாண்டுகளுக்கு மேல், பழமைவாய்ந்த ஒரு ஆலமரம் பெரிய விருட்சமாக அரை மைல் விஸ்தீரணத்திற்குக் கிளைகளைப் பரப்பிப் படர்ந்து காணப்படுகிறது. இதன் இலைகளை ஆடுமாடுகள் உண்பதில்லை. இதன் அருகே ஓர் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயம் இந்த ஆலமரத்தின் அருகே இருப்பதால் ஆலமாவனப் பிள்ளையார் ஆலயமென அழைக்கப்படுகிறது.

📗 அரசனைய அரசு

நெடுந்தீவின் மேற்கிலுள்ள புக்காட்டு வயிரவர் கோவிலின் அருகே பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த பெரிய அரசமரம் ஒன்றுள்ளது. இது மூன்று ஏக்கர் நிலம் வரை வியாபித்துள்ளது. கிளைகள் நீண்டு வளைந்து நிலத்தில் பொறுத்து பின் மேலோங்கி வளருகின்றது. மகாவித்தியாலயத்தின் ஐந்தாண்டு நிறைவு மலரில் இணுவிலைச் சேர்ந்த முன்னாள் அதிபர் திரு. ஆனந்தர் பி.ஓ.எல் அவர்கள் இதனைப் பார்த்து அரசனைய அரசு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

📗 பெருக்கு மரம்

இம்மரம் நெடுந்தீவின் கிழக்குப் பகுதியில் காணப்படுகிறது. இம்மரம் பலநூறு வருடங்களுக்கு மேற்பட்டதெனக் கூறப்படுகிறது. இதன் அடிமரம் மிகவும் விசாலமானது. இதன் பூக்கள் வெண்மை நிறமாகவும், காய்கள் வட்டமான பச்சை நிறமாகவுமுள்ளன. இத்தகைய மரங்கள் இலங்கையிலே மிகச் சிலவே உள்ளன எனக் கூறப்படுகிறது. இம்மரங்கள் இஸ்லாமியரால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன என அறியப்படுகிறது. இவை இன்று பெரும்பாலும் கால நிலை மாற்றங்களால் அழிந்து கொண்டு செல்கின்றன எனக் கூறப்படுகிறது.

📗 மணல் கடற்கரை

இது நெடுந்தீவின் மத்தியில் வடகடற்கரையில் அமைந்துள்ளது. மணல் வெள்ளையாகக் கடற்கரை நீளத்துக்குப் பரந்து காணப்படுகிறது. இதனருகேயுள்ள கடல், கற்பார்கள் அற்றதாகவும், குளிப்பதற்கும், நீந்துவதற்கும் இதமானதாகவும் அமைந்துள்ளது. இதனருகே பல நன்நீர்க் கிணறுகளும் கட்டப்பட்டுள்ளன. இதனருகேதான் ஒல்லாந்தர் கோட்டையும் அமைந்திருந்தது. இக்கடற்கரை சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்து வரும் ஒரு இடமாகும்.

📗 வெல்லைக் கடற்கரை

நெடுந்தீவின் தெற்கே வெல்லைக் கடற்கரை அமைந்துள்ளது. இதன் கரைகள் பெரிய பாரைக்கற்களின்றியும், மணற்பாங்காகவும் உள்ளது. வெளியூர்களிலிருந்து காலத்திற்குக் காலம் மீன் பிடிப்பதற்காக வரும் மீனவர்கள் இக்கரை நீளத்திற்குத் தங்கள் வாடிகளை அமைத்திருப்பதைக் காணலாம். வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலங்களில் இப்பகுதிக் கடல் மிக அமைதியாகவிருக்கும். இக்காலங்களில் கட்டுமரங்களிலும், மோட்டார் வள்ளங்களிலும் பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று, திரும்பிவரும் காட்சிகளும், மீன்கள் வாங்கப் பணத்துடனும், பண்டமாற்றுப் பொருட்களுடனும் மக்கள் கூடும் காட்சிகளும், ஒரு தனி அழகாகவிருக்கும். இக்கடற்கரையை அண்டிய புல்வெளிகளிலேயே குதிரைகளையும் கூட்டம், கூட்டமாகக் காணலாம்.

இலங்கையின் வடபகுதித் தீவுகள் அனைத்தும் இந்துமகாசமுத்திரம் வங்காளக் குடாக்கடல் அரபிக் கடல் எனும் முப்பெரும் பாரிய நீர்ப்பரப்புகளின் இடையே நிலைகொண்டவை வட தென் பருவக்காற்றுக்கள் ஓயாது நீண்ட தூரம் தள்ளிவரும் வேகமான அலைகளுக்கு முகம் கொடுத்தும் தொடர்ந்து வாழும் கரைக் கட்டுமானமுடையவை.இவை தமது இருப்பை இதுவரை பேணுவது என்பது கற்களின் வலிமையால் மட்டுமே! அதிலும் கற்களின் வலிமையின் விசேடத் தன்மை அகமும் புறமும் நெடுந்தீவுக்கு சற்று அதிகமாகவே உள்ளது.

நெடுந்தீவின் அடித்தளப் பாறையும் மற்றத் தீவுகளை விட அகலமானதும் விரிந்து கிடப்பதுமாகும். நாற்புறமும் இறவட்டம் எனப்படும் கரைப்பகுதியே 500 மீற்றருக்குக் குறையாத தூரத்தைக் கொண்டது. கடல்நீர் வற்றும் போது இதைப் பார்க்கலாம். இறவட்டத்தில் பாரிய இயற்கை கற்கள் நாற்புறக் கடலிலும் நட்டுக் கொண்டும், பரவலாகவும் நிறைந்து அலைகளை எதிர்கொள்கின்றன.

தரைப் பரப்பிலும் மண்பரப்பைவிடவும் கற்பரப்பு மிகமிக அதிகமானது. அங்கு வாழ் மக்களின் உடலுரம் எதற்கும் முகம் கொடுக்கும் நெஞ்சுரம் எனும் பண்புகளின் அடித்தளமே இப் பாறைகளோ என்ற கேள்வி எழுமளவுக்கு இந்தக் கற்பரப்போடு மூதாதையர் போராடியிருக்கிறார்கள்.

வடமாகாணத்தின் ஓர் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கும் 'நெடுந்தீவு' இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்

தொல்லியல் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இத்தீவு விவசாயம், கால்நடை, கடல் வளங்களுடன் உள்ளது. 1813ம் ஆண்டு நெடுந்தீவு கடலிலிருந்து புறப்பட்ட 'ஹீர்த் டீ போலோ' (Hearth De Polo) எனும் ஐக்கிய அமெரிக்க இளைஞன் இத்தீவின் அழகையும் வளங்களையும் மனதில்கொண்டு இது தனி ஒரு நாட்டுக்கு சொந்தமானதல்ல, இந்த பிரபஞ்சத்திற்கே சொந்தமானது என்றானாம் அத்தகைய வரலாற்று சிறப்புடையது நெடுந்தீவுவாகும்.

Copied

தொகுப்பு:
Kanthasamy Kirikaran

- வருடத்திற்கு ஒருமுறை திறக்கப்படும் கச்சத்தீவு 😍 🌊 இலங்கை 🇱🇰 இந்த பயணம் நான் சென்ற இடங்களிலிருந்து வேடிக்கை, சாகசம் மற்...
15/02/2023

- வருடத்திற்கு ஒருமுறை திறக்கப்படும் கச்சத்தீவு 😍 🌊
இலங்கை 🇱🇰

இந்த பயணம் நான் சென்ற இடங்களிலிருந்து வேடிக்கை, சாகசம் மற்றும் பல புதிய அனுபவங்களை பெற முடிந்தது..

எனவே வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகிறோம்

(பிப்ரவரி/மார்ச் தொடக்கத்தில் 2 நாட்கள் மட்டுமே)
காரணம், இந்த தீவு இலங்கைக்கு சொந்தமாக இருந்தாலும் இந்தியாவுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.. இதுவே இலங்கைக்கு சொந்தமான தீவு என்று தெரிந்த வரையில்... (சுமார் 40கிமீ)

எங்கள் கடற்படை இந்த தீவை இயக்குகிறது.
இங்கு வரும் அனைவருக்கும் (குறிப்பாக பாதுகாப்பு) உணவு மற்றும் பானங்கள் முதல் அனைத்து வசதிகளையும் அவர்கள் ஊக்குவிக்கவில்லை....

அங்கிருந்து தொடங்கும் கடல் பயணம் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத பயணமாக இருக்கும்...
இந்த பயணத்தில் நீங்கள் அனுபவிக்கக்கூடியது வேடிக்கை/சாகசம் மட்டுமே.

இந்த தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகள் மிகவும் அழகாக இருக்கின்றன, மேலும் இந்தியாவின் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள சிக்னல் கோபுரத்தை நீங்கள் தெளிவாகக் காணலாம்.

மொபிடெல்/டயலொக் நிறுவனங்கள், அவர்களின் சொந்த நாட்டு கைத்தொலைபேசி நிறுவனங்கள், தீவுக்கு தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணைய வசதிகளை வழங்கியுள்ளன.

நீங்கள் ஒரு நாள் கூடாரத்தில் தங்கினால், இந்த தீவின் அனுபவங்களை இன்னும் அதிகமாக அனுபவிக்க முடியும்.
மேலும் இதில் டெல்ப் மற்றும் நாகதீபாவையும் சேர்த்தால், பயணம் இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கும்...

Surfing கடற்கரைகளை பார்வையிட👇🏻
Full Details:
https://tamiltravellanka.com/sri-lankas-top-surfing-beaches/

சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். உமது சுற்றுலா பயணங்களில் உதவலாம்.

#அதிகம் #பகிருங்கள்.

.

Copied from respective owner

𝐋𝐚𝐱𝐚𝐩𝐚𝐧𝐚 𝐅𝐚𝐥𝐥𝐬, 𝐌𝐚𝐬𝐤𝐞𝐥𝐢𝐲𝐚 🇱🇰
07/02/2023

𝐋𝐚𝐱𝐚𝐩𝐚𝐧𝐚 𝐅𝐚𝐥𝐥𝐬, 𝐌𝐚𝐬𝐤𝐞𝐥𝐢𝐲𝐚 🇱🇰

White-rumped munia. 📌| Mullaitivu, Sri Lanka. || Nikon D850 || Nikkor 200-500mm ||    Source: Dr.Shanthamenan Wildlife p...
29/01/2023

White-rumped munia.

📌| Mullaitivu, Sri Lanka.

|| Nikon D850 || Nikkor 200-500mm ||


Source: Dr.Shanthamenan Wildlife photographer

Manthiri Manai - the enigmatic mansion in Jaffna📕Jaffna has a long history dating back to the Tamil kings who ruled the ...
14/01/2023

Manthiri Manai - the enigmatic mansion in Jaffna

📕Jaffna has a long history dating back to the Tamil kings who ruled the Jaffna kingdom then. However, not much evidence is available save for a few Tamil inscriptions found unearthed and some ruins scattered in the district. Today, these places are popular tourist attractions that draw visitors from the south as well as from foreign countries. After the end of the war and the establishment of peace in the country, more and more local and foreign tourists started visiting the Northern Province.

📒The Dutch Fort located in the centre of the city is a popular venue among the sightseers to the peninsula. The Jaffna museum, the Nilawara bottomless well, Kandarodei temple, Jaffna library, Nallur Kovil, Kareinagar beach, Casuarina beach, Keerimalai, Nagadeepa, Dambakola Patuna and the Buddhist temple are some of the places of attraction. However there is one landmark in Jaffna, which only a few are aware of.

Located a kilometre from the Nallur Kovil, it is called ‘Manthiri Manai’. In Tamil ‘Manthiri’ means minister and ‘Manai’ is abode, and thus it came to be known as ‘Minister’s Abode’. It is a magnificent old building, one of the few surviving structures associated with the Jaffna kingdom. Legend has it that a certain minister of a Tamil king called Cankili who ruled the Jaffna kingdom before the arrival of the Portuguese had lived in this palace, and hence the name Minister’s Abode.

This historic building situated along the Nallur – Point Pedro road, could be located easily and is clearly visible from the main road. Built on a half acre land, there are two gateways to enter the premises – one, an arched porch built during ancient times and another gate built recently. This centuries old massive mansion standing majestically facing the road, seems to have stood the test of time.

The building complex surrounded by other residences, has an eerie atmosphere, bleak and desolate inside, looks like a ghost abode. A few other historical remains nearby – the Sattanathar temple, Yamuna Eri and Cankillian Thoppu are also considered as remains of the ancient Jaffna kingdom. The recently constructed gold plated statue of king Cankili and the palace arch are visible sights along the main road. The Yamuna Eri or Yamuna pond, believed to have been a favourite bathing spot of the queen lies behind the palace.

The building is a blend of European and Dravidian architecture. At the entrance is an ornamental gateway, a large arched porch and a tower. It is a two storey building supported by massive brick walls and wooden rafters. The interior walls are decorated with beautiful wood carvings. The walls coated in white paint, have faded with time. Walking from room to room I found a well, around 12 - 15 feet deep attached to one of the rooms in the building and also a concrete wash basin. The water in the well seems crystal clear.

There is a staircase leading to a few underground rooms, and cellar in a separate section. It consists of hidden underground tunnels, may be to escape in case of a sudden enemy attack. Now, the building is in a dilapidated state, some parts crumbling and disappearing, and water leaking through the broken tiles of the roof.

Though it is believed to be the abode of a king’s minister, it is still shrouded in mystery as various contradictory views have been expressed on its origin. Some historians say this building was either renovated or newly built by the Dutch during their period. Some are of the opinion that it has no connection whatsoever with the Jaffna kingdom, but is a choultry built in the 19th century.

The structure is built with bricks, lime plaster, wood and tiles, materials used by the Dutch for the construction of their ramparts and other buildings. Hence, Dutch influence could largely be seen in the crumbling façade of the building.

However, the ornamental work on the pillars and the arched porch seem to belong to the Jaffna kingdom. There are various theories regarding this historical monument, and we are unable to state exactly who built this and for whom. Now the Government of Sri Lanka has listed it as an archaeologically protected monument.

Sri Padaya Adam’s Peak Sri Lanka📕Sri Pada or Adam’s Peak is an ancient pilgrimage site, which has long attracted thousan...
14/01/2023

Sri Padaya Adam’s Peak Sri Lanka

📕Sri Pada or Adam’s Peak is an ancient pilgrimage site, which has long attracted thousands of pilgrims from all faiths. This conical mountain is 7,360 feet (2,250 meters )high, soaring clear above the surrounding mountain ranges. The mountain is located in the southern reaches of the Central Highlands in the Ratnapura District and Nuwara Eliya district of the Sabaragamuwa Province and Central Province —lying about 40 km northeast of the city of Ratnapura and 32 km southwest of the city of Hatton. The surrounding region is largely forested hills, with no mountain of comparable size nearby.

📒The region along the mountain is a wildlife reserve, housing many species varying from elephants to leopards, and including many endemic species. The region of Peak Wilderness Sanctuary that encompass the Sri Pada together with Horton Plains National Park and Knuckles Range, all in the Central Highlands of Sri Lanka is recognized as a World Heritage Site in the year 2011.


📔Sri Pada is derived from Sanskrit, used by the Sinhalese people in a religious context; roughly translated as “the sacred foot”, It refers to the footprint-shaped mark at the summit, which is believed by Buddhists to be that of the Buddha. Christian and Islamic traditions assert that it is the footprint of Adam, left when first setting foot on Earth after having been cast out of paradise, giving it the name “Adam’s Peak”. The legends of Adam are connected to the idea that Sri Lanka was the original Eden, and in the Muslim tradition that Adam was 30 ft tall. Hindu tradition refers to the footprint as that of the Hindu deity Shiva, and thus names the mountain Shiva padam (Shiva’s foot) in Tamil. It is also fabled that the mountain is the legendary mount Trikuta the capital of Ravana during the Ramayana times from where he ruled Lanka. Another Sinhala name for the mountain is Samanalakanda, which refers either to the deity Saman, who is said to live upon and protect the mountain (a shrine dedicated to the deity can be found near the footprint), or to the butterflies (samanalayā) that frequent the mountain during their annual migrations to the region.

📔The summit of the mountain is a small plateau, and according to measurements it is 74 ft. in length and 24 ft. in breadth. On the top of the Peak broad steps lead up to a walled enclosure containing the rock over which is a tower-like structure. The real footprint on Adam’s Peak is believed to be set in jewels beneath the visible rock. The soles of the Buddha’s feet are said to be flat with all the toes of equal length. On each sole there are one hundred and eight auspicious marks (mangala­lakkhana), with the wheel (chakra) the principal mark at the centre while around it are grouped figures of animals, inhabitants of various worlds and other kinds of symbols. Access to the Adam’s Peak is possible by 6 trails: Hatton-Nallathanni; Ratnapura-Palabaddala; Kuruwita-Erathna; Murraywatte; Mookuwatte; Malimboda; the most popular routes are the Hatton-Nallathanni&Ratnapura-Palabaddala due to the picturesque views and postcard worthy scenery that can be encountered along them. Once a final node is reached (Nallanthanni or Palabaddala or Erathna), there begins the difficult journey through the jungle on foot.

📔Most of the pilgrims use the Hatton route as the journey can be reduced by more than five kilometers even though the slope of this route is much steeper than the others. The greater part of the track leading from the base to the summit consists of thousands of steps built in cement or rough stones. The trails are illuminated with electric light, making night-time ascent possible and safe to do even when accompanied by children. Rest stops and wayside shops along the trails serve refreshments and supplies. On the way up, after a few minutes climb the SamaChatiya, the World Peace Pagoda, can be found.This stupa was built by the famous Japanese Buddhist monk VenNichi Fuji in 1976 and stands out dramatically with the amazing backdrop of Adam’s Peak during the daytime.

📔The pilgrims’ season to Sri Pada traditionally starts on the full moon of December and ends on the full moon of April, with the crowd increasing during the latter half of the season. During other months it is hard to climb the mountain due to very heavy rain, extreme wind, and thick mist. Most people make the climb by night to reach the mountain top to watch the sun rise over the sea; the sun almost leaps over the eastern horizon drawing a perfect triangle of a shadow of the mountain spreading over the western backdrop of the mountain. As the sun keeps on rising, the shadow shifts towards the base of the mountain until it completely disappears, a grand finale to a breathtaking natural spectacle. Sri Pada is one of the rare places that people of four major religions in the world worship. Devotees of many religions climb the mountain daily to invoke blessings while trekkers enjoy an exhilarating hike through the different access routes to the summit.

Address

Colombo
01100

Telephone

+94771549151

Alerts

Be the first to know and let us send you an email when Safari.LK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safari.LK:

Share

Nearby travel agencies


Other Tourist Information Centers in Colombo

Show All